சின்னஞ் சிறு உலகம்,


விண்ணை முட்டும் கடன்.
-----------------------------------------------------------------------
இந்தியஅரசு நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனம், 3 அரசு எண்ணெய் நிறுவனங்களிடம் ரூ.4,170 கோடிக்கு மேல் கடன் பட்டுள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய பெட்ரோலிய இணையமைச்சர் ஆப்.பி.என்.சிங் இதை தெரிவித்தார்.

“நவம்பர் 30 நிலவரப்படி விமான எரிபொருள் வாங்கியதற்காக ஏர் இந்தியா, எண்ணெய் நிறுவனங்களுக்கு கடனாக ரூ.3,588 கோடியும், வட்டியாக ரூ.582 கோடியும் செலுத்த வேண்டும்.
அதில் இந்தியன் ஆயிலுக்கு (ஐஓசி) கடனாக ரூ.2,381 கோடி, வட்டியாக ரூ.423 கோடியும், பாரத் பெட்ரோலியத்துக்கு (பிபிசிஎல்) கடனாக ரூ.635 கோடி, வட்டியாக ரூ.93 கோடியும், இந்துஸ்தான் பெட்ரோலியத்துக்கு (எச்பிசிஎல்) கடனாக ரூ.573 கோடி, வட்டியாக ரூ.66 கோடியும் பாக்கி உள்ளது. மேலும், லிமான எரிபொருள் வாங்கியதற்காக ஏர் இந்தியாவுக்கு கூடுதல் கடன் வழங்க அரசு முடிவு செய்துள்ளது”
 என்று பதில் தெரிவித்தார்.
_______________________________________________________________________

தொடரும் பேரணிகள், 
கம்பம் பகுதியை சேர்ந்த அனைத்து சமுதாய மக்களும் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள, மத்திய அரசுகளுக்கு அமைதியான வழியில் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க முடிவு செய்தனர். அதன்படி, இன்று பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்க வலியுறுத்தி கம்பத்தில் வேளாளர், விஸ்வகர்ம மகாஜன சங்கங்கள், ஒக்கலிகர், குலாலர், கள்ளர் சமூகத்தினர், முஸ்லிம் ஜமாத்தார்கள், கம்பம் நகர கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், கம்பம் பள்ளத்தாக்கு ரேமா எழுப்புதல் ஊழியர் சங்கங்கள் சார்பில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் குடும்பத்துடன் திரண்டு அமைதி பேரணி நடத்தினர்.


கம்பம் மெட்டு சாலையில் துவங்கி, சிக்னல் பகுதி, காந்தி சிலை, அரசு மருத்துவமனை உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகள் வழியாக பேரணி சென்றது. அப்போது, கேரள முதல்வர் உம்மன்சாண்டியை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. பேரணியை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பேரணியில் பங்கேற்றவர்கள் கூறுகையில், ‘‘இங்கு திரண்ட கூட்டம் கேரளாவுக்குள் புகுந்திருந்தால் அவர்களால் சமாளிக்க முடியாது. தமிழக சட்டசபையை கூட்டி கேட்டுக்கொண்டதற்கு இணங்க நாங்கள் அமைதி வழியில் போராட்டம் நடத்துகிறோம். தொடர்ந்து சீண்டினால் கேரளாவுக்கு பாடம் புகட்டாமல் விடமாட்டோம். தமிழர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்தால் ராணுவமே வந்து தடுத்தாலும் கவலைப்படாமல் லட்சக்கணக்கானோர் திரண்டு கேரளாவை முற்றுகையிடுவோம்’’ என்று எச்சரிக்கை விடுத்தனர்.
____________________________________________________________________

கப்பல் மயானம்


குஜராத்தில் உள்ள அலாங் பகுதி, கப்பல்களின் மயானம் என அழைக்கப்படுகிறது. ஏனென்றால் பயணங்கள் பல செய்து, பயனற்றுப் போன பல கப்பல்கள் இங்கு தான் உடைக்கப்படுகின்றன. கப்பல்களை உடைக்கும் பணி, மிகவும் ஆபத்தான பணியாகும். குஜராத்தில் உள்ள அலாங்கில் உயிரைப் பணயம் வைத்து பீகார், ஒடிசா மற்றும் உத்தரப்பிரதேச தொழிலாளர்கள் பணி செய்கின்றனர். கப்பலை உடைக்கும் போது வெளிவரும் விஷப் பொருட்கள், இவர்களின் பணிக்கு சவாலாக அமைகின்றன. கப்பல்களை உடைக்க பெரும் செலவு பிடிக்கும் என்பதால், கப்பல் நிறுவனங்கள் மிகவும் குறைந்த விலைக்கு, கப்பல்களை விற்கின்றன. கப்பல்களில் பெரும்பாலும் ஆஸ்பெஸ்டாஸ் தான் பயன்படுத்தப்படுகின்றன. கப்பல் உடைக்கும் தளங்களில் பணிபுரியும் தொழிலாளர் களில், 16 சதவீதம் பேர் உடலில் ஆஸ்பெஸ்டாஸ் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கப்பல்களை உடைக்கும் பணியில் பாதுகாப்பு முறைகள் இல்லாததால் உடனடியாக அடிக்கடி மரணங்கள் நிகழ்கின்றன.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
2012-ல், கணினி வடிவம்.
==================================
2011- ஆண்டின் இறுதிவரை டேப்ளட் பிசிக்கள் நாம்அதிகம் பயன்படுத்த ஆரம்பித்தாலும், 2012 ஆம் ஆண்டில் அல்ட்ராபுக் கம்ப்யூட்டர் எனப்படும் கணினிதான் பிரபலமாகஇருக்கும். 

அல்ட்ராபுக் ? 
முன்பே இன்டெல் நிறுவனம் இந்த பெயரைத் தந்து இதற்கு அதிக விளம்பரம் செய்துவருகிறது. இதுவும் ஒரு லேப்டாப் கணினி வகைதான். ஆனால் இதற்கு சில புதிய அம்சங்கள் இருக்கும்.
இதன் தடிமன் 20 மிமீ (0.8 அங்குலம்); இதில் ஆப்டிகல் ட்ரைவ் இருக்காது; பைல்கள் அனைத்தும் சாலிட் ஸ்டேட் ட்ரைவில் தான் பதியப்பட்டு பாதுகாக்கப்படும்; இதில் ஐ5 மற்றும் ஐ7 கோர் ப்ராசசர்கள் மட்டுமே பயன்படுத்தப்படும்; எடை 1.4 கிலோவிற்கும் குறைவாக இருக்கும்;
 இதன் பேட்டரி 5 முதல் 8 மணி நேரம் வரை தொடர்ந்து மின்சக்தியினை வழங்கத்தக்கதாக இருக்கும்.
தற்போது லெனோவா, அசூஸ், ஏசர், எச்.பி.ஆகிய நிறுவனங்கள் இதனைத் தயாரித்துள்ளது.இவை ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் விற்பனைசெய்யப்படுகின்றன.

. பி.சி. லேப்டாப் தயாரிக்கும் நிறுவனங்கள் அனைத்துமே இதை தயாரிக்க தங்களைத் தயார் படுத்தி வருகின்றன.
 லேப்டாப் பிரிவில் 2012ல் விற்பனை செய்யப்படும் கணினிகளில் 40% அல்ட்ராபுக் கணினிகளாகத்தான் இருக்கும் என இன்டெல் கருத்து வெளியிட்டுள்ளது.
அல்ட்ராபுக் ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ஏர் என்ற வகை கணினிகளுக்குப் போட்டியாக இருக்கும். எடுத்துச் செல்ல வசதியாக குறைந்த எடை, குறைவான அகல, நீள, தடிமன் பரிமாணங்கள் ஆகியவற்றினால் அல்ட்ரா புக் கணீனிகள் மக்களிடம் பெரிய அளவில்இடம் பிடிக்கும் என கருதப்படுகிறது.
 மேக் ஏர் போன்ற கணினி வ்கைகள் செய்யாததை இவை மேற்கொள்ள இருக்கின்றன. 3ஜி மற்றும் 4ஜி இணைப்பு கொண்டவையாக இவை உருவாக்கப்பட உள்ளன. இதற்கென தொலை தொடர்பு மற்றும் மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களுடன் அல்ட்ரா புக் கணினி களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் ஆலோசனை செய்துவருகின்றன. 
அது மட்டுமீன்றி இவ்வகைக் கணினிகளின்விலை விரவிலேயே குறையும் வாய்ப்புகளும் உள்ளதால், 2012 ஆம் ஆண்டு அல்ட்ரா புக் கணினிவகைகளே மக்களின் கைகளை ஆக்கிரமித்திருக்கும்.
_____________________________________________________________________
17-12-1903,அன்று ஒர் வில்லி-வில்பர் ரைட் சகோதரர்கள் பறந்த முதல் விமானம்.

______________________________________________________________________
24.7 அங்குலம் உயரமான பெண்.உலகிலேயே ரொம்ம்ப சின்னவர் இவர்.
உலகிலேயே மிகச்சிறிய பெண்மணி என்று கின்னசில் பெயர் வந்ததில் மகிழ்ச்சியில்[?]கண்கலங்குகிறார் அம்மணி.

குடும்பத்தில் குட்டிப்பெண்.
_____________________________________________________________________________


பொய்சொல்லி அரசிடம் வாங்கிய ரூ,25லட்சம் 
 இயக்குநர் அமீர் புகார்
சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது என்று பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு செய்திகள் வெளியாகியுள்ளன.

திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்கள் பலரும் இதை நல்ல அம்சமாகவே பார்த்தனர். பல்வேறு நாடுகளின் திரைத்துறையைச் சேர்ந்தவர்களோடு பழகுவதற்கும், விவாதிப்பதற்கும் இது நல்ல வாய்ப்பு என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. இந்நிலையில்தான் இந்த திரைப்பட விழாவை நடத்தும் அமைப்புக்கு தமிழக அரசு சார்பில் 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இது கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தோ சினி அப்ரிசியேஷன்ஸ் ஃபோரம் என்ற அமைப்புதான் இந்தத் திரைப்படவிழாவுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. திரைப்பட விழாவை நடத்துவதற்காக தமிழக அரசு தந்த 25 லட்ச ரூபாய் நிதியை நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார், விழாவை நடத்தும் அமைப்பின் தலைவர் தங்கராஜ் மற்றும் நடிகை சுஹாசினி ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து பெற்றுக் கொண்டனர். இந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்ட முறை பற்றி கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.


இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள இயக்குநர் சங்கத்தலைவர் இயக்குநர் அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது :

நடப்பாண்டில் மூன்று தேசிய விருதுகளைப் பெற்ற சீனு ராமசாமி இயக்கிய தென் மேற்குப் பருவக்காற்று மற்றும் இந்திய பனோரமாவில் தேர்வு செய்யப்பட்ட லீனா மணிமேகலை இயக்கிய செங்கடல் ஆகிய இரண்டு திரைப்படங்களும் சென்னையில் நடைபெறும் இந்த சர்வதேசத் திரைப்பட விழாவில் புறக்கணிக்கப்பட்டுள்ளன. மேலும், விழாவை நடத்தவிருக்கும் திரைப்படக்குழுவில் இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா மற்றும் செயலாளராகிய நான் ஆகியோர் இடம் பெற்றிருப்பதாக தவறான தகவல்களை அளித்துள்ளனர். இவ்வாறு கூறியே விழாவை நடத்த 25 லட்ச ரூபாய் வாங்கியிருக்கிறார்கள்.
இந்தோ சினி அப்ரிசியேஷன்ஸ் அமைப்பே பணம் பெற சுஹாசினி,சரத்குமார்களால்  ஆரம்பிக்கப்பட்ட பொய்யான அமைப்பு.இவ்விழாவை நடத்துவதே சுஹாசினிதான்.கமலும் அழைக்கபடவில்லை.
மூன்று தேசிய விருதுகளை பெற்ற தென்மேற்கு பருவக்காற்று படத்தையும், இந்தியன் பனோரமாவில் கலந்து கொண்ட செங்கடல் படத்தையும் ஒதுக்கி வைத்தபடவிழாக்குழுவினர் 
 ‘ஐ ஆம் ஷாம்’ படத்தின் அப்பட்டமான காப்பியான தெய்வ திருமகள் படத்தை எந்த அடிப்படையில் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி திரைப்படமாக அறிவிக்கிறீர்கள்? 
இத்தகைய செயல்களை இயக்குநர்கள் சங்கம் கண்டிப்பதோடு, விழாவை தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் புறக்கணிக்கிறது. இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
--------------------------------------------------------------------------------------------------------------------------
                                                  ஒய்வெடுக்கும் இடம்,?















இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?