வேலை தேவை


எதிர்வரும் பத்தாண்டுகளில் கிட்டத்தட்ட600 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உலக நாடுகள் இருப்பதாக சர்வதேச தொழிலாளர் ஆணையம் தெரிவித்துள்ளது.
மூன்றில் ஒரு தொழிலாளி அல்லது உலக மக்கள் தொகையில் 110 கோடி வேலையில்லாமல் அல்லது வேலையிருந்தும் வறுமையில் வாடுவதாக தொழிலாளர் ஆணையத்தின் இயக்குனர் ஜூவான் சொமாவியா தெரிவித்துள்ளார். ”வேலைவாய்ப்பினை உருவாக்குவதுதான் தற்போது உலக நாடுகளின் முன்னுள்ள முக்கிய வேலையாகும்” என அவர் கூறியுள்ளார். இதனை அரசாங்கங்கள் எடுக்கும் தீவிரகொள்கைமூலம்தான் நடைமுறைப்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டார்.
யூரோ மற்றும்டாலர் கடன் பிரச்னைகள் விரைவில் சுமுகமாகத் தீர்க்கப்பட்டாலும் 2016 ஆம் ஆண்டு வரை உலகத்தில் வேலைவாய்ப்பின்மை மதிப்பீடு 6 சதவிகிதமாக இருக்கும். 2011 ஆம் ஆண்டு 15 முதல் 24 வயது வரையுள்ள ஏறத்தாழ 75 மில்லியன் இளைஞர்கள் வேலைவாய்ப்பில்லாமல் இருந்ததாக சர்வதேச தொழிலாளர் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
 இதற்கு இப்போதே வளரும் நாடுகள் முதல் வளர்ந்து விட்டதாகக் கருதப்படும் நாடுகள் வரை நடவடிக்கை எடுத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இல்லையேனில் வேலை வாய்பின்மையும்,வறுமையும் உலகநாடுகளில் முந்தைய 70 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைக்கு சென்று உழைக்கும் மக்கள் போராட்டமாக வடிவெடுத்து கம்யூனிச பூதம் வந்துவிட வாய்ப்பை தந்து விடும்.அமெரிக்கா உட்பட்ட மேலை நாடுகள் இதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
பொருள்தான் இவ்வுலகின் ஆதாரமாக உள்ளது.அதனால்தான் அது பொருளாதாரமாகியுள்ளது.
வேலையின்மையும்-பணமின்மையும் ஒரு வளர்ந்த நாடும்,உலகின் பலநாடுகளின் தலைவிதியை நிர்ணயம் செய்யும் அமெரிக்க நாட்டின் வளரும் தலைமுறையினரை என்ன பாடு படுத்திவருகிறது என்பதை கீழுள்ள செய்தி மூலம் பார்த்துக்கொள்வோம்.
மனநோயாளிகளாக 4.5 கோடி அமெரிக்கர்கள்!
கடந்த ஆண்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அமெரிக்கர்களில் 4 கோடியே 59 லட்சம் பேர் மனரீதியான பிரச்சனையை எதிர்கொண்டிருக்கிறார்கள். இது அதிகாரபூர்வமான தகவலாகும். போதை மருந்துப்பழக்கம் மற்றும் சுகாதாரத்துறை பற்றிய தேசிய ஆய்வை அமெரிக்க அரசு நடத்தியது. இந்த ஆய்வின் முடிவாகத்தான் அதிர்ச்சிகரமான புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன. “சாம்ஹ்சா” அமைப்புதான் இந்த ஆய்வை நடத்தியது. 18 வயது முதல் 25 வயது வரையிலானவர்களிடம், 50 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் ஏற்பட்டதைவிட இரண்டு மடங்கு அதிகமான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. 18 வயது முதல் 25 வயது வரையிலான இளைஞர்களில் 29.9 விழுக்காட்டினர் மனரீதியான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டனர். 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் 14.3 விழுக்காட்டினர் பாதிக்கப்பட்டனர்.

வளர்ந்த நாடுகளில் இந்தப் பிரச்சனைகள் பெரும் அளவில் இல்லை என்று இதற்கு முந்தைய ஆய்வுகள் கூறிவந்தன. மற்ற எந்த உடல்நலப் பாதிப்பையும்விட, மனரீதியான நோய்கள்தான் வளரும் நாடுகளில் அதிகமாக உள்ளன என்பது உலக சுகாதாரக்கழகத்தின் கருத்தாகும். ஆனால் கடந்த பல ஆண்டுகளாகவே அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வளர்ந்த நாடுகளில் மனரீதியான பாதிப்புகள் இருந்தன. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, வேலையிழப்பு மற்றும் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றால் பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த நோய் அமெரிக்கப் பொருளாதாரத்தின் மீது கூடுதல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவர்களின் சிகிச்சைக்காக அமெரிக்க அரசால் 2002 ஆம் ஆண்டில் மட்டும் 15 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 67 ஆயிரத்து 500 பேர்(12 வயதுக்கு மேற்பட்டவர்கள்) மனரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள்.

2010 ஆம் ஆண்டுதான் முழுமையான ஆய்வை சாம்ஹ்சா நடத்தியது. அதன்படி, 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஆண்களைவிட, பெண்களே அதிகமான அளவு மனரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். மனரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களில் போதை மருந்திற்கு மிக அதிகமாக அடிமையாகி இருப்பர்களின் எண்ணிக்கை 20 விழுக்காட்டைத் தொடுகிறது. பதின்பருவத்தைத் தாண்டிய அமெரிக்கர்களில் ஐந்து விழுக்காட்டினர், அதாவது 1 கோடியே 14 லட்சம் பேர் கடுமையான மனநோயால் அவதிக்குள்ளாகினர். போதை மருந்து பயன்பாடு பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் பெரிய அளவில் நடந்தாலும், அதன் பயன்பாடுகள் இளைஞர்கள் மத்தியில் குறைந்தபாடில்லை.

இந்தப் புள்ளிவிபரங்கள் பற்றிக் கருத்து தெரிவித்த சாம்ஹ்சாவின் நிர்வாகி பமேலா ஹைடு, நமக்குக் கிடைத்துள்ள புள்ளிவிபரங்கள் போதை மருந்து பயன்படுத்துபவர்களுக்கு சிகிச்சை தர வேண்டியதன் முக்கியத்துவத்தைக் கூறுகிறது. மனநோய் என்பது வெற்றிகரமாக தீர்க்கக் கூடியதுதான். மக்கள் அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்கள். மனநோய்க்கான சிகிச்சை சேவை அதிகப்படுத்தப்பட்டால் மக்கள் கூடுதல் பலனடைய வாய்ப்பிருக்கிறது. இதுவொன்றும் தனிமையான நோய் அல்ல. இதய நோய், நீரிழிவு, உடல் பருமன் மற்றும் புற்றுநோய் ஆகியவற்றோடு சேர்ந்தே இருக்க வாய்ப்புள்ளது. நடத்தை தொடர்பான பிரச்சனைகளும் இதற்குக் காரணமாக உள்ளது. தூக்கமின்மை, அதிகமாக மது அருந்துதல், புகைபிடித்தல், உடல்ரீதியான செயல்பாடின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளும் கூடவே உள்ளன. மனநோய்க்கு சிகிச்சை அளித்தால், மற்ற பிரச்சனைகளுக்கும் சேர்ந்தே சிகிச்சை கிடைக்கிறது என்கிறார்.

அமெரிக்காவில் உள்ள சிகிச்சை நிலைமையும் அவ்வளவு நன்றாக இல்லை. பாதிக்கப்பட்டவர்களில் பத்தில் நான்குபேருக்குதான் 2010 ஆம் ஆண்டில் மனநல மருத்துவ சேவை கிடைத்திருக்கிறது. கடுமையான மனநோயால் தாக்கப்பட்டவர்களின் நிலை ஓரளவுக்குப் பரவாயில்லை. அவர்களில் 60 விழுக்காட்டினருக்கு மருத்துவ சேவை கிடைத்திருந்தது.

பாதிப்புகள் வேறு சில பிரச்சனைகளையும் ஏற்படுத்தியது. 87 லட்சம் பேர் தற்கொலைதான் தீர்வு என்று அந்த முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். இந்தப் பிரச்சனைகளோடு, ஆபத்தான அம்சமாக மற்றொன்றையும் இந்த அறிக்கை சித்தரிக்கிறது. 12 வயது முதல் 17 வயது வரையிலானவர்களில் 19 லட்சம் பேர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதுதான் அந்த ஆபத்தாகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?