பிரபாகரனை காக்க முயன்ற மேலை நாடுகள்,,,



பிரபாகரனை இலங்கை ராணுவம் நெருங்காமல் தடுக்க முயன்றன மேற்கத்திய நாடுகள் !
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்  பிரபாகரனை, இலங்கை ராணுவம் நெருங்கி விடாமல் தடுத்து அவரை காக்க மேற்கத்திய நாடுகள் கடுமையாக முயன்றன என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
பிரபாகரன் மறைந்திருந்த பகுதியில் ராணுவம் கடும் குண்டுவீச்சை மேற்கொண்டபோது, இருதரப்புக்கும் இடையேயான மோதலை தவிர்க்கும் வகையில் சில மேற்கத்திய நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டதாக அமெரிக்க தூதரகத்தின் அதிகாரி பீட்டர் பர்லர், வாஷிங்டனுக்கு குறிப்பு அனுப்பினார்.
இருப்பினும் இதை சீனா மட்டும் விரும்பவில்லை என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, விடுதலைப் புலிகள் மீது இலங்கை ராணுவம் நடத்திய போரை பாராட்டும் வகையில் அப்போதைய மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன் கருத்து தெரிவித்ததாகவும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்க அதிகாரிகளிடம் மேனன் பேசுகையில், புலிகள் மீது இலங்கை ராணுவம் தான் எதிர்பார்த்ததை விட கடும் போர் மேற்கொள்வதாகவும்,விரைவில் புலிகள் அழிக்கப்படுவார்கள் என்றும் மகிழ்ச்சி பொங்கக் கூறியுள்ளார் மேனன்.
       சீனா மட்டுமின்றி  இந்தியாவும் பிரபாகரன் ,விடுதலைப்புலிகள் அழிப்பில் இலங்கைக்கு ஆதரவாகவே செயல் பட்டன.இந்தியா தனது பாதுகாப்பு,இறையாண்மை,ராஜதந்திரம் இவைகளை முற்றாக மூட்டைக்கட்டி வைத்துவிட்டு ராஜீவ் கொலைக்குப் பழிவாங்கும் முகமாகவே புலிகள் விடயத்தில் நடந்து கொண்டது.இன்று நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை தானாகவேத்தேடிக்கொண்டுள்ளது.
       ஆனால் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு உதவியதின் மூலம் இலங்கையில் தனது கால்களை சீனா ஆழப்பதித்துக் கொண்டது.கச்சத்தீவின் அருகே தனது தளத்தை ஆரம்பிப்பதின் மூலம் கிழக்கில் இருந்து இந்தியாவை அச்சுறுத்த ஆரம்பித்துவிட்டது.அருணாசல பிரதேசம் மூலம் வடக்கில் இருந்து ஏற்கனவே அச்சுறுத்துகிறது. விடுதலைப்புலிகள் அழித்தொழிப்பு மூலம் இந்தியாவுக்கு இழப்பே.இதை வழக்கம்போல் தாமதமாகவே அரசு உணர்ந்துள்ளது. 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?