இடுகைகள்

ஜனவரி, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மகான் அஜ்மல் கசாப்?

படம்
மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான அஜ்மல் கசாப்புக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்கவில்லை என்றும் அரசு தரப்பில் போதிய ஆதாரங்கள் தாக்கல் செய்யவில்லை என்றும் அவர் தரப்பில் அவருக்கென நியமிக்கப்பட்டுள்ள வழக்குரை0ர் ராஜூராமச்சந்திரன் உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.  நீதிபதி அப்தாப் ஆலம் முன்பு நடந்த விசாரணையின்போது அவரது வக்கீல் வாதிடும்போது" அஜ்மல் கசாப் மீது தேத்திற்கு எதிரான சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சுமத்தப்படுகிறது. ஆனால் இந்த குற்றத்தில் கசாப்புக்கு பங்கு எதுவும் இல்லை. கசாப் கொலைக்குற்றவாளியாக கருதினாலும் நாட்டுக்கு எதிரான போரில் ஈடுபட்டார் என்பது நிரூபணம் செய்யப்படவில்லை. குற்றச்சாட்டுக்கு எதிராக அவர் எதிர்த்து வாதிட முழு உரிமை உண்டு" என்று கூறியுள்ளார். கசாப்பை பொறுத்தவரை மும்பை ஐகோர்ட் அவருக்கு மரணதண்டனையை கடந்த 2011 பிப்ரவரி மாதம் 21 ல் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு 5 முறை தூக்கிலிடும்படி கடும் தண்டனை அறிவிக்கப்பட்டிருந்தது.  2008 நவம்பர்26ம் தேதிய மும்பையில் கசாப்பும் அவன் கூட்டாளிகளும் நடத்தியதாக்குதலில் 166 ப

ஹிட்லரிசம்?

படம்
ஜெர்மனியின் அரசுதலைவராக உருவாகி, சர்வாதிகாரி என்று பெயரெடுத்து இன வெறியுடன் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்துஉலகையே வெல்ல போரில் பெரும் அழிவு ஏற்படுத்தியஅடால்ஃப் ஹிட்லர் எழுதிய மெயின் கேம்ப் என்ற நூலிலிருந்து சில பகுதிகளை வெளிட  தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹிட்லருடைய நினைவலைகளைத் தொகுப்பாகக் கொண்ட மெயின் கேம்ப் புத்தகத்திலிருந்து சில பகுதிகளைத் தன்னுடை வாரப் பத்திரிகையில் சிறிது சிறிதாக வெளியிட பீட்டர் மெக் கீ என்பவர் திட்டமிட்டார். ஆனால் ஹிட்லர் பிறந்த பவேரியா மாநில அரசு இந்த நூலின் பதிப்புரிமையை வைத்திருக்கிறது. தன்னுடைய அனுமதி இல்லாமல் யாரும் இதை பதிப்பிக்கக் கூடாது என்று அது கூறிவிட்டது. ஹிட்லர் நினைத்தத- பேசியது சொல்வதால் நாசிசம் மீண்டும் எழ வாய்ப்பாகலாம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இத்தனை காலத்துக்குப்பின் நாசிசம் உயிர்த்தெழுமா? இந்த பயம் தேவையா? என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இப்போதே ஜெர்மனியில் சில இடத்தில் மறைமுகமாக நாஜி இயக்கம் என்ற பெயரில் சிலர் கூடி ஆலோசித்துவருகிறார்கள்.இது போன்றா செய்திகளால் அவர்கள் வலுப்பெற்று மீண்டும் ஆர்ய இனவாதம் தலைதூக்கி

கோவில் நகைகள்-மகா மோசடி

படம்
கோவில்கணக்கு மோசடிகள்.  விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயர் ஏராளமான அளவில் நன்கொடைகளை திருப்பதி வெங்கடாசலபதி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கு அளித்துள்ளார் என்று பல செய்திகள் கூறுகின்றன. தங்க ஆபரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த நன்கொடைகள் பற்றிய விபரங்களைத் திரட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் திணறிக் கொண்டிருக்கிறார்கள். நன்கொடை வழங்கப்பட்ட பொருள்களின் பட்டியல் எதுவும் கோவில்களில் இல்லை. இது இல்லாத நிலையில், எவ்வளவு தங்க ஆபரணங்கள் இந்தக் கோவில்களுக்கு கிருஷ்ணதேவராயரால் வழங்கப்பட்டது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இது மட்டுமல்ல, வேறு பல மன்னர்களால் தரப்பட்ட நன்கொடைகளுக்கும் இதுதான் நிலையாக இருக்கிறது. இது போதாதென்று ஆந்திர மாநில தொல்பொருள்துறை புதிதாக ஒரு குற்றச்சாட்டுடன் வந்திருக்கிறது. திருப்பதி வெங்கடாசலபதி தேவஸ்தானத்தின் வசம் இருப்பதாகச் சொல்லப்படும் மதிப்புமிக்க பொருட்களின் அளவுக்கும், கல்வெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று ஆதாரங்களில் சொல்லப்பட்டவற்றின் மதிப்புக்கும் இடையில் பெரும் வேறுபாடு இருக்கிறது என்பதுதான் அது. முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் கோ

விருது பெற்ற படவரிசை,

படம்
புலிட்சர் விருது பெற்றப்புகைப்பட வரிசை. அனைத்தும் தீவிரவாத ,போர் கொடுமைகளின் வடிவம்தான்.

வேலை தேவை

எதிர்வரும் பத்தாண்டுகளில் கிட்டத்தட்ட600 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உலக நாடுகள் இருப்பதாக சர்வதேச தொழிலாளர் ஆணையம் தெரிவித்துள்ளது. மூன்றில் ஒரு தொழிலாளி அல்லது உலக மக்கள் தொகையில் 110 கோடி வேலையில்லாமல் அல்லது வேலையிருந்தும் வறுமையில் வாடுவதாக தொழிலாளர் ஆணையத்தின் இயக்குனர் ஜூவான் சொமாவியா தெரிவித்துள்ளார். ”வேலைவாய்ப்பினை உருவாக்குவதுதான் தற்போது உலக நாடுகளின் முன்னுள்ள முக்கிய வேலையாகும்” என அவர் கூறியுள்ளார். இதனை அரசாங்கங்கள் எடுக்கும் தீவிரகொள்கை மூலம்தான் நடைமுறைப்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டார். யூரோ மற்றும்டாலர் கடன் பிரச்னைகள் விரைவில் சுமுகமாகத் தீர்க்கப்பட்டாலும் 2016 ஆம் ஆண்டு வரை உலகத்தில் வேலைவாய்ப்பின்மை மதிப்பீடு 6 சதவிகிதமாக இருக்கும். 2011 ஆம் ஆண்டு 15 முதல் 24 வயது வரையுள்ள ஏறத்தாழ 75 மில்லியன் இளைஞர்கள் வேலைவாய்ப்பில்லாமல் இருந்ததாக சர்வதேச தொழிலாளர் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.  இதற்கு இப்போதே வளரும் நாடுகள் முதல் வளர்ந்து விட்டதாகக் கருதப்படும் நாடுகள் வரை நடவடிக்கை எடுத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இல்லையேனில் வேலை வாய

5 முதலாளிகளின் ஆட்சி -குடியாட்சி?

படம்
இ ந்தியா குடியரசு நாடாகி 62 ஆண்டுகளாகின்றன. அதாவது, கடந்த 62 ஆண்டுகளாக இந்திய மக்களுக்காக இந்திய மக்களால் நடத்தப்படும் மக்களாட்சி நடந்துவருகிறது. ஆனால், இன்றைய இந்திய மக்களின் சமூக&பொருளாதார நிலையை பார்க்கிற போது ஒரு (சிறு)பகுதி இந்தியர்களுக்காக ஒரு (சிறு)பகுதி இந்தியர்களால் நடத்தப்படும் ஆட்சியாகவே இது இருக்கிறது.  மனித வளர்ச்சி குறியீட்டெண் பட்டியலில் மிகவும் பின்தங்கியிருக்கும் இந்தியா ஊழல் உணர்தல் குறியீட்டெண் பட்டியலில் முன்னணி நாடுகளுள் ஒன்றாக இருப்பது இந்தியாவில் நடக்கும் மக்களாட்சியின் லட்சனத்தை காட்டுகிறது. உலகின் மிக மோசமான விஷயங்களுக்கான எந்தப் பட்டியலை எடுத்தாலும் அதில் முதல் பத்து இடங்களுக்குள் ஒன்று இந்தியாவிற்கு கிடைத்துவிடுவது இந்தியர்கள் செய்த ‘‘பெரும் பேறு’’. உலகிலேயே ஊட்டச்சத்துக் குறைவால் பாதிகப்பட்ட குழந்தைகள் அதிகமிருக்கும் நாடு, ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் அதிகம் இறக்கும் நாடு, எச்.ஐ.வி. தொற்று அதிகமிருக்கும் நாடு, எளிதில் குணப்படுத்தப்பட கூடிய நோய்களால் அதிகம் இறப்பவர்கள் இருக்கும் நாடு, படிப்பறிவற்றவர்கள் அதிகமிருக்கும் நாடு, வறுமைக்கோட்டிற்கு கீழ