இது அமெரிக்க ஆர்ப்பாட்டம்


அமெரிக்காவின் மிக முக்கியமான மாநில அரசாங்கமான டெக்ஸாஸ் மாநிலம் தனியாகப் பிரிந்து செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்காவின் ஹுஸ்டன் குரோனிக்கல் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.டெக்ஸாஸ் மாநிலத்தின் முக்கியமான அரசியல் அமைப்பொன்று அமெரிக்காவின் அரசியல் கொள்கைகளை விமர்சித்தபடி அமெரிக்காவை விட்டு டெக்ஸாஸ் மாநிலம் தனிநாடாகப் பிரிந்து செல்ல வேண்டும் என்று கோரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை கடந்த ஐந்தாம் தேதி அவுஸ்டினிலுள்ள கெப்பிட்டல் கட்டிடத்தின் முன் நடத்தியுள்ளனர்.

         “அமெரிக்க  அரசாங்கம் என்பது வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து தமது நாட்டின் பாரம்பரிய குடிமக்களைப் பாதுகாக்கத் திராணியற்ற ஒன்றுக்கும் உதவாத ஒரு அரசாங்கம்” என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அது மட்டுமல்லாமல் டெக்ஸாஸ் மாநில மக்களின் வரிப்பணத்தை மட்டும் அறவிட்டுக் கொண்டு அம்மாநில மக்களின் பாதுகாப்பைப் பற்றி கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் அம்மாநிலத்திற்குள் வெளிநாட்டு நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தனி நபர்களை ஊடுருவ வழி செய்யும் வகையில் அமெரிக்க அரசாங்கம் சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்”
       இதெல்லாம் என்னஎன்று புரியவில்லையா? உலகெங்கும் பிரிவினைவாதிகளைத்தூண்டிவிட்டு குளிர்காயும் அமெரிக்காவிலேயே ஒரு மாநிலம் பிரிந்து போக போராடத் துவங்கிவிட்டது.


தொடர்ந்தும் அமெரிக்காவுடன் இணைந்திருப்பதா அல்லது பிரிந்து செல்வதா என்பதைத் தீர்மானிப்பதற்காகவும், புதிய அரசியல் அமைப்பொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பாகவும் கருத்துக் கணிப்பொன்றை நடத்த டெக்ஸாஸ் அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
    இந்த ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்காவில் நடக்கும் போது அரசோ கடாபிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது பற்றியும்,சீனாவில் இனையம் மூலம் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முயற்சிகளைத்தூண்டிவிட்டுக்கொண்டிருந்தது.
         தன் வீட்டை சரியாகவைக்க முதலில் அமெரிக்கா நடவடிக்கை எடுக்கட்டும்.

.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?