கிரிக்கெட் வாரிய ஏமாற்றுத்தனம்.


ஊழல்-1
உலகின் மிகப் பணக்கார விளையாட்டு அமைப்பான ”இந்திய கிரிக்கெட் வாரியம்” வரி ஏய்ப்பு செய்து வருவது கண்டு பிடிப்பு.
              
இந்திய நாடாளுமன்றத்தின் 2010- 11 ஆம் ஆண்டுக்கான நிதிக் குழுவின் 38 ஆவது அறிக்கையில் இந்த கிரிக்கெட் வாரிய மோசடி அமபலமாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியம் தொடர்பிலான வரி மதிப்பீடு மற்றும் வரி விலக்கு ஆகியவை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட அந்த குழுவின் அறிக்கை, இந்திய அரசின் வருமானவரித்துறை மற்றும் கிரிக்கெட் வாரியத்தை கடுமையான விமர்சித்துள்ளது.
 இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு காலத்தில் அந்த விளையாட்டை பிரபலப்படுத்துவதற்காக அறக்கட்டளை என்று பதிவு செய்து அதற்கான வரிவிலக்கை பெற்றார்கள்.ஆனால் இப்போது இந்திய கிரிக்கெட் வாரியம் உலகில் மிகப் பணக்கார அமைப்பாக மாறிய பின்னரும் அரசிடம் இருந்து கேளிக்கை வரி,வருமானவரிக் கழிவு என பெற்று மோசடி செய்து ஆயிரக்கணக்கான கோடிகளை சேர்த்துள்ளனர்.கோடி ,கோடியாக கொள்ளை பணம் கொட்டிய போதும் அரசிடம் இருந்து தொடர்ந்து வருமான வரிச் சலுகைகளைப் பெற்று மக்கள் வரிப்பணத்தை அரசு துனையுடன் சூறையாடி வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தில் சரத்பவார்,கல்மாடி,டால்மியா போன்ற  பல பெரிய ஆட்கள்பொறுப்பில் இருந்துள்ளனர். அவர்களும் வரி ஏய்ப்பு செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கிரிகெட் வாரியம் சரியான முறையில் வரிகட்டவில்லை, நாட்டுக்கு பெரிய இழப்பைத்தான் அவ்வாரியம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
வருமான வரித்துறையினர் இந்திய கிரிக்கெட் வாரியம் பல வழிகளில் வரி ஏய்ப்புகளில் ஈடுபட்டுள்ளது தெரிந்தும் சம்பந்தப்பட்ட அரசு துறைகள் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கையே பார்த்து வந்துள்ளது எனவும் அந்தக் குழுவின் அறிக்கை கடுமையாக குர்றம் சாட்டியுள்ளது.
கண்ணியமானவர்களின் விளையாட்டு என்று கருதப்படும் கிரிக்கெட் விளையாட்டு இந்தியாவைப் பொருத்தவரை அப்படி இருக்கவில்லை.வருமான வரித்துறை கிரிக்கெட் வாரியத்துக்கு மிகவும் சலுகை காட்டி அரசுக்குஇழப்பை ஏற்படுத்தி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொறுப்பில் உள்ளோர் தங்கள் கல்லாவை நிரப்பிக் கொள்ள வழி செய்துள்ளனர் எனகுற்றம் சாட்டியுள்ளது.
ஒரு மாத காலத்துக்குள் இந்த விடயம் முழுமையாக ஆராயப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அந்தக் குழு தனது பரிந்துரையில்கூறியுள்ளது.
  
சாதாரண அரசு ஊழியரிடம் வருமான வரித்துறையினர் காட்டும் எந்த கெடுபிடிகளும், இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் அத்துறையினர் காட்டவில்லை.
கோடிக்கணக்கில் ஏலம்,விளம்பரதாரர் பணம்,தொலைக்காட்சி ஒளிபரப்பு வருமானம் என்று பல பக்கங்களில் இருந்து பணம் கொட்டும் விளையாட்டாக கிரிக்கெட் இருந்தும் கிரிக்கெட் வாரிய கொள்ளையில் அரசும் ,வருமான வரித்துறையும் மிகவும் கீழிறங்கி சலுகைகளை அள்ளிக்கொடுத்துள்ளது அதன் மூலம் சிலர் பயனடைந்துள்ளனர்-வளமாக இருந்துள்ளனர் என்ற நியாயமான சந்தேகத்தைக்கிளப்பியுள்ளது.”
             -என நிதிக்குழு அறிக்கை மத்திய அரசு,வருமான வரித்துறை,கிரிக்கெட் வாரியம் ஆகியவற்றை கடுமையாகக் கண்டித்துள்ளது. அறிக்கையில் உள்ளவை அனைத்தும் உண்மைதானே.
கிரிக்கெட் பைத்தியம் பிடித்த நம் மக்களின் ஏமாளித்தனத்தை கிரிக்கெட் வீரர்களும்,வாரியமும் நல்லமுறையில் பயன் படுத்திக்கொண்டுள்ளது.ஆனால் அரசு_ ,வருமான வரித்துறையினறையும் அந்த கிறுக்கில் அலைந்ததுதான் இந்திய கிரிக்கெட் வாரியக்காரர்களின் இவ்வளவு பண மோசடிக்கு காரணமாக அமைந்து விட்டது.
_____________________________________________________________________________________________________
ஊழல்-2
நியுசிலாந்து-1,இந்தியா-95,
உலக அளவில், ஊழல்குறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 95வது இடத்தில் உள்ளது. சீனா 75வது இடத்தில் உள்ளது .  பாகிஸ்தான்,  134 இடத்தில் உள்ளது.
                   

ஊழலுக்கு எதிராக உலகஅளவில் செயல்பட்டு வரும் டிரான்பரன்சி இண்டர்நேசனல் என்ற அமைப்பு, ஊழல்குறைந்த நாடுகள் குறித்த கருத்துக்கணிப்பை நடத்தியது. அந்த கணிப்பின்முடிவுகள் தற்போது  வெளியாகியுள்ளது. இதன்படி, உலக அளவில் ஊழல் குறைந்த நாடாக பட்டியலில்நியூசிலாந்து முதலிடம் பிடித்துள்ளது.

ஊழல்குறைந்த நாடுகளின் பட்டியலில், முதலிடத்தில் நியூசிலாந்தும், முறையே மற்ற இடங்களில், டென்மார்க், பின்லாந்து, சுவீடன், சிங்கப்பூர், நார்வே, நெதர்லாந்து ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து , கனடா உள்ளிட்ட நாடுகள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளன. இதில், 8வது இடத்தை ஆஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் பகிர்ந்து கொண்டுள்ளன. 


சென்ற ஆண்டு வெளியான பட்டியலில், முதலிடம் பெற்ற ஆஸ்திரேலியா, தற்போது 8வது இடத்தில் உள்ளது. 

183 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில்ஊழல்மதிப்பீடு மதிப்பெண்கள் முறையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. முதலிடததில் உள்ள நியூசிலாந்து 9.5 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளது. பட்டியலின் இறுதியில் உள்ள சோமாலியா நாடு 1 சதவீத மதிப்பெண்‌ணை பெற்றுள்ளது. மொத்தமுள்ள 183 நாடுகளில், 3-இல் 2 பங்கு நாடுகள் 5 சதவீதத்திற்கு குறைவான மதிப்பெண்ணைகளை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.
 

இந்தியா, 3.1 மதிப்பெண்களுடன் 95வது இடத்தில் உள்ளது.நம்து இந்தியா183நாடுகளில் 95 வது இடமா?ஆச்சரியம்தான் .இதில் காசு ஒன்றும் விளையாடவில்லையே?
2-ஜி,3-ஜி,கே-ஜி,கல்மாடி என்று இருந்தும் நாம் சோமாலியாவுடன் போட்டியிட்டு மதிப்பெண் 1ஐ பெற முடியாதது பற்றி நமக்கு சந்தேகமாகவே இருக்கிறது.எனவே இந்த மதிப்பெண்களை மறு எண்ணிக்கைக்கு மன்மோகன் சிங் கேட்டுக்கொள்ள வேண்டும்.
  கிரிக்கெட்டில் முதலிடம் வந்துட்டு இப்படி 95இடத்துக்குபோயிட்டோமே? 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?