லின் அடுத்தப் படம்-?



    செல்வராகவன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருந்த விஸ்வரூபம் படம், விசா பிரச்சனையால் தள்ளிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற 'ட்ராபிக்' படத்தை சமீபத்தில் பார்த்த கமல், அதன் தமிழ் ரீ மேக்கில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ராஜேஷ் பிள்ளை இயக்கியிருக்கும் இப்படத்தில் சீனிவாசன், ரகுமான், ரம்யா நம்பீசன், அனுப் மேனன், சந்தியா உள்ளிட்டோ ர் நடித்திருக்கிறார்கள். கமர்ஷியலாக வெற்றி பெற்றதுடன், பத்திரிகைகளின் பாராட்டுக்களையும் இப்படம் பெற்றிருக்கிறது. இதற்கிடையில் இப்படத்தை பார்த்த கமல்ஹாசனுக்கு மிகவும் பிடித்து போய்விட்டதாம். மேலும் இந்த படத்தை தமிழ்ல் ரீ மேக் செய்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறினாராம்.

ஏற்கனவே இப்படத்தை தமிழில் எடுக்க இயக்குநர் ராஜேஷ் பிள்ளை முயற்சித்து வருகிறார். இந்தநேரத்தில் கமலே இப்படி பாராட்டியதால், அவரிடமே நடிக்க சம்மதமா என்று கேட்டிருக்கிறார் ராஜேஷ், கமலும் இதற்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

செல்வராகவன் இயக்கத்தில் கமல் நடிக்கும் படமும் தள்ளி போவதால், இந்த இடைவேளியில் ட்ராபிக் படத்தை முடித்துவிடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறாராம் கமல்.
----------------------------------------------------------------------=====================----------
 பினாயக் சென்னுக்கு தென் கொரிய விருது



     தென் கொரியாவின் மிகச்சிறந்த விருதான க்வான்ஜு என்ற விருது சமூக ஆர்வலர் பினாயக் சென்னுக்கு கிடைத்துள்ளது.

மனித உரிமைகளை காப்பதில் அவரின் சிறந்த சேவையை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. பினாயக் சென், சமீபத்தில் தேச துரோக குற்றச்சாட்டுக்கு உள்ளாகி ஜாமீனில் வெளிவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விருது 50 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்டதாகும்.
===========================================================================      ஆஸ்திரேலியாவில் இந்தியர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஆஸ்திரேலியா ரஷ்வோர்த் பகுதியில் லக்வீந்தர்சிங் என்பவர் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். லக்வீந்தர்சிங் கொலை வழக்கு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த லக்வீந்தர் சிங் பஞ்சாப் மாநிலம் ராஜ்புராவைச் சேர்ந்தவர் .
===========================================================================
இன்று உலக புத்தக தினம்
ஆங்கில இலக்கிய மேதை ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட பல படைப்பாளிகளின் பிறந்த தினம், நினைவு தினமான ஏப்.23-ஆம் தேதி உலக புத்தகத் தினமாகக் கொண்டாடப்படுகிறது..

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?