திருடன் -போலீஸ் விளையாட்டு,,,,,,
தமிழகம் முழுவதும் 2-வது நாளாக நேற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஆபரேஷன் ஹம்லா என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 22 பேர் சிக்கினர். சர்வதேச தீவிரவாதி பின்லேடன் கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக பல நாடுகளில் தீவிரவாத தாக்குதல்கள் நடக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் என மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து மாநிலங்கள் உஷார்படுத்தப்பட்டன.
இந்நிலையில், தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்த போலீசார் முடிவு செய்தனர். ஆபரேஷன் ஹம்லா என்ற பெயரில் நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணிக்கு அதிரடி சோதனையை தொடங்கினர்.
மும்பையைப் போன்று தமிழகத்திலும் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவக் கூடும் என்பதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 13 கடலோர மாவட்ட பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
மத்திய உளவுத்துறை, தமிழக போலீசார், தமிழக கடலோர காவல்படை, மத்திய கடலோர காவல்படை போலீசார் இணைந்து இதில் ஈடுபட்டனர். போலீசாரே தீவிரவாதி வேடத்தில் நகருக்குள் நுழைய முயல்வார்கள் என்றும், அவர்களை கண்காணித்து பிடிக்க வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.
சென்னையில் மட்டும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முக்கிய வழித்தடங்களில் விடிய விடிய வாகன சோதனை நடத்தப்பட்டது.
ஆயிரம்விளக்கு பகுதியில் காரில் வந்த ஒருவரை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். தீவிரவாதி வேடத்தில் வந்த போலீஸ்காரராக இருக்கலாம் என்று நினைத்து விசாரணை நடத்தினர். இல்லை என்று தெரிந்ததும் அவரை விட்டுவிட்டனர்.
மீன்பிடி துறைமுகம் வழியாக கடலுக்குள் நுழைய முயன்ற "போலீஸ்" தீவிரவாதிகள் 8 பேரை பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் விழிப்புடன் செயல்பட்டு மடக்கிப் பிடித்தனர். கல்பாக்கம் அணுமின்நிலையத்துக்குள் தீவிரவாதிகள் வேடத்தில் நுழைய முயன்ற 3 பேரை போலீசார் கண்டுபிடித்து மடக்கிப் பிடித்தனர். கடலூரில் 3 பேர் சிக்கினர்.
தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட "ஹம்லா ஆபரேஷனில்" 22 பேர் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
  @ ஆயிரம்விளக்குப்பகுதியில் வந்தவர் போலிஸ் இல்லை சரி.அதனால் விட்டுவிட்டீர்கள்.உண்மையிலேயே தீவிரவாதியாக இருந்தால்?அநியாயமாக விட்டு விட்டிர்களே.
    அம்லா-ஹம்லா எல்லாம் சரியல்ல. நீங்களாக ஒருதேதியைக்குறிப்பிட்டு அதில் மட்டும் நல்ல முறைய்யில் சோதனை செய்து நீங்களே பிடிபட்டுக் கொண்டு அவுட் எனக் கத்துவது சரியல்ல.இது  என்ன திருடன் -போலீஸ் விளையாட்டு.? இதில் என்ன நன்மை. முன்னறிவிப்பு இல்லாமல் உள்ளே நுழையப்பார்த்து பிடிக்கிறார்களா என சோதிக்க வேண்டும் .அப்போதுதானே உங்கள் காவல்-சோதனை லட்சணம் தெரியும்.
--------------------------------------------------------------------------------------------------------------

தலைமைச் செயலகம்


தமிழக புதிய தலைமைச் செயலகக் கட்டுமானப் பணிகள் குறித்து விசாரிக்கவென ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் தங்கராஜ் தலைமையில் ஆணையம் ஒன்று நியமிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இப்போதே தெரிந்து விட்டதே ஆணையத்தின் அறிக்கை .இந்த தங்கராஜ் நீதிபதிதானே அம்மாவை டான்சிவழக்கில் குற்றமில்லாதவர் எனத்தீர்ப்பு வழங்கியவர். பின் அறிக்கை எப்படியிருக்கும் என விளங்காமல் போகுமா..
   

     

      

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?