ராகுலின் சிந்தனைகள்..

பதவியில் இருக்கும்போது ஊழல் தடுப்பு சட்டத்தில் பிரதமரை சேர்க்க கூடாது: ராகுல்காந்தி

ஊழலுக்கு எதிரான லோக்பால் அதிகார வரம்புக்குள் பிரதமர், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளையும் கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் அரசு தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் லோக்பால் வரைவு மசோதாவை இறுதி செய்ய முடியாமல் இருந்து வருகிறது.

இப்போது காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி ”அரசின் தலைவராக இருப்பவர் பிரதமர், நாட்டை வழி நடத்திச் செல்பவர் அவர்தான்.

எனவே அவரை லோக்பால் அதிகார வரம்புக்குள் கொண்டு வருவது ஏற்புடையது அல்ல.

வேண்டுமானால் பதவி விலகிய பிறகு அவரை லோக்பால் மசோதா வரம்புக்குள் உட்படுத்தலாம்”

என்றுள்ளார்.

நல்லவேளை முன்னாள் பிரதமர்கள் பதவியை விட்ட பின் என்று கூறியுள்ளார். அவர்கள் அமரர் ஆனபின்பு என்று கூறாமல் விட்டார்.

”ஊழல் நடந்தபின் தான் லோக்பாலால் நடவடிக்கை எடுக்க முடியும் .அதால் ஊழலை தடுக்க இயலாது”

-என்றும்  திருவாய் மலர்ந்துள்ளார்”எப்படி இவ்வளவு அறிவு பூர்வமாக பேசுகிறார் என தெரியவில்லை.

ஒருவர் ஊழல் செய்தபின் தானே அவர் ஊழல்வாதி எனத்தெரியும்.அவரை நீ ஊழல் செய்யப்போகிறாய் என்று முன்பே திகாரில் அடைக்கமுடியுமா?

இப்போ நமது பிரதமர் மன்மோகன் சிங்,சோனியா போன்றோரை பரிசுத்த்வான்கள் என்றுதான் நம்பிக்கொண்டிருந்தோம்.ஆனால் நாளொரு ஊழலும்-பொழுதொரு முறைகேடுகளும் அணிவ்குக்கிறது.இதற்காக இதுவரை மாட்டிக்கொள்ளாத இருவரையும்{ஏன் உங்களயும்}

லோக்பால் அல்லது வேறு சட்டங்கள் மூலம் நடவடிக்கை எடுப்பது சாத்தியமாகுமா?

____________________________________________________________________________________________

 புகார்களே உண்மையாகுமா?

 தினசரி நில அபகரிப்பு புகார்கள் அடுக்கடுக்காக வந்து குவிகிறது.அது அனைத்துமே தி.மு.க,வினருக்கு எதிர்ப்பானதாக உள்ளது.அந்த புகாரில் அ.தி.மு.க,வினரோ வேறு கட்சியினரோ இல்லை.மற்றக்கட்சியினர் இதில் இருந்து மிக யோக்கியவான்கள் என தெரிகிறது.

ஆமாம் நில அபகரிப்பில் அது என்ன 2005-ல் இருந்து,2011 வரைமட்டுமே விசாரிப்பு.அதற்கு முன் நிலங்களை யாருமே அபகரிக்கவில்லையா?

சிறுதாவூர்,கொடநாடு என்று சில செய்திகள் முன்பு வந்தனவே அதை எல்லாம் விசாரிக்கலாம் அல்லவா?

அதுபற்றிய விபரங்கள்,ஆக்கிரமித்த்வர்கள் பெயர் விபரங்கள் வேண்டுமென்றால் ஆட்சியாளர்களும்-காவல் துறையும் எங்கும் அலைய வேண்டாம்.மார்க்சிஸ்ட் கட்சி மாநில மையத்தை அணுகினால் போதும்.முழு விபரங்கள் ஆதாரங்களூடன் கிடைக்கும்.

 சிறு உண்மை.எங்கள் பகுதியில் நிலத்தை முன்னாள் ஆளுங் கட்சி பிரமுகருக்கு விற்றவர் தற்போது அவர்கள் மிரட்டி பறித்து விட்டதாக புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.இது உண்மையாக இருக்குமா? 

============================================================================================

நித்யானந்தா வழக்கை திசை திருப்புகிறார்.
. நீண்ட இடைவெளிக்கு பிறகு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காட்சிகள் குறித்தும், அதையொட்டி எழுந்த சர்ச்சைகள் குறித்தும், நித்யானந்தர் சென்னை எழும்பூரில் உள்ள மெரீனா டவர்ஸ் ஹொட்டலில் நிருபர்களை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார்.

அப்போது ஆபாச வீடியோ காட்சிகள் சதி செய்து சித்தரிக்கப்பட்டவை அதில் இருப்பது நானோ ரஞ்சிதாவோ இல்லை என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து நடிகை ரஞ்சிதாவும்காவல் ஆணையர் அலுவலகத்துக்கு சென்று அங்கு  மனு ஒன்றை அளித்தார். பின்னர் இரவில் தி.நகர் நட்சத்திர ஹொட்டலில் பேட்டியளித்தார்.

அப்போது ரஞ்சிதா வந்து அமர்ந்தவுடன் எழுந்து நின்று போஸ் கொடுக்கும்படி பொட்டோகிராபர்கள் கேட்டனர். இப்படி சொல்லி சொல்லியே என்னை தெருவுக்கு கொண்டு வந்திட்டீங்க என்றார்.

மேலும் நித்யானந்தாவுடன் தான் இருப்பது போன்ற வீடியோ காட்சி உண்மை இல்லை அது ஜோடிக்கப்பட்டது என தெரிவித்தார்.

சீடி குறித்தும், புகார் குறித்தும் நிருபர்கள் சரமாரியாக கேள்வி கேட்டதால் அதையெல்லாம் சொல்ல முடியாது.காவல் ஆணையர் நடவடிக்கையில் உள்ளது என்றார்.
நிருபர்கள் கேள்வியில் அப்செட் ஆன ரஞ்சிதா பேட்டியை பாதியில் முடித்துக் கொண்டு வெளியேறினார்.

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து சட்ட நிபுணர்கள் கூறியதாவது: நித்தியானந்தா - ரஞ்சிதா ஆபாச வீடியோவில் உள்ள காட்சிகள் டெல்லி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் சோதித்து உண்மைதான் என்று கர்நாடகா நீதிமன்றத்தில் அந்த மாநிலகாவல் துறையினர் நிரூபித்து அறிக்கை அளித்துள்ளனர்.

மேலும் இவ்வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. ஆனால் தற்போது தமிழகத்தில் இவ்வாறு பேட்டி அளிப்பது வழக்கை திசை திருப்பும் செயல் என தெரிவித்தனர்.

 ஆட்சிமாறி ஜெயலலிதா வந்துவிட்டதால் நித்யானந்தா தனது மோடிமஸ்தான் வேலையை ஆரம்பித்து நல்லவனாக காட்டிக்கொள்ள முயற்சிக்கி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?