கோபம்

மத்திய விவசாய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவார், வியாழக்கிழமை நடந்த இலக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திரும்பும் போது பத்திரிகையாளர்களுக்கு இடையே அமர்ந்திருந்த ஒரு சீக்கிய இளைஞர், திடீரென எழுந்து வந்து அவரது கன்னத்தில் ஓங்கி ஒருஅறைவிட்டார்.
அத்துடன், "ஊழல்வாதிகளுக்கு இனி இதுதான் கதி. பணவீக்கமும், விலைவாசியும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அதை கட்டுப்படுத்துவதற்கு சரத் பவார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ’என்று கத்தினார்.
அடிவாங்கியதில் அதிர்ச்சியடைந்த சரத்பவார் அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார். இதன் பின், அங்கு விரைந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகள், அந்த இளைஞரை பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஹர்வீந்தர் சிங்கை கைது செய்த போலீசார் டெல்லியில் உள்ள மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது பேசிய ஹர்வீந்தர் சிங் மற்றொரு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் பவாரை அறைவேன் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனையடுத்து டிசம்பர் 9-ம் தேதி வரை 14 நாட்கள் ஹர்வீந்தர் சிங்கை காவலில் வைக்குமாறு மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் ஜஸ்ஜீத் கௌர் உத்தரவிட்டுள்ளார்.
”வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் ஒருமுறை சரத்பவாரை அறைவேன்” என்று மத்திய அமைச்சரை அறைந்த ஹர்வீந்தர் சிங் நீதிமன்றத்திலேயே தெரிவித்துட்டார். சில நாட்களுக்கு முன் 5 ஆண்டுகள் சிறை தண்டனையை பெற்றுக்கொண்டு வந்த முன்னாள் அமைச்சர் சுக்ராமையும் ஹர்வீந்தர்தான் அறைந்துள்ளார்.
ஊழல் அமைச்சர்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் உள்ள கோபத்தை இவர் கைவழியே  காட்டிவிட்டார்,
இதற்கு அரசியல் கட்சிகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்துள்ளன.தங்கள் மீதும் இப்படி ஒரு தாக்குதல் நடந்து விடக்கூடாது என்ற பயமாக இருக்கலாம்.
ஆட்சியில் உள்ள காங்கிரசு இதை சிறு செயலாக என்னி தனது அலங்கோல ஆட்சியையும் முதலாளிகளுக்கு,பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும்-இந்திய சாதாரண மக்களுக்கு எதிரான தனது அலங்கோல ஊழல் நிறைந்த ஆட்சியை தொடர முற்படக்கூடாது.
இந்த ஊழல் மிகுந்த ஆட்சியாளர்களின் மீது,விலைவாசிகளைக் கட்டுப்படுட்தாமல் உள்ள கையாலாதவர்கள் மீதும் ஹர்வீந்திர சிங்குக்கு மட்டுமல்ல இந்திய மக்கள் அனவருக்கும் கோபம் உள்ளது.  அது வரும் தேர்தலில் எதிரொலிக்கும்.
ஆனால் இங்குள்ள அரசியல் கட்சிகள் முக்கால்வாசி பன்னாட்டு,உள்நாட்டு பண முதலைகளுக்கு ஆதரவாக உள்ள அவலம்தான் ,மக்களின் கையாலாகத்தனம்தான் இப்படி வெளிப்படுகிறது.
சீனி விலை ஒரு கட்டுக்குள் வந்துள்ள நிலையில் மீண்டு ஏற்றுமதிக்கு திறந்து விட்டுள்ளார் சரத் பவார்.கோதுமை ஏற்றுமதிக்கும்தடையை நீக்கி சீனி,கோதுமை விலை மீண்டும் ஏற வழி ஏற்படுத்திக்கொடுத்துள்ளார் சரத்பவார்.
அவர் இந்தியாவில் உள்ள ஏழைகள் நலனை விட ஏற்றுமதியால் பணம் குவிப்பவர்கள் நலனையே அதிகம் கவனிக்கிறார்.உணவு அமைச்சராக இருக்க லாயக்கற்ற பவார் ஒரு கிரிக்கட் வியாபாரி.அவர் கவனம் முழுக்க கிரிக்கட்டில் மட்டும்தான்.காங்கிரசு அரசு அவரை விளையாட்டு அமைச்சராக நியமித்துவிட்டு மக்கள் நலன் நாடும் ஒருவரை உணவுத்துறைக்கு நியமிக்கலாம்.அதுதான் அவரை இன்னும் அடி வாங்குவதில் இருந்து காப்பாற்றும்.
__________________________________________________________________________________________
 ரம்மி  சூதாட்டம் அல்ல 

சூதாட்டம் நடப்பதாக வந்த புகாரின்பேரில் தியாகராயநகர் மகாலட்சுமி கலாச்சார கழகத்தில் போலீசார் சோதனை நடத்தினர். இதை எதிர்த்து அக்கழகத்தின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேஸ்வரன்,” சீட்டுக்கட்டில் ரம்மி விளையாடுவது சூதாட்டம் அல்ல. 13 சீட்டுக்களை கொண்டு ஆடும் ரம்மி அறிவுத்திறனை வளர்க்கும். பந்தயம் கட்டி ஆடினாலும் கூட தவறல்ல ”என்று தீர்ப்பளித்துள்ளார்.
சென்னை தியாகராயநகர் மகாலட்சுமி கலாச்சார கழக செயலர் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார் நீதிபதி ராஜேஸ்வரன்.
சென்னை தி.நகரில் இயங்கி வரும் மகாலட்சுமி கலாச்சார மையத்தில், ரம்மி விளையாடியதாக 59 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்க ளை விடுதலை செய்யக் கோரி அந்த மையம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி ராஜேஸ்வரன், ரம்மி சூதாட்டமல்ல என்றும், அது அறிவை வளர்க்கும் விளையாட்டு என்று தீர்ப்பு அளித்துள்ளார். அதேபோல், ரம்மி விளையாட்டின் போது பந்தயம் கட்டி விளையாடுவது சட்டத்திற்கு புறம்பானது அல்ல என்றும் அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
______________________________________________________________________



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?