இதுவாக இருக்கலாம்........





ஜெயிக்கப்போவது யாரு,?

தேர்தல் முடிந்து மாதக்கணக்கில் இத்தேர்தலில் முடிவு
காண காத்திருக்க வேண்டிய நிலையில் தேர்தல்
ஆணையம் தமிழக மக்களை வைத்து விட்டது.அதற்கு காரணம் 
என்ன என்றுத் தெரியவில்லை.மற்ற மாநிலத்தில் தேர்தல் என்பது
சரியான காரணமாகத் தெரியவில்லை.அப்படி என்றால் தேர்தலை
சற்றுத்தள்ளி வைத்திருக்கலாமே? அவசர அவசரமாக நடத்த வேண்டிய தேவை என்ன? சரி விடுங்க.நடந்து முடிந்த கதை.
இப்போது லட்சக்கணக்கில் பந்தயம் கட்டும் விடயமாக இத்தேர்தல் காத்திருப்பு  ஆகிவிட்டது.பல கோடிகள் “யார் ஜெயிப்பார்?” என பந்தயத்தில் புரளுவதாகத் தெரிகிறது.
   களம் இறங்கி கருத்து கேட்டும்,பத்திரிகை அலுவலக நாற்காலியில் உட்கார்ந்தே கருத்துக் கணித்தும்[?] பல் வேறு முடிவுகள் நம் தமிழக,இந்திய பத்திரிகைகளில் வந்து விட்டன.அதைப் படிப்பவர்கள்.ஒரளவு தெளிவுடனும்.சற்றுக் குழப்பத்துடனும் தங்கள் கருத்தைச் சேர்த்தும் ஒரு முடிவுக்கு வந்திருப்பார்கள்.இப்போது எனது முறை.என்னால் முடிந்த அளவு கருத்துக்களைக்கூறி உங்களைக் குழப்பவே இது.                                                                   இது நிச்சயமாக அலுவலக நாற்காலிக் கருத்துக்கணிப்புதான் 100சதம் சரியாக எவ்வளவு வாய்ப்புள்ளதோ அதே அளவு 100சதம் தவறாகவும் வாய்ப்புள்ளது என உங்களுக்கு இப்போது உத்திரவாதம் தருகிறேன்.                                                                                                                                              இனி கதைக்கு வருவோம்.2006ல் ஜெயலலிதாவிற்கு இருந்த எதிர்ப்பு அலை இப்போது கருணாநிதி அரசுக்குக் கிடையாது .ஜெ ,யின் எதிர்ப்புஅலை பல்வேறு மட்டத்திலும் இருந்தது .அரசு ஊழியர்கள் தங்கள் உரிமைகளை இருப்பதையும் இழந்து போராடி வேலை இழந்து மீண்டிருந்தனர்.ஆனால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள வில்லை.பாடம் புகட்டத்தயாராக இருந்தனர்.40க்கு40 என மக்களவை த்தேர்தலில் பாடம் கற்பிக்க அவர்களும் ஒர் காரணம். இலவச வேட்டி சேலை வழங்க கமிசனை எதிர்பார்த்து ஆந்திராவில் கோடிக்கணக்கில் கொள்முதல் செய்ய இங்குள்ள நெசவாளர்கள் மிகவும் நொந்துபோனார்கள்.ஏர்கனவே விலைவாசி,நூல் விலை ஏற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் கஞ்சித்தொட்டி திறந்து வாழும் நிலைக்குத்தள்ளப்பட்டனர்.ஆனால் கஞ்சித்தொட்டி திறந்தால் தனது ஆட்சிக்கு கெட்டப்பெயர் என்று வலுக்கட்டாயமாகாத்தடுத்து போலீசாரைக் கொண்டுத்தாக்கியதில் பல நெசவாளர் மண்டை உடைந்து ரத்தசரித்திரமாயினர்.அவர்கள் கோபம் காத்திருந்தது.
வெள்ளம் ,வறட்சி என தஞ்சை விவசாயிகள் பாதிக்கப்பட்டும்-அரசு சரியான கொள்முதல் விலையை வேளாண் பொருட்களுக்குத்தராததும்  பஞ்சப்பராரிகளாக விவசாயிகளை ஆக்கியது.எலிக்கறி சாப்பிட்டு வயிற்றைக் கழுவும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.  ஜெ,  அரசோ கண்டு கொள்ளவில்லை. மாறாக எலியை சுட்டுத்தின்று வந்தவர்களில் ஒரு சிறுவன் மரணமான போது எலிக்கறிதின்ற மற்றவர் கள் சாகவில்லையே என பத்திரிகையில் கேலியாக பேட்டி வேறு கொடுத்தார்.
   திருமண உதவித்தொகை,முதியோர் உதவித்தொகை,குடும் ப அட்டைகளில் அரிசி ,சீனி வாங்க விதவிதமான முத்திரைகள். குடும்பத்தலைவர் கண்டிப்பாக மாதாமாதம் கடையில் வந்து கையொப்பம் செய்தால்தான் அரிசி.மக்கள் நொந்து போனார்கள்.
பால் விலை,பேருந்து கட்டணங்கள் அதிகம்.
 மிகை ஊதியம்[போனஸ்] கிடையாது. போதுமடா சாமி ஜெயலலிதாவின் சாதனைகள்.
 இவையனைத்தும் கருணாநிதி கருவூலத்தை காலி செய்துவிட்டார்.என்றபெயரில் தரப்பட்ட கசப்பு மருந்து எனக்கூறினார்.
                இப்போது 2006 முதல் கலஞர் அதே கருவூலத்தை வைத்து தானே இலவசங்கள்,சலுகைகள் தந்தார்.தருகிறார். அரசு ஊழியர் பழைய சலுகைகளைத்தந்ததுடன் ஊதுயக்குழு நிலுவையையும் தந்தார்.நெல்,கரும்பு கொள்முதல் விலைகளை கூடக்கொடுத்தார். குடும்ப அட்டையில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தந்தார். சிலவற்றை போராடியும் பெற்றுக்கொண்டனர்.  இப்படி பல.
 சொல்லிக்கொள்ளுமளவு எந்த அதிருப்தியும் கருணாநிதி ஆட்சி மேல் இல்லை.ஆனாலும் ஆட்சிமாற்றம் இருக்கும் மக்கள் அதிருப்தி கோப அலை வீசுகிறது.இதுபொன்று தினம் ,தினம் பத்திரிகைகளில் செய்தி.
 கூர்ந்து கவனித்தால் தெரியும் கலஞர் கூறியபடிஇச்செதிகளின் பிறப்பிடமே ஜெயலலிதா மீண்டும் வரவேண்டும் என திட்டம் போட்டு செயல்படும் அவாள் பத்திரிகைகள்தான்.தினமலர்,இந்து,தினமணி,துக்ளக்,ஜீனியர் விகடன்,ஆனந்தவிகடன் வகையறாக்கள்,கல்கி,இந்தியா டுடே,இன்னும் பிற...
                        இந்த ஆட்சியாளர் மீது மக்களுக்கு கோபம் என்றால் அலைக்கற்றை ஊழல் தான் ,இலங்கை தமிழர் பிரச்சினையும்கூட,
 ஆனால் இது கூட கிராமப் புறங்களில் பாதிக்கவில்லை. ஜெயலலிதா கறைபடா கரத்துக்கு சொந்தக்காரரா? வளர்ப்புமகன் திருமணம்,டான்சி,சிப்காட் நிலம்,ஊட்டி ஓட்டல்,பிறந்தநாள் பரிசு,வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது,சிறுதாவூர் பங்களா,கொடநாடு வளைப்பு சொல்லிக்கொண்டேபோகலாம்.சிப்காட் விவகாரத்தில் தனது கையெழுத்தையே தான் போடவில்லை என்றுக் கூறி மாட்டிக்கொண்ட சத்யபுத்ரி தானே ஜெயலலிதா.
 இப்போது தி.மு.க, வுக்கு தோல்வி என்று சொல்வபவர்கள் அவாள்கள் ஊடகங்கள்தான்.
 என்னைப்பொறுத்தவரை தி.மு.க ,கணிசமான இடங்களைக் கைப்பற்றும்.மக்கள் இரு ஆட்சியையும் சரியாகக் கணித்திருந்தால் எரிகிற கொள்ளியில் எது பரவாயில்லை என்று தீர்மானித்திருந்தால் தி.மு.க.தான்.அதிக இடங்களைக் கைப்பற்றும்.
 அவாள் பத்திரிக்கை பாதிப்பால்மக்கள் குழம்பி வாக்களித்திருந்தால் தனிப்பெரும்பாண்மை யாருக்கும் கிடைக்காது. 
 கூட்டணி அமைச்சரவைதான் அமையும். இங்கிருந்து அங்கும்-அங்கிருந்து இங்கும் என கடைசிநேர கூட்டணிக்கட்சிகள் தாவல் இருக்கும்.அப்போதானே அமைச்சரவை அமைக்க முடியும். சிரிப்புக்காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது.தேர்தல் முடிவு வந்தபின்னர்.பார்த்துக்கொண்டிருங்கள்-காத்துக்கொண்டிருங்கள்.
 மற்றவை 13-ம் ,தேதிக்குப் பின்னர்,,,
                                                                                                                                              
 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?