தி.மு.க.வை அழிப்பது யார்,,?


தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது கோவையில் கருணாநிதி...!

தி.மு.க,வை அழிப்பதுதான் காங்கிரசின்
மிக முக்கியத் திட்டம்.
தமிழகத்தில் தங்கள் ஆட்சியை அகற்றிய
தி.மு.க,வை இப்போது பழி வாங்குகிறது
தமிழக காங்கிரஸ்.அதை கட்சிதமாக
திட்டமிட்டு செயல் படுத்துகிறது சோனியா-
ராகுல் காங்கிரஸ்.அ.தி.மு.க, வேடிக்கை மட்டுமே பார்க்கிறது .
தி.மு.க, இதை உணராமல் கூட்டணி-வெண்டைக்காய் என தவிக்கிறது.தனது அழிவை தானே தேடிக்கொள்கிறது. 

Latest News
தி.மு.க. செயற்குழு கூட்டம் கோவையில்நடந்தது. கூட்டத்தை தி.மு.க. தலைவர் கருணாநிதி தொடங்கிவைத்து பேசும்போது “தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. என்று கூறினார்.
அது உண்மைதான் வெளியில் இருந்தும் யாரும் வர வேண்டாம்.
அவர்களே அழித்துக் கொள்வார்கள்.
 முந்தைய மிசா காலத்தை அவர் உதாரணமாகவும் காட்டியுள்ளார்.

மிசா காலத்தில் தி.மு.க.மீது இந்திராகாந்தி அவிழ்த்து விட்ட அடக்குமுறைக்கு தாக்கு பிடிக்கமுடியாமல் ஏராளமான பேர்கள் தினசரிகளில்’தனக்கும் தி.மு.க,வுக்கும் எந்த விதமான ஒட்டும்-உறவும் கிடையாது .நான் கி.மு.100-ம் ஆண்டிலேயே தி.மு.க.வில் இருந்து விலகிவிட்டேன்”என்கிற அளவுக்கு விளப்பரங்களை பக்கம்,பக்கமாக வெளியிட்டனர்.
அப்போது தினமலர் தினசரி ஒரு குறிப்பிட்ட விளம்பர அளவை காண்பித்து இந்தாளவு தி.மு.க,வில் இருந்து விலகல் விளம்பரம் வெளியிட சலுகைக்கட்டணம் வெறும் 20 ரூபாய் மட்டுமே என அறிவித்தது.
அந்த அளவு கட்சி அழிந்து கொண்டிருந்தது.
ஆனால் அதன் பின்னும் கட்சி வளர்ந்து ஆட்சியை பிடித்தது.
பின் ராஜீவ் கொலை.சம்பந்தமே இல்லாமல் அப்போதும் குற்றவாளியாகி ஆட்சியை இழந்தது.மீண்டும் பிடித்தது.
ஆனால் அப்போது குடும்ப அரசியல் இல்லை.
ஸ்டாலின் மட்டுமே அரசியலில் இருந்தார்.மிசாவில்  உயிரை பறிக்கும் சதியில் இருந்தும் தப்பி சிறைக் கொடுமைகளை அனுபவித்தார்.
ஆனால் இன்று தி.மு.க,வில் அழகிரி,கனிமொழி,தயாநிதி என குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம்.
ஆட்சி அதிகாரத்தை பயன் படுத்தி முறைகேடுகளை செய்து ஆட்சிக்கும்.தி.மு.க.விற்கும் கெட்ட பெயரை ஏற்படுத்த கலாநிதி,ராஜாத்தி என ஒரு கூட்டம்.
போதாக்குறைக்கு 2-ஜி,நில மோசடி.
முன்பு போல் கட்சியில் களை எடுப்பும்,குடும்ப சொந்தங்கள் அதிகாரத்தில் தலை இடுவதை தவிர்த்திட வேண்டும்.தடுக்க வேண்டும்.
முக்கியமாக தி.மு.க.வை அழிக்க வென்றே கூட்டனி அமைத்துள்ள காங்கிரசின் உறவை துண்டித்துக் கொள்ளவும் வேண்டும்.
அதிரடி அரசியல்வாதி அழகிரி சொல்வது போல் ஆடாமல்,கண்ணியமான அரசியல் நடத்தும் ஸ்டாலின் கைகளில் கட்சிப் பொறுப்பை ஒப்படைத்து செயல் தலைவராக கருணாநிதி இருந்து ஆலோசனைகள் வழங்க வேண்டும்.
  பழைய மாவட்ட செயலாளர்கள் மாறுதல் வேண்டும் இளைய செயல்திறன் மிக்க வர்களை மா.செயலாளர்களாக்க வேண்டும்.
அதாவது கட்சிக்கு புது -இள ரத்தம் பாய்ச்ச வேண்டும்.
அதற்கு மாற்றுக்கட்சியினராலும்-மக்களாலும் மதிக்கப்படுகிற ஸ்டாலினே சரியாக இருப்பார்.
இன்னும் 4மத்திய அமைச்சர் பதவிக்காக காங்கிரசிடம் வேண்டா கூட்டணி வைத்திருப்பது தவறு.
தமிழக காங்கிரசினரும் தி.மு.க.வை.வெறுக்கும்போது இந்தக்கூட்டணி தேவையா/
மத்திய அமைச்சர் பதவி பாதுகாப்பு என நினத்தால் அது மிக முட்டாள்தனம்.
2-ஜி யில் 2அமைச்சர்களை பாதுகாக்க முடிந்ததா?இப்போது அழகிரி மீது நடவடிக்கை எடுப்பதையும் அது தடுக்கப்போவதில்லை.பின் என்னத்திற்காக மத்திய அமைச்சர் பதவி,காங்கிரசுடன் கூட்டணி.
தமிழக மக்கள் காங்கிரசின் மீது கடும் வெறுப்பில் உள்ளனர்.இந்த சட்டப் பேரவைத்தேர்தலில் தி.மு.க.தோற்பதற்கு அதுவும் முக்கிய காரணம்.
அதை உணராமல் ஒரு நன்மையுமின்றி காங்,,குடன் கூட்டு எனக்கூறுவது .கழுத்தில் கல்லைக் கட்டிக்கொண்டு நீச்சலடிப்பது போன்றது.காங்,,கல்லை கழற்றி எறியுங்கள்.
அது கழுத்தில் இருக்கும் வரை தி.மு.க,அழிவை நோக்கிப்போவதை தடுக்க இயலாது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?