சமச் சீரில்லாக் குழு

2012ஆம் ஆண்டில் உலகம் இருக்குமா?

மத்திய அமெரிக்காவின் மாயா பிரிவினர் மக்கள் பயன்படுத்திய நாட்காட்டியின் கணிப்புபடி இன்னும் 18 மாதத்தில் உலகம் அழியும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.இந்த கணிப்பு குறித்த பல்வேறு தரப்பிலும் கருத்துக்கள் எழத் துவங்கி உள்ளன. இந்த உலகம் அழியும் என்ற கணிப்பை பயன்படுத்தி ஆதாயம் தேட யாரும் முயற்சிக்க கூடாது எனசில மத அமைப்புகள் சொல்லிவருகிறது.
உலகம் அழியப் போகிறது என பைபிளின் கணிப்பின் படி இந்த ஆண்டு மே மாதம் உலகம் அழியும் என முதலில் ஒரு கருத்து பரவியது. இந்த கணிப்பு மக்களை பயங்கொள்ளச்செய்தது.பலரும் பலவிதமாகக் கருத்துக்களை வெளியிட்டனர். பலர் சொர்க்கம் போக ஆயத்தமான வேலைகளைச் செய்துவிட்டனர்.
ஆனால் அந்த கணிப்பு பொய்யாகி விட்டது.  மே முடிந்து ஜீன் மாதக்கடைசியில் இருக்கிறோம்.பழைய பொய் பரபரப்பு முடிந்த பின் இப்போது  புதிய கணிப்பு மக்களைமீண்டும் பயங்கொள்ள வைத்து வருகிறது.
                 # மாயா மக்கள் அட்டவணைப்படி உலகம் வருகிற 2012ஆம் ஆண்டு டிசம்பர் 21ந் தேதியில் அழிந்துவிடும் என சிலர் சொல்லிவருகின்றனர். இந்த உலக அழியும் என்ற பொய்யைக்கேட்டு மாயா இன மக்களில் சிலர் பைரீனிஸ் மலைப்பகுதியல் ஒரு பதுங்கு குழியில் பதுங்கி இருக்க ஏற்பாடுகளை செய்து வருவதாகத்தெரிகிறது.

ரோம பேரரசு வீழ்ச்சி அடைந்த பின்னர் 2012ஆம் ஆண்டில் 183வது நாளில் உலகம் அழியும் என்ற கணிப்பு உள்ளது. முந்தையக் கணிப்புகளைப் போலவே இந்த புது கணிப்பும் பொய்யாகித்தான் போகும்.
# உலகம் உடைந்து விடும்.  உயிர் பிழைக்க வேண்டும் என்றால் மலை போன்ற இடங்கள்தான் சரி என மாயா இன மக்கள் கூறிவருகின்றனர்.
   அதுசரி உலகமே உடைந்து சின்னாபின்னமாகும் போது மலைகள் எப்படி தப்பிப் பிழைக்கும்.அதுவும் உலகில்தானே இருக்கிறது.
  வேலை-வெட்டியில்லை என்றாலும்,நேரம் போக வில்லை என்றாலும் சிலர் இப்படி புதுசுப் புதுசா பீதியைக் கிளப்புறாங்கப்பா,,,,
--------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்நாட்டின்  உப்புமா  ரூ.45  லட்சம்

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸில் சிறந்த சமையல் கலைஞர்களுக்கான போட்டி நடந்தது. பல்வேறு கட்டங்களாக நடந்த போட்டியின் இறுதி சுற்று நேற்று முன்தினம் நடந்தது.
இதில் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர் பிளாய்ட் கார்டோஸ் வெற்றி பெற்று சிறந்த சமையல் கலைஞராக தேர்வு பெற்றார். அவர் தயாரித்த தமிழக உணவான உப்புமாவுக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.
பிளாய்ட் மும்பையை சேர்ந்தவர். சுவிட்சர்லாந்தில் ஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்து விட்டு இந்தியாவில் 2 ஆண்டுகள் பணியாற்றினார். 1988ம் ஆண்டு நியூயார்க் சென்று அங்குள்ள ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்தார.
            

பின்னர் நியூயார்க் நகரில் 1998ம் ஆண்டு இந்தியன் ரெஸ்டாரென்ட்டை தொடங்கினார். கடும் போட்டி காரணமாக கடந்த ஆண்டு இது மூடப்பட்டது. சமையல் போட்டியில் வெற்றி பெற்ற பிளாய்ட்டுக்கு ரூ.45 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. அதை புற்றுநோய் ஆராய்ச்சிக்கு அளிக்க போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 தமிழக உப்புவாவினால் புற்று நோய் ஆய்வுக்கு ரூ 45 லட்சம் கிடைத்துள்ளது.
   வாழ்க உப்புமா,,,,,
 ==========================================================================
 அணுக்கதிர் வீச்சு..காதில்லா முயல்கள் பிறப்பு,,,,
 00000000000000000000000000000000000000000000000000000000000000000
  )(  இந்த ஆண்டின் துவக்கத்தில் ஜப்பானில் பூகம்பமும், அதைத்
 தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. இதில் புகுஷிமாவில் தாங்-இச்கி அணுமின் நிலையம் சேதம் அடைந்தது. இதைதொடர்ந்து அங்குள்ள அணுஉலைகளில் இருந்து கதிர்வீச்சு ஏற்பட்டு அது காற்றில் பரவியது.
குடிநீர், பால் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களிலும் ஊடுருவியது. இதனால் பாதிப்பு ஏற்படும் என கருதி 20 கி.மீட்டர் சுற்றளவில் தங்கியிருந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். தற்போது ஓரளவு நிலைமை சீரடைந்ததும் மக்கள் மீண்டும் அங்கு திரும்பி வர தொடங்கி உள்ளனர்.
                   http://varunan.com/wp-content/uploads/2011/06/mujal.jpg 
இந்நிலையில் புகுஷிமா அருகே உள்ள நமி நகரில் யுகோ சுஜிமோடோ என்பவரின் பண்ணையில் காது இல்லாத முயல் குட்டி பிறந்துள்ளது. இந்த முயல் குட்டிக்கு காது மட்டுமே இல்லை என்ற குறை தவிர வழக்கம் போல் மற்ற உறுப்புகள் உள்ளன. வெள்ளை நிறம், சிவப்பு கண்களுடன் அது உள்ளது. காய்கறிகள் மற்றும் புல்லை சாப்பிடுகிறது.
இந்த முயல் குட்டி பிறந்துள்ள நமி நகரம் கதிர்வீச்சு அதிகம் பாதித்த பகுதியில் உள்ளது. எனவே, கதிர்வீச்சு பாதித்ததால் கர்ப்பமான முயலுக்கு பாதிப்பு ஏற்பட்டு அது காது இல்லாத குட்டியை ஈன்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது ஜப்பான் மக்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கதிர்வீச்சு அபாயம் தற்போது வெளிப்பட தொடங்கி விட்டதாக கருதுகின்றனர்.   இதை நிபுணர்கள் மறுத்துள்ளனர். சில நேரங்களில் மனிதர்களை போன்று விலங்குகளும் இதுபோன்ற குறைபாடுடைய குட்டிகள் பிறக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
.....................................................................................................................................................................
 இப்படி ஒரு குழு தேவையா,,,,,?
---- மிருகவதை ஒழிப்புக்குழுவில் கசாப்புக்கடைக்காரர்கள் நியமனமா,,?-------



  •                                                       உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க 9 பேர் அடங்கிய குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் பெயர்களின் விவரம்:                      குழுவின் தலைவராக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இருப்பார். மத்திய இடை நிலைக் கல்வி வாரியத்தின் முன்னாள் இயக்குநர் (கல்வி) ஜி.பாலசுப்பிரமணியன், சென்னை லேடி ஆண்டாள் மெட்ரிகுலேஷன் பள்ளியின் முன்னாள் முதல்வரும், சென்னை சேவா சதன் பள்ளியின் ஆலோசகருமான விஜயலட்சுமி சீனிவாசன் ஆகிய இருவரும் மாநில பிரதிநிதிகளாகச் செயல்படுவர்.சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி. பள்ளிகள் குழுமத்தின் நிறுவனர் மற்றும் செயலாளர் சி.ஜெயதேவ், சென்னை பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளிகள் குழுமத்தின் முதல்வர் மற்றும் இயக்குநர் திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதி ஆகியோர் கல்வியாளர்களின் பிரதிநிதிகளாகவும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (என்.சி.ஆர்.டி.) இரு பிரதிநிதிகளாக தில்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் கணிதவியல் கல்வித் துறையின் பேராசிரியர் பி.கே. திரிபாடி, சமூக அறிவியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் அனில் சேத்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த அரசுச் செயலாளர் உறுப்பினராகவும், குழுவின் உறுப்பினர்-செயலராக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    இது பொன்றக் குழு அமைப்பு தேவையா.அமைப்பதை விட சமச்சீர் கல்வியை நடத்தவே மாட்டோம் என ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து விடலாம்.
     சம்ச்சீர் கல்வியின் எதிராளிகளான -எதிர்கருத்தாளர்களான தனியார் கல்வி உரிமையாளர்களை குழு உறுப்பினர்களாக நியமித்திருப்பது.அரசின் நோக்கம் தெளிவாகிவிட்டது. சமச்சீர் கல்விக்கு எதிரான-கல்விக்கட்டணக்கொள்ளைக்கு ஆதரவான லேடி ஆண்டாள்.டி.ஏ.வி.பள்ளி,பத்மா சேஷாத்ரி பாலபவன் போன்ற பள்ளி உரிமையாளர்கள் தான் கல்வியாளர்களா? வேறு கல்வியாளர்களே தமிழகத்தில் கிடையாதா?
     மிருகவதை ஒழிப்புக்குழுக்கு கசாப்புக்கடைக்காரர்களை உறுப்பினர்களாக நியமிப்பதா?
     வசந்தி தேவி,அறவாணன் போன்றோரை ஒதுக்குவது ஏன்,,?
     

    இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

    விகடானந்தா நிலவரம்

    பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

    கட்டுமானம் ஆரம்பம்?