கூடங்குளம் நிதி போராட்டம்.


""கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களைப்பற்றி, தொடர்ந்து அவதூறு செய்தி வெளியிட்டால், தினமலர் அலுவலகத்திற்குள் புகுந்து போராடுவோம்'', என, அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்தார்.


உதயகுமார் பேசியதாவது: மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த அணுமின் நிலையத்தை மூடவேண்டும். இதற்கு எதிராக போராட்டம் நடத்தும், எங்களைப் பற்றி அவதூறு செய்திகளை வெளியிட்டு வரும் தினமலரை கண்டித்து, நெல்லை, வண்ணார் பேட்டையிலுள்ள அதன் அலுவலகம் முன் நாளை (இன்று) உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்திருந்தோம். ஆனால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுமென்பதால், போலீசாரின் வேண்டுகோளை ஏற்று, உண்ணாவிரதத்தை ரத்து செய்துள்ளோம். ஆயினும், எங்களைப்பற்றி தினமலரில் தொடர்ந்து அவதூறு செய்தி வெளிவரும்பட்சத்தில், போலீஸ் அனுமதி தராவிட்டாலும், அந்த அலுவலகத்திற்குள் புகுந்து போராட்டம் நடத்துவோம், எனத்தெரிவித்துக்கொள்கிறேன். இந்த அணுமின்நிலையத்தை மூடக்கோரி, காந்தி நினைவு நாளான, ஜன.,30 ல் காலை இடிந்தகரையில் ஒப்பாரி வைக்கும் போராட்டமும், அன்று மாலை கூடங்குளத்தில் அணுமின் நிலைய வரைபட நகல் எரிப்பு போராட்டமும் நடத்தப்படும், என்றார்.

கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு ஜெர்மனி நிதி
 கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு ஜெர்மனியில் இருந்து வந்த நிதி, அதை வினியோகம் செய்த முறை குறித்து மத்திய அரசின் விசாரணை முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.


திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வருவது குறித்து சந்தேகங்கள் எழுந்தன. ஆனால், இவற்றை அணு உலை போராட்டக் குழுவினர் மறுத்தனர். இந்நிலையில், வெளிநாட்டு நிதி பெறும் நிறுவனங்களில், மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள், அண்மையில் ஆய்வு நடத்தினர். ஆய்வறிக்கைகள் மற்றும் நடவடிக்கைகள் இன்னமும் வெளிவராத சூழலில், மீனவ அமைப்பு ஒன்றை நடத்தி வரும் கேரளாவை சேர்ந்த பாதிரியார் தாமஸ் கொச்சேரி என்பவர், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டங்களில் பங்கெடுத்துள்ளதாகத் தெரிகிறது. அவருக்கு வெளிநாட்டு நிறுவனங்களின் தொடர்பு உள்ளதால், ஜெர்மனியை சேர்ந்த அணு உலை எதிர்ப்பாளர் ஹெர்மான் என்பவர் மூலம் பெருமளவு நிதி பெறப்பட்டு, கூடங்குளத்தில் வினியோகிக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல் உள்ளது. அந்த நிதியை பொதுமக்களுக்கு எவ்வாறு வினியோகித்தனர் என்றும், சில உள்ளூர் அமைப்புகள் அதை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வட்டிக்கு"மைக்ரோ பைனான்ஸ்' என்ற முறையில் சுழல் நிதியாக வழங்கியுள்ளதாகக் கூறப்படுவது குறித்தும், மத்திய உள்துறை அமைச்சகத்தினர் விசாரித்து வருகின்றனர்.
                                                                                                      -இது தினமலரில் வந்த செய்தி.
உதய குமார் பாவம் மத்திய அரசை எதிர்த்து ஒரு பக்கம் போராடுவதுடன் தனக்கு எதிரான செய்திகளை வெளியிடும் தின மலரை எதிர்த்து வேறு போராட வேண்டியுள்ளது.
தன் மீதான குற்ற சாட்டுகளை பொய்யானதாக்க இதுவரை போராட்டத்துக்கு வந்த நிதி உதவி.செலவு தொகையை பகிரங்கமாக அறிவித்துவிட வேண்டியதுதானே.
தாங்கள் எந்த நாட்டிலும் நிதி பெறவில்லை என்பதை திட்டவட்டமாக ஆதாரத்துடன் தெரிவித்தால் இப்படி நாளிதழுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டியதில்லையே?

உண்மையை மாற்றி தொடர்ந்து செய்தி தருவதாக எண்ணினால் நீதிமன்றத்தில் தினமலர் மீது வழக்கு தொடரலாமே.அதனிடம் இழப்பீடு கேட்கலாமே?
உதயகுமார் அமெரிக்காவில் இருந்து வந்தவர்.அவர் இதற்கு முன் அந்நிய நாடுகளின் நிதியை அரசு சாராதன்னார்வ நிறுவனங்களுக்கு பெற்று தருவதை
தொழிலாக வைத்திருந்தவர் என்பதும்தான் அவர் மீது தினமலர் சேற்றை வாரி இறைக்க வாய்ப்பாக உள்ளது.அந்த சேற்றை கழுவிட அவர் போராட்ட நிதி ஆதாரங்களை ஆதாரத்துடன் வெளியிடுவதன் மூலமே முடியும்.அதுவரை அவரது போராட்டம் தவறான பார்வையில் சிலரால் பார்க்கப் படுவதை தவிர்க்க இயலாது.கொச்சைப்படுத்தப்படுவதை நிறுத்தவும் இயலாது.
உதயகுமார் சிந்திப்பாரா?
இப்போதைய தேவை .போராட்டத்தின் பின்னணியில் அந்நிய சக்திகள் இல்லை என நிருபிப்பதுதான்.
ஊடகங்கள் மீதான போராட்டங்கள் அல்ல.ஆதரித்து எழுதுவதுபோல் அதை எதிர்த்தும் ஊடகங்கள் எழுதத்தான் செய்யும்.முதல்வர் ஜெ யை பற்றி நக்கீரன் எழுதி விட்டு[அது உண்மையா?பொய்யா என்பது தேவை இல்லை இங்கு]நீதிமன்ற ஆணைபடி அட்டை முதல் சுவரொட்டி வரை மன்னிப்பு =வருத்தம் வெளியிடவில்லையா?


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?