முன்னேறுகிறதா இந்தியா ?


                                                                                                                                     -சோலை
நாடு எவ்வளவோ பிரச்சனைகளை எதிர்நோக்கியிருக்கிறது. ஐந்து மாநிலங் களின் சட்டமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்று காங்கிரஸ் தலைமை கவலையில் மூழ்கியிருக்கிறது.

ஆனால் நமது பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஒரே ஒரு கவலைதான் உண்டு. தமது பதவிக்காலம் முடிவதற்குள் அனைத்துத் துறைகளிலும் அந்நிய முத லீட்டிற்கு - அமெரிக்க முதலீட்டிற்குக் கதவுகளைத் திறந்துவிட வேண்டும் என் பதுதான் அவருடைய பெருங்கவலை.


இதுவரை அந்நிய முதலீடு அடி யெடுத்து வைக்காத துறைகளில் அதற் குப் பாதை அமைக்கவேண்டும். எனவே அதற்கான மசோதாக்கள் தயாராகி வரு கின்றன.

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்ற அமெரிக்கா, உலக வங்கி யின் கோட்பாடுகளை பிரதமர் மன்மோகன் சிங் இங்கே செயல்படுத்த முனைந்தார். அதற்கு எதிராக இந்தியா இமயம்போல் எழுந்து நின்றது. திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.கழகம் போன்ற கூட்டணிக் கட்சி களே அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன.

ஆனால், கூட்டணிக் கட்சிகளைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படமாட் டார். அவருடைய முதல் அமைச்சரவை இடதுசாரி கட்சிகளின் ஆதரவோடுதான் பயணித்துக்கொண்டிருந்தது. அப்போது கூட்டணிக் கட்சிகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாது, அமெரிக்காவோடு அணு மின் நிலைய உடன்பாடு கண்டார்.

“இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவு இல்லாது உங்கள் அமைச்சரவை நிலைக் காதே, நடக்காதே’ என்று நிருபர்கள் கொல்கத்தாவில் அவரிடம் கேட்டனர்.

“இடதுசாரிகள் ஆதரவா? அவர்கள் போனால் போகட்டும்” என்றார். தத்துவங் களை மாற்றிக்கொள்ளத் தெரியவேண் டும் என்றார். அவரைப் பொறுத்தவரை யில் அவருக்கு ஒரே தத்துவம்தான் தெரி யும். உலகமயம், தனியார் மயம், தாராள மயம் என்ற தத்துவம்தான் தெரியும். அந்த மயங்களெல்லாம் இன்றைக்கு தவிடு பொடியாகி வருகின்றன. பொருளாதார நெருக்கடியில் புதையுண்டு வருகின்றன. ஆனாலும் அதே தத்துவங்கள்தான் இந்த மண்ணிற்கு ஏற்றது என்பதில் மன் மோகன் சிங் அழுத்தமான நம்பிக்கை கொண்டவர்.


அதனால்தான் அவர் அமெரிக்கா வோடு அணுமின் நிலைய உடன்பாடு கண்டார். அந்த உடன்பாடு இன்னும் கர்ப்ப நிலையிலேயே இருக்கிறது. பிறந்தும் மரிக்கலாம், மரித்தும் பிறக்கலாம். அது தான் இன்றைய நிலை.

அதேபோல சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு என்பது அவருக்கு சிம்ம சொப்பனமாகிவிட்டது. அன்றைக்கு அமெ ரிக்க உடன்பாட்டிற்காக இடதுசாரிகளை உதறியது மாதிரி அவரால் தி.மு.கழகத் தையோ, திரிணாமுல் காங்கிரஸையோ உதற முடியாது. போனால் போகட்டும் போடா என்று விரக்தி வேதாந்தம் பேசமுடியாது.

ஆட்சி கவிழ்வதைப் பற்றிக்கூட அவர் கவலைப்படமாட்டார். காரணம், அவர் அரசியல்வாதி அல்ல. மக்களின் தீர்ப்பைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு வந்தவரும் அல்ல. ஆனால், அவர் சிறந்த நிர்வாகி என்பதனை ஒப்புக்கொள்ள வேண்டும்.

உப்புக் கடலுக்கு சர்க்கரைப் பொங்கல் வைத்துக் கொடுப்பதில் அவருக்கு ரொம்ப ஆசை. இங்கே தேவையில்லாத துறைக ளுக்குக்கூட அந்நிய முதலீடுகளை அவர் அனுமதித்து வருகிறார். சில்லரை வணி கத்தில் அந்நிய முதலீடா என்ற சீற்றத்தி லிருந்து இந்தியா இன்னும் அமைதி பெற வில்லை.

காரணம், பெயர்தான் சில்லரை வணி கமே தவிர, அந்தப் போர்வையில் அமெ ரிக்க பன்னாட்டு நிறுவனங்களும் அதன் பல பல கோடி மூலதனங்களும் இங்கே நுழையத் தயாராக இருந்தன.


இப்போது அமெரிக்க பல்கலைக் கழகங்களுக்கு கதவு திறக்க மன்மோகன் சிங் அரசு தயாராகிவிட்டது. இங்கே வரப் போவது ஹார்வர்டு, ஆக்ஸ்போர்டு, கேம்ப் பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களா? இல்லை.

அமெரிக்காவிலேயே மாணவர்களை ஈர்க்க முடியாத டுபாக்கூர் பல்கலைக் கழகங்கள்தான் வரப்போகின்றன. அவை துட்டுக்கு எட்டு பட்டங்கள் அளிக்கக் கூடியவையாம்.

இந்தியாவில் என்ன பல்கலைக்கழ கங்களே இல்லையா? தரமான, உயர் வான கல்வி வழங்கும் எத்தனை எத் தனை பல்கலைக்கழகங்கள் இங்கே செயல்படுகின்றன? அமெரிக்கப் பல் கலைக்கழகங்கள் வரவேண்டும் என்று எவராவது மன்மோகன் சிங்கிற்கு மனு போடணுமா? இந்தியாவில் உயர்கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. அதற்கு ஏற்ப இன்னும் பல்கலைக்கழகங்கள் தேவை என்றால், திறப்பதற்கு எத்தனை எத்தனை கல்வியாளர்கள் தயாராக இருக் கின்றனர். கல்வித்துறையில் வளரும் நாடுகளில் இன்றைக்கு இந்தியா மூன் றாவது இடத்தில் இருக்கிறது.

அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் எதற்காக இங்கே கடைவிரிக்க வேண் டும்? நமது இளைய தலைமுறையின ருக்கு அமெரிக்கக் கலாச்சாரச் சீரழிவு களை கற்றுக்கொடுக்கவா?

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் வருவதன் மூலம் இங்கே கல்வித்தரம் உயருமாம். இன்றைக்கு இந்திய பல் கலைக்கழகங்களில் பயின்ற லட்சோப லட்சம் இளைஞர்கள் பார் முழுவதும் பரவிப் பணி செய்கிறார்கள். உலகப் பல் கலைக்கழகங்களில் ஆசிரியர்களாக, பேராசிரியர்களாக பணி செய்கிறார்கள்.

இன்றைக்கு இந்தியாவில் ஏறத்தாழ 4500 பல்கலைக்கழகங்கள் செயல்படு கின்றன. கல்வித்தரம் இன்னும் உயர வேண்டுமானால் அந்தப் பல்கலைக் கழகங்களுக்கு வழிகாட்டலாம்.

அந்நியப் பல்கலைக்கழகங்கள் வந் தால் உயர்கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை உயரும் என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் காரணம் சொல் கிறார். 1950ம் ஆண்டில் இந்தியாவில் இரண்டு லட்சம் மாணவர்கள்தான் உயர் கல்வி பெற்றனர். இன்றைக்கு 99 லட் சத்து 55 ஆயிரம் மாணவர்கள் உயர்கல்வி பெறுகின்றனர்.

அந்நிய அமெரிக்கப் பல்கலைக்கழகங் கள் அடியெடுத்து வைக்காததற்கு முன்பே நாம் இந்தச் சாதனையைச் செய்திருக்கி றோம். இந்தச் சாதனை வளர்பிறையாக வழி இருக்கிறது. பின்னர் எதற்காக அமெ ரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு பட்டுக் கம்பளம் விரிக்க வேண்டும்? அவைக ளெல்லாம் இந்தத் தேசத்தின் கல்வித் தரத்தை உயர்த்த வரவில்லை. கல்வியை வியாபாரமாக்க வருகின்றன.

இங்கே வரப்போகின்ற அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் நிலை என்ன? அவைகளும் பொருளாதாரச் சுனாமியில் சிக்கி மூடுகின்ற நிலையில் இறுதி மூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றன.

எனவே, எப்படி தேசமே திரண்டு எழுந்து சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு என்ற ஆபத்தை எதிர்த்ததோ, அதேபோல அந்நியப் பல்கலைக்கழகங் களுக்கு இங்கே இடமில்லை என்று ஆர்த் தெழ வேண்டும்.

தொலைக்காட்சித் துறையையும் அந் நிய - அமெரிக்கத் தொழில் அதிபர்க ளுக்கு சமர்ப்பிக்க மன்மோகன் சிங் சபதம் ஏற்றுவிட்டார். எதிர்காலத் தொலைக்காட்சித் துறை முழுக்க முழுக்க அந்நிய பன் னாட்டு நிறுவனங்களின் கரங்களில் கட் டுண்டு கிடக்கும்.


ஊடகத் துறையில் அந்நிய முத லீட்டை இனி 74 சதவீதமாக உயர்த்துவது என்று மன்மோகன் சிங் அரசு முடிவு செய்துவிட்டது. கருத்துச் சுதந்திரத்திற்கு கல்லறை எழுப்புவது என்று தீர்மானித்து விட்டது.

ஈராக் போரின்போது பார்த்தோம். முழுக்க முழுக்க தொலைக்காட்சிகளில் அமெரிக்க ஆதரவுப் பிரச்சாரம். அல்ஜெ சீரா என்ற அரபுத் தொலைக்காட்சிதான் மக்களுக்கு உண்மை நிலவரங்களை ஒளி பரப்பியது.

டிடிஹெச், கேபிள் டி.வி. சேவையில் 74 சதவிகித அந்நிய முதலீட்டை அனு மதிக்கப் போகிறார்கள். இனி மொபைல் டி.வி. சேவை வர இருக்கிறது. அதற்கும் 74 சதவிகித அந்நிய முதலீட்டை அனுமதிக் கப் போகிறார்கள்.

இப்படித்தான் ஒவ்வொரு துறையிலும் அந்நிய முதலீடு 42 சதவிகிதம் என்கிறார் கள். பின்னர் 76 சதவிகிதம் என்கிறார்கள். தாய்ப்பாலில் முதலில் 42 சதவிகிதம் தான் கள்ளிப்பால் என்றனர். பாதக மில்லை. 76 சதவிகிதம் என்கின்றனர். பின்னர் நூறு சதவிகிதம் என்பார்கள். தாய்ப்பாலை எடுத்துக்கொண்டு அவர் கள் நமக்கு முழுக்க முழுக்க கள்ளிப் பாலைக் கொடுப்பார்கள். அதற்குப் பெயர் தான் உலகமயம், தாராளமயம் என்ப தாகும்.

தங்கள் ஓய்வூதியத் திட்டத்தில் அமெ ரிக்க முதலீடு வேண்டும் என்று எந்த அரசு ஊழியரும் கோரவில்லை. அதில் இப்போதைக்கு 20 சதவிகித அமெரிக்க மூலதனத்திற்கு வழி திறந்திருக்கிறார்கள். இதனை இந்தியா முழுமையும் உள்ள அரசு ஊழியர்கள் ஒன்றுபட்டு எதிர்க்கிறார்கள். எங்களுக்கு ஏன் பொன் விலங்கு என்று கேட்கிறார்கள். ஆனால் தனது குலதெய் வத்தின் கோரிக்கையை நிறைவேற்று வதில் மன்மோகன் சிங் தெளிவாக இருக் கிறார்.


இதுவரை இந்திய பல்தொழில் நிறு வனங்களான கார்ப்பரேட் நிறுவனங் களின் வளர்ச்சிக்கு மன்மோகன் சிங் அரசு அரும்பாடுபட்டது. இப்போது காகி தக் கப்பலில் மூழ்கிக் கொண்டிருக்கும் அமெரிக்க தொழில் நிறுவனங்களைத் தூக்கி நிறுத்த வியர்வை சிந்திப் போராடு கிறது. அமெரிக்காவில் திவாலாகிவிட்ட இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இந்திய மண் ணில் கடைவிரிக்க மன்மோகன் சிங் அரசு அனுமதி அளித்துவிட்டது. இனி இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களும் அமெரிக்க நிறுவனங்களும் கூட்டுக் கொள்ளை அடிக்கப் போகின்றன. நாம் காய்ந்த வயிறோடு வேடிக்கைப் பார்த் துக்கொண்டிருக்கலாம். இதனைத்தான் நான்குகால் பாய்ச்சலில் நாடு முன் னேறுகிறது என்கிறார்கள்.

                                                                                                                          நன்றி : நக்கீரன்

______________________________________________________
உன்னைப்பார்த்து ஊரே சிரிக்குது


ஜப்பான் அரசியல்வாதிகள் ”வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் இல் இறந்த பின் அந்நாடு, அரசியல் நிலைத்தன்மையை இழந்து, சீர் குலைந்து விடும் என கருத்து தெரிவித்திருந்தனர். இதற்குப் பதிலடியாக வடகொரியாவின் தேசிய செய்தி நிறுவனம் கே.சி.என்.ஏ., வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:
பிரதமர்களை மாற்றிக் கொண்டே இருப்பதில் ஜப்பான் தான் இன்னும் உலகில் முதலிடத்தில் இருக்கிறது. அதன் பிழைப்பைப் பார்த்து உலகம் சிரிப்பாய் சிரிக்கிறது. அங்கு ஒவ்வொரு நாளும் அரசியல் திண்டாடிக் கொண்டு தான் இருக்கிறது.இதனால் தான் வடகொரியா உலகின் மிக ஸ்திரமான அரசியலைக் கொண்டுள்ளது என்பதை ஜப்பானால் புரிந்து கொள்ள முடியவில்லை.  என செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

_________________________________________________________________________________
அமெரிக்காவின் கொல வெறி.

ஈராக்கில் கடந்த 8 ஆண்டுகளில் இதுவரை 1 லட்சத்து 62 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஆய்வில் ஒன்றில் தெரியவந்துள்ளது. ஈராக் ஜனாதிபதி சதாம் உசேன் ஆட்சி வீழ்த்தப்பட்டபின் அங்கு பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.
 
இதனைத் தொடர்ந்து பாதுகாப்புக்காக அமெரிக்கப்படைகள் முகாமிட்டிருந்தன. ஆனால் அண்மையில் தற்போது அமெரி்க்கப்படைகள் மீட்டுக்கொள்ளப்பட்ட பிறகு அங்கு குண்டுவெடிப்புகள் சகஜமாகி வருகின்றன.
 
இந்த நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஐ.பி.சி. எனப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் ஈராக்கில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்பு ,மற்றும் பயங்கரவாத தாக்கதல்களில் கடந்த 2003-ம் ஆண்டிலிருந்து இன்றுவரை 1 லட்சத்து 62 பேர் பலியாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
 
இவர்களில் 90 சதவீதம் பேர் அப்பாவி மக்கள் , மீதமுள்ளவர்கள் பாதுகாப்புப்படையினர் எனவும் ,கடந்த -2008-2009-ஆம்ஆண்டுகளில் தான் அதிக எண்ணிக்கையிலான உயிருடற்சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்படி கடந்த 8 ஆண்டுகளில் 1லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக அந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

 -----------------------------------------------------------------------------------------------------------
உருகுவே நாட்டில் போராடும் பெண்களை கைது செய்யும் காவலர்கள்.
_________________________________________________________________________________

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?