உணர்வுக்கு அணை போடுங்கள்.

”டேம் 999' என்ற பெயரில் படம்எடுத்து,அதை பல மொழிகளிலும் வெளியிட்டு முல்லைப் பெரியாறு அணையைவைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.


அணை பழமை வாய்ந்தது. அதன் உறுதி பற்றி சந்தேகம் ஒரு மாநில அரசே எழுப்பினால் மக்களிடையே பயம் உருவாவது இயற்கையே.அந்த பய உணர்ச்சியைத்தூண்டியே அணையை உடைக்கும் அளவுக்கு கேரள மக்களை தூண்டிக்கொண்டிருக்கிறார்கள்.
 உண்மையில் இந்த அணைக்கும், திருவாங்கூர் சமஸ்தானத்துக்குமே வரலாற்று ரீதியில் தொடர்பே இல்லை. 
அந்தக் காலத்தில், திருவாங்கூர் சமஸ்தானத்துடன் 999 ஆண்டுகளுக்கு தவறாக ஒப்பந்தம் போட்டது ஆங்கிலேய அரசு. ஆனால், ஒரு காலத்தில் சேர நாட்டுப் பகுதியில் இருந்த பூனையாற்று சமஸ்தானம் எனும் தமிழ்ப் பகுதியை ஆண்ட, பூனையாற்று தம்பிரான் என்பவருக்குத்தான் முல்லைப் பெரியாறுஅணை உள்ள பகுதி சொந்தமானது.
ஆனால் இந்த உண்மையை மறைத்து கேரளப்பகுதியில்தான் அணை கட்டப்பட்டது என்று வரலாறு பதிவு செய்யப்பட்டுவிட்டது.மாநிலப் பிரிவிஐயிலும் அவ்வாறே பிரிக்கப்பட்டு விட்டதால் அணை சார்ந்த இடங்கள் கேரள அரசுக்கு உரிமை என்றாகி இன்றைய சிக்கல்களுக்கு உள்ளதாகிவிட்டது.
இது இரு மாநில மக்கள் சம்பந்தபட்ட உணர்வுபூர்வமான விடயம்.எனவே இரு தரப்பிலும் உள்ள மக்கள் மனதில் வெறுப்பு கலவாமல் இப்பிரச்னையை தீர்க்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு உள்ளது.இன்னும் வாயை திறக்காமல் மவுனசாமி போல் மன்மோகன் சிங் அரசு பொறுப்பின்றி இருக்கக் கூடாது.

வரும்இடைத்தேர்தலை கணக்கிட்டு இப்பிரச்னையை வேகமாகக் கிளப்பும் கேரள காங்கிரஸ் கட்சினரை கட்டுப்படுத்தும் அவசியம் காங்கிரசு மேலிடத்திற்கு அதிகமாக உள்ளது.
இந்த மறைக்கப்பட்ட உண்மைகளை தமிழக பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கத்தினர் குறும்படமாக எடுத்து வெளியிட்டுள்ளனர். 
குறும்படத்தைக் காணுங்கள்: - 


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?