முக்கிய ஆய்வு,,,


_____ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம்.?
ஒரு ஆய்வு[?]
இந்நாள் எவ்வாறு எப்போது ஆரம்பமானது என்பதில் தெளிவான வரலாறு இல்லாதபோதும் பிரான்ஸ் நாட்டிலேயே இது முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது எனத் தெரிகிறது.

16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல் 1 இலேயே புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் 1562ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13வது கிரகரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது.
எனினும் இந்தப் "புதிய" புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் எடுத்தது. பிரான்ஸ் 1852ம் ஆண்டிலும், ஸ்கொட்லாந்து 1660ம்ஆண்டிலும், ஜேர்மனி, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகள் 1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன.
புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் தேதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்ரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்ரல் முட்டாள்கள் என்று இவர்கள் அழைத்தார்கள். இதலிருந்து ஏப்ரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

எனினும் 1582ம் ஆண்டுக்கு முன்னரேயே 1508ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு. அதேபோல் டச்சு மொழியிலும் 1539ம் ஆண்டுக் காலப்பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது.
1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்ரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.

ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் ஒவ்வொரு நாள் இருப்பது போல, ஏப்ரல் முதல் நாள் முட்டாள்கள் தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் ஒருவரையொருவர் எந்த விதத்திலாவது ஏமாற்றுவதில் குறியாக இருப்பார்கள். அவர்கள் கூறும் தகவல்களை உண்மை என்று நாம் நம்பிவிடுகிறோம். ஆனால் அத் தகவல்கள் உண்மையல்ல என்று பின்னால் தெரிய வரும்போது முட்டாள்களாகி விடுகிறோம்.
அப்போதுதான் தோன்றும்.... ஓ.... இன்றைக்கு ஏப்ரல் 1-ம் தேதியல்லவா? நம்மை முட்டாளாக்கிவிட்டார்களே என்று எண்ணத் தோன்றும். மனதுக்குள் ஒரு புன்சிரிப்பு தோன்றி மறையும்.
இந்த ஏப்ரல் முட்டாள்கள் தினம் ஏற்பட்ட விதத்தைப் பார்ப்போம்.
 

முட்டாள்களுக்காக ஒரு தினத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற யோசனையை முதன் முதலில் வெளியிட்டவர் பாஸ்வெல் என்பவர் ஆவார்.
சூரிய வழிபாட்டிற்கும் இந்த விழாக் கொண்டாட்டத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக பழைய நூல்களிலிருந்து தெரிய வருகிறது.
ஆதிக் குடிகளான ùஸல்ட் இன மக்கள் வியூ என்ற சூரியக் கடவுளைக் குறித்து இதை வசந்த விழாவாகக் கொண்டாடினர். இந்த விழாவின் முக்கிய அம்சம் ஒருவரையொருவர் ஏமாற்றி கிண்டல் செய்து மகிழ்வதாகும்.
இப்படி முட்டாள்களாக்கப்படுபவர்களை பிரான்ஸ் நாட்டில் ஏப்ரல் ஃபிஷ் என்று அழைக்கின்றனர். ஏனென்றால் அன்று காகிதத்தால் செய்த மீன் வடிவம் ஒன்றை ஒருவரின் முதுகில் அவருக்குத் தெரியாமல் ஒட்டி வைத்துவிட்டு அவர்களை ஏப்ரல் ஃபிஷ் என்று கூவிக் கூவி அழைப்பார்கள்.
முதலில் ஏப்ரல் முதல் நாள் முழுவதும் இந்த விழா கொண்டாடப்பட்டது. மாலை வரை அடுத்தவர்களை முட்டாள்களாக்கிக் கொண்டிருந்தனர்.
பின்னர் நண்பகல் வரைதான் இந்த வேடிக்கைகளைச் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தனர். 

அதன்
பிறகு முட்டாளாக்க முயல்பவர்கள் முட்டாள்களாகக் கருதப்பட்டனர்.
இப்படியொரு பழக்கம் கனடா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சைப்ரஸ் மற்றும் தென் ஆப்ரிக்காவில் இன்றும் தொடர்கின்றது.
கிழக்கு நாடுகளில் இந்த முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுவது வழக்கில் இல்லை. ஆனாலும் மேலைநாட்டு மக்களைப் பார்த்து இப்போது நாமும் இதைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
ஏப்ரல் முதல் நாளை அரசாங்க விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று பல நாடுகளில் விவாதங்கள் எல்லாம் நடைபெற்றன. முடிவில் விடுமுறை தேவையில்லை என்று முடிவு செய்யப்பட்டது.
_________________________________________________
பணக்கார நகரம்,
இந்தியாவில் பணக்கார நகரங்களின் வரிசையில் கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூர் முதலிடம் வகிக்கிறது. மும்பை நகரம் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதாக நுகர்வோர் விலை குறியீடு குறித்த ஆய்வின் அடிப்படையில், இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நுகர்வோர் விலை குறியீடு என்பது உணவு, உடை, இருப்பிடம், போக்குவரத்து செலவு அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. 
இந்தக் கணக்கெடுப்பில் தலைநகர் டில்லி நகரம் மிகக் குறைந்த மதிப்பைக் கொண்டுள்ளது.
பெங்களூர் நகரத்தில் சமையல் எரிவாயு உருளை ஒன்றி்ன் விலை 415 ரூபா, கொல்கத்தாவில் 404, மும்பையில் 402, புதுடெல்லியி்ல் 399, சென்னையில் 393.50 என்று உள்ளது.
அடிப்படை தேவைகளுக்கான பொருட்களின் விலை மாதா,மாதம் உயர்வது  பெங்களூரைப் பொறுத்தவரைவழக்கமாகிவிட்டது.அதற்கு கை நிறைய சம்பளம் பெறும் கணினி நிறுவனங்கள் பெங்களூரில் அதிகமாக உள்ளது முக்கிய காரணமாக உள்ளது.
மும்பை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் ஊதியத்தில் சுமார் 40 சதவீத அளவு வரை வீட்டு வாடகைக்காகச் செலவிடுவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
___________________________________________________________________________
உலகில் நம்முடன் வசித்து வந்த சிட்டுக்குருவி மட்டுமில்லை.கீழே வரும்அழகிய பறவையினங்களும் உலகை விட்டு விரைவாக மறைந்து வருகின்றன.இப்பறவை இனங்கள் 
இவ்வாறு மறைய மற்றொரு உயிரினமான மனிதன் தான் காரணமாக இருக்கிறான்.





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?