பிடிபட்ட தீவிரவாதி.


             
சென்ற 13 ம் தேதி மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில்24பேர்கள் உடல் சிதறி பலியானார்கள்.129 பேர்கள் படுகாயமைந்து இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மனிதாபிமானமற்ற  இக்குண்டு வெடிப்பில் தொடர்புடைய நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவரை அந்நாட்டு காவல்துறையினர் காத்மாண்டுவில் கைது செய்துள்ளனர்.



நேபாளத்தின் சர்லஹி மாவட்டத்தைச் சேர்ந்த முகம்மத் ஜாகீர் (40) என்பவர் உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேபாள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் அமைந்துள்ள பலுவதார் பகுதியில் வாடகைக்குக் குடியிருந்த இவரின் செயல்பாடுகள் சந்தேகப்படும் வகையில் இருந்ததாகக் தெரிவிக்கப்படுகிறது. மும்பை குண்டுவெடிப்புகள் தொடர்பாக இவர் தொலைபேசியில் பேசியதும், குறுந்தகவல்கள் அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜாகீர் கடந்த வாரமே கைது செய்யப்பட்டு விட்டார். எனினும் அந்த செய்தி ரகசியமாக வைக்கப்பட்டு இப்போது  வெளியில் கசிந்துள்ளது
===================================================
கணினியியல் கற்றுத் தரும் இணையம்
========================================
கூகுள் கோட் யூனிவர்சிட்டி என்னும் பெயரில் கூகுள் இணைய பல்கலையை நடத்தி வருகிறது.
இந்த பல்கலையில் கணினி தொடர்பாக அனைத்தும் கற்று கொள்ளலாம். கணினி கல்வி தொடர்பான இணைய பாடங்களை இந்த இணைய பல்கலையில் கூகுள் பட்டியலிட்டுள்ளது.
புதிய புரோகிராமிங் மொழிகள், எச்.டி.எம்.எல் வடிவமைப்பு, இணையதள பாதுகாப்பு, ஆன்டிராய்டு என பல்வேறு தலைப்புகள் தொடர்பான இணைய பாடங்கள் வீடியோ விளக்கங்களோடு இடம் பெற்றுள்ளன.
ஆர்வம் உள்ளவர்கள் தங்களுக்கு தேவையான பாடத்தை கிளிக் செய்து படிக்கலாம். கட்டணம் கிடையாது என்பதோடு உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டிய தேவையும் இல்லை.
இணையவாசிகள் தங்களுக்கு தேவையான பாடதிட்டம் உள்ளதா என்று தேடிபார்க்கும் வசதியும் உள்ளது. மாணவர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டு சந்தேகத்தையும் தீர்த்து கொள்ளலாம்.
பேராசிரியர்கள் மற்றும் இணைய நிபுணர்கள் தங்களது இணைய பாடங்களை இங்கே சமர்பிக்கலாம். புதிய பாட திட்டங்கள் மற்றும் பிரபலமாக உள்ள பாடங்களும் தனியே அடையாளம் காட்டப்பட்டுள்ளன.
மொத்தத்தில் இத்தளத்தில் நிறைய கணினி தொடர்பாகக் கற்றுத்தேரலாம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

முதலிடத்தை இழக்கும் நோக்கியா.

கையடக்கத்தொலைபேசி சந்தையில் 1990 ஆம் ஆண்டு முதல் தனக்கென ஒரு தனியிடத்தினை பிடித்திருந்த நோக்கியா முதற்தடவையாக ஆப்பிளிடம் தனது இடத்தினை இழந்தது.
கடந்த பல மாதங்களாக நொக்கியா தனது சந்தையினை சிறிது சிறிதாக இழந்து வந்தது.
அந்நிறுவனத்தின் அறிக்கைகளின் படி 2011 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுப் பகுதியில் தனது விற்பனை 34% குறைந்துள்ளதாகவும் 16.7 மில்லியன் கையடக்கத்தொலைபேசிகளை மட்டுமே விற்பனை செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இக்காலப்பகுதியில் ஆப்பிள் 20 மில்லியன் ஐ போன்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இது நோக்கியாவிற்கு இழப்பாகும்.
மேலும் தென்கொரிய நிறுவனமான சாம்சங் நோக்கியாவை முந்தும் நிலையில் உள்ளதாகவும் அதன் அறிக்கை வெளியாகும் போது நோக்கியாவின் நிலை இதைவிடகீழிறங்கும்.
கடந்த 2010 ஆம் ஆண்டில் நோக்கியாவின் சந்தைப் பங்கானது 38 வீதத்திலிருந்து 28 வீதமாக வீழ்ச்சியடைந்தது.
இதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆப்பிள் மற்றும் கூகுளின் ஆண்ட்ராயிட் இயக்குதளத்தினைக்கொண்டியங்கும் கையடக்கத்தொலைபேசிகளும் சந்தையில் வேகமாக வளர்ச்சியடைந்து வருவது முக்கிய காரணமாகும்.
 நோக்கியா இன்று வரை எந்தவிதமான மாறுதலுமின்றி தனது ‘சிம்பியன்’ இயக்குதளத்தினை கொண்டியங்குவதே அதன் தோல்விக்கான மற்றுமொரு முக்கியமான காரணம்.
இதனைத் தவிர்க்கவே நோக்கியா விண்டோஸ் உடன் கைகோர்ப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தது. எனினும் கையடக்கத் தொலைபேசிச் சந்தை வேகமாக வளர்ந்துவரும் நிலையில் நோக்கியா தனது இடத்தினை தொடர்ச்சியாக இழந்து வருகின்றது.
மேலும் சீன நிறுவனங்களின் மலிவான ஆனால் பல்வேறு வசதிகளைக் கொண்ட கைப்பேசிகளும் சந்தையில் மும்மரமாக விற்பனையாவதும் பலத்த அடியை நோக்கியாவுக்கு தந்துள்ளது.
சீன நிறுவனமான ‘ZTE’ மற்றும் ‘RIM’ இன் பிளக்பெரி ஆகியவையும் குறிப்பட்ட அளவில் வளர்ச்சியடைந்து வருகின்றமை நோக்கியாவிற்கு மேலும் சவாலாகவுள்ளது.
நோக்கியா வெகுவிரைவில் புதிய இயக்குதளத்தில்  இயங்குவதுடன் பல முன்மாதிரியான கையடக்கத்தொலைபேசிகளை தயாரிக்காவிடில் சந்தையில் பின்தங்கிப்போகும் நிலை வெகுதொலைவில் இல்லை .
=========================================================================
  ராசாவின் பார்வை
ஆ.ராசாவின் தாக்குதலுக்கு இந்திய பிரதமர் மன்மோகன்சிங்,ப.சிதம்பரம்.டா டா நிறுவனம் 
அருண் ஷோரி ஆகியோர்  இலக்காக இருக்கின்றனர்.
ராசா ஏதோ கையில் பலத்த ஆதாரம் வைத்திருப்பதாகவே தெரிகிறது.
முன்பே 18 கடிதங்கள் தன் கையில் உள்ளதாகவும் அதை வைத்து தானே வாதாடப்போவதாகவும் அவர் கூறியது நினைவிருக்கலாம்.
சி.பி.ஐ. சேயல் பாடுகளும் அவர் கூருவதைப் போல் ஒருதலைப்பட்சமாகவே இருப்பது போல்தான் உள்ளது.
                                                       
ஸ்வான் போன்ற நிறுவனங்களை வழக்கில் சேர்த்த சி.பி.ஐ.டா டா வை ஏன் சேர்க்கவில்லை.
கலைஞர் தொலைக்காட்சியில் 20% பங்கு வைத்திருக்கும் கனிமொழியை கைது செய்த சி.பி.ஐ.தனது ரிலையன்ஸ் நிறுவனத்தில் 69% பங்கு வைத்திருக்கும் அம்பானி.ரத்தன் டாடா க்களை இதுவரை விசாரிக்கவே அலைக்க வில்லையே ஏன்?
ராசா லேட்டாகக் கேட்டாலும் ஹாட்டாகத்தான் கேட்டுள்ளார்.
சிதம்பரம்.மன்மோகன் சிங்,அம்பானி மாட்டுவதாக இருப்பதால் இனி 2ஜி வழக்கு சற்று தள்ளாடி மறக்கவைக்கப் படும் எனவே தெரிகிறது. 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?