அரச குரு தினமலர்....?

 தினமலரின் பாரபட்சம்

Dinamalar - No 1 Tamil News Paper

         
*தமிழகத்தில், 2006-11 தி.மு.க., ஆட்சியில் நடந்த இடைத்தேர்தல்களில், "பணநாயகம்' என்ற கலாசாரம் தலைதூக்கியது. 2011 சட்டசபைத் தேர்தலில், "காசில்லாமல்; ஓட்டில்லை என்ற நிலையில் மக்கள் உள்ளனர்' என்ற பேச்சு ஓங்கி ஒலித்தது. ஆனால், அதை பொய்யாக்கும் விதமாக காசுக்கு மயங்காதவர் தமிழக மக்கள் என்பதை நிரூபித்து, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர்.இடைத்தேர்தல்களில் வலுவாக வேரூன்றிய, "பணநாயகம்' பொதுத் தேர்தலில் தோற்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, தேர்தல் கமிஷனின் அதிரடியான செயல்பாடு. இதே செயல்பாடு வரும் அக்டோபர் மாதம் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர வேண்டுமென்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது. ஆனால், இது சாத்தியமாவது சற்று கடினமென முந்தைய வரலாறுகள் கூறுகிறது. ஏனெனில், சட்டசபைத் தேர்தலை நடத்தியது மத்திய தேர்தல் கமிஷன். உள்ளாட்சித் தேர்தலை நடத்தப் போவது மாநில தேர்தல் கமிஷன்.
கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது, மாநில தேர்தல் கமிஷனராக இருந்த சந்திரசேகரன் முழுக்க, முழுக்க தி.மு.க.,வுக்கே சாதகமாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, ஒரு தலைபட்ச செயல்பாட்டை கலைந்து, உள்ளாட்சித் தேர்தலிலும் நடுநிலையை கடைபிடிக்க தற்போது ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க., அரசு கவனம் செலுத்த வேண்டும்.மாநில தேர்தல் கமிஷனராக இருந்த சையத் முனீர் ஹோடா பதவி விலகியதைத் தொடர்ந்து, மே 27ம் தேதி முதல் இரண்டாண்டுக்கு, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சோ.அய்யர், மாநில தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். சட்டசபைத் தேர்தலை சிறப்புடன் நடத்திய, மத்திய தேர்தல் கமிஷனின் ஆலோசனைப் படி செயல்பட்டு, உள்ளாட்சித் தேர்தலில் பணம் அதிகம் புழங்கும் என்ற நிலைப்பாட்டை மாற்ற வேண்டும். இத்தேர்தலிலும் ஜனநாயகம் வெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகரித்துள்ளது.
     இது அ.தி.மு.க. ஆதரவு தினசரியான தினமலர் செய்தி.இதில் மக்கள் எதிர்பார்ப்பு, மக்கள் எனவருவதை தினமலர் எதிர்பார்ப்பு,அ.தி.மு.க/.எதிர்பார்ப்பு என மாற்றி படிக்க வேண்டும்.
    மாநில தேர்தல் ஆணையம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருவது.அதன் தலைவர் ஆளுங்கட்சிக்கு அதாவது ஆளுவோர்க்கு ஆதரவாக செயல் படுவது தவிர்க்க இயலாதது.
     சந்திரசேகரன் அப்படிநடந்து கொள்வது தவிர்க்க இயலாதது.இப்போது ஜெயலலிதா நியமித்த  சோ.அய்யரும்
அப்படிதான் நடக்க இயலும். அதற்காக எதிர்கட்சி வென்ற இடத்தை ஆளுங்கட்சி வென்றதாக அவர் அறிவித்துவிட முடியாது.
       அ.தி.மு.க,ஆட்சிகாலத்தில் முன்பு மாநிலத் தலமைத்தேர்தல் அலுவலர் மலையாண்டி எப்படி செயல் பட்டார்.செயல் பட வைக்கப் பட்டார் என்பதையும்,
 அதன் பின் அவர் அ.தி.மு.க,விலேயே இணைந்து எம்.பி.ஆக்கப்பட்டதையும் தினமலர் மறந்து விட்டது .
        ஒருதலைபட்சத்தை கலைந்து தேர்தல் நடத்த அ.தி.மு.க,தலைமைக்கு தினமலர் ஆலோசனை வழங்குவது .அ.தி.மு.க.வெற்றிபெற வைக்க வேண்டும் என்ற பயம் தான் தெரிகிறது.
        தேர்தல் நடத்த ஜெயலலிதாவுக்கு சொல்லிகொடுக்கத் தேவை இல்லை.அதற்கு அவர் ஆட்சியில் நடந்த சாத்தான்குளம்,சைதை,சென்னை மாநகராட்சி தேர்தல்களே சாட்சிகளாக அமையும்.அழகிரி  பார்முலாவை விட ஜெயலலிதா பார்முலா சாத்தான்குளத்தினருக்கு நன்றாகத் தெரியும்.அழகிரி பார்முலாவில் பணம் மட்டும்தான்.இங்கோ பணம் மற்றும் காவல்துறை அடக்குமுறையும் சேர்த்தே உண்டு.
      தினமலர் ஜெயலலிதாவுக்கு கலைஞர் கொண்டுவந்தார் என்ற காரணத்தினால் பல்வேற் ந்லத்திட்டங்களையும் ,தலைமைச்செயலகம்,மெட்ரோ ரெயில்,சமச்சீர் கல்வி,காப்பீடு திட்டம்,இலவச வீடு திட்டம் ,கான்கிரீட் வீடு திட்டம் போன்றவற்றை நிறுத்தாமல் அவற்றை சீர் செய்து நடை முறைப்படுத்தக் கூறுமா?
 ஜெயலலிதா காழ்புணர்ச்சி தனக்கு கிடையாது எனக்கூறியதை நிருபிக்க இது மிக அவசியம்.இல்லை எனில் அவரின் பழிவாங்கும் குணம் இன்னமும் மாறவில்லை அவர் திருந்தவில்லை என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள். தலைமைச்செயலகம் சீர்கேட்டை ஆராயக் குழு என்பதும், ஸ்ரீரங்கத்தில் தேர்தலில் தன்னை எதிர்த்து வேலை செய்தார் என்பதற்காக குடமுருட்டி சேகர்  என்ற தி.மு.க. செயலாளரை கஞ்சா வழக்கில் போடுவதும் ஜெ  ,,,யின்
மாறாக்குணத்தின் வெளியீடுகள்தானே?
       அம்மா வந்து இப்போது ஒரு மாதம் கூட  ஆகவில்லை.இனி போக,போகத் தெரியும்,,இந்த பூவின் வாசம் புரியும்,,,,
        இப்போதே இடதுசாரிகள் லேசாக எச்சரிப்பதை ஜெயலலிதா புரிந்து தன் செயல்பாடுகளை திருத்திக்கொள்ள வேண்டியது அவசியம்.
         அதெல்லாம் இருக்கட்டும். அம்மா எப்போது மாடு,ஆடு தரப் போகிறார்.
 வீட்டில் இடமும் -மேய்க்க பள்ளி திறக்காமல் இருக்கும் பையனும் தயாருங்க,,,
        இந்த விடயத்தையும் தினமலர் ஜெ,,,யின் காதில் போடுமா,,,?
                                                                                                                   இப்போ அரச குரு துக்ளக் சோ இல்லிங்களா?கல்கி,தினமணி,ஜூ,வி,,எக்ஸ்பிரஸ் ,சூரியகதிர்  இவர்களை எல்லாம் விசாரித்ததா சொல்லுங்க .,

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?