தயாநிதி பெற்ற நிதி....? ![]() அலைக்கற்றை முறைகேடுகளின் அடுத்த அலை வீச ஆரம்பித்து விட்டது. மேக்ஸிஸ் குழுமத்திடமிருந்து முறை கேடான வழிகளில் ரூ.700 கோடி அள விற்கு சன் டி.வி. குழுமத்திற்கு வந்து சேர்ந்துள்ளது என்று ஏராளமான விபரங் களை மேற்கோள் காட்டி தெஹல்கா ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இந்த தகவல்கள் தவறா னவை என்று மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் மறுத்துள்ளார். ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி சூறை யா டப்பட்ட 2ஜி ஸ்பெக்ட்ரம் (இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை) ஒதுக் கீட்டு ஊழலில் மத்திய குற்றப்புலனாய் வுக் கழகமும் (சிபிஐ), அமலாக்கப்பிரிவும் உச்சநீதிமன்றத்தின் தீவிர கண்காணிப் பின் கீழ் விசாரணை நடத்தி வருகின் றன. இதில் தனது பதவியை தவறாக பயன்படுத்தி, மத்திய அமைச்சரவைக் குழுவின் கண்ணில் மண்ணை தூவி விட்டு, முதலில் வந்தோருக்கு முன்னு ரிமை என்ற தவறான வர்த்தகக் கோட் பாட்டை முன்வைத்து, மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா, தனக்கு வேண்டிய நிறுவனங் களுக்கு முறைகேடான வழிகளில் அலைக்கற்றை உரிமங்களை ஒதுக்கீடு செய்தார்; இதன் மூலம் அரசின் கருவூ லத்திற்கு வரலாறு காணாத இழப்பை ஏற்படுத்தினார் என்பது உள்ளிட்ட குற் றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப் பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதில் குறிப்பாக, முறைகேடாக உரிமம் ஒதுக்கீடு செய்யப்பட்ட சாகித் உஸ்மான் பால்வாவின் ஸ்வான் டெலிகாம் நிறு வனத்திடமிருந்து, ஒதுக்கீட்டிற்கு கை மாறாக ரூ.200 கோடியை முறையற்ற வழி களில் முன்னாள் முதலமைச்சர் கரு ணாநிதியின் குடும்பத்திற்கு சொந்தமான கலைஞர் டி.வி.க்கு கொண்டு வந்து சேர்த்ததில் ராசாவுக்கும், திமுக எம்.பி. கனிமொழிக்கும் பங்கு உள்ளது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கனி மொழியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த ஊழலில் மேலும் பல பெரும் நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகளும் கைது செய்யப்பட் டுள்ளனர். ராசா அமைச்சராக இருந்தபோது ஒதுக்கீடு செய்தது இரண்டாம் தலை முறை அலைவரிசைக்கற்றை எனப் படும் 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் ஆகும். ராசாவுக்கு முன்பு மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த வர் திமுகவின் தயாநிதி மாறன் ஆவார். அவரது காலத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் வரிசைக்கு முந்தைய யுஏஎஸ்எல் எனப் படும் ‘ஒருங்கிணைந்த தொலைத் தொடர்பு சேவையை பெறுவதற்கான உரிமங்கள்’, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங் களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த ஒதுக்கீடுகளை தொடர்ந்து 2ஜி ஸ்பெக்ட் ரம் உரிமங்களை ஒதுக்கீடு செய்யும் நடவடிக்கைகளும் துவங்கின. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு ஆகிய விசா ரணை அமைப்புகள் மட்டுமின்றி, தற் போது நாடாளுமன்ற கூட்டுக் குழுவும் (ஜேபிசி) விசாரணையை துவக்கியுள் ளது. ஏற்கெனவே நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கையை தயா ரித்துள்ளது. இதனிடையே, 2001ம் ஆண்டு முதல் தற்போது வரை நடந் துள்ள தொலைத் தொடர்பு அலைக் கற்றை உரிமங்கள் ஒதுக்கீடுகளில் எத்தகைய நடைமுறைகள் பின்பற்றப் பட்டுள்ளன; என்னென்ன முறைகேடு கள் நடந்துள்ளன என்பது குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையிலான ஒரு நபர் குழுவை நியமித்தது. நீதிபதி சிவ ராஜ் பாட்டீலும் தனது விசாரணை அறிக் கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளார். நீதிபதி சிவராஜ் பாட்டீலின் அறிக் கையில், தயாநிதிமாறனின் நடவடிக்கை கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அவர் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக பணியாற்றிய 2004 - 08 காலகட்டத்தில் தொலைத் தொடர்புத் துறையின் பல்வேறு விதிமுறைகளை மீறி தனக்கு வேண்டிய நிறுவனங் களுக்கு சாதகமாக செயல்பட்டதாக குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல்களுடன் ஏராளமான தகவல்களை புலனாய்வு செய்து மே 31ம்தேதி வெளியாகியுள்ள தெஹல்கா ஏட்டில் ஆஷிஸ் கேத்தன் எனும் செய் தியாளர் எழுதியுள்ள கட்டுரையில், தயா நிதி மாறன் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக பதவியேற்ற பின் னர், ஏர்செல் நிறுவனம் கைமாறியதிலும், மிகச் சிறிய நிறுவனமாக இருந்த ஏர் செல், நாடு தழுவிய செல்பேசி சேவை யை வழங்கும் அளவிற்கான மிகப் பெரும் நிறுவனமாக மாறியதிலும் நடந்துள்ள திரைமறைவு பேரங்களை அம்பலப் படுத்தியுள்ளார். 2004 மே 24ம்தேதி, காங்கிரஸ் தலை மையிலான ஐக்கிய முற்போக்கு கூட் டணி அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக தயாநிதிமாறன் பொறுப் பேற்றார். அந்தக் காலகட்டத்தில் சென்னை தொலைத் தொடர்பு வட்டம் உள்பட ஓரிரண்டு பகுதிகளில் மட்டுமே தொலைபேசி சேவையை அளித்து வந்த ஏர்செல் நிறுவனம், மேலும் 14 தொலைத் தொடர்பு வட்டங்களில் தனது சேவை யை விரிவுபடுத்துவதற்கான உரிமங் கள் கேட்டு, தொலைத் தொடர்புத் துறை யிடம் விண்ணப்பம் செய்திருந்தது. அப் போது இந்த நிறுவனம், ஸ்டெர்லிங் இன் போடெக் குரூப் என்ற நிறுவனத்திற்கு சொந்தமானதாக இருந்தது. பின்னர் சிவா குரூப் என்று பெயர் மாற்றம் செய் யப்பட்ட இந்நிறுவனத்தின் உரிமையாளர் சிவசங்கரன் என்பவர் ஆவார். 14 தொலைத் தொடர்பு வட்டங்களில் சேவையை விரிவுபடுத்துவதற்காக உரிமங்கள் கேட்ட ஏர்செல் நிறுவனத் தின் விண்ணப்பங்கள், அமைச்சர் தயா நிதிமாறனின் ஒப்புதலுக்காக காத்துக் கொண்டே இருந்தன. ஆனால், அவரது ஒப்புதல் கிடைக்காமல் நீண்ட நாட் களாக இழுத்தடிக்கப்பட்டது. இதனி டையே, திடீரென்று மலேசியாவைச் சேர்ந்த பெரும் தொழிலதிபரான டி. அனந்தகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான மேக்ஸிஸ் குரூப் எனும் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தை விலைபேசியது. இலங்கை தமிழ் வம் சாவளியை சேர்ந்த மலேசிய தொழில திபர் அனந்தகிருஷ்ணன், ஏர்செல் நிறு வனத்தின் உரிமையாளர் சிவசங்கரனி டம் விடாப்பிடியாக பேரம் நடத்தி விலை பேசி முடித்தார். அதன் 74 சதவீத பங்கு களை ரூ.3 ஆயிரத்து 390 கோடி விலை கொடுத்து வாங்கினார். எஞ்சியுள்ள 26 சதவீத பங்குகளை, அப்போலோ மருத் துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி வாங்கினார். பிரதாப் ரெட்டி வாங்கினா லும், அந்தப் பங்குகள் மேக்ஸிஸ் குழு மத்திற்காக வேறு பெயரில் வாங்கப்பட் டது என்பதே உண்மை. இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்களில் வெளிநாடு களைச் சேர்ந்த நிறுவனங்கள் 74 சத வீதம் அளவிற்கு பங்குகள் வைத்திருக்க லாம் என்ற சட்ட விதிகளின்படி 74 சத வீத பங்குகளை மேக்ஸிஸ் குழுமமும், எஞ்சிய பங்குகளை மேக்ஸிஸ் குழு மத்திற்காக அப்போலோ குழுமமும் வாங் கியது தெரிகிறது. 2006 மார்ச் மாதம் ஏர்செல் நிறுவ னத்தை மேக்ஸிஸ் குழுமம் விலைக்கு வாங்கிய அடுத்த 6 மாதக் காலத்திற்குள், அந்நிறுவனத்திற்கு 14 புதிய தொலைத் தொடர்பு வட்டங்களில் சேவையை விரிவு படுத்துவதற்கான ஒருங்கிணைந்த தொலைபேசிக் கற்றை உரிமங்களை அமைச்சர் தயாநிதிமாறனின் உத்தரவின் பேரில் மத்திய தொலைத் தொடர்புத் துறை வழங்கியது. இந்த 14 தொலைத் தொடர்பு வட்டங் களும் மிகவும் லாபம் கொழிக்கும் வட் டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆ. ராசா அளித்த 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங் களுக்கான விலையின் அடிப்படையில் மத்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரி மேற்கொண்ட கணக்கீட்டின் படி பார்த்தால், ஏர்செல்நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமங்களின் மதிப்பு சுமார் ரூ.22 ஆயிரம் கோடியாகும். ஆனால், ஏர்செல் நிறுவனம் வழங்கியதோ வெறும் ரூ.1,399 கோடி மட்டுமே. 14 தொலைத் தொடர்பு வட்டங்களுக் கான உரிமங்களை பெற்றவுடன் நாடு முழுவதும் செல்பேசி சேவைகளை வழங்குகிற மிகப் பிரம்மாண்டமான நிறு வனமாக ஏர்செல் தன்னை முன்னி றுத்தி விளம்பரப்படுத்தியது. லாபத்தை அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கிறது. இந்த உரிமங்கள் அளிக்கப்பட்ட அடுத்த ஆண்டு, 2007 பிப்ரவரியில், மேற்படி மேக்ஸிஸ் குழுமத்தின் உரிமை யாளரான அனந்தகிருஷ்ணன், தனது குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்களில் ஒன்றான சவுத் ஆசியா எண்டர்டெய்ன் மென்ட் ஹோல்டிங் லிமிடெட் எனும் கம்பெனியின் மூலமாக கட்டம் கட்டமாக ரூ.600 கோடியை சன் டி.வி. நிறுவனத் தில் முதலீடு செய்தார். அந்நிறுவனத் தின் 20 சதவீத பங்குகளை வாங்கிக் கொண்டார். சன் டி.வி குழுமம், அமைச் சர் தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி மாறன் ஆகியோரால் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பின் னர் 2008 பிப்ரவரிக்கும், 2009 ஜூலைக் கும் இடையில் மேலும் ரூ.100 கோடியை மாறன் சகோதரர்கள் குடும்பத்திற்கு சொந்தமான சவுத் ஆசியா எப்எம் லிமி டெட் (சன் எப்எம் ரேடியோ நெட்வொர்க்) நிறுவனத்தில் மேக்ஸிஸ் உரிமையாளர் அனந்தகிருஷ்ணன் முதலீடு செய்தார். இதைத் தொடர்ந்து சன் டிடிஎச் மிகப் பெருமளவில் விளம்பரப்படுத்தப்பட்டது. மேற்கண்ட விபரங்களை விரிவாக பட்டியலிட்டுள்ள தெஹல்கா செய்தியா ளர், ஏர்செல் - மேக்ஸிஸ் - சன் டி.வி. குழுமம் இடையே நடந்துள்ள பேரங்கள்; அதற்கு முன்பு டிஷ்நெட் நிறுவனத்தை கைமாற்றியதில் நடந்த பேரங்கள் என பல திரைமறைவு பேரங்களில், தனது அமைச்சர் பதவியை தயாநிதிமாறன் எப் படியெல்லாம் தவறாக பயன்படுத்தினார் என்பதையும், தொலைத் தொடர்பு அலைக்கற்றை உரிமங்கள் வழங்கும் விவகாரத்தை மத்திய அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலுக்கெல்லாம் கொண்டு செல்ல வேண்டியதில்லை என்று பிர தமர் மன்மோகன்சிங்கிடம் வாதிட்டு, அவரது ஒப்புதலை பெற்று தனது இஷ் டம் போல் செயல்பட்டதையும், தயாநிதி மாறன் உருவாக்கிய இந்த நடைமுறை யை அவருக்கு பின்னால் வந்த ஆ.ராசா எப்படியெல்லாம் தவறாக பயன்படுத்தி னார் என்பதையும், இவை அனைத் தையும் பிரதமர் மன்மோகன் சிங் எப்படி கண்டுகொள்ளாமல் விட்டார் என்பதை யும் விரிவாக அலசியுள்ளார். தொலைத் தொடர்பு அலைக்கற்றை ஊழலில் தோண்ட தோண்ட ஏராளமான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், சன் டி.வி. குழுமம் தயாநிதி மாறனின் அமைச்சர் பதவியை பயன் படுத்தி முறைகேடான வழிகளில் பணம் சம்பாதித்தது தொடர்பான விபரங்களும் வெளியாக துவங்கியுள்ளன. இந்நிலையில், தன் மீது குற்றம் சாட் டிய தெஹல்கா பத்திரிகைக்கு மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். புல னாய்வு என்ற பெயரில் இட்டுக் கட்டப் பட்ட பொய்யை அந்த இதழ் வெளியிட் டுள்ளது என அவர் தனது நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அப்படி ஒரு நோட்டீசும் வரவில்லை என தெஹல்கா கூறியுள்ளது. அடுத்த அறை திகாரில் தயாராகிறது,,? |
செவ்வாய், 31 மே, 2011
”இந்திய,,,,,,,,,,,,,’ வரலாற்றில் முதல் முறையாக,,,,,,,,?’
அணு சக்தி-லோக்பால்
திங்கள், 30 மே, 2011
எரியும் செய்தி
ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட மர்ம சம்பவத்தில் மற்றொரு திருப்பமாக அவர் தங்கியிருந்த இடத்தைக் காட்டிக் கொடுத்தது தலிபான் நிறுவனர்களில் ஒருவரான முல்லா அப்துல் பராதர் என்று செய்தி வெளியாகியுள்ளது. முன்னதாக அபு அஹ்மத் அல் குவைதி என்பவரின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டதன் மூலம் அமெரிக்கா அவருடைய இருப்பிடத்தைக் கண்டறிந்ததாக தெரிவித்திருந்தது.ஒஸாமா பின் லேடன் மே 2 ஆம் திகதி அபோதாபாத் என்ற இடத்தில் அமெரிக்க சிறப்பு ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கடந்த ஆண்டு கராச்சியில் வைத்து அப்துல் பராதர் கைது செய்யப்பட்டார். பின்பு விசாரணைக்குப் பின் அவர் அக்டோபர் மாதம் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் அவருடன் ரகசிய உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஒசாமா பின் லேடன் கொல்லபட்டாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகமாக உள்ள பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முல்லா பராதர் ஒஸாமா பதுங்கியிருந்த இடத்தை அமெரிக்க அரசுக்கு தெரிவித்துள்ளார்.
முல்லா பராதர் ஆப்கான் அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குழுவில் இடம் பெற்றிருந்ததோடு முல்லா உமருக்கும் ஒசாமா பின்லேடனுக்கும் நெருக்கமானவராக இருந்துள்ளார் என்று பாதுகாப்பு நிபுணரான நெய்ல் டோய்ல் தெரிவித்துள்ளார். தற்போது ஒஸாமா கொல்லப்பட்ட பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் குறைக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளதும் ஒஸாமா கொல்லப்பட்டு விட்டதால் இங்கிலாந்து படைகளும் விரைவில் திரும்ப அழைக்கப்படும் என இங்கிலாந்து அதிபர் கேமரூன் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்தத் தகவல்களை மிர்ரர் என்ற இங்கிலாந்து பத்திரிகை வெளியிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரலில் இருந்து, சமையல் காஸ், கெரசின் ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் மானியத்தை ரத்து செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், சமையல் காஸ் சிலிண்டரின் விலை, 1,000 ரூபாயை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஏழை மக்களின் நலன் கருதி, மானியத்துக்கு பதிலாக, அவர்களுக்கு மாதம் தோறும் எரிபொருள் பயன்பாட்டுக்காக உதவித் தொகை அளிக்கவும், அரசு திட்டமிட்டுள்ளது. பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பு, ஏற்கனவே அரசு வசம் இருந்தது. இந்த நடைமுறை, கடந்தாண்டு நீக்கப்பட்டது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை உயர்வுக்கு ஏற்ப, சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ணயித்துக் கொள்ள, அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, பெட்ரோலின் விலை, தற்போது அடிக்கடி உயர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமையல் காஸ், கெரசின் ஆகியவற்றுக்கு, அரசு சார்பில் தொடர்ந்து மானியம் அளிக்கப்படுவதால், அவற்றின் விலை மிகவும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. மானிய விலையில் இவற்றை விற்பனை செய்வதால், தங்களுக்கு 67 ஆயிரத்து 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் சார்பில், மத்திய அரசிடம் முறையிடப்பட்டுள்ளது. இந்த இழப்பை, சரிக்கட்ட வேண்டுமானால், சமையல் காஸ் மற்றும் கெரசினுக்கு அளிக்கப்படும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன. இதற்கு அரசு தரப்பிலும் சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதற்கான புதிய திட்டமும் தயாராகியுள்ளது. இத்திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்தால், சமையல் காஸ், கெரசின் ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் மானியம், அடுத்த ஆண்டு ஏப்ரலில் இருந்து, முற்றிலும் ரத்து செய்யப்படும்.
இந்த மானிய ரத்தால், ஏழை மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, அவர்களுக்கு, எரிபொருள் வாங்குவதற்காக, குறிப்பிட்ட அளவு, உதவித் தொகை அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. உதவித் தொகையாக எவ்வளவு அளிப்பது என்பது குறித்து, அரசு தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மானியம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டால், சமையல் காஸ் சிலிண்டரின் விலை, தற்போதுள்ளதை விட, இரண்டு மடங்கு அதிகரித்து, 1,000 ரூபாயை தொட்டு விடும். அதேபோல், கெரசின் விலை, தற்போதுள்ளதை விட, மூன்று மடங்கு அதிகரிக்கும். இந்த புதிய திட்டம், எரிபொருள் விலை நிர்ணயம் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள, மத்திய அமைச்சரவை குழுவின் ஒப்புதல் கிடைத்ததும், அமல் படுத்தப்படும். இந்த குழுவின் கூட்டம், அடுத்த மாதம் 9ம் தேதி நடக்கும்போது, இந்த புதிய திட்டம் குறித்து, விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. இந்த திட்டம் அமலுக்கு வந்தால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்துக்கு ஏற்ப, கெரசினின் விலை, மாதம் தோறும் மாற்றி அமைக்கப்படும்.
இவ்வாறு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது .பொதுமக்களுக்கான அரசாக காங்கிரஸ் அரசு தெரியவில்லை.ஏதோ வணிக நிறுவனம் நடத்தும் எண்னம்தான் சோனியா-மன்மோகன் அரசுக்கு இருக்கிறது.
அம்பானி,மற்றும் எண்ணை நிறுவனங்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டு அதற்கு இருப்பதும்.வாக்களித்த மக்கள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்படாமல் குடும்பம் நடத்த வேண்டுமே எனவும் மக்கள் நலன் பற்றிய கவலை கொஞ்சமும் அதற்கு இருப்பதாகத் தெரியவில்லை.
மாதாமாதம் பெட்ரொல் விலை உயர்வால் வாகன ஒட்டுனர்கள் மட்டுமா பாதிக்கப் படுகிறார்கள். பெட்ரோல் விலை உயர்வால் மறைமுகமாக விலைவாசியும் கடுமையாக ஏறிவருகிறது .அதைப்பற்றியும் பொருளாதரப் புலி கண்டுகொள்ள வில்லையே.
இப்போது நமது கோரிக்கை பெட்ரொல் நிறுவனங்களின் வரவு-செலவு பற்றிய வெள்ளை அறிக்கை மத்திய அரசு நிறுவனங்கள் கண்டிப்பாக வெளியிட வேண்டும்.
அப்போதுதான் எண்ணை நிறுவனங்களின் நடவடிக்கைகள்,லாபம் மற்றும் மக்களிடம் அது கூறிவரும் நட்டக் கணக்கு பற்றி தெரியவரும் .இது போன்ற கொள்ளைக்கு யார் காரணம்.இவ் விலையேற்றம் தவிர்க்க முடியாதா? என்பது போன்றவை எல்லாரும் புரிந்து கொள்ள இயலும். பெட்ரொல் நிறுவனக் கொள்ளைகளுக்கும் முடிவு கட்ட இயலும்.
மற்ற நாடுகளில் குறைவான பெட்ரோல் விலை இந்தியாவில் மட்டும் மாதா-மாதம் உயர்வது ஏன் என்றும் தெரிந்து கொள்ள இயலும்.
சென்ற மாதம் கச்சா எண்ணை உலக அளவில் குறைந்த போது இந்தியாவில் விலையை ஏன் குறைக்கவில்லை எனவும் புரியும்.
==========================================================================
தமிழக சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த மரியம்பிச்சை பலியாக காரணமான லாரியை, மேற்கு வங்க மாநிலம் காடக்பூரில் தனிப்படை போலீசார் நேற்று கண்டுபிடித்தனர். லாரியை, பெரம்பலூர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் காருடன் மோதிவிட்டு தப்பிச்சென்ற லாரியை பிடிக்க, 18 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.
, தாங்கள் தேடும் வகையான லாரிகளை தேர்வு செய்ததில், 49 லாரிகள் தேறின. அந்த, 49 லாரிகளில், சில அடையாளங்களை வைத்து துறையூர் உள்ளிட்ட பல ஊர்களைச் சேர்ந்த ஆறு லாரிகளை போலீசார் சந்தேகப்பட்டியலில் கொண்டு வந்தனர்.
அந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த லாரிகளில் ஒன்று, ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தது என்று தெரிந்தது. அதைப்பிடிக்க, ஐ.ஜி.,யால் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசாரும், சி.பி.சி.ஐ.டி., தனிப்படை போலீசாரும் விஜயவாடா சென்று தேடுதல் நடத்தினர்.
நேற்று காலை, குறிப்பிட்ட அந்த லாரியை தனிப்படை போலீசாரும், சி.பி.சி.ஐ.டி., போலீசாரும், மேற்கு வங்க மாநிலம் காடக்பூரில் இருப்பதை கண்டுபிடித்தனர். சந்தேக பட்டியலில் இருந்த அந்த லாரி தான் (எண்: ஏ.பி-16-டி.பி.9744) அமைச்சர் மரியம்பிச்சை காருடன் மோதியது என்பதையும் விசாரித்து, தனிப்படை போலீசார் உறுதிப்படுத்தினர்.
காட்டிக்கொடுத்தது
யார்?
அம்பானி,மற்றும் எண்ணை நிறுவனங்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டு அதற்கு இருப்பதும்.வாக்களித்த மக்கள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்படாமல் குடும்பம் நடத்த வேண்டுமே எனவும் மக்கள் நலன் பற்றிய கவலை கொஞ்சமும் அதற்கு இருப்பதாகத் தெரியவில்லை.
மாதாமாதம் பெட்ரொல் விலை உயர்வால் வாகன ஒட்டுனர்கள் மட்டுமா பாதிக்கப் படுகிறார்கள். பெட்ரோல் விலை உயர்வால் மறைமுகமாக விலைவாசியும் கடுமையாக ஏறிவருகிறது .அதைப்பற்றியும் பொருளாதரப் புலி கண்டுகொள்ள வில்லையே.
இப்போது நமது கோரிக்கை பெட்ரொல் நிறுவனங்களின் வரவு-செலவு பற்றிய வெள்ளை அறிக்கை மத்திய அரசு நிறுவனங்கள் கண்டிப்பாக வெளியிட வேண்டும்.
அப்போதுதான் எண்ணை நிறுவனங்களின் நடவடிக்கைகள்,லாபம் மற்றும் மக்களிடம் அது கூறிவரும் நட்டக் கணக்கு பற்றி தெரியவரும் .இது போன்ற கொள்ளைக்கு யார் காரணம்.இவ் விலையேற்றம் தவிர்க்க முடியாதா? என்பது போன்றவை எல்லாரும் புரிந்து கொள்ள இயலும். பெட்ரொல் நிறுவனக் கொள்ளைகளுக்கும் முடிவு கட்ட இயலும்.
மற்ற நாடுகளில் குறைவான பெட்ரோல் விலை இந்தியாவில் மட்டும் மாதா-மாதம் உயர்வது ஏன் என்றும் தெரிந்து கொள்ள இயலும்.
சென்ற மாதம் கச்சா எண்ணை உலக அளவில் குறைந்த போது இந்தியாவில் விலையை ஏன் குறைக்கவில்லை எனவும் புரியும்.
==========================================================================
தமிழக சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த மரியம்பிச்சை பலியாக காரணமான லாரியை, மேற்கு வங்க மாநிலம் காடக்பூரில் தனிப்படை போலீசார் நேற்று கண்டுபிடித்தனர். லாரியை, பெரம்பலூர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் காருடன் மோதிவிட்டு தப்பிச்சென்ற லாரியை பிடிக்க, 18 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.
, தாங்கள் தேடும் வகையான லாரிகளை தேர்வு செய்ததில், 49 லாரிகள் தேறின. அந்த, 49 லாரிகளில், சில அடையாளங்களை வைத்து துறையூர் உள்ளிட்ட பல ஊர்களைச் சேர்ந்த ஆறு லாரிகளை போலீசார் சந்தேகப்பட்டியலில் கொண்டு வந்தனர்.
அந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த லாரிகளில் ஒன்று, ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தது என்று தெரிந்தது. அதைப்பிடிக்க, ஐ.ஜி.,யால் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசாரும், சி.பி.சி.ஐ.டி., தனிப்படை போலீசாரும் விஜயவாடா சென்று தேடுதல் நடத்தினர்.
நேற்று காலை, குறிப்பிட்ட அந்த லாரியை தனிப்படை போலீசாரும், சி.பி.சி.ஐ.டி., போலீசாரும், மேற்கு வங்க மாநிலம் காடக்பூரில் இருப்பதை கண்டுபிடித்தனர். சந்தேக பட்டியலில் இருந்த அந்த லாரி தான் (எண்: ஏ.பி-16-டி.பி.9744) அமைச்சர் மரியம்பிச்சை காருடன் மோதியது என்பதையும் விசாரித்து, தனிப்படை போலீசார் உறுதிப்படுத்தினர்.
விஜயவாடாவைச் சேர்ந்த அந்த டாரஸ் லாரியின் உரிமையாளர் காசிம் ரகமதுல்லா என்பதும் தெரிந்தது. அவரே லாரியின் உரிமையாளராகவும், டிரைவராகவும் இருந்து வருகிறார்.தூத்துக்குடியிலிருந்து, விஜயவாடாவுக்கு ஜிப்சம் ஏற்றிச் சென்றபோது தான் பாடாலூர் அருகே விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்டதும், ஏதும் பிரச்னை ஏற்படுமோ என நினைத்த லாரி உரிமையாளர் காசிம் ரகமதுல்லா, அதை, சாமர்த்தியமாக, ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு ஓட்டிச் சென்றுவிட்டார். அங்கு ஜிப்சத்தை இறக்கிவிட்டு, லாரியை மறைத்து வைக்க, கோல்கட்டா செல்லும் வழியில், மேற்கு வங்க மாநிலம் காடக்பூரில், மேற்கு வங்க போலீசார் உதவியுடன் தனிப்படை போலீசார், டாரஸ் லாரியை கண்டுபிடித்தனர்.பிடிபட்ட லாரியை, பெரம்பலூர் கொண்டு வரவும், லாரியின் உரிமையாளரும், டிரைவருமான காசிம் ரகமதுல்லாவையும் கைது செய்து, பெரம்பலூர் கொண்டு வர, சி.பி.சி.ஐ.டி., போலீசார், ஆந்திரா விரைந்துள்ளனர்.
அமைச்சர் மரியம்பிச்சையின் சாவுக்கு காரணமான லாரி பிடிபடாமல் இருந்ததால், விபத்தில் சதி இருக்குமோ என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்தது. தற்போது லாரி பிடிபட்டுள்ளதால், அந்த சந்தேகத்துக்கான விடை விரைவில் தெரியவரும் சூழல் ஏற்பட்டுள்ளது.==========================================================================
காட்டிக்கொடுத்தது
யார்?
ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட மர்ம சம்பவத்தில் மற்றொரு திருப்பமாக அவர் தங்கியிருந்த இடத்தைக் காட்டிக் கொடுத்தது தலிபான் நிறுவனர்களில் ஒருவரான முல்லா அப்துல் பராதர் என்று செய்தி வெளியாகியுள்ளது. முன்னதாக அபு அஹ்மத் அல் குவைதி என்பவரின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டதன் மூலம் அமெரிக்கா அவருடைய இருப்பிடத்தைக் கண்டறிந்ததாக தெரிவித்திருந்தது.ஒஸாமா பின் லேடன் மே 2 ஆம் திகதி அபோதாபாத் என்ற இடத்தில் அமெரிக்க சிறப்பு ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கடந்த ஆண்டு கராச்சியில் வைத்து அப்துல் பராதர் கைது செய்யப்பட்டார். பின்பு விசாரணைக்குப் பின் அவர் அக்டோபர் மாதம் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் அவருடன் ரகசிய உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஒசாமா பின் லேடன் கொல்லபட்டாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகமாக உள்ள பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முல்லா பராதர் ஒஸாமா பதுங்கியிருந்த இடத்தை அமெரிக்க அரசுக்கு தெரிவித்துள்ளார்.
முல்லா பராதர் தலிபான் அமைப்பைத் தொடங்கியவரில் ஒருவர்.முல்லா பராதர் ஆப்கான் அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குழுவில் இடம் பெற்றிருந்ததோடு முல்லா உமருக்கும் ஒசாமா பின்லேடனுக்கும் நெருக்கமானவராக இருந்துள்ளார் என்று பாதுகாப்பு நிபுணரான நெய்ல் டோய்ல் தெரிவித்துள்ளார். .தற்போது ஒஸாமா கொல்லப்பட்ட பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் குறைக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளதும் ஒஸாமா கொல்லப்பட்டு விட்டதால் இங்கிலாந்து படைகளும் விரைவில் திரும்ப அழைக்கப்படும் என இங்கிலாந்து அதிபர் கேமரூன் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்தத் தகவல்களை மிர்ரர் என்ற இங்கிலாந்து பத்திரிகை வெளியிட்டுள்ளது.
===============================================================================================================
கணிணி:பராமரிப்பு ஆலோசனைகள்
உங்கள் கணினிகளை சிறப்பான செயல்திறனுடன் பராமரிப்பாக வைத்திருக்க 8 வழிமுறைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன.தற்போதைய ஐ.டி. உலகில், நம் அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் கணினிதான் வாழ்க்கையாக அமைந்துள்ளது. கணினியில்தான் பெரும்பாலான நமது நேரம் செலவிடப்படுகிறது.நிதி நடவடிக்கைகள் முதல் நமக்கு பிடித்த இசைகளை கேட்பது வரை அனைத்துமே கணினிவழிதான் நம்மில் பலர் செய்கிறோம். நண்பர்களிடம் உரையாடுகிறோம், மின்னஞ்சல்களை அவ்வப்போது பார்த்து பதில் அனுப்புகிறோம். இந்த நிலையில் கணினி வேலை செய்யாமல் போனால் என்ன ஆகும்?நாம் கணினியில் தற்போது செய்து கொண்டிருக்கும் பணி காணாமல் போய் விடுகிறது. அல்லது நாம் சேமித்து வைத்டிருந்த தகவல்கள் எல்லாம் போய் விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். கணினியில் பணியாற்றும் அனைவருக்கும் தங்களது வாழ்நாளில் இந்த மாபெரும் சிக்கல் ஒரு நாளாவது ஏற்படும் என்பது வழக்கமாகி வருகிறது. இதுபோன்று திரும்பவும் நிகழாமல் இருக்க என்ன செய்வது?இதுபோன்ற நிலையைத் தவிர்த்து, நம் கணினியைப் பேணிப் பராமரிக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்கலாம்.
கணினிகளை சீரான இடைவெளியில் ஸ்கேன் செய்யவும்: வாரம் ஒரு முறை ஸ்கேன் டிஸ்க் கொண்டு கணினியை ஸ்கேன் செய்வது மிக முக்கியம். ஸ்கேன் செய்வதால் ஹார்ட் டிஸ்கில் உள்ள பிழைகள் சரி செய்யப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.
வைரஸ் ஒழிப்பு மென்பொருளை இன்ஸ்டால் செய்யவும்: எந்த ஒரு கணினியும் வேலை செய்யாமல் போகிறதா? அதற்கு முக்கியக் காரணம் வைரஸ் ஊடுருவலே. இதனால் சந்தைகளில் உள்ள வைரஸ் ஒழிப்பு மென்பொருட்களை நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் வாங்கி இன்ஸ்டால் செய்ய வேண்டும். அதேபோல் வைரஸ் ஸ்கேனிங் நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொள்வதும் அவசியம்.சில வைரஸ் ஒழிப்பு மென்பொருட்கள் ஆன்லைனிலேயே கிடைக்கும். ஆனால் இவற்றை டவுன்லோடு செய்யும்போது அதிக எச்சரிக்கை தேவை. ஏனெனில் இந்த மென்பொருளே ஒரு வைரஸ் பரப்பும் உத்தியாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபயர் வால் இன்ஸ்டால் செய்யவும்: இணையதளங்களுக்கு அடிக்கடி செல்லும் பழக்கமுடையவரானால் ஃபயர்வால் இடுவது மிகவும் அவசியம். அதிகாரபூர்வமற்ற, தேவையற்ற விஷயங்கள் உங்கள் கணினிகளை ஊடுருவதிலிருந்து ஃபயர்வால் தடுக்கும். உங்கள் கணினிகளில் உங்களுக்கு தெரியாமலேயே டவுன்லோடு ஆகும் புரோகிராம்கள் குறித்து உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் திறமையான பணியும் ஃபயர்வாலுக்கு உண்டு.விண்டோஸ் எக்ஸ்.பி. மற்றும் விண்டோஸ் விஸ்தா ஆகிய ஆபரேட்டிங் சிஸ்டம்கள் ஃப்யர்வால் வசதியுடனேயே வருகிறது. நாம் அதனை ஆன் செய்து விட்டால் போதுமானது.
டீஃப்ராக் செய்யவும்: டீஃப்ராக்மென்டேஷன் என்பது நம் கணினியின் ஹார்ட் டிஸ்கை ஒழுங்கமைக்கிறது. அதாவது கோப்புகளை தாறுமாறாக ஆங்காங்கே வைக்காமல் அடுத்தடுத்து வைத்து நிறைய காலி இடங்களை ஏற்படுத்திக் கொடுப்பது. இதனால் கணினியின் வேகம் பாதுகாக்கப்படும். நாம் நிறைய புரோகிராம்களை இன்ஸ்டால் செய்கிறோம், அல்லது இன்ஸ்டால் செய்தவற்றை ரத்து செய்கிறோம், கோப்புகளை அடிக்கடி அழிக்கவும் செய்கிறோம். இதனால் டீஃப்ராக் செய்வது மிக அவசியமான ஒரு நடவடிக்கையாகும்.
டிஸ்க்கை சுத்தம் செய்யவும்: உங்கள் கணினியின் செயல் திறன் நன்றாக அமைய டிஸ்க் க்ளீன் அப் மிகவும் அவசியம். நாம் ஏற்கனவே நீக்கி விட்ட கோப்புகளின் எச்சசொச்சங்களையும் இது முற்றிலும் நீக்கி விடும். பழைய கோப்புகள் அதிக இடத்தை அபகரித்துக் கொள்ளாமல் பாதுகாக்கும். டிஸ்க் கிளீன் அப் செய்து முடித்து விட்டுப் பார்த்தால் நமது டிஸ்கில் எவ்வளவு இடங்கள் உள்ளன என்பது நமக்கு ஆச்சரியமளிப்பதாக இருக்கும்.
டிஸ்க்கை சுத்தம் செய்யவும்: உங்கள் கணினியின் செயல் திறன் நன்றாக அமைய டிஸ்க் க்ளீன் அப் மிகவும் அவசியம். நாம் ஏற்கனவே நீக்கி விட்ட கோப்புகளின் எச்சசொச்சங்களையும் இது முற்றிலும் நீக்கி விடும். பழைய கோப்புகள் அதிக இடத்தை அபகரித்துக் கொள்ளாமல் பாதுகாக்கும். டிஸ்க் கிளீன் அப் செய்து முடித்து விட்டுப் பார்த்தால் நமது டிஸ்கில் எவ்வளவு இடங்கள் உள்ளன என்பது நமக்கு ஆச்சரியமளிப்பதாக இருக்கும்.
இணையதள டவுன்லோடுகளை குறைக்கவும்: நாம் இணைய தளங்களிலிருந்து இலவச மென்பொருள் பலவற்றை டவுன்லோடு செய்வோம். அதிகாரபூர்வமற்று இசை இணையதளங்களுக்கு சென்று இசைகளை டவுன்லோடு செய்வோம். இதிலெல்லாம் கணினியை இயங்க விடாமல் செய்யும் மென்பொருட்கள் இருக்கும். எனவே குறைந்த அளவில் டவுன்லோடுகளை வைத்துக் கொள்வது நலம்.
பயன்படுத்தாத புரோகிராம்களை ரத்து செய்யவும்: இனிமேல் இந்த புரோகிராம் தேவையில்லை என்ற நிலை ஏற்படும்போது கன்ட்ரோல் பேனலில் உள்ள ஆட்/ரிமூவ்-ஐ பயன்படுத்தி அதனை நீக்கவும். இதனால் டிஸ்கில் அதிக இடம் கிடைக்கும், கணினியின் செயல்திறன் அதிகரிக்கும்.
கணினியை சுத்தம் செய்யவும்: கணினியின் உட்பகுதிகளில் தூசிகள் மண்டி விடாமல் இருக்க வாரம் ஒரு முறை துணியால் துடைத்து தூசிகளை அகற்றவும். மேலும் கணினியை உஷ்ணம் தாக்காமல் இருக்கும் வகையில் ஒரு அறையில் வைத்திருக்கவும்.
==========================================================================
==========================================================================
காங்கிரசாரின் கனவுகள்’’’’’’’’’’’
"திமுகவினரின் ஊழலால் தான், காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டது என்று மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா பேசியுள்ளார். சட்டசபை தேர்தலில், எங்கள் கருத்துக்கள் டில்லியில் எடுபடவில்லை. இல்லாவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து நின்று, வெற்றி பெற்று இருப்போம். கட்சியில் தற்போது ஒன்பது லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். வரும் காலங்களில் 30 லட்சம் உறுப்பினர்களாக அதிகரிக்கப்பட வேண்டும்.
தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்விக்கு ஆளும் திமுகவினரின் ஊழல் தான் காரணம். முதல்வர், துணை முதல்வர் மீது எந்த சந்தேகம் இல்லை. ஆனால், அமைச்சர் முதல் வார்டுகளில் உள்ளவர்களின் ஊழலால் தான், காங்கிரஸ் கட்சி பலிகடா ஆக்கப்பட்டது.இனி வரும் தேர்தலில்களில் வாழ்ந்தாலும், தாழ்ந்தாலும் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும். இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆரம்ப கல்வி முதல் தமிழகத்தில் இந்தியை பாடமாக்க வேண்டும் என்றார்.
காங்கிரசில் ஒன்பது லட்சம் உறுப்பினர்கள்தான் உள்ளனரா? யுவராஜா இளைஞர் காங்கிரசை சொல்லுகிறார் என்று எண்ணுகிறோம்.
இவ்வளவு பேரும் ஒழுங்காக வேளை பார்த்திருந்தாலும்-வாக்களித்திருந்தாலும் அதிகமாக சில தொகுதிகளை வென்றிருக்கலாமே?
வாய்ப்பே இல்லாமல் 63 தொகுதிகளை ,அதுவும் தி.மு.க,வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டத் தொகுதிகளை வாங்கி தானும் ஜெயிக்காமல்,தி.மு.க.வையும் வெல்ல விடாமல் கோஷ்டி தகராறிலேயே
எதிர் வேட்பாளர் களை வெல்ல வைத்து விட்டு இது என்ன அரைவேக்கடு பேச்சு.கொஞ்சமாவது நடப்பது என்ன என்று பாருங்கள்.”.டான் குவிக்சோட்’ வீரம் ஏன்?
அலைவரிசையாய் ஊழல் குற்றசாட்டில் மூழ்கிக் கொண்டிருப்பது காங்கிரசு மத்திய அரசு தான்.அந்த அலைவரிசையில் 2ஜி ஒரு அலைதான்.காமன்வெல்த்.ஆதர்ஷ்,3ஜி, என்று பல அலைகள் இருக்கிறது.ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது 2ஜ்இ யில் மட்டும்தான்.
ஈழப்போரில் தமிழர்கள் கூட்டம் ,கூட்டமாகக் கொலை செய்து குவிக்கப்பட்டதும் அதற்கு சோனியாவின் இந்திய அரசு ஒத்துழைத்ததும் தான் தமிழக மக்கள் வாக்குகள் மாற முக்கிய காரணக்களில் ஒன்றாக இருந்துள்ளது.இது ’ரா’போன்ற மத்திய உளவுத்துறைகளின் அறிக்கைகளில் வெளியாகியுள்ளது.
சோனியா-பக்சே படுகொலைகளைத் தட்டிக் கேட்காமல், கண்ணீர் கவிதை எழுதியதும்.கடற்கரையில் வந்து உண்ணாவிரதம் என படுத்து சென்றதும் தமிழக மக்களை கருணாநிதி யின் மீது கோவம் கொள்ள வைத்தது.அதன் வெளிப்பாடே தேர்தலிலும் வெடித்தது.மின் தடையும் ஒரு காரணம்.
முக்கிய காரணம் காங்கிரசுடனான கூட்டணிதான்.
இடையில் கூட்டணி முறிவு நாடகத்தை தி.மு.க.உண்மையிலே தனது முடிவாக்கியிருந்தால் ,தி.மு.க.இந்த அளவு[ சோகமான] இடங்களை விட அதிகமான இடங்களைப் பெற்றிருக்கும்.
2ஜி யும் கனிமொழியும் தி.மு.க,த்தலைமையைக் கட்டிப்போட்டு விட்டது.
அதுதான் காங்கிரசுக்கு 5இடங்களையாவது பெற்றுத்தந்துள்ளது.
முதலில் காங்கிரசுக் காரர்கள் கனவில் இருந்து வெளியே வாருங்கள்.உங்களால்தான் தி.மு.க.விற்கு தோல்வியே தவிர அவர்களால் காங்கிரசுக்கு தோல்வி அல்ல.
யுவராஜா அவர்களே தாங்கள் கூறியபடி அடுத்த முறை தனியே நின்று உங்கள் பலத்தை சோதித்துக் கொள்வது தான் வருங்கால அரசியலுக்கு நல்லது.
தமிழகத்திற்கும் நல்லது.உங்களை சேர்த்துக் கொள்ள ஆசிப்படும் தி.மு.க.-அ.தி.மு.க,விற்கு உங்கள் உண்மையான பலமும் தெரியும்.
ஞாயிறு, 29 மே, 2011
மத்திய அரசின் இரண்டாண்டு-ஒரு பார்வை
| ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கத்தின் இரண்டாம் ஆண்டு | |||
| -சீத்தாராம் யெச்சூரிஎம்.பி., | |||
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-2 அர சாங்கம் ஈராண்டு நிறைவுபெற்றதை அடுத்து, அதை அனுசரிக்கும் விதத்தில் பிரதமரால் ஒரு தேனீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக் கும் கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள் ளும் நிகழ்ச்சியும், அப்போது பிரதமர் உரை நிகழ்த்தி ‘மக்களுக்கு அறிக்கை’ ஒன்றும் அளிக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற சமயங்களில் சம்பிரதாயரீதி யாகப் புகைப்படங்கள் எடுக்கப்படும். இப் போது எடுக்கப்பட்டுள்ள புகைப்படத்துடன், சென்ற ஐ.மு.கூட்டணி-1 அரசாங்கத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஒப்பிட் டுப் பார்த்தோமானால், சில வித்தியாசங்கள் பளிச்செனத் தெரியும். ஐ.மு.கூட்டணி-1 அரசாங்கத்திற்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வந்த இடதுசாரிக் கட்சித் தலை வர்கள் இப்போது எடுக்கப்பட்ட புகைப்படத் தில் இல்லை. அதேபோன்று ஐ.மு.கூட்டணி யில் அங்கம் வகிக்கக்கூடிய லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி, ராம் விலாஸ் பஸ்வானின் எல்ஜேபி கட்சியினரும் காணப்படவில்லை. திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா, திமுகவின் தலைவரின் மகளும், மாநிலங்களவை உறுப் பினருமான கனிமொழி திகார் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் திமுகவின் அனைத்து அமைச்சர்க ளும் காணப்படவில்லை. டி.ஆர். பாலு மட்டும் திமுகவைப் பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய வகையில் பெயரளவில் விருந்தில் கலந்து கொண்டார். அதேபோன்று தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி மற்றும் மதிமுக கட்சிகளைச் சேர்ந்தவர்கள் - ஐ.மு.கூட்டணி-1 அரசாங் கத்தின்போது அங்கம் வகித்தவர்கள் - இப் போது காணப்படவில்லை. ஐ.மு.கூட்டணி1 அரசாங்கத்தில் அங்கம் வகித்த தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மட்டுமே இப் போதும் ஆஜராகி இருந்தார்கள். ஐ.மு.கூட்டணி-1 அரசாங்கம் தன்னிச் சையாக இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப் பந்தத்தை நிறைவேற்ற முடிவு செய்ததை அடுத்து, இடதுசாரிக் கட்சிகள் அந்த ஆட் சிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்ட பின்னர், நாடாளுமன்றத்தில் நம்பிக் கைக் கோரும் தீர்மானத்தின்மீது நடைபெற்ற வாக்கெடுப்பின்போது எப்படி அது நடந்து கொண்டதோ அதேபோன்று ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கமானது இப்போதும் மிகவும் இழி வான முறையில் நாடாளுமன்றத்தில் உள்ள பல்வேறு கட்சிகளுடனும் குழுக்களுடனும் பேரம் பேசி எப்படியோ தப்பிப் பிழைத்துக் கொண்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய கக் கூட்டணி ஆறாண்டு காலம் ஆட்சியிலி ருந்த காலத்தில் அரிக்கப்பட்டுக் கொண்டும் சிதைக்கப்பட்டுக் கொண்டுமிருந்த நாட்டின் மதச்சார்பற்ற கட்டமைப்பையும், நாட்டின் பொது அமைப்புகளின் மதச் சார்பற்ற ஜனநா யக உள்ளடக்கத்தையும் பாதுகாத்திட வேண் டும் என்பதன் தேவையை உணர்ந்துதான் ஐ.மு.கூட்டணி-1 அரசாங்கம் அமைக்கப்பட் டது. அப்போது ஐ.மு.கூட்டணி-1 அரசாங்கத் தின் சார்பில் ஓர் உறுதிமொழி எடுத்துக் கொள் ளப்பட்டது. “ஐக்கிய முற்போக்குக் கூட்டணி யானது ஓர் ஊழலற்ற, வெளிப்படையான மற் றும் மக்களுக்குப் பதில் சொல்லக்கூடிய தொரு அரசாங்கத்தை அளிப்பதற்கும், மக்க ளுக்கு மிகவும் பொறுப்புடனும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக்கூடிய வகை யிலும் நிர்வாகத்தை ஏற்படுத்திடவும் உறுதி எடுத்துக் கொள்கிறது,” என்பதே அந்த உறுதி மொழியாகும். மேலும் இடதுசாரிக் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதற்கு அடிப் படையாக அமைந்த ஒரு குறைந்தபட்ச பொதுச்செயல் திட்டத்தையும் அது ஏற்றுக் கொண்டது. ஐ.மு.கூட்டணி-1 அரசாங்கம் நிறைவேற்று வதாகக் கூறி எடுத்துக்கொண்ட உறுதிமொழி யையும், உள்ளடக்கத்தையும் ஐ.மு.கூட் டணி-2 அர சாங்கமானது இவ்வாறு திட்ட மிட்டமுறையில் இடித்துத் தள்ளிக்கொண்டி ருக்கிறது. நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை எவ்விதத் தங்குதடையு மின்றி அமல்படுத்த வேண்டும் என்பதற்காக வும், இந்தியாவை அமெரிக்க ஏகாதிபத்தி யத்தின் இளைய பங்காளியாக மாற்ற வேண் டும் என்பதற்காகவும், ‘‘ஆம் ஆத்மி’’ (சாமா னியர்களு)க்காகவே தாங்கள் இருக்கிறோம் என்ற பாசாங்கினைக் கூட அது கைவிடத் தொடங்கிவிட்டது. ஐ.மு.கூட்டணி-1 ஆட்சிக்காலத்திலே யேகூட, ஆம் ஆத்மியின் நலன்களை முன் னேற்றுவதற்காக, அரசாங்கம் தான் அளித் திட்ட உறுதிமொழியையும், குறைந்த பட்சப் பொதுச் செயல் திட்டத்தையும் படிப்படியாகக் கைவிடத் தொடங்கிவிட்டது. அதுமட்டுமல் லாமல், ஒருதலைப்பட்சமாக இந்திய-அமெ ரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை செய்து கொண்டதன் மூலம் குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டத்தில் கூறப்படாதவற்றையும் மேற்கொண்டது. இதன் மூலம் இந்தியாவை அமெரிக்காவின் இளைய பங்காளியாக்கி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய கேந் திரக் கூட்டாளியாக சேர்ந்தது. குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை இவ்வாறு நம்பிக் கைத் துரோகம் செய்ததன் மூலம், இடதுசாரிக் கட்சிகள் எதன் அடிப்படையில் அதற்கு ஆத ரவு அளித்து வந்ததோ, அதை அவர்கள் மறு தலித்ததன் காரணமாக, வேறு வழியின்றி தங் கள் ஆதரவினை விலக்கிக் கொள்ள வேண்டி வந்தது. அதேபோன்று, அரசாங்கம் தான் அளித்திட்ட உறுதிமொழிகள் அனைத்தை யும் கைவிட்டதை அனைவரும் பார்க்கத்தான் செய்தனர். ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கம் கடந்த ஈராண்டு கால ஆட்சியில், நாட்டையும் நாட்டு மக்க ளையும் பீடித்திருக்கிற இரு முக்கிய கொள் ளைநோய்கள், அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைவாசி உயர்வும், மாபெ ரும் ஊழல்களுமாகும். இவ்விரண்டு நோய்க ளும் நாட்டின் ரத்த நாளங்களையே கடுமை யாக அரித்துத் தின்றுகொண்டிருக்கின்றன. இத்தகைய நிலைமையில், பிரதமரின் உரை யில், விலைவாசி உயர்வின் காரணமாக மக் கள் படும் துன்பங்களைக் களைவது குறித்து சம்பிரதாயமான முறையில் கூட எதுவும் இல் லை. மாறாக, விலைவாசி உயர்வை நியாயப் படுத்தக்கூடிய விதத்தில், எண்ணெய் மற்றும் உணவுப் பொருள்களின் விலைகள் சர்வதேச அளவில் உயர்ந்திருப்பதே இதற்குக் காரணம் என்று விளக்கமளித்திருக்கிறார். விவசாயத் துறையில் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திற னை அதிகரிக்க வேண்டியதன் அவசியத் தை அவர் குறிப்பிட்டிருந்தபோதிலும், அவற் றை எவ்வாறு அரசு நிறைவேற்றப்போகிறது என்பது குறித்து எவ்வித உருப்படியான திட்ட மும் முன்வைக்கப்படவில்லை. இதுவரை யில், அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைவாசி உயர்வுக்கு முக்கியமான காரண மாகவுள்ள, ஊக வர்த்தகத்தை தடை செய் திட அரசாங்கம் மறுத்து வருகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் காமன் வெல்த் விளையாட்டுக்களில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து மேம்போக்காகப் போகிற போக்கில் பிரதமர் குறிப்பிட்டிருந்தாலும், அவ ரது பேச்சின் தொனி மற்றும் உள்ளடக்கத்தில் ஒரு திருப்தி மனப்பான்மை இருப்பதைப் பார்க்க முடியும். எது தேவை என நினைத் தார்களோ அதனைச் செய்துவிட்டார்களாம். “சட்டம் தன் கடமையைச் செய்ய ஏற்கனவே துவங்கிவிட்டது. எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்ச்சிப்போக்குகள் நடைபெறா வண்ணம் தடுத்திடவும், அதிகாரிகள் தங்கள்இஷ்டத் திற்குச் செயல்படுவதைக் குறைத்திடவும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக் கின்றன,” என்று கூறியிருக்கிறார். ஆயினும் மிகவும் முக்கியமான விஷயம் என்னவெ னில், ஆட்சியாளர்கள், ஊழல்கள் மூலம் கொள்ளையடித்திட்ட பல லட்சம் கோடி ரூபாய்களையும் அவர்களிடமிருந்து மீண்டும் கைப்பற்றி, மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட பயன்படுத்துவது தொடர்பானதாகும். இது குறித்து எதுவுமே கூறாது பிரதமர் அமைதி காத்திருக்கிறார். பிரதமர், எதிர்பார்த்ததுபோலவே, கடந்த ஈராண்டுகளில் ஆண்டு வளர்ச்சி விகிதம் 8.5 விழுக்காடாக உயர்ந்திருப்பதை, ‘‘வரலாற்றுச் சாதனை’’ என்று பீற்றிக்கொண்டிருக்கிறார். ‘‘நாம் தேசிய அளவில் ‘உள்ளார்ந்த வளர்ச்சி’ (`inஉடரளiஎந பசடிறவா’), சர்வதேச அளவில் ‘உள் ளார்ந்த உலகமயம்’ (`inஉடரளiஎந படடியெடளையவiடிn’) என் னும் கொள்கையைக் கடைப்பிடித்து வருகி றோம். அதன் மூலம், இல்லாதவர்கள் பயன டைவார்கள். இருப்பவர்களுக்கும் இல்லாத வர்களுக்கும் இடையே உள்ள ஏற்றத்தாழ்வு குறைந்திடும்,” என்று கூறியிருக்கிறார். இதைவிடக் கொடூரமான ஜோக் வேறெது வும் இருக்க முடியாது. கடந்த ஈராண்டுகளில் இந்தியாவில் இருக்கும் அமெரிக்க டாலர் பில்லியனர்கள் எண்ணிக்கை 26 இலிருந்து 52ஆக உயர்ந்தது. தற்சமயம் மேலும் உயர்ந்து 69 ஆக மாறியிருக்கிறது. அவர்களின் ஒருங் கிணைந்த சொத்தின் மதிப்பு நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ழுனுஞ) மூன் றில் ஒரு பங்காகும். அதே சமயத்தில் மறுபக் கத்தில், நம் நாட்டின் மக்கள் தொகையில் 77 விழுக்காட்டினர் அல்லது 80 கோடிக்கும் மேலான மக்கள் நாளொன்றுக்கு 20 ரூபாய் கூட செலவிட முடியாது வாடிக்கொண்டிருக் கிறார்கள். இவ்வாறு செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையே மிகவும் உள்ள ஏற்றத்தாழ்வு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் வளர்ந்து கொண்டிருக்கிறதே யொழிய, பிரதமர் நம்மை நம்பச் சொல்வது போல் குறைந்திடவில்லை. பிரதமர் நாட்டின் எதிர்காலத்திற்காகக் காட்டிடும் வரைபடம் மிகவும் கவலை அளிக் கக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது. “நமக்கு உடனடிச் சவாலாக இருப்பதென்பது நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்திடும் அதே சமயத்தில் வளர்ச் சிக்கான செயல்முறைகளையும் தக்க வைத் துக்கொள்ள வேண்டியநிலையில் நாம் இருப் பதுதான்,’’ என்று பிரதமர் கூறுகிறார். இவ் வாறு பொருளாதார வளர்ச்சியைத் தக்க வைப் பதற்கு, பிரதமர் பல்வேறு விதமான யோசனை களைச் சொல்லியிருக்கிறார். அதில் அவர் மிகவும் முக்கியமாகக் குறிப்பிடுவது, நாட்டின் கருவூலத்திற்கு வரவேண்டிய வருமானம் குறித்து மாற்றத்தைக் கொண்டுவர வேண் டும் என்பதாகும். கடந்த ஈராண்டுகளில் அர சுக்கு வரவேண்டிய வருவாயைப் பெருக்கிட, அரசு மேற்கொண்ட திட்டங்கள் அனைத்தும் நம் பொருளாதார வளர்ச்சியைத் தேவையான அளவு நிலைநிறுத்திட உதவியிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், ‘‘நிதி மற்றும் வருவாய் பற்றாக்குறையை’’க் குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி நட வடிக்கைகள் குறித்துத் தற்போது பேசுகிறார். இதன் பொருள் என்ன தெரியுமா? அரசாங்கம் வருவாயைப் பெருக்குவதற்கான வேலைக ளில் இறங்கும் அதே சமயத்தில், செலவினங் களைக் குறைப்பதற்கான வேலைகளிலும் இறங்கிட வேண்டும் என்பதேயாகும். அதா வது மக்கள் நலத்திட்டங்களுக்காக சமூக நலத் துறைகளுக்குத் தற்போது ஒதுக்கப் பட்டுவரும் அற்பத் தொகைகள்கூட மேலும் கணிசமான அளவிற்குக் குறைக்கப்பட இருக்கிறது என்பதேயாகும். இன்னும் சரி யாகச் சொல்வதென்றால், நாட்டின் பெருவாரி யான மக்கள் மீது மேலும் அதிகமான சுமை களைச் அரசு சுமத்த இருக்கிறது என்பதே இதன் பொருளாகும். உலகப் பொருளாதார நெருக்கடி மற்றும் பொருளாதார மந்தத்தின் பாதிப்புகளிலிருந்து உலக முதலாளித்துவம் எப்படித் தன்னைச் சரிப்படுத்திக்கொண்டதோ அதன் எதிரொலி தான் இது என்பது தெளிவு. பெருமுதலாளித் துவ நிதி நிறுவனங்கள் தங்கள் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளித்துக் கொள்வதற் காக தங்கள் நாடுகளில் உள்ள அரசுகளிடமி ருந்து பொருளாதார ஊக்குவிப்புத் தொகை களைப் பெற்று, நெருக்கடியிலிருந்து வெளி வந்தன. இதற்காக பல்வேறு நாடுகளின் அர சாங்கங்களும் மிகப்பெரிய அளவில் நிதி களைக் கடனாகப் பெற்றன. இவ்வாறு பெற்ற கடன்களைச் சரிசெய்வதற்காக, தங்கள் செல வினங்களைக் குறைத்து, தங்கள் நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உழைக்கும் மக்கள் மீது சுமைகளை ஏற்றி யிருக்கின்றன. முதலாளித்துவத்தின் குணம் என்னவெனில், தங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து தங்களைச் சரிப்படுத் திக் கொண்டு வெளியேற, தங்கள் திவால்தன் மையை அரசின் திவால்தன்மையாக மாற்றி டுவது என்பதுதான். ஒட்டுமொத்த விளைவு, மக்களின் மீது தாங்கொணா சுமைகள் விழும். இவ்வாறு தங்கள் மீது விழுந்த தாக்குதல் களை எதிர்த்து ஐரோப்பிய நாடுகள் முழுவதி லும் மக்கள் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பி யிருக்கின்றன. இத்தகைய நடைமுறைகளைத்தான் இந்தியாவிலும் கொண்டுவரப் போவதாக பிரதமர் நினைவுபடுத்தி இருக்கிறார். ஐ.மு. கூட்டணி-2 அரசாங்கத்தின் ஈராண்டு கால நிறைவு விழா, இவ்வாறு, மக்கள் கொண்டா டப்படக்கூடிய ஒன்றாக அமைந்திடவில் லை, மாறாக தங்கள் மீது மேலும் சுமைகள் விரைவில் விழப்போகின்றன என்று எச்சரிக் கும் விதத்திலேயே அமைந்திருக்கிறது. அரசாங்கம் இவ்வாறு முன்கூட்டி எச் சரிக்கை செய்திருப்பது, மக்கள் இதற்கு எதி ராகப் போராடுவதற்குத் தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தி இருக்கிறது. தங்கள் மீது அரசு ஏற்றப்போகிற சுமைகளுக்கு எதிராக மக்கள் திரள் நடத்த இருக்கும் மகத்தான போராட்டங் களின் வலிமைதான், மக்கள் இதுவரைப் பெற் றிருக்கின்ற உரிமைகளைப் பாதுகாத்திடு வதையும், சிறந்ததோர் வாழ்க்கைக்கான போராட்டங்களை மேலும் முன்னெடுத்துச் செல்வதையும் பெரிய அளவில் தீர்மானித்திடும். தமிழில்: ச.வீரமணி நன்றி:தீக்கதிர் |
30லட்சமும்-3000 கோடியும்

அன்னா கசாரேவைக் கொல்ல 30லட்சம்
""என்னை கொல்வதற்கு 30 லட்சம் ரூபாய் பேசி, வாடகை கொலையாளியை ஏற்பாடு செய்தனர். ஆனால், அந்த நபர், என்னை கொல்ல மறுத்துவிட்டார்,' ' என, ஊழலை எதிர்த்து[?] போராடி வரும் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
பெங்களூரு பசவனகுடியில் நடந்த பொதுக்கூட்டத்தில், அன்னா ஹசாரே பேசியதாவது:” ஏப்ரல் 5ம் தேதி, டில்லியில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில், பெங்களூரிலிருந்து ஏராளமான இளைஞர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். என் உண்ணாவிரதத்திற்கு பெரும் ஆதரவாகச் செயல்பட்டனர். அவர்களின் எழுச்சி பாராட்டத்தக்கதாக உள்ளது. இளைஞர்கள் நினைத்தால் அனைத்தையும் செய்து முடிக்கலாம். என்னை கொல்வதற்கு, 30 லட்சம் ரூபாய் கொடுத்து வாடகை கொலையாளியை ஏற்பாடு செய்தனர். ஆனால், அந்த நபர் என்னை கொல்ல மறுத்துவிட்டார்”. இவ்வாறு அன்னா ஹசாரேபேசியுள்ளார்.
நம்ம ஊரு அரசியல்வாதிகள் இவரின் பேச்சு முன் தோற்றுப் போவார்கள்.
இவரை 30 லட்சம் கொடுத்து கொலை செய்வதால் யாருக்கு என்ன லாபமோ?
இப்பேச்சினால் அன்னா ஹசாரேக்கு மட்டும் லாபம்.அவருக்கு ஒரு பெயர் அதாவது இமேஜ் கிடைக்குமே.அத்துடன் அவர் விடவில்லை.மேலும்
அவர் பேசுகையில்;” நாட்டில் ஊழல் செய்வோரை விசாரிக்கும் லோக்பால் மசோதா வரும் ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் கொண்டு வரப்பட வேண்டும் இல்லையேல் நான் மீண்டும் உண்ணாவிரதம் இருப்பேன், எனது போராட்டம் காரணமாக ஊழல் புரிந்த 6 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இவர்கள் என்னை பழிவாங்க துடிக்கின்றனர். ஆனால் அவர்களால் என்னை ஒன்றும் செய்ய முடியவில்லை. காரணம் நான் கறை படியாத கரத்திற்கு சொந்தக்காரனாக இருக்கின்றேன். பிரதமர் நல்லவர் தான் அவர் மோசமானவர் அல்ல. அவரை இயக்கி வரும் ரிமோட்கன்ட்ரோல் ( சோனியா ) சரியில்லையே, அது தான் பிரச்னையை உருவாக்குகிறது.” இவ்வாறு அவர் பேசினார்.சும்மா கொஞ்ச காலம் திடீரென லஞ்சத்தை ஒழிக்கப் போவதாக உதித்த மாவீரர் அன்னா மீது சந்தேகமாகவே இருக்கிறது.அவரின் நோக்கம் நல்லதுதான்.ஆனால் ஆள் யாராலோ முகமூடியாக முன்நிறுத்தப்படுவது தெரிகிறது.
தனது அறக்கட்டளை கணக்கில் லட்சம்,லட்சமாக செலவிட்டு பிறந்த நாளைக் கொண்டாடியவர் இவர்.30 லட்சம் தனது உண்ணாவிரதத்திற்காக செலவிட்டுள்ளதாக கணக்குக் காட்டியுள்ளார்.விருந்துக்கு சரி உண்ணாமல் இருக்க இவ்வளவு செலவா? இந்தபணம் யார் தந்தது.?
உண்ணாவிரத மேடையில் ஆட்களை ஏற்றுவதிலும் சில முறைகள் கடை பிடிக்கப்பட்டனவே.இடதுசாரி நோக்குள்ளவர்கள் அனுமதிக்கப் படவே இல்லை. பா.ஜ.க, பெரும் தொழிலதிபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கிரன் பேடி கூட ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளார்.அவர் அதன் பின் இவருடன் பேசுவதையே தவிர்த்து விட்டார். மேடையிலேயே நரேந்திர மோடி புகழ் பாடி தன்னை கசாரே வெளிப்படுத்திக்கொண்டார்.
அறக்கட்டளை கணக்கில் வரி செலுத்திய விபரம் கேட்ட அதிகாரி யை வழக்கு தொடரப் போவதாக மிரட்டியுள்ளார். இதைவிட மிகக் கொடுரம் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய -நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றவரையும் ,அவர் மகனையும் லஞ்ச ஒழிப்புக் குழுவில் சேர்த்துக் கொண்டது.
அண்ணே ,,,அன்னா கசாரே உங்கள் மேல் உள்ள அழுக்குகளை கழுவிவிட்டு வந்து மற்றவர் அழுக்கைப் போக்க வழி கூறினால் நல்லா இருக்கும்.
நீங்கள் கூறிய ரிமோட் ,உண்மையிலே சரியான உவமானம்தான்.அதற்கு தனியாக ஒரு பாராட்டு .
ஆனால் 30லட்சம்-,கொலை-,கொலை செய்ய மறுப்பு-, நம்பும் படி இல்லை.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கோடிக்கணக்கில் மக்கள் பணம் வீணடிப்பு தேவையா?
கருணாநிதி ஆட்சிக் காலத்தில் புதிய தலைமைச் செயலகம் அரசினர் தோட்டம் பகுதியில் ரூ1000 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்டு அங்கு முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ள துறைகள்,சட்டமன்ற செயலகம் போன்றவை மாற்றம் செய்யப்பட்டு செயல் படத்துவங்கிவிட்டன,ஜெயலலிதாவே முன்பு முதல்வராக இருந்தபோது கோட்டையில் உள்ள தலைமைச்செயலகம் பழுதாகிவிட்டது எனக் கூறி,ராணி மேரிக் கல்லூரியை இடித்து கட்டிடம் கட்ட முயன்றார்.அப்போது மக்களின்,மாணவர்களின் எதிர்ப்பால் முடங்கிப்போனது அத்திட்டம்.
உங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சி விளையாட்டில் வீணாவது மக்கள் வரிப்பணம்.அதை கவனத்தில் கொள்ளுங்கள்.
சனி, 28 மே, 2011

இன்னும் இருக்கிறது,,,,
எத்தியோப்பியா [உல்லாச]பயணத்தை முடித்து திரும்பிய பிரதமர் மண்மோகன் சிங் கிடம் செய்தியாளர்கள் 2ஜி,-தி.மு.க, கூட்டணி பற்றி கேட்டபோது ”தி.மு.க.வுடனான கூட்டணி தொடர்கிறது.2ஜி அலைவரிசை நீதிமன்றத்தில் இருப்பதால் அதுபற்றி கூற இயலாது.இல்லை என்றாலும் எனக்கு ஒன்றும் அது பற்றி தெரியாது.தி.மு.க.வில் இன்னும் சிலரை சிறையில் தள்ள வேண்டியதுள்ளது. அதுவரை கூட்டணி கண்டிப்பாகத் தொடரும்.முடிப்பது பற்றி ராகுலும்,சோனியாவும் கலந்து முடிவெடுத்தபின் நானே அறிவிப்பேன் ‘ என்று கூறினார்.
[ என்னங்க குழம்பிட்டீங்களா? அடர்த்தி சிகப்பு எழுத்து எல்லாம் அவர் மனசுல நினைச்சதுங்க. ’சுரன்’க்கு மட்டும் தனியே கேட்டதுங்க.]
============================================================================
பத்பனாபன் வாக்குமூலம் என்ற பெயரில் உருவாக்கும் குழப்பங்களுக்கு விடுதலைப்புலிகள் பெயரில் வெளியான அறிக்கை
சிங்கள அரசு கே.பி மூலம் செய்யும் சதிமுயற்சி முறியடிக்கபடும் - விடுதலைப் புலிகள் தலைமைச் செயலகம்
சனி, 28 மே, 2011
2009 மே மாதம் 18 ஆம் நாளிலிருந்து எமது ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த நிலையில், எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தை நாம் ஜனநாயக வழியில் முன்னெடுத்து வருகின்றோம்.எமது சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாற்றில் அதியுச்ச தியாகங்களை எமது போராளிகள் செய்திருக்கிறார்கள். காலத்துக்குக் காலம் எமது அமைப்பின் போராட்ட முறைகளை மாற்றியமைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வந்திருக்கின்றோம்.
கரந்தடிப் படை நடவடிக்கையில் தொடங்கி எதிரியால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரும் படை நடவடிக்கைகள் பலவற்றை எதிர்த்தும், எதிரியின் படைத்தளங்களைத் தகர்த்தும், எமது நிலப்பகுதிகளை மீட்டெடுத்து, ஒரு நாட்டுக்குரிய முழுமையான நிர்வாக மற்றும் படைக்கட்டமைப்புக்களை நிலைநிறுத்தி, தனிச்சுதந்திர தேசத்துக்கான கட்டுமானங்களை உருவாக்கி மக்களின் சுதந்திர வாழ்வுக்கு உறுதிப்படுத்தப்பட்ட அரசொன்றை நடாத்தி வந்தோம்.
எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை உலகம் புரிந்துகொள்ளாமல் எம்மைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்ததாலும், இராஜதந்திர சூழ்ச்சிகளாலும், பெரும்பலத்தோடு நடத்தப்பட்ட பன்னாட்டுப் போர்நெறிகளை மீறிய கொடூர போரினாலும் நாம் ஆயுதப் போராட்டத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளோம். எனினும், எமது மக்களின் தேசிய ஒருமைப்பாட்டுணர்வையும், தமிழீழ விடுதலை மீது கொண்ட அசைக்க முடியாத பற்றுதலையும், எமது மாவீரர்களின் தியாகத்தின் வழிகாட்டுதலையும் துணையாகக் கொண்டு நாம் எமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய வரலாற்றுக் கடமையை உணர்ந்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.
ஐ.நா நிபுணர்குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையிலும், வேறுபல நடுநிலையாளர்கள் வெளிப்படுத்திய ஆவணங்களிலும் சிங்கள அரசு தமிழர்மீது மேற்கொண்ட இனப்படுகொலை தொடர்பான உண்மைகள் மெல்லமெல்ல வெளிவந்துகொண்டிருக்கும் இக்காலத்தில் மகிந்த அரசு செய்வதறியாது திணறிக்கொண்டிருக்கின்றது.
இதேவேளை, தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றமும் சிங்கள தேசத்தைக் கிலி கொள்ள வைத்துள்ளது. ஈழத்தமிழர் மேல் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பான எதிர்ப்புணர்வும், ஈழத்தமிழரின் அரசியல் உரிமையை வென்றெடுப்பதற்கான ஆதரவும் தமிழகத்திற் பெருகிவரும் நிலையில் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் தமிழக முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தனக்குப் பாதகமாவே நோக்குகின்றது சிங்களப் பேரினவாத அரசு.
ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையும் தமிழகத் தேர்தல் முடிவும் மகிந்த அரசுக்கு மிகப்பெரும் ஆபத்தாகவே முடியுமென்று உணர்ந்துகொண்ட சிங்கள அரசியல் ஆலோசகர்களின் மதிநுட்பமான சதித்திட்டமிடலில் முன்னிறுத்தப்படுவரே கே.பி என்ற திரு செல்வராசா பத்மநாதன். இந்தியத் துணைக்கண்டத்தில், குறிப்பாக தமிழகத்தில் எமக்கெதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சக நோக்கோடு கே.பி ஊடாக உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை வெளியிட்டுவருகிறது சிறிலங்கா அரசு.
சிறிலங்கா அரசபடைகளின் பிடியிலுள்ள எவருமே விடுதலைப் புலிகள் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்திச் செயற்பட முடியாது. இதுவரை காலமும் அவ்வாறு நடந்ததில்லை;
இனியும் நடக்கப்போவதுமில்லை. அவ்வகையில் திரு. செல்வராசா பத்மநாதனும் தன்னை விடுதலைப் புலிகளின் உறுப்பினராக அடையாளப்படுத்துவதும், தான்தான் எஞ்சியிருக்கும் மூத்த போராளியென்று சொல்லிக்கொள்வதும், எமது அமைப்பின் சார்பில் பேசுவதும் தவறானது. அவர் எதிரியின் பிடிக்குட் சிக்கிய நாளிலிருந்து அவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் சார்பில் கருத்துச் சொல்லும் தகுதியை இழந்துள்ளார். அதன் பின்னரான அவரது செயற்பாடுகள், கருத்துக்கள் எவையுமே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினது அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகின்றோம். எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் நாசகாரத் திட்டங்களுக்கு கே.பி அவர்கள் துணைபோகின்றார் என்பதையே அவரின் நடவடிக்கைகள் வெளிக்காட்டுகின்றன.
திரு. செல்வராசா பத்மநாதன் தொலைக்காட்சி நிறுவனமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தற்போதைய தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களைக் கொலைசெய்வதற்கு விடுதலைப்புலிகள் திட்டமிட்டார்கள் என்ற அவதூறை வெளிப்படுத்தியிருக்கிறார். இது அபாண்டமான பொய்க்குற்றச்சாட்டு. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் எமக்கு எதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சகச் சூழ்ச்சியோடே இச்செவ்வி வடிவமைக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தமிழ்நாட்டு உறவுகளும் அரசியல் தலைவர்களும் புரிந்துகொள்வார்கள் என நம்புகின்றோம்.
அன்பான தமிழ்பேசும் உறவுகளே,
சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் இராஜதந்திர சதிவலைக்குள் புதைந்துபோகாமலும் கே.பி போன்றோரை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படும் வஞ்சகச் சூழ்ச்சிக்குத் துணைபோகாமலும் விழிப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
ஆ.அன்பரசன்,
ஊடகப்பிரிவு,
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
==========================================================================
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


