தன்னார்வ நிறுவனங்களின் அழிவுப் பணி

அழிவுகளை ஏற்படுத்திய தன்னார்வ நிறுவனங்களின் பணம் : நார்வே ஒப்புதல்
                      
நார்வே அரசால் தயாரிக்கப்பட்ட 208 பக்கங்களைக் கொண்ட இலங்கையில்நார்வே அரசின் பங்கு குறித்த ”‘அமைதிக்கான அடமானங்கள்‘ (Pawns of Peace) என்ற தலைப்பிலான  அறிக்கை, ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது. பாலஸ்தீனம், பிலிப்பைன்ஸ் உட்பட பல நாடுகளில் விடுதலைப் போராட்டஙகளைச் சீர்குலைப்பதில் நார்வே முக்கிய பங்கு வகித்திருக்கிறது. தன்னார்வ நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பெருந்தொகைப் பணம் போராட்டங்களைச் சீர்குலைப்பதற்கும் அழிவுகளை ஏற்படுத்துவதிலும் ஆரம்பப் புள்ளியாக அமைகிறது. அண்மையில் லிபியாவை ஆக்கிரமிப்பதிலும் இத் தன்னார்வ நிறுவனங்களின் பங்கு பிரதானமானதாக அமைந்திருந்தது. நார்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தன்னார்வ நிறுவனனங்கள் சீரழிவிற்கு எவ்வாறு பயன்பட்டன என்பது குறித்து ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளது. 1997ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் நார்வே 366 மில்லியன் அமெரிக்க டாலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை சமாதானம் செய்ய முயற்சிகுறித்து நார்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம், நார்வே மற்றும் இலங்கை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. நிதி உதவி வழங்கப்பட்ட பெரும்பான்மையான இலங்கை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உரிய முறையில் பணத்தைப் பயன்படுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொடவின் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு 60 மில்லியன் நார்வே பணமான நோக் வழங்கப்பட்டுள்ளது. மிலிந்த மொரகொட, ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலத்தில் நார்வே சமாதான குழுக்களில் முக்கிய வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் ஆளும் கட்சியில் இணைந்து கொண்ட மொரகொட ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கை வெளி வளத் திணைக்களத்திற்கு 300000 மில்லியன் நோக்குகளும், இலங்கை அரசாங்கத்திற்கு 70000 மில்லியன் நோக்குகளும் வழங்கப்பட்டுள்ளன.
ஆக மொத்தத்தில் சமாதான முயற்சி என்ற பெயரில் போராட்டக்காரர்களுக்கு உதவுவதாகக் கூறி அடுத்துக் கெடுக்கும் பணியைத்தான் நார்வே செய்து வந்துள்ளதாகத் தெரிகிறது.
அவர்களின் இந்த அறிக்கையின் உள்ளடக்கம் அதைத்தானே சொல்கிறது.
 நார்வே ஒஸ்லோவில் உள்ள புலி சிலை.
விடுதலைபுலிகளின் தமிழீழப் போராட்டமும் வீழ்ச்சியடைய நார்வேயின் துணையும் இலங்கை பக்‌ஷே அரசுக்குக் கிடைத்துள்ளது.அது இந்திய அரசு பக்‌ஷேக்கு செய்த உதவிகளுக்கு எந்த விதத்திலும் குறைந்ததாகத்தெரியவில்லை.
எதிரியை விட இது போன்ற ஐந்தாம்படைகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.அது புலிகளுக்கு காலம் கடந்த அறிவுரையாக அல்லவா இந்த அறிக்கை தந்துள்ளது.
========================================================================================
இப்போதைக்கு இலங்கை ராஜ பக்‌ஷே தனது பேட்டியொன்றில் கீழ்க்கண்டவாறு விடுதலைப்புலிகள் பற்றி பதிலளித்துள்ளார்.
கேள்வி: விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்து உலகின் பல பகுதிகளில் பணம் வசூலித்து வருவதாகவும், மீண்டும் தலை தூக்க முயற்சிக்கிறார்கள் என்றும், போராளிகளின் உணர்வுகளை அப்படியே தக்க வைக்க முயற்சிப்பதாகவும் உளவுத் தகவல்கள் கூறுகின்றன. அது உங்களுக்கும் தெரியுமா?
பதில்:  இங்கிலாந்திலும் சரி, கனடாவிலும் சரி, அமெரிக்காவிலும் சரி, அல்லது உலகின் பிற நாடுகளிலும் சரி, விடுதலைப்புலிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள், அனுதாபிகள் பணம் வசூலிக்கிறார்கள், ஒருங்கிணைய முயற்சிக்கிறார்கள், இரகசியமாக சந்தித்துப் பேசுகிறார்கள். இதை நாங்கள் அறிவோம்.
எங்களிடம் சரணடைந்த முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க போராளிகள் மூலம் இது குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அனுதாபிகள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். மீண்டும் போரில் குதிக்கவும் அவர்கள் முயற்சிக்கிறார்கள். புலிகளின் பிரசாரம் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?