மீண்டும்,மீண்டும் விலக்கு

      சமீபத்தில்தான் வருகிறது புதிய ஆபத்து என்று எழுதினோம்.இப்போது புதிய வரிவிலக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. மக்களுக்கு என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் இன்னூம் திருந்தவில்லை.மேலே படியுங்கள்.
”ராஜஸ்தானில் உள்ள எண்ணெய் வயல்களில் பிரிட்டனைச் சேர்ந்த கய்ர்ன் நிறுவனம் எண்ணெய் உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை வேதாந்தா நிறுவனம் வாங்க, மத்திய அரசு முன்பு விதித்திருந்த நிபந்தனைகளை தளர்வு செய்துள்ளது. இதுதொடர்பான சமீபத்திய கேபினட் வரைவு குறிப்பை ஒப்புதல் பெற, பல்வேறு அமைச்சகங்களுக்கு அனுப்பி உள்ளது பெட்ரோலியத் துறை அமைச்சகம். முந்தைய நிபந்தனைகளை முற்றிலும் விலக்கிக் கொண்டு அயல் நாட்டு முதலீட்டாளர்களுக்கு சமிக்ஞை அளித்துள்ளது என பெட் ரோலியத் துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கய்ர்ன் இந்தியா நிறுவனம் சார்பில் ராஜஸ்தானில் உள்பத்தி செய்யப்படும் எண்ணெய்க்குராயல்டி மற்றும் செஸ் வரியாக ரூ.21 ஆயிரத்து 802 கோடியை ஓஎன்ஜிசி செலுத்தி வருகிறது. இந்த ராயல்டி மற்றும் செஸ் வரி உள் ளிட்ட நிபந்தனைகளை மத்திய அரசு தளர்த்தி உள்ளது. இந்த ராயல்டி - செஸ் வரியை சமமாக பகிர்ந்து கொள்வதை சட்டரீதியாக பெட்ரோலிய அமைச்சகம் தொடரும் என கேபினட் குறிப்பில் கூறப்பட்டுள் ளது. இருப்பினும் இந்த ஒப்பந்தத்திற்கு முன்கூட்டிய நிபந்த னையை அரசு வலியுறுத்தவில்லை.

ராஜஸ்தான் எண்ணெய் வயல்களில் ஓஎன்ஜிசிக்கு 30 சதவீதப் பங்குகள் உள்ளன. ஆனால், ராஜஸ்தான் எண் ணெய் வயலில் உற்பத்தி செய்யப்படுகிற அனைத்து அள விற்கும் ராயல்டி செலுத்துகிறது. இந்த ராயல்டி சுமை ரூ.18 ஆயிரம் கோடியாகும். இதில் கய்ர்ன் இந்தியாவின் ரூ.12,600 கோடி பங்கை ஓஎன்ஜிசி ஏற்க வேண்டியுள்ளது. உற் பத்தியில் தனது 70 சதவீத உற்பத்தி பங்கிற்கு ஒரு டன்னுக்கு ரூ.2500 என செஸ் வரி செலுத்த கய்ர்ன் இந்தியா நிறுவனம் ஏற்கெனவே முரண் பட்டது. இதன் மொத்த அளவு ரூ.9202 கோடியாகும். ராயல்டி மற்றும் செஸ்வரி முதலீடு மற்றும் செயல் செலவீனத்தை கணக் கில் கொண்டு இருக்க வேண்டும் என ஓஎன்ஜிசி விரும்புகிறது.
     எதற்காக இந்த சுமையை மத்திய அரசு பொதுத்துறை நிறுவனம் மேல் ஏற்றுகிறது.?
     பெட்ரோலிய விலையை குறைத்தாலே விலைவாசிகள் குறையும் என்ற நிலையில் மாதம் இருமுறை பெட்ரோல் விலையை கூட்டி மறைமுகமாக விலைவாசி உயர்வை உருவாக்கும் மத்திய அரசு இவ்வாறு நம்நாட்டில் கிடைகும் எண்ணைவயல்களையும் வேதாந்தா,அம்பானி என்று பகாசுர நிறுவனங்களுக்கு  தாரைவார்த்ததும் அல்லாமல் 13ஆயிரம் கோடியையும்
மக்கள்தலையில் ஏற்றி விலக்கு கொடுப்பது ஏன்?
       முன்புஅம்பானி செய்தத் தொலைபேசி ஊழல்4000கோடியையும் வெறும் 40 கோடியை அபராதமாகப் போட்டுவிட்டு மூடி மறைத்து விட்டது.மக்களுக்கு எந்த வரிச்சலுகையும் செய்யாமல்,விலைவாசிகளைக் குறைக்க எங்களிடம் மந்திரக்கோல் இல்லை எனக்கூறும் காங்கிரஸ் அரசு தனியார்களுக்கு ஆயிரம்,லட்சம் என்றகோடிக்கணக்கில் வரிச்சலுகைகள் செய்வதும்,ஊழல்கள் செய்வதும் மிக கொடுமையான செயல்கள்.
       13000கோடிகள் வேதாந்தாவுக்கு தாரை வார்க்காமல்,அதை பெட்ரோலிய மான்யமாகவோ அல்லது பெட்ரோலிய பொருட்கள் மீது வரிவிலக்காகவோ செலவிட்டால் மக்களுக்காவது நன்மையாகியிருக்குமே.
 ஏன் அப்படி செய்வதற்கு பொருளாதார மாமேதை சிங்,சிதம்பரம் அரசுக்கு மனமில்லை. சிதம்பரம் வேதாந்தா குழுமப் பங்குகளை வலைத்துப்போட்டுள்ளார் என்பது உண்மையாக இருக்கும் என்ற முடிவுக்கே வர வேண்டியுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?