புதையல்கள் அரசுக்குத்தான் சொந்தம்

.
 வல்லரசு,,,விஜயகாந்த் படமல்ல,,
உலகின்  வல்லரசாக மிஞ்சி இருக்கும் அமெரிக்கா  வல்லரசாக இல்லை என கருத்துக் கணிப்பில் கூறுகிறது.
அமெரிக்கர்களே இந்த எண்ணத்தைக் கொண்டுள்ளனர். அமெரிக்காவின் புகழ்பெற்ற வார பத்திரிகையான’ டைம்’  ஆஸ்பன் கழகத்தோடு இணைந்து அமெரிக்கர்களிடம் ஒரு கருத்து கணிப்பை நடத்தியது.

இந்த கருத்து கணிப்பில் பங்கேற்ற 3 அமெரிக்கர்களில் இரண்டு பேர் அமெரிக்கா வல்லரசாக தொடரவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
              
 

  அமெரிக்க அதிபர்கள் சர்வதேச விவகாரங்களில் மூக்கை நுழைப்பதை கைவிட்டு உள்ளூர் பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்க பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருவதாகவும், மற்ற பிரச்சனைகளை விட பொருளாதார சீர்குலைவு மிகவும் ஆபத்து எனவும்  அமெரிக்கர்கள் கருதுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
========================================================================

 மக்களிடம் பெற்ற நகைகளை அரசே எடுத்துக்கொள்ளவேண்டும்,,
கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயிலில் 6 ரகசிய பாதாள அறைகள் உள்ளன. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, இவற்றில் உள்ள நகைகளை திறந்து கணக்கெடுக்கும் பணி கடந்த 6 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த அறைகளுக்கு ‘ஏ’ முதல் ‘எப்’ வரை குறியீட்டு எண் கொடுக்கப்பட்டு உள்ளது. இவற்றில் ‘பி’, ‘எப்’ அறைகளை தவிர மற்ற 4 அறைகளும் திறக்கப்பட்டு, அவற்றில் உள்ள நகைகள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன.
ரகசிய அறைகளில் தங்கம், வைரம், வைடூரியமாக ஆபரணங்கள் கிடைத்தபடி உள்ளன. தங்கச் சிலைகள், தங்க மாலைகள், தங்க நெற்கதிர்களும் இருந்தன. நேற்று வரை கிடைத்த ஆபரணங்களின் மதிப்பு ரூ1 லட்சம் கோடியை தாண்டி விட்டது. கடந்த 3 தினங்களாக ‘ஏ’ அறையில் உள்ள நகைகளை மட்டுமே கணக்கிடும் பணி நடந்து வருகிறது. நேற்று இந்த அறையில் இருந்து அபூர்வ ரத்தினங்கள் பதிக்கப்பட்ட மகா விஷ்ணுவின் தங்க சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இதன் எடை, மதிப்பு குறித்த விவரம் வெளியிடப்படவில்லை. இந்த ஒரு சிலை மட்டுமே பல ஆயிரம் கோடி மதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது தவிர, அபூர்வ மரகத கல், அடுக்கு மாலைகள், காசு மாலைகள், தங்க உருவங்கள், ராசி மோதிரங்கள் ஆகியவை கிடைத்துள்ளன. நேற்று இரவு வரை இந்த அறையில் கிடைத்த நகைகளை கணக்கெடுக்கும் பணி நடந்தது. நகைகளை கணக்கெடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். இதனால், ‘பி’ மற்றும் ‘எஃப்’ அறைகளை திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ரகசிய அறைகளில் கிடைக்கும் நகைகளால், உலகிலேயே மிகவும் பணக்கார கோயிலாக பத்மநாப சுவாமி கோயில் மாறி விட்டது.  கோயிலுக்கு தற்போது பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

  கோயிலுக்குள் ரகசிய காமிரா, மெட்டல் டிடெக்டர், அபாய ஒலிப்பான் ,மேலும் நவீன தொழில்நுட்ப பாதுகாப்பு கருவிகள் பொருத்தப்பட்டுவருகின்றன.

 காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் காஞ்சீபுரத்தில் ’ திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் அறைகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள தங்க நகைகளில் பெரும்பாலானவை, திருவாங்கூர் மன்னர் குடும்பத்திற்கு சொந்தமானது.
மன்னர் குடும்பம் தான் பத்மநாபசாமி கோவிலின் பாதுகாவலர்களாக இருந்து வந்தனர். தங்களது அரசையே பத்மநாபசாமிக்கு அவர்கள் அர்ப்பணித்தனர். சொத்துக்களையும் கோவிலுக்கு அளித்தனர். கோவிலில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட நகைகள் அனைத்தும் முந்தைய மன்னர்களால் கோவில் அறைகளில் வைத்து பாதுகாக்கப்பட்டவை. எனவே தான் இந்த நகைகள் மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானவை’ என்று.திருவாய் மலர்ந்துள்ளார்.
    அந்த நகைகள் பொது மக்களிடம் நன்கொடையாகவும்,அபராதமாகவும்,மக்கள் வரிப்பணத்தில்திருவாங்கூர் மன்னர்களால் பெறப்பட்டவை.
 தங்கள் அரண்மனையில் வைப்பதைவிட கோவிலில் இருப்பது பாதுகாப்பானது என்று வைத்திருந்தனர்.
 மக்களை வரி போன்றவற்றால் கசக்கி பெறப்பட்ட அந்நகைகளுக்கு சங்கராச்சாரி மன்னர் குடும்பத்திற்கௌ வக்காலத்து வாங்குவது.அந்நகைகள் -பிற விலைமதிப்பற்ற பொருட்களை எங்கே அரசுடைமை ஆக்கிவிடுவார்களோ என்றுதான்.
 பின் காஞ்சியிலும் அவ்வாறாகி விடக்கூடாதே?அந்தக்கவலையும்தான்.
 பேசாமல் இருங்க ,இப்போ ஜெயலலிதா வந்துவிட்டார் .சிவராமன் கதி ஞாபகம்  வரலையா?
.
கடந்த 150 ஆண்டுகளாக பூட்டிவைக்கப்பட்டுள்ள
 ரகசிய அறைகளிலிருந்து இதுவரை ரூபாய் 1 லட்சம் கோடி மதிப்புள்ள தங்கம், வைரம் மற்றும் விலைமதிப்பற்ற வைடூரிய ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில்,  பலவேறு கருத்துக்களை மன்னரின் குடும்பத்தினர் பரப்பிவருகின்றனர்.. இந்த அறைகள் திறக்கப்பட்டது ஒரு மோசமான சகுனமென்றும், சாபமென்றும்அறைகளை திறக்கும் செயல் நாட்டிற்கே சாபமாக அமையலாம்எனவும் வததிகளைப்பரப்பிவருகின்றனர்.
இதற்கு’ உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவில் இடம் பெற்ற ஒருவரது தாயார் இறந்து போனதும், மற்றொருவருக்கு காலில் அடிபட்டதும் சாபத்தின் காரணமாக’ என அறைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் கூறுகிறார்கள்.
இந்நிலையில், மீதமுள்ள அறையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தற்போது கோவிலை நிர்வகித்து வரும் அரச குடும்ப முக்கிய பிரமுகர் டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
ஆனால்நீதிமன்றமும்-அரசும் வதந்திகளுக்கு செவிசாய்க்காமல் வீணே பயனின்றி அறைக்குள் அடைபட்டுக்குக்கிடக்கும் லட்சம் கோடி மதிப்புள்ள
 நகைகள்-மதிப்புள்ள பிற வற்றை கைப்பற்றி அரசுடமையாக்கி பயனுள்ள் காரியங்களுக்கு செலவிடலாம்.
 மன்னர் பரம்பரைக்கு சொந்தம் என முறைகேட்டில் இறங்கிவிடக்கூடாது.மன்னர்களை ஒழித்தப்பின் மன்னர் என்ன? மன்னர் வம்சம் என்ன?
 நமது ஒரே மன்னர்பரம்பரை நேரு பரம்பரை மட்டும்தானே?


Funny Animation Scraps and Graphics
இங்கே தோண்டினா பத்மநாபர் கோவில் அறைக்குள் போயிடலமுனு எவன் சொன்னான்,,,? 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?