இந்தியாவும்-இரு நாடுகளும்,

இந்தியா பற்றிய இரு நாடுகள் உறவை பார்த்தால் கொஞ்சம் கோபம்தான் வருகிறது.
நமது நாட்டின் எல்லைக்குள்ளேயே மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய தமிழக மீனவர்களை எந்த காரணமும் இல்லாமல் வந்தேறிய இத்தாலிய கப்பலில் இருந்தவர்கள் சுட்டுத்தள்ளியதில் இரு மீனவர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.காரணம் கடற் கொள்ளையர்கள் என நினைத்தார்களாம்.
இவர்கள் என்ன அவர்கள் கப்பலை மறித்தார்களா? இல்லையே அதுவும் பழையப்படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.இருவரை தவிர மற்றவர்கள் தூங்கிக்கொண்டிருந்துள்ளனர்.
துப்பாக்கியால் சுடவேண்டிய அவசியம் எதுவும் இல்லாமலேயே.இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சுடுவது போல் சுட்டுத்தள்ளியுள்ளனர்.
இந்த இத்தாலியினர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது இந்திய அரசின் இப்போதைய முக்கிய கடமையாகும்.இரு கொலை காரர்களையும் காப்பாற்ற இத்தாலி தூதர்,அமைச்சர் என்று படை எடுத்து வந்துள்ளனர்.
காவல் அலுவலர்கள் இரு கொலைகாரர்களை ஒப்படைக்க கப்பல் தலைவருடன் பேச்சுவார்த்தை 20 மணி நேரம் நடத்தினார்களாம்.இதில் பேச்சு வார்த்தை நடத்த என்ன இருக்கிறது,கொலைகாரர்களை ஒப்படைக்க மறுத்தால் அக்கப்பல் தலைவரையும் கைது செய்ய வேண்டியதுதானே.எல்லா நாடுகளிலும் கொலைகாரர்களுக்கு சிறையும் தண்டனையும்தானே.அக்கொலைகாரர்களைக்காப்பாற்ற வந்த
 இத்தாலிய வெளியுறவு துறை அமைச்சர் கியுலியோ டெர்சி கூறும்போது, "இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இக்கொலை தொடர்பாக பல்வேறு முரண்பாடான கருத்துக்கள் நிலவிவருகிறது.
இந்த பிரச்சினையில் விரைவில் சுமூகமான முடிவு காண முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், இந்திய சட்டத்திலிருந்து இரண்டு வீரர்களுக்கும் விதிவிலக்கு உள்ளது. ஏனெனில் இத்தாலி நாட்டு கொடியுடன் சிங்கப்பூரில் இருந்து எகிப்துக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது.
இந்த இரு வீரர்களும் கடந்த வருடம் முதல் இந்தியப் பெருங்கடலில் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களுக்காக பணியில் அமர்த்தப்பட்டனர்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் இன்று இந்திய நீதிபதியின் முன்னிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர் என்று கூறினார்.தேவையின்றி மீனவர்களை சுட்டுக்கொன்ற கொலைகாரர்கள் அமைச்சருக்கு இரு வீரர்களாம்?.

இந்திய அரசு இக்கொலைகாரர்களுக்கு நம் சட்டப்படி தண்டனை வழங்கிட வேண்டும்.[நமது சட்டப்படி தான் அவர்கள் சுதந்திரமாகத்திரிய வாய்ப்புகள் உண்டு.போபால்,போபர்ஸ் குற்றவாளிகள் போல் தப்பி செல்லவும் முடியும்]
துபாயில் தனது எதிரியை கொன்ற இந்தியருக்கு அந்நாடு தனது சட்டப்படி தலை எடுத்தது,மலேசியா,சிங்கப்பூரில் சிக்கிய இந்தியர்களுக்கு நம் அரசைக்கேட்டா தண்டனைகள் வழங்குகிறார்கள்.அது போன்ற நிலைய இந்திய அரசு எடுக்க வேண்டும்.இல்லை எனில் இந்தியனுக்கு வெளி நாடுகளில் மட்டுமே இல்லாமலிருந்த பாதுகாப்பு சொந்த நாட்டிலும் இல்லாமல் போய்விடும்.

அடுத்து உலக சண்டியர் அமெரிக்கா இந்திய அரசினை கடுமையாக விமர்சித்துள்ளது.கிட்டத்தட்ட நம்பிக்கைத் துரோகம் அளவிற்கு.
காரணம் அவர்கள் சண்டையிட்டுள்ள ஈரான் அரசுடன் நாம் சேத்து விட்டிருப்பதற்காகத்தான்.நமக்கு தேவைதடையற்ற பெட்ரோல் அதை தருவது ,அதுவும் மற்றைய பெட்ரோல் வள நாடுகளைவிட குறைவான விலையில் தருவது ஈரான்.எரிவாயு தேவைகளயும் அது பூர்த்தி செய்ய காத்திருக்கிறது.
ஆனால் இப்போதைய அமெரிக்கா -ஈரான் சண்டையில் இந்தியா மூச்சு விடாமல் இருப்பதும்,பெட்ரோல் தொடர்ந்து ஈரானில் வாங்குவதும்

ஈரானுடன் இந்தியா உறவு வைத்துக் கொள்வது எங்கள் முகத்தில் அறைவது போல் இருக்கிறது .என்று அமெரிக்கா அரசின் நிக்கோலஸ் பர்ன்ஸ் கூறி வருத்தப்பட்டுள்ளார்..
அமெரிக்கா, தன் தோழமை நாடுகளுக்கு ஈரானுடன் உறவு வைத்துக் கொள்ளாதீர்கள் என்று எச்சரிக்கை விடுத்து வந்தது.ஈரானை தனிமைப்படுத்த வேண்டும் என்று உலகநாடுகள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், இந்தியாவின் முடிவு கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.
இவர்கள் சண்டை என்றால் நானும் சண்டை,இவர்கள் சேத்து என்றால் நானும் சேத்து என்று கூற இந்தியா என்ன மூணாம் வகுப்பு பையனா?
அமெரிக்கா இந்தியாவுக்கு இதுவரை செய்த நன்மை என்ன?தந்த ஆதரவு என்ன?பாகிஸ்தான் போரில் [வங்கதேசம்] பாகிஸ்தானுக்கு ஆதரவாக கப்பற்படையை இந்துமாக்கடலில் நிறுத்தியதுதானே அமெரிக்கா.அன்று ச்சோவியத் ரஷ்யா இந்தியாவுக்கு ஆதரவாக தனது போர்க்கப்பலைக்கொண்டு வந்து நிறுத்தியதால் அமெரிக்கா பின் வாங்கியது.
இன்றுவரை பாகிஸ்தான் அணு உற்பத்திக்கு ஆலோசனைகள் வழங்குவது அமெரிக்காதான்.போர் தளவாடங்கள்வாங்க ஒவ்வோரு பட்ஜெட்டிலும் பாகிஸ்தானுக்கு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது அமெரிக்கா.
அவை போகட்டும் இப்போது நாம் ஈரானுடன் தொடர்பைத்துண்டித்துக்கொண்டால் நமது பெட்ரோலியத்தேவையை அமெரிக்கா பூரத்தி செய்யுமா?
அமெரிக்காவில் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பைக்கொடுக்கக்கூடது என முடிவெடுத்து செயல்படுத்திவரும் வேளையில் நாம் எந்த ஆதரவைத்தரமுடியும்?
சரி.இப்போதைய ஈரான் ஒதுக்கி வைத்தலுக்கு என்ன அவசியம் அமெரிக்காவுக்கு வந்தது.ஈரான் பெட்ரோல் வளம் மட்டும்தானெ காரணம்.
ஈராக்,சூடான்,லிபியா,சவுதி அரேபியா போன்று தனது நட்பு[அடிமை]நாடாக இல்லை என்பதுதானே.அதைவிட்டு வேறு ஒரு காரணம் கூட கூற அமெரிக்காவால் முடியுமா?
இந்தியாவின் மன்மோகன் சிங் அமெரிக்காவின் தீவிர ஆதரவாளர்.அவரே இப்போது இப்படி ஒரு முடிவை எடுத்து நடுநிலையாக உள்ளார்.அவர் எப்போது அமெரிக்காபக்கம் சாய்வார் என்றும் தெரியாது.
முன்பு அமெரிக்கா ஆதரவாக ஈரான் தர இருக்கும் இயற்கை எரிவாயு குழாய் அமைப்பதை கை விட்டவராயிற்றே அவர்?. 
உலக சண்டியர் அமெரிக்காவின் முகத்திலேயே அறையும் வாய்ப்பு எளிதில் கிடைக்காது.இந்தியா இத்தருணத்தை ந்ன்கு பயன்படுத்தி சரியான அறை விட வேண்டும்.கோட்டை விட கூடாது.
_________________________________________________________________



________________________________________________________________________________
மியான்மீர் நாட்டில் கஞ்சா வளர்ப்பை அழிக்கும் வீரர்கள்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
குளிருக்கு இதம் .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?