இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

முதல்ல கோழியைப்பிடிங்கண்ணா,,,,

                                                         
ஒரே நாளில் உலகத்தைப் புரட்டிப் போடுறதெல்லாம் நடிகர் விஜய்க்கு சாதாரணம். சினிமாவில் அவர் செய்யும் சாகஸத்தை பாவம்… அவரது தந்தையும் நம்பிக் கொண்டிருக்கிறாரே என்பதுதான் நமது கவலை. இந்த சினிமா ஹேங்ஓவ‌ரில் அவர் ஈழம் குறித்து உதிர்த்திருக்கும் வார்த்தைகள் பக்கா ப்ளாக் க்யூமர்.
                                               

விடுதலைச் சிறுத்தைகள் பாசிஸ ராஜபக்சேவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடித்தி வருகிறார்கள். விஜய்யிடம் கையெழுத்து கேட்ட போது போட முடியாது என்று சொன்னதாக சிறுத்தைகள் குற்றம்சாற்றுகிறார்கள். விஜய் சார்பில் வாய்ஸ் கொடுக்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று தெ‌ரிவித்துள்ளார். அத்துடன் நிறுத்தியிருக்கலாம். அதற்கு மேல் அவர் சொன்னதுதான் காமெடி.

”தமிழ் ஈழம் மலரவும், ஈழத்தமிழர் பாதுகாப்பாக வாழவும் விஜய் வழி செய்வார் என்று கூறியிருக்கிறார். காவலன் படத்தை ஒழுங்காக ‌ரிலீஸ் செய்ய முடியாமல் விழி பிதுங்கி அதிமுகவிடம் அடைக்கலம் தேடியவர் ஈழத்தை மலர வைக்கப் போகிறாராம். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் கீறி வைகுண்டம் போன கதைதான்”
நன்றி:123தமிழ் சினிமா
__________________________________________________________________________________

இலங்கைபடையினர் ரொம்ப வசதிகள் செய்துதந்துள்ளனர்.
’இலங்கைப் படையினர் மக்கள் மீது எவ்வித தாக்குதல்களையும் நடத்தவில்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வனின் மனைவியும், புலிகளின் முன்னாள் கடற்படைத் தளபதி சூசையின் மனைவியும் தெரிவித்துள்ளனர்’. ரிவிர என்ற சிங்களப் பத்திரிகை இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.
                          
ஆயுதம் ஏந்திய தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களைத் தவிர வேறு பொதுமக்கள் மீது படையினர் எந்தவிதமான தாக்குதல் நடத்தவில்லை என தமிழ்ச் செல்வனின் மனைவி தெரிவித்துள்ளார்.
போராட்டம் முடிவடையும் வரையில் தாம் போர் வலையத்தில் இருந்ததாகவும் படையினர் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்ச் செல்வன் உயிரிழந்ததனைத் தொடர்ந்து புலிகள் தம்மை சரியாக கவனிக்கவில்லை எனவும் அவர் முறைப்பாடு செய்துள்ளதாக ரிவிர பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இறுதிக் கட்ட போரின் போது புலிகளின் பிடியிலிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட வர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, கடல் வழியாக தப்பிச் செல்ல முற்பட்ட போது கடற்படையினர்தான் தம்மையும் பிள்ளைகளையும் காப்பாற்றியதாக சூசையின் மனைவி தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் சனல்4 ஊடகத்தினால் இலங்கைப் படையினர் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக மேற்கொண்டு வரும் பிரச்சாரங்களை முறியடிக்கும் நோக்கில் இலங்கை அரசின் ஊடகவியலாளர்கள் குறுந்தட்டு ஒன்றைத்தயாரித்து வருகின்றனர்.
இந்த விவரணதில் விடுதலைப் புலிகளின் முக்கியத்தலைவர்களான சூசை மற்றும் தமிழ்ச் செல்வன் ஆகியோரின் மனைவியர் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
தமது பிள்ளைகள் கொழும்பு பாடசாகைளில் கல்வி பயில்வதாகவும், இராணுவத்தினர் சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் குறித்த இருவரும்சிங்களப் படையினருக்கு புகழ்மாலை சூட்டியுள்ளனர்.
விடுதலைப்புலிகள் ஒழித்துவிட்டதாகக்கூறும் போது தங்கள் குடும்பத்தைக்கவனிக்கவில்லை என இருவரும் கூறுவது எப்படி.
இருவரிடமும் வாக்குமூலம் வாங்க இலங்கைபடையினர் நல்ல வசதிகளை செய்து கொடுத்திருப்பார்கள் என்பது உண்மையாக இருக்கும்.ஆனால் அனைத்து தமிழர்களுக்கும் அந்த வசதி கிட்டிருக்குமா என்பதுதான் கேள்விக்குறி?
-------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கைத் தமிழர்களின் இப்போதைய நிலை...  யுத்தக் காலத்தைவிட மோசமாக...
                                 

’இலங்கையில் யுத்தம் நடந்தபோது, தமிழ் மக்கள் பட்ட வேதனையைவிட, யுத்தம் முடிந்த நிலையில் படும் வேதனை மிகமோசமாக இருக் கிறது. இந்தப் பிரச்சனையை தமிழர்கள் பிரச்சனையாகப் பார்க்காமல் இன அழிவு தடுக் கப்பட வேண்டும், ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும், இலங்கை அரசின் ராணுவமய திட்டத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்ற கோணத் தில் பார்க்க வேண்டும்’ என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், இலங்கை நாடாளு மன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

 ’இலங்கைத் தமிழர் சம உரிமை - அரசியல் தீர்வு சிறப்பு மாநாட்டில் உரையாற்றிய அவர், தமிழ் மக்களின் உரிமை களுக்காக வாதாடுகின்றவர் களை அரசின் எதிரிகளாகப் பார்க்கும் போக்கு அதிகரித்துள் ளது. தமிழர்கள் வலுவாக உள்ள வடக்குப் பகுதியில் தனக்கு செல்வாக்கு உள்ளது என்பது போல் காட்டிக்கொள்ள, உள்ளூ ராட்சித் தேர்தலில் ராஜபக்சே தலைமையிலான கட்சியினர், தென்னங்கன்று கொடுத்தும், பணம் கொடுத்தும் வெற்றிபெற முயற்சி செய்தார்கள். ஆனால், தமிழ் மக்கள் ஏமாளிகள் அல்ல, எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு சரியான இடத்தில் வாக்களித்தார்கள். தமிழ் தேசி யக் கூட்டமைப்பு வேட்பாளர் கள் பெரும் வெற்றி பெற்றார்கள். இருந்தாலும், ராஜபக்சே அரசு அதையும் திசை திருப்புகிறது. கொழும்பு பகுதியில் இதை விடக் கூடுதலான மக்கள் தமது கட்சிக்கு வாக்களித் திருப்பதால், தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் தரத்தேவை யில்லை என்பதைத்தான் தேர் தல் முடிவு பிரதிபலிக்கிறது என்று கூறுகிறார்.

இப்படித்தான் ராஜபக்சே அரசு எல்லாவிஷயத்திலும் எதிரும் புதிருமாக நடந்து கொள் கிறது. யுத்தத்தின் கடைசி கட்டத்தில் 40 ஆயிரம் தமிழர் களுக்கு மேல் ராணுவத்தால் கொல்லப்பட்டார்கள் என்பதை ஐ.நா. அமைத்த குழுவின் அறிக்கை அம்பலப்படுத்தியுள் ளது. ஆறுதலுக்குக் கூட இது பற்றி விசாரணை நடத்தலாம் என்று இலங்கை அரசு சொல் லத் தயாராக இல்லை. மாறாக உண்மை அறியும் குழு என் பதை அவர் அறிவித்தார். அந் தக் குழு இதுவரை எந்த அறிக் கையையும் தரவில்லை.

யுத்தம் நடந்த பகுதியில் 70 ஆயிரம் பேர்தான் உள்ளனர் என்று அப்போது அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இவர் களுக்கு மட்டும்தான் உணவும், மருந்துப் பொருட்களும் அனுப் பப்பட்டன. ஆனால், யுத்தம் முடிந்த நிலையில் முகாம் களுக்கு சுமார் 3 லட்சம் பேர் அனுப்பப்பட்டார்கள். அப்படியென் றால், அரசு கூறிய 70 ஆயிரம் என்ற எண்ணிக்கைக்கும் அதிக மாக அங்கு மக்கள் சிக்கியி ருந்தனர் என்பதுதானே உண்மை. உணவு இல்லாமலும், மருந்து இல்லாமலும் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் இறந்திருப்பார்கள் அல்லது காணாமல் போயிருப் பார்கள் என்று விசாரணை ஆணையத்தின் முன் பாதிரி யார் ஒருவர் அளித்த சாட்சியம் சரிதான் என்பது தெரிகிறது.

இலங்கையில் நடந்த யுத் தம் சாட்சிகளே இல்லாமல் நடத்தப்பட்டதாகும். யுத்தப் பகுதியில் ஊடகங்கள் அனு மதிக்கப்படவில்லை, தகவல் கள் எதுவும் வெளியே செல்லா மல் தடுக்கப்பட்டது. இருப்பி னும் செல்பேசிகளை மட்டும் எப்படியோ விட்டுவிட்டார்கள். அவற்றின் மூலமே ராணுவத் தினரின் கொடுமைகள் வெளிச் சத்திற்கு வந்துள்ளன. இருப் பினும் அதனை ஏற்றுக்கொள்ள அரசு தயாராக இல்லை.

யுத்தம் முடிந்துவிட்டதாக இலங்கை அரசு கூறினாலும், ராணுவ முகாம்கள் அந்தப் பகுதியில் நிரந்தரமாக இருக் கின்றன. எந்தவொரு நிகழ்ச்சி யையும் ராணுவத்திற்குத் தெரி விக்காமல் நடந்த முடியாது. நிலங்களை அவர்கள் ஆக்கிர மித்துக் கொள்கிறார்கள். ராணு வத்தை எதிர்த்துப் பேசினால், பேசியவரின் வீட்டின் முன் நாயை வெட்டி தலையை தொங்க விடுவதும், நாயின் உடலை வீட்டின் அருகே வீசி எச்ச ரிக்கை செய்வதும் நடக்கிறது. வீடுகளில் மலத்தைக் கொண்டு வந்து கொட்டிவிட்டுப் போகி றார்கள். நாங்கள் சுதந்திரமாக பேச முடியாது, எழுத முடி யாது, நடக்க முடியாது என்கிற நிலைதான் அங்கு உள்ளது.

கிளிநொச்சிப் பகுதியில் 400 ஏக்கர் நிலத்தை எல்டிடி இக்குச் சொந்தமானது என்று சொல்லி ராணுவம் ஆக்கிரமித் துள்ளது. இப்போதுதான் எல்டி டிஇ முழுவதுமாக அழிக்கப் பட்டுவிட்டதாக அரசு கூறு கிறதே. பிறகு அந்த இடத்தை ஏன் ராணுவம் ஆக்கிரமித் திருக்கிறது என்றுதான் நாங் கள் கேட்கிறோம். அமைச்சர் கள், ராணுவ தளபதிகள், வீரர் கள் என எல்லோரும் இந்த ஆக்கிரமிப்பில் ஈடுபடுகிறார் கள். மறுபக்கம் புத்தபிக்கு களும் ஒரு புத்தவிகாரை அமைத் துவிட்டு, அதன் அருகே இருக் கும் 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தங்களுக்குச் சொந்தமென கூறுகிறார்கள். அந்த நிலம் முழுவதும் விவசாய நிலம். இதனால், அங்குள்ள தமிழ் மக்கள் தங்களின் வாழ்வாதா ரத்தை இழந்து நிற்கிறார்கள். தமிழர் பகுதிகளில் 30 சதவீத சிங்களர்களை குடியமர்த்தி, தங்களின் ஆதிக்கத்தை நிலை நாட்ட அரசு முயற்சி செய்கிறது.

யுத்தம் முடிந்து 2 ஆண்டு கள் ஆன பிறகும், 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் சொந்த இடங் களில் குடியமர்த்தப்படவில்லை. வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று அரசிடம் கேட்டால், 5 ரூபாய் கூட இல்லை என்று சொல்வதோடு, உங்களுக்குத் தான் வெளிநாடுகளிலிருந்து பணம் வருகிறதே வாங்கிக் கட்டிக்கொள்ளுங்கள் என்றும் அரசு சொல்கிறது. இந்திய அரசு 50 ஆயிரம் வீடுகள் கட்டித் தருவதாக உறுதியளித்தது. ஆனால், இன்னும் 5 வீடுகள் கூட கட்டப்படவில்லை. இதற்கு என்ன காரணம் என்பதும் எங் களுக்குத் தெரியாது.

யுத்தத்தின் போது, பிடித் துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக் கானவர்களின் கதியென்ன என்பதும் இதுவரை தெரியாம லேயே உள்ளது. இதுபற்றிய விவரங்களை வெளியிட வேண்டுமென்று நாடாளுமன் றத்தில் நாங்கள் குரல் எழுப் பினோம். அதன்பிறகு பயங்கர வாத தகவல் பிரிவில் விவரம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால், அங்கு சென்ற மக்கள் ராணுவத் தால் விரட்டியடிக்கப்பட்டார் கள். இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையில்தான் தமிழ் மக் கள் வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள். இப்போதே 10 லட் சம் மக்கள் அங்கிருந்து வெளி யேறிவிட்டார்கள். இதனால், நாடாளுமன்றத்தில் கூட பிரதி நிதிகள் எண்ணிக்கை 6ஆக குறைந்துவிட்டது. ராணுவத் தின் அதிகாரம் குறையாவிட் டால் மேலும், ஏராளமான மக்கள் அங்கிருந்து வெளியேற வேண் டிய நிலைதான் ஏற்படும்.’

இவ்வாறு சுரேஷ் பிரேமச் சந்திரன் கூறியுள்ளார்.
--------------------------------------------------------------------------------------------