அவர் ஒரு புத்து


காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் ஒரு முட்டாள் என ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார். ஆமதாபாத்தில் நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது, ராகுல் குறித்து ஒரு வரியில் சொல்லுங்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த சுவாமி, அவர் ஒருபுத்து[புத்து= முட்டாள் nincompoop] என்று கூறினார் சுவாமி. மேலும், ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு அன்னா ஹசாரே, ஆர்.எஸ்.எஸ்.,சின் ஆதரவைப் பெற தயங்குவதேன் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், கடந்த 1962 மற்றும் 1965 ம் ஆண்டுகளில் நடந்த போர்களின் போது ஆர்.எஸ்.எஸ்., ஆற்றிய பணிகளை, முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேருவும், லால் பகதூர் சாஸ்திரியும் பாராட்டியுள்ளதாக கூறினார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------

    2லட்சம் கோடி முறைகேடு.
விசாரணை முடிவு,                                 

இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம், விண்ணில் செலுத்த, ஜி-சாட் -6 மற்றும் ஜி-சாட் 6ஏ செயற்கைக் கோள்களில், தலா, பத்து எஸ்-பாண்ட் டிரான்ஸ்பாண்டர்களை, திவாஸ் மீடியா நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்ய, 2005ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. செயற்கைக் கோள்கள் ஏவப்படாத நிலையில், இந்த ஒப்பந்தத்தால், அரசுக்கு, 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாயின. மத்திய அரசு மறுத்தது. ஒப்பந்தம் குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என, "இஸ்ரோ'வும் அறிவித்தது. இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகளும் கேள்விகளை எழுப்பியுள்ளதால் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் ஒப்பந்தம் தொடர்பாக அமைக்கப்பட்ட உயர்மட்டகுழுவின் நிலை குறித்து பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மனு செய்திருந்தது. அதில் ஆண்ட்ரிக்ஸ் - திவாஸ் மல்டிமீடியா நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின் பல்வேறு அம்சங்களை மறு ஆய்வு செய்ய, இரண்டு உறுப்பினர்கள் அடங்கிய உயர்மட்ட குழு கடந்த பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டது. பின்னர் கடந்த மே மாதம் 31-ம் தேதி எஸ்-பாண்ட் அலைவரிசை ஒதுக்கீடு குறித்து விசாரிக்க முன்னாள் லஞ்ச ஒழிப்பு கமிஷனர் பிரதியூஸ் சின்ஹா தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவை பிரதமர் நியமித்தார். இந்நிலையில் இக்குழு தனது விசாரணையை முடித்துவிட்டதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இத்த்கவல்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், தெரியவந்துள்ளது.
                   

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?