கால் டன் எடையில் குமரிப்பெண்


19 வயதில் பருமன் கூடிய பிரிட்டன் பெண்!



கால் டன் எடை கொண்ட 17 வயது யுவதி ஜோர்ஜியா டேவிஸ் எடை குறைப்புப் பயிற்சிகள் தன்னை சரியான திசையில் கொண்டு செல்வதாகக் கூறி மகிழ்ச்சியடைகின்றார்.

அமெரிக்காவில் எடைகுறைப்பு பயிற்சிகளை முடித்துக் கொண்ட பின் நாடு திரும்பிய அவர் 20 மாத காலத்தில் தனது எடை மீண்டும் இரட்டிப்பாகிவிட்டதாக கடந்த முன்று வாரங்களுக்கு முன் அறிவித்திருந்தார்.

இரண்டரை வருடங்களுக்கு முன் இருந்ததை விட அவரின் எடை இப்போது கணிசமாகக் கூடியுள்ளது. இந்த நிலை நீடித்தால் அவர் விரைவில் மரணத்தைத் தழுவக் கூடும் என்று எச்சரிக்கப்பட்ட நிலையில்அவர் புதிய உடற்பயிற்சி முறைகளை மேற்கொண்டார்.

இவருக்குப் பயிற்சியளிக்கும் பொறுப்பை ஜேன்டோலிங் ஏற்றார். வெட்டவெளியில் இயற்கையான சுவாசத்தோடு அவருக்கு எளிமையான பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஜோர்ஜியா டேவிஸ் தென் வேல்ஸ்ஸின் அபரடெயார் பகுதியைச் சேர்ந்தவர்.

2008 ஆகஸ்டில் பிரிட்டனின் பருமன் கூடிய யுவதி என்று அறிவிக்கப்பட்டவர். பின்பு அமெரிக்காவில் எடை குறைப்பு பயிற்சிகளில் கலந்து கொண்டு கணிசமாக எடையைக் குறைத்துக் கொண்டு 2009 ஜூனில் நாடு திரும்பினார்.

ஆனால் அதன் பின் தொடர்ந்து உடற் பயிற்சிகளுக்கான ஆதரவு பெற்றோரிடமிருந்தோ அல்லது ஏனைய சமுக அமைப்புக்களிடமிருந்தோ கிடைக்காததால் நிலைமை மீண்டும் மோசமானது.

கடந்த மாதம் பிரிட்டிஷ் பத்திரிகையொன்று இவர் பற்றிய தகவல்களைத் தெரிவித்தது. அதனையடுத்தே தற்போதைய பயிற்சியாளர் கட்டணங்கள் எதுவுமின்றி இவருக்கு உதவ முன்வந்தார்.

இப்போது இந்தப் பயிற்சிகளில் ஜோர்ஜியா ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றார். நடப்பது மட்டுமே தனக்குப் பிடிக்காத ஒன்று என்கிறார் அவர்.
  
விரைவில் அவர் சிக்கென்று மற்றைய இளம் 
பெண்களைப்போன்ற உடல்வாகு பெறட்டும்.
உடற்பயிற்சிகளை அவர் தொடர்ந்து செய்தாலும்,நடைபயிற்சிதான் மிகநன்மைதரக்கூடியதாக இருக்கும்.ஜோர்ஜியா இதை உணரவேண்டும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?