இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

ஞாயிறு, 18 மார்ச், 2012

வாக்கு "வங்கி"?


சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. வைகோவில் கலிங்கப்பட்டி பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியை பார்வையிட வந்த தேர்தல் பார்வையாளர் (பொது) ரமேஷ்குமார்சுதர்ன்சூரிடமம், அ.தி.மு.க.வினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக புகார் வந்தும் மெத்தனபோக்கினை கைபிடித்ததாக புகார் கூறப்படுகி‌றதே எனகேட்கப்பட்டது. 

இதற்கு அவர்பதில் கூறும் போது புகார் குறித்து சம்பவ இடத்தில் சென்று விசாரித்த போது அங்கு ஒருத்தரும் பணம் கொடுவில்லைஎனினும் புகாரில் உண்மையிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.[இவர் வரும் வரை அது யாருப்பா பணம் கொடுக்காமல் சென்றது.?இவர் வரும் வரை பணம் கொடுத்துக்கொண்டிருந்தால்தானே வாக்கு கிடைக்கும்?]
இன்றைய நிலையில் பணக்கார கோவில் சங்கரன்கோவில்தானே?
கையும் களவுமாக பணம் கொடுத்தஅ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை வைகோ தம்பி மற்றும் கலிங்கப்பட்டி மக்கள் பிடித்துக்காவல் துறையிடம் ஒப்படைத்தும் காவல்துறையினர் அவர்களை விட்டு விட்டு வைகோவை படையுடன் போய் விசாரித்த போதே இந்த தேர்தல் லட்சணம் புரிந்து விட்டது.
தேர்தல் ஆணையம் முந்தைய தேர்தலில் இருந்தே அதிமுகவின் கிளை அமைப்பு போல் செயல்பட்டது.இப்போது ஆளுங்கட்சி வேறு பிரவீண்குமார் செயல் பாடு எப்படி இருக்கும்.
பணம் பட்டுவாடா செய்வார் -தேர்தல் விதி முறைகளை மீறுவார் என்று மு.க.அழகிரி மத்திய அமைச்சர் என்றும் கூட பாராமல் வீட்டிலேயே சிறைவைத்த தேர்தல் ஆணையம் இன்று 32 அமைச்சர்கள் உட்பட் ஒட்டு மொத்த அதிமுக வே ஓட்டுக்காக சங்கரன் கோவிலில் முகாமிட்டு மாதக்கணக்கில் தேர்தல் பணி[?] பார்க்கையில் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.அவர்களை கண்டு கொள்ள வில்லை என்பதே தேர்தல் ஆணையத்தின் நடுநிலை பற்றி மக்கள் தெரிந்து கொண்டார்கள்.

கருணாநிதி பொதுக்கூட்ட மேடையை முதல்வர் பயணத்துக்கு இடைஞ்சல் என அகற்றக்கோரிய தேர்தல் அலுவலர்கள் ஜெயலலிதா காரில் இருந்தே பேசுவதறகாக சாலையை மறிந்த்து தேவையே இல்லாமல் நான்கு இடங்களில் மேடை போட்டதை பார்வையாளர் அகற்றக்கூறியும் அகற்றவில்லையே.இப்போது தேர்தல் பிரசாரத்தில் அவர் அதிமுக தலைவர் தான் முதல்வர் அல்ல.அந்த நடைமுறைகூட இல்லாமல் போய்விட்டதே.
ஆனால் சென்ற தேர்தலின் போது இப்போது நான் முதல்வரா இல்லையா ?என்று கருணாநிதி கூறும் அளவு அரசு நடைமுறைகளில் கூட தேர்தல் ஆணையம் தலையிட்டு குட்டையை குளப்பியதே.ஆனால் இன்று சங்கரன் கோவிலில் பணம் பிடிப்பட்டதெல்லாம் திமுக்,மதிமுக,தேமுதிக கட்சியினரிடம் இருந்துதானே?
அதிமுக வினர் காபி செலவுக்கு கூட பணம் வைத்திருக்க வில்லையா?  
போலீஸ் அதிகாரி கூறுகையில், இதுவரை 70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு 158 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றுள்ளார்.
அதை கட்சிவாறு கூறலாமே?

எப்படியோ அதிமுகவுக்கு இப்போது வெற்றி பெற்றே ஆக வேண்டும் அது அதன் கவுரவ பிரச்சின.விஜய்காந்திடம் போட்ட சவாலுக்காக மட்டுமல்ல.இதில் அவர்களி ஆட்சியின் லட்சணத்தை எடை போடும் தேர்தலுமாகும்.
அவர்களுக்கு வெற்றி மீது என்ன கவலை.அவர்களுக்கு பாதுகாப்பாகத்தான் தேர்தல் அலுவலர் பிரவீண்குமார் தலைமையில் ஒரு ஆணையமே இருக்கிறதே.
இல்லை என்றால் இலவச மிக்சி,கிரைண்டர் உட்பட அனைத்து விநியோகமும் கச்சிதமாக வாக்கு வங்கியை குறி வைத்து நடந்தும்- கையும் களவுமாக பலர் பிடிபட்டும் பார்வையாளர் பார்வையற்றவர் போல் பண பட்டுவாட நடக்கவே இல்லை என்பாரா? 
________________________________________________________________________
ஐன்ஸ்டீன் தப்பினார்,,,?
_______________________நியூட்ரினோக்கள் எனப்படும் அடிப்படைத்துகள்களின் வேகம் குறித்து மீது நடத்தப்பட்ட முதல் கட்ட சோதனையில் அது ஒளியை விட அதிக வேகத்தில் செல்வதாகக் கூறப்பட்டது.இதன் மூளம் ஐன்ஸ்டைனின் கோட்பாடே தப்பாகி விட்டதாகவும் கூறப்பட்டது.ஆனால் மீள்சோதனையில்அவை ஒளியை விட வேகமாகச் செல்லவில்லை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2011 ஆண்டு செப்டம்பரில் நடத்தப்பட்ட சோதனை முடிவுகள் நியூட்ரினோக்கள் ஒளியை மிஞ்சிய வேகத்தில் செல்வதாகக் கூறப்பட்டது. இத்தாலியில் உள்ள கிரா சாசோ என்ற நிலத்தடி ஆய்வுகூடத்தின் ஒப்பேரா பிரிவு இந்த ஆய்வுகளை மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவுகளுக்கு பல எதிர்ப்புகளும் எழுந்தன. இது மெய்யானால் ஐன்ஸ்டைனின் சார்புக் கோட்பாட்டைப் பற்றிய விளக்கம் வேறுபடக்கூடும். சார்புக் கோட்பாட்டின் படி ஒளியின் வேகமே இந்த அண்டத்தில் இருக்கக்கூடிய மிகக்கூடிய வேகமாகும்.

அதே ஆய்வுகூடத்தில் இக்காரசு என்ற வேறொரு பிரிவினரால் தற்போது மேற்கொள்ளப்பட்ட மீள்பரிசோதனைகள் நியூட்ரினோக்கள் ஒளியின் வேகத்திலேயே செல்லுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது பற்றிய முடிவுகள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன.
செனீவாவில் அமைத்துள்ள செர்ன் எனப்படும் அணு ஆய்வுக்கான ஐரோப்பிய ஆய்வுகூடத் வேகமுடுக்கியில் இருந்து 730 கிமீ தூரத்திற்கு செலுத்தப்பட்ட நியூட்ரினோக்களைக் கண்டறிய 600 தொன்கள் (430,000 லீட்டர்கள்) திரவ ஆர்கன் இக்காரசு குழுவினரின் இந்தப் பரிசோதனைகளில் பயன்படுத்தப்பட்டது.
"பாடசாலைகளில் படித்த ஒளியின் வேகத்திலேயே நாம் நிற்கிறோம்," என இக்காரசு ஆய்வுக்குழுவின் பேச்சாளர் சாண்ட்ரோ செண்ட்ரோ தெரிவித்தார். இந்த முடிவுகள் எமக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை என அவர் கூறினார்.
நியூட்ரினோக்களின் வேகம் குறித்த சர்ச்சைகளுக்கு முடிவு கட்டும் முகமாக மேலும் சிலசோதனைகள் நடத்த தீர்மானம் செய்யபட்டுள்ளது
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
1949 -ல் உருவாக்கப்பட்ட பறக்கும் கார்.16000 1டி உயரத்தில் மணிக்கு 60 கி.மீ.வேகத்தில் பறக்கும் திறன் உடைய இக்கார்800000 பவுன்ட் விலையாம்.