நல்லாட்சியின் லட்சணம்,





தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்விலைவாசிகளை அ.தி.மு.க,அரசு உயர்த்தியதற்கு புது விளக்கம் தந்துள்ளார்” கட்டண உயர்வு, மாபெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த ஆடு, மாடு வழங்கும் திட்டத்தைத் துரிதப்படுத்தியிருந்தால், பால் விலை உயர்வை தவிர்த்திருக்க முடியும். அதே போல், ஏழை, எளியோர் அதிகம் பயன்படுத்தும் பஸ் கட்டணத்தை உயர்த்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ”
-ஏன்? அதையும் மாடு உடனே கொடுத்திருந்தால் அதன் மீது சவாரி செய்வதன் மூலம் பேருந்துக் கட்டணத்தையும் தவிர்த்திருக்கலாமே.?
விலைகளை ஏற்றுவதற்கே இலவசங்கள் வழங்கள் தான் காரணம் .மத்திய அரசு இலவச திட்டங்களை நிறைவேற்ற நிதிதரவில்லை என்றுதானே ஜெயா அரசு கூறுகிறது.பொன்.ரா,கி.க்கு கோமாதா நினைவுதான் வருகிறதா?
இலவசங்களை யார் கேட்டார்கள்.வாக்குகளை வாங்க ஜெயா ,தானே கருணாநிதிக்கு போட்டியாக லேப்டாப்,மிக்‌ஷி,கிரைண்டர்,மாடு,பன்னி என்று அறிவித்தார்?
அப்போது அதற்கான நிதியதாரங்களை அவர் ஏன் கவனத்தில் கொள்ளவில்லை.இப்போது விலைவாசிகளை உயர்த்தி மக்களைக் கொல்லுகிறார்?
கருணாநிதியை குறை சொல்ல ஜெயா .வுக்கு அருகதை இல்லை என்று இப்போது தெளிவாகுகிறது.அவரின் ஆட்சிகாலத்தில் இப்படி விலைவாசி உயர்வுகளும் வரிகளும் மக்களை பயமுறுத்தவில்லை.பேருந்து கட்டணத்தைக் கூட அவ்வப்போது மக்கள் அறியாவண்ணம் அங்கங்கே உயர்த்தியுள்ளார்.இப்படி 70%தடாலடியாக உயர்த்தவில்லை.
சென்னையில் இருந்து 62ரூபாய் கொடுத்து ஊருக்கு சென்றவர் நல்லிரவில் மீண்டும் சென்னை திரும்ப 110ரூபாய் கேட்பதாகவும் தான் 100 ரூபய் மட்டுமே வைத்துள்ளதாகவும் புலம்பியதை தொலைக்காட்சியில் காட்டினார்கள். மக்களுக்கு அவகாசமே கொடுக்காமல் இப்படி விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் என்ன?
கருணாநிதி கடனாக்கிவிட்டாராம்.மக்களுக்கு நல்லது செய்திட ஒரு அரசு கடனாளியாவதில் என்ன தப்பு.
மத்திய அரசு கடனை நாம் அவ்வளவு சரியாயக திருப்பிக்கட்ட வேண்டுமா என்ன? அந்த கடனை நம் மாநிலத்திலே வசூலிக்கப்பட்ட வரிப் பணத்தில் இருந்துதானே தருகிறது.நாம் அதை வாங்குவதில் உரிமையில்லையா என்ன?
   அரசு நிறுவனங்களை கடுமையான லாபத்தில் இயங்கச்செய்வதின் மூலம் யாருக்கு நன்மை.அந்த லாபப்பணத்தை எங்கே செலவிடப்போகிறார்?
அரசு நிறுவனங்களே மக்கள் நலனுக்குத்தானே.தனியார் நிறுவனம் போல் லாபம் கொழிப்பதா முக்கியம்.மக்களுக்கு குறைவான விலையில் சேவை செய்யதானே அரசு நிறுவனங்கள் உருவாக்கப்படுகின்றன.
எகிப்து போன்ற நாடுகளில் இன்னமும் உணவுப்பொருட்கள் ரொட்டி மிக குறைவான விலையில் தயாரிப்புச்செலவை விட குறைவான விலைக்கு அரசால் வழங்கப்படுகிறது.உங்களின் ஆவின் போல் 2/-ரூபாய் அதிகம் கொடுத்துவிட்டு ரூ6-50 அதிகமாக மக்களிடம் வாங்கவில்லை.அதுதான் மக்களுக்கான அரசு.நீங்கள் நடத்துவதுவதுவதற்குப் பெயர் அரசல்ல.ஜெயா நிறுவனம்.அது இப்போதைக்கு தமிழகத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது.
என்றுதான் என்ணத்தோன்றுகிறது.சென்ற முறையும் ஜெயா அரசு காலத்தில்தான் பால்,பேருந்து,மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன.பின் அதை அவர்வந்துதான் உயர்த்துகிறார்.
ஜெயா வரும் போதெல்லாம் நிதி நெருக்கடியும்,கடுமையான கடன் சுமையும் சேர்ந்து வருகிறது எப்படி என்பதுதான் புரியாதப் புதிராக உள்ளது.ஐந்தாண்டுகள் கருணாநிதி ஆட்சியில் கூறப்படாத இந்த நிதி நெருக்கடி ,கடன் சுமைஜெயா ஆட்சிக்காலங்களில் மட்டும் தலைகாட்டுவது எப்படி?
அதுதான் ஜெயலலிதாவின் ஆட்சி செய்யத்தெரிந்ததன் லட்சணமாக இருக்குமோ?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?