வீர வேலு நாச்சியார்-2

ஜெயலலிதா- சீமான் இரட்டை குழல் துப்பாக்கிகள்:


ஈழ தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய நடிகர் சத்யராஜ்,
”இலங்கையில் ஈழத் தமிழர்களின் நலனை காக்கும் வகையில் தமிழக சட்ட மன்றத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவும், ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்கவும் ஜெயலலிதா தொடர்ந்து குரல் கொடுப்பார். யாருக்கும் அவர் பயப்படமாட்டார். அவரது துணிச்சல் பாராட்டுக்குறியது.
ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய வீராங்கனை வேலு நாச்சியார் போன்று வீரம் மிக்கவர் ஜெயலலிதா தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் சீமானும், ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் முதல் அமைச்சர் ஜெயலலிதாவும், சீமானும் இரட்டை குழல் துப்பாக்கிகள்.
மகாதேவி படத்தில் எம்.ஜி.ஆர். புலிக்கொடி ஏந்தி வருவார். இங்கும் புலிக் கொடி பட்டுடொளி வீசி வருகிறது. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் கப்பலில் சென்று
கொண்டிருப்பார்கள். அப்போது ஆள் உயர அலை எழும்பி வரும். அலையால் ஜெயலலிதா எம்.ஜி.ஆர் மீது போய் விழுவார். அப்போது அவர் பொல்லாத அலை இது என்பார். ஆனால் எம்.ஜி.ஆரோ, நம்மை புரிந்து கொண்ட அலை என்று கூறுவார்.
இங்கு அலையென திரண்டு வந்திருக்கும் நீங்கள் எல்லாம் சீமானை புரிந்து கொண்டு இங்கு வந்திருக்கிறீர்கள். தமிழ் ஈழம் மலர முதல் அமைச்சர் ஜெயலலிதா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாம் உறுதுணையாக இருப்போம்.”
          ஜெயலலிதா மீது சத்யராஜ் வைத்திருக்கும் மரியாதை-நம்பிக்கை புல்லரிக்க வைக்கிறது.
 ஆனால் அதை ஜெயலலிதா காப்பாற்றுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.
      கூட்டணி கட்சிகள், தேர்தலில் பேசியது தொடர்ந்தே சட்டமன்றத்தில் ஜெயலலிதா தீர்மானத்திக் கொண்டு வந்தார்.
 ஆனால் அதன் பின் அந்த தீர்மானத்தின் மீது அவர் இதுவரை எதுவுமே பேசவில்லை.சானல்-4,காணொளி பரபரப்பிற்குப் பின்னரும் எந்த பேச்சையும் காணோம்.
 வீர வேலு நாச்சியார் பெயரை எல்லாம் தேவையின்றி சத்யராஜ் காயப்படுத்தியுள்ளார்.ஜெயலலிதாவின் துணிச்சலும் பிடிவாதமும் இதுவரை நாட்டு மக்களுக்கான நல்லதை பெற்றுத்தரவில்லை.அவரின் பிடிவாதம் சுயநமிக்கதில் தான் சென்ற ஆட்சிக்காலத்தில் இருந்திருக்கிறது.
இப்போது நல்லவிடயத்தில் பிடிவாதம் இருந்தால் நல்லது.
 ஆனால் அவர் திருந்தியதாகத் தெரியவில்லை.
 சீமானும் -ஜெயலலிதாவும் இரட்டைக்குழாய் துப்பாக்கிகள் சரிதான்.இருவருமே அ.தி.மு.க.வினர் என்பதில்.என்ன சீமான் அ.தி.மு.க ,வின்
 கிளை அமைப்பை இலங்கை ஆதரவு என நடத்திவருபவர். ஆகி விட்டார்.
      எம்.ஜி.ஆர்.- பின்பு கருணாநிதி   இப்போது ஜெயலலிதா என உங்களின் பரிணாம வளர்ச்சி நன்றாக இருக்கிறது.
     ஆனால் மேடையில் உணர்ச்சிகரமாக -கோபமாக பேசுவதுடன் சரி. இதுவரை அதற்கு அடுத்த நடவடிக்கைகளில் நீங்கள் இறங்குவதில்லை.
     இம்முறையாவது  வேலு நாச்சியாருடன் இனைந்து ஈழப்பிரச்சினைக்கு ஒரு வழி காண்பீர்களா? அல்லது மேடையுடன் உங்கள் வீர முழக்கம் முற்றுமா?
       அது சரி ஒரு தீர்மானத்தை போட்டு விட்டு மற்ற வேலைகளை கவனிக்க சென்றதற்கே பாராட்டு விழாவா?இது நல்லாயிருக்கே.
     தீர்மானம் என்னவாயிற்று? பிரதமரின் குப்பைக்கூடையில் அல்லவா கிடக்கிறது.
      இப்போது டெல்லி சென்ற வேலு நாச்சியார் மன்னிக்கவும் ஜெயலலிதா அதைப்பற்றி பிரதமரிடம் ஒன்றும் சொல்லவில்லையே.
  தயாநிதியை அமைச்சர் பதவியில் இருந்து கழற்றிவிட அல்லவா கோப்பைக்கொடுத்து வந்துள்ளார்.
     தி.மு.க. அமைச்சரவையில் இருந்து விலகினால் வெளியில் இருந்து தாங்கள் ஆதரவு தருவதாக கூறிவந்துள்ளதாக வடக்கு வட்டாரங்கள்
 சொல்லிவருகின்றன.
     மொத்தத்தில்  நீங்கள் புரட்சித்தலைவியைப் புரிந்து கொண்டது அவ்வளவுதான்.
  

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?