உள்ளதைச்சொன்னால் அடுத்தது பகை,


முல்லை பெரியாறு அணைக்கு ஆபத்து இருப்பதால், நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்று கேரள முதல்வர் உம்மன்சாண்டி கூறிவரும்போது, "நீர்மட்டத்தை உயர்த்துவதால், பாதிப்பில்லை,' என, கேரளஅரசு சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஐகோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் தண்டபாணி அறிக்கை அளித்துள்ளார்.
இந்த அறிக்கை கேரளாவில் கடும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
தமிழக தென்மாவட்டங்களின் பாசன ஆதாரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணை, பலவீனமாக இருப்பதாக கூறி, மாற்று இடத்தில் அணை கட்ட கேரள அரசு தீவிரம் காட்டுகிறது. அதற்கு ஆதரவாக, அம்மாநில அரசியல் கட்சிகள் அனைத்தும் , பிரசாரம் செய்து வருகின்றன.

 இந்த பிரச்னையில் கேரளாவில் உல்ள பல்வேறு அமைப்புகள்கேரளஉயர்நீதிமன்றத்தில்பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளன. இதை விசாரித்த நீதிபதிகள் மஞ்சுளா, ராமச்சந்திரன் அடங்கிய அமர்வு கேரள அரசிடம் விளக்கம் கேட்டு உத்தரவிட்டது. கேரளா அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் தண்டபாணி அறிக்கை அளித்தார். அதில், "முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்திற்கும், அணையின் பாதுகாப்பிற்கும் சம்மந்தம் இல்லை. அணை உடைந்தாலும், அருகில் உள்ள இடுக்கி, செறுதோணி, குளம்மாவு அணைகள் அதை தாங்கும் பலம் பெற்றுள்ளன. 136.5 அடி நீர் இருப்பதால் பெரியாறு அணைக்கு ஆபத்து இல்லை. அணைபகுதியில் ஏற்படும் நிலநடுக்கமும், பழைய அணை என்பது மட்டுமே பிரச்னை. அணை உடையும் ஆபத்து ஏற்பட்டால், செறுதோணி அணைக்கு நீரை திறந்தால், அரபிக்கடலுக்கு சென்றுவிடும்,' என கூறியிருந்தார்.

"நீர்மட்டம் பிரச்னையில்லை என்றால், மக்களின் ஏன் பயப்படுவதாக வழக்கு வந்துள்ளது. காரணம் என்ன?' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். "ஊடகங்கள் இவ்விடயத்தில் அணையைப்பற்றி செய்து வரும் பயம் எழுப்பும் பிரசாரம்தான், மக்கள் பீதி அடையக்காரணம்,' என்று தண்டபாணி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து விசாரணையை டிச., 6 க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அணையின் உண்மை நிலையை கோர்ட்டில் எடுத்துக்கூறிய தண்டபாணிக்கு எதிராக, கேரளாவில் உள்ளஎல்லாக் கட்சிகளும் போர் கொடி தூக்கியுள்ளன. அணையின் தண்ணீரை 120 அடியாக குறைக்க வேண்டும் என்பது அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டியின் புதிய கோரிக்கை. ஆனால், நீர்மட்டத்திற்கும், அணை பாதுகாப்பிற்கும் தொடர்பில்லை என, அட்வகேட் ஜெனரல் கூறியுள்ளார். இதனால், அவரை பதவியை விட்டு நீக்க வேண்டும் என்றுகேரள அமைச்சர்கள் சிலர் முதல்வரிடம் கூறியுள்ளனர்.
______________________________________________________________________________

சாதிபெயர் ஒன்றொழிய ஆளைக்கொல்வோம்,.
_____________________________________________________
உயர் சாதி பையன் பெயரைப்போன்றே பெயர் இருந்த ஒரே காரணத்துக்காக உத்திர பிரதேசத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட சிறுவன் கொல்லப்பட்டுள்ளான்.
 உத்திர பிரதேசம் மாநிலம் பஸ்தீ மாவட்டத்தில் ராதாப்பூர் என்ற கிராமத்தில் இக் கொடூரம்நிகழ்ந்துள்ளது.
ராதாப்பூர் கிராமத்தில் வாழும் ராம் சுமர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு நீரஜ் குமார், தீரஜ் குமார் என்று இரு மகன்கள். இதே ஊரில் வாழும் ஜவஹர் சவுத்ரி என்ற உயர் சாதிக்காரருடைய மகன்களுக்கும் இதே பெயர்கள்தான்.
இருக் குடும்பப்பிள்ளைகளுக்கு ஒரே பெயராகஇருந்ததில் இருக்குடும்பத்தினரும் நெடுநாளாக மோதிக்கொண்டிருந்ததாக போலிசார் கூறுகின்றனர்.

உங்களுடைய மகன்களின் பெயர்களை மாற்றிவிடுங்கள் இல்லாவிட்டால் பிரச்சினைக்குள்ளாவீர்கள் என ஜவஹர் சவுத்ரி ராம் சுமரை எச்சரித்து வந்துள்ளார்.
நவம்பர் 22ஆம் தேதி இரவு உணவைச் சாப்பிட்டுவிட்டு, நண்பன்   வீட்டில் போய் தொலைக்காட்சி பார்ப்பதாகச் சொல்லிவிட்டு சென்ற 14 வயதான  நீரஜ் குமார் அன்றிரவு வீடு திரும்பவேயில்லை
அடுத்த நாள் ஒரு வயலிலிருந்து அவன் சடலமாகத்தான் மீட்கப்பட்டான்.
கழுத்து நெரிக்கப்பட்டதால் நீரஜ் உயிரிழந்துள்ளான் என போலிசார் விசாரணையில் தெரியவந்தது.இக்கொலை காரணமாக சவுத்ரியின் நண்பர்கள் இருவர்கைதுசெய்யப்பட்டனர்.பெயர் ஒற்றுமையால்தான் இக்கொலையை செய்தோம் என இருவரும் சொல்லியுள்ளனர்.ஆனால்
நீரஜ் குமாரின் கொலையில் தனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்று ஜவஹர் சவுத்ரி கூறுகிறார்.
தங்கள் குடும்பத்துக்கு எதிராக போலிசார்தான் இக் குற்றச்சாட்டை உருவாக்கியுள்ளனர் என்று அவர் கூறுகிறார்.
ஜவஹர் சவுத்ரியின் இரு மகன்களும் தற்போது தலைமறைவாக இருக்கிறார்கள் என்று தெரிகிறது
தாழ்த்தப்பட்ட மாயாவதி ஆளும் மாநிலத்தில் இப்படி ஒரு நிகழ்வு.
____________________________________________________________________________
இவ்வளவு ஆர்ப்பாட்டம் ஏன்? 2-ஜி போராட்டத்தில் வாகை சூடிய “தியாகி’ கனிமொழியை வரவேற்க வந்தவர்கள்தான்.
----------------------------------------------------------------------------------------------------------------------------
                    இருளில் இருந்து ஒளியை நோக்கி செல்வோம்.
                   தாழ்வு விலக்கி வாழ்வு நமக்கென வெல்வோம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?