கசாரே உள்ளே. கடுமையான லோக்பால் எங்கே.?


. இன்று காலை உண்ணாவிரதம் இருக்ககாந்தி சமாதிக்கு புறப்பட தயாராக இருந்தஅன்னா கசாரேவை வீட்டுக்குள் புகுந்து போலீசார் அழைத்துச் சென்றனர். ஹசாரேவின் ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டதால் டெல்லியில் பதற்றம் உருவாகி உள்ளது. கடந்த 1&ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. லோக்பாலில் பிரதமரையும் சேர்க்க வேண்டும் என பா.ஜ. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால் அந்த மசோதா, நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த லோக்பால் மசோதா வலுவாக இல்லை; வலுவான மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் இன்று முதல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சமூக சேவகர் அன்னா ஹசாரே அறிவித்தார். ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதத்துக்கு அனுமதி மறுத்த டெல்லி போலீசார், ஜெயபிரகாஷ் நாராயண் பூங்காவில் போராட்டம் நடத்த அனுமதிப்பதாக கூறி 22 நிபந்தனைகளை விதித்தனர். 3 நாட்களுக்கு மேல் உண்ணாவிரதம் நடத்தக்கூடாது, 5 ஆயிரம் பேருக்கு மேல் உண்ணாவிரதத்தில் பங்கேற்க கூடாது போன்ற 6 முக்கிய நிபந்தனைகளை ஏற்க ஹசாரே தரப்பு மறுத்துவிட்டது. இதனால்  உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்படுவதாக போலீசார் நேற்று அறிவித்தனர். இதுகுறித்து ஹசாரே கூறுகையில், ''உண்ணாவிரத போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தது பெரிய ஏமாற்றமாக உள்ளது. தடையை மீறி நாங்கள் போராட்டத்துக்கு செல்வோம். என்னை போலீசார் கைது செய்தால் சிறையில் உண்ணாவிரதம் இருப்பேன்’’ என்றார். அதே நேரத்தில் போலீஸ் தடையை மீறி ஹசாரே குழுவினர் செயல்பட்டால் சட்டம் தன் கடமையை செய்யும் என மத்திய அமைச்சர் அம்பிகா சோனி எச்சரித்திருந்தார். இதற்கிடையே, ஜெயபிரகாஷ் நாராயண் பூங்காவில் நேற்று மாலை முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று மாலை ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதிக்கு சென்ற ஹசாரே, திடீர் பிரார்த்தனையில் ஈடுபட்டார். அவரது ஆதரவாளர்களும் அங்கு திரண்டனர்.  பரபரப்பு ஏற்பட்டதால் போலீசாரும் குவிக்கப்பட்டனர். இன்று காலை காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு உண்ணாவிரதம் தொடங்கப்படும் என ஹசாரே தெரிவித்தார். இதனால் ராஜ்காட்டிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நாராயண் பூங்காவில் தடை உத்தரவை மீறி கூடிய  ஹசாரே ஆதரவாளர்கள் 50 பேரை போலீசார் சிறை பிடித்தனர். இந்நிலையில், டெல்லி போலீசின் மூத்த அதிகாரிகள் படை ஒன்று இன்று காலை மயூர் விஹாரில் உள்ள அன்னா ஹசாரே இல்லத்துக்கு சென்றது. வீட்டுக்கு வெளியே ஏராளமான ஆதரவாளர்கள் கூடியிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் ஊழலுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அவர்களை தாண்டி ஹசாரேவின் இல்லத்துக்குள் நுழைந்த போலீசார், வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என அவரை எச்சரித்தனர். தடையை மீறி வெளியே செல்ல முயன்றபோது அவரை போலீசார் கைது செய்தனர். அவரை காரில் ஏற்றி தனி இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது ஹசாரே ஆதரவாளர்கள், காரை சூழ்ந்து கொண்டு போலீசுக்கு எதிராக கோஷமிட்டனர். அதே நேரத்தில் ராஜ்காட்டில் ஹசாரேவுக்காக காத்திருந்த அரவிந்த் கெஜ்ரிவால், கிரண்பேடி மற்றும் மனீஷ் சிசோதியா உள்ளிட்ட ஆதரவாளர்கள் பலரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை பஸ்சில் ஏற்றி அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஹசாரே, தண்ணீர் கூட குடிக்க மறுத்து உண்ணாவிரதத்தை தொடர்கிறார். ஹசாரே மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் டெல்லியில் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது. முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  அன்னா ஹசாரே கைது குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது. கேள்வி நேரத்தை  ஒத்தி வைத்துவிட்டு விவாதிக்குமாறு பாஜக நோட்டீஸ் வழங்கியது. இதனையடுத்து ப.சிதம்பரம் 12 மணிக்கு இதுகுறித்து விளக்கம்  அளிப்பார் என அரசு கூறியது. ஆனால் அரசின் சமாதானத்தை ஏற்க மறுத்து எம்.பி.,க்கள் தொடர்ந்து கூச்சல் குழப்பத் தில் ஈடுபட்டனர்.  மாநிலங்களவையின் மையப்பகுதிக்கு வந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டனர். எம்பிக்களின் தொடர் ரகளையால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
 விடுதலைநாள் விழாவில் கொடியேற்றிய பிரதமர் மன்மோகன் சிங் கடுமையான லோக்பால் மசோதாவினால் ஊழல் ஒழிக்கப்படும் என நகைச்சுவை வழிய பேசி அனைவரையும் சிரிப்பு மழையினால்[ஏற்கனவே உண்மை மழை வேளியே பெய்த்தது]குளிக்க வைத்தார்.
அவரின் காங்கிரசு கொண்டு வந்த லோக்பால் சரியில்லை எனத்தானே அன்னா கசாரேயும்,எதிர்கட்சிகளும் குற்றம் சாட்டுகிறார்கள்.
இப்போது உள்ள நிலைதான் புதிய லோக்பால் மசோதா நடைமுறைப்படுத்தினாலும் இருக்கும் ஒரு புதிய நாடைமுறையும் ஏற்படப்போவதில்லை.அந்த மசோதா வந்தாலும் ஒன்றுதான் வராவிட்டாலும் ஒன்றுதான்.அது லோக்பால் மசோதா இல்லை வெறும் சோதா தான்.
அதை நம் பிரதமர்.ஐயா பரிசுத்தம் கடுமையான மசோதா என்பது கொடுமையான நகைச்சுவையாகும்.
படம்-நன்றி;தினகரன்


                      


.
______________________________________________-நமக்கு வேண்டிய பார்மேட்டில் வீடியோவைத் தரவிறக்க ஒரு இணையம் 


இணையத்தில் பரவிக் கிடைக்கும் வீடியோக்களைத் தரவிறக்க பல தளங்கள் உள்ளன. ஆனால் நமக்கு வேண்டிய போர்மேட்டில் குறிப்பிட்ட வீடியோவைத் தரவிறக்குவது தான் சுலபமில்லை. FLV வடிவத்தில் தரவேற்றப்படும் வீடியோக்கள் தான் யூடியுப் போன்ற இணையதளங்களில் காணப்படும். தரவிறக்கி முடிந்தவுடன் மறுபடியும் அந்த வீடியோவை நமக்கு வேண்டிய போர்மேட்டில் மாற்ற வேண்டிய வேலையும் சேர்ந்து கொள்ளும். தரவிறக்கும் போதே வேண்டிய போர்மேட்டில் தரவிறக்கம் செய்ய பல மென்பொருள்களும் கிடைக்கின்றன.
இணையத்தில் இதற்கு ஒரு வழியும் இருக்கிறது. WebVideoFetcher என்ற இந்த இணையதளம் கூகிள், பேஸ்புக், யூடியுப் (Google, youtube, facebook) போன்ற வீடியோ தளங்களிலிருந்து நேரடியாக நமது கணிணிக்கு வீடியோக்களைத் தரவிறக்க உதவுகிறது. நீங்கள் எதேனும் இணையதளங்களில் வீடியோ பார்த்துக் கொண்டிருக்கும் போது பிடித்திருந்தால் அதன் இணைய முகவரியை copy செய்து இந்த தளத்தில் இட்டு Download என்ற பட்டனைக் கிளிக் செய்தால் போதும்.
இந்த தளத்தின் மூலமே FLV, AVI, Mp4, Mp3, AAC போன்ற வகைகளில் குறிப்பிட்ட வீடியோவை பெற்றுக் கொள்ள முடியும். மேலும் வீடியோக்களை Low Quality, Medium, High Quality போன்ற தர அளவுகளில் தரவிறக்கம் செய்ய முடியும் என்பதே இதன் சிறப்பாகும். ஆடியோ வகைகளிலும் இந்த தர நிர்ணயம் இருக்கிறது. இதன் மூலம் உங்களுக்கு ஒத்து வருகிற தரவிறக்க அளவுக்கேற்ப (Download size) பெற முடியும்'
=================================================================
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper


 சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது, நெடுஞ்சாலைத்துறை தொடர்பான கேள்விக்கு அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்தார். திருச்சி மனோகரன் (அதிமுக) பேசும்போது, ‘கடந்த ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை தொடர்பாக ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வந்தார்கள்’ என்றார். இதற்கு திமுக கொறடா விளக்கம் அளிக்க முயன்றார். ஆனால், சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. மேலும் அமைச்சர் முனுசாமி துரை முருகன் உடலசைவின் மூலம்அதிமுகனரை கிண்டல் செய்வதாக குற்றம்சாட்டினார்.அதற்கு விளக்கம் சொல்ல தி.மு.க.வினர் முயன்றபோது அ.தி.மு.க வளர்மதி,ஒட்டு அ.தி.மு.க[ச.ம.க] நடிகர் சரத்குமார்ஆகியோர் தெரிவித்த கருத்துகளால் அவையில்  கூச்சல் குழப்பம் நிலவியது. திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தி.மு.க,வினர் சபை நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் இருந்த முடிவே சரி.இவர்கள் கலந்து கொண்டும் வெளிநடப்புகளில்தான் இறங்க வேண்டும்.இவர்களை பேசவோ எழுந்திருக்கவோ கூட அ.தி.மு.க,வினர் விட மாட்டார்கள்.அதற்காகத்தானே ஒரு இடமாக உட்காரவைக்க அவைத்தலைவர் ஜெயக்குமார் அனுமதிக்க மாட்டேன் என்கிறார்.
இதுவரை ஒருகட்சியைச்சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில்தான் அமரவைக்கப் பட்டிருக்கிறார்கள்.ஆனால் தி.மு.க.வி.னருக்கு மட்டும் இதை மறுப்பதும்,நடைமுறை இல்லை என்பதும் பழிவாங்கல் முயற்சிதான்.
இந்த விடயத்தில் இடதுசாரிகள் ஒரே இடத்தில் அமரவைக்க அ.தி.மு.க,அரசுக்கு கருத்து கூறலாமே.இடதுசாரிகள் ஒட்டுமொத்தமாக தா.பாண்டியன் போல் ஜெ,பக்தர்களாகி விட்டனர்.
மின்தடைக்கு இன்னும் செத்த பாம்பு நிலையில் உள்ள தி.மு.க.வை குறை கூறிக்கொண்டிருக்கிறார்களே இடதுசாரிகள்.ஆனால் தி.மு.க ஆட்சிகாலத்தில் அ.தி.மு.க வை தி.மு.க.மின் திட்டங்களை புதிதாகத்துவக்காததினால்தான் மின் தட்டுப்பாடு என்ற போது இது போல் அ.தி.மு.கவை அப்போது குறை கூறவில்ல்லை இவர்கள்.ஜெயலலிதா இன்னும் மின்தடையைப்போக்கும் நடவடிக்கைகளில் இறங்குவதாகத்தெரியவில்லை.தி.மு.க.வை போல் அறிவிப்புகளிலேயே காலத்தைக் கழித்து விடுவார்கள் .நில அபகரிப்பு வழக்கில் இன்னும் சிறுதாவூர் சேர்க்கப்படவில்லையே?மார்க்சிஸ்டுகள் என்ன செய்கிறார்கள்?
தற்போது துரைமுருகன்” நான் எப்படி நடந்து கொண்டேன் என்பதை சட்ட மன்றத்தில் இருக்கும் கண்காணிப்பு காமிராக்கள் காண்பிக்கும் அதை மக்கள் மன்றத்தில் காண்பித்து அமைச்சர் முனுசாமி கூறியதுபோல் அநாகரிகமாக நடந்திருந்தால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகிக்கொள்கிறேன்.இல்லையெனில் அமைச்சர் பதவிவிலகுவாரா?”
என்கிறார்.அமைச்சர் முனுசாமி இதுவரை வாயைத்திறக்கவில்லை.
அரசியல் பார்வையாளர்கள் தினமும் தி.மு.க,வை பற்றி குறைகளை சட்டமன்றத்தில் அ.தி.மு.க,வினர் பேசுவார்கள் அதற்கு தி.மு.க.உறுப்பினர்கள் அவையில் இருந்தால் அதுவும் துரைமுருகன் போன்றோர் இருந்தால் பதில் கொடுப்பார்கள் அவர்கள் பதில் இல்லாமல் தங்கள் குற்றசாட்டுகள் மட்டுமே பதிவாக வேண்டும் என்ற நோக்கிலேயே அ.தி.மு.க,திட்டமிட்டு இது போன்று நடந்துகொள்ளுகிறது.
இதை தி.மு.க,எப்படி எதிர்கொள்ள போகிறது?என்பதை வருங்காலங்களிலேயே பார்க்க வேண்டும்.என்கிறார்கள்.
அதெல்லாம் இருக்கட்டும் .சட்டமன்றத்தில் மற்ற கட்சியினர் இருந்தார்களே அவர்கள் துரைமுருகன் அநாகரிகமாக நடந்து கொண்டதைப்பற்றி இதுவரை ஒன்றும் சொல்ல வில்லையே?அவர்கள் உண்மை நிலையை கூறலாமே.அவ்ர்கள் கூட்டணிக்கட்சியினர்தானே?அ.தி.மு.க.வின் கிளை அமைப்புகள் இல்லையே?
                            Photo: A Japanese macaque in a hot spring  

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?