வறுமைக்கோட்டின் கீழ் ராணுவம்,?


"போர் ஏற்பட்டால்,இந்திய ராணுவத்தில் கையிருப்பில் உள்ள குண்டுகள் டாங்கிப் படைகளுக்கு நான்கு நாட்கள் அளவுக்கே போதுமானது" என்று வந்த கடித செய்திகளை மறுத்த பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி முன்னை விட இந்தியாஈப்போது பலமான நிலையில் இருப்பதாகக் கூறியுள்ளார்.

படையினரின் தேவைக்கும் கிடைக்கும் பொருட்களுக்கும்இடையே எப்போதும் கொஞ்சம் இடைவெளி இருக்கத்தான் செய்யும்என்றும அதனால் எப்போதும் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இராணுவத் தளபதி வி கே சிங் எழுதிய கடித்ததில், வெடி குண்டுகள் உள்ளிட்ட பல முக்கியமான விடயங்களில் குறைபாடுகள் காணப்படுவதாக கூறியிருந்தார். குறிப்பாக விமான எதிர்ப்பு கட்டமைப்பு மிகவும் பழமையடைந்து விட்டதாக இராணுவத் தளபதி கவலை வெளியிட்டிருந்தார்.
இந்திய மக்கள் மட்டுமல்ல இந்திய ராணுவமும் வறுமைக் கோட்டுக்கு கீழே வந்து விட்டதோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டு விட்டது.

ரகசியமான இக்கடிதம் எப்படி வெளியானது ,அது ஊடகங்களில் எப்படி வெளியானது. யார் இந்த கடிதத்தை கசியவிட்டது என்று விசாரணை நடந்து வருகிறது.

________________________________________________________________________________


ஒரு மகிழ்ச்சி
_______________
எனது இனிய நண்பர்-முத்துக்கமலம் இணைய இதழ் ஆசிரியர்-எழுத்தாளர் 
அன்பு தேனி மு.சுப்பிரமணி எழுதிய "தமிழ் விக்கி பீடியா"நூல் தமிழக அரசின் விருதுக்கு தேர்வாகியுள்ளது.

அவரின் கணினி சார் எழுத்தார்வத்திற்கு இப்பரிசு மேலும் தூண்டுகோலாக இருக்கும்.
மேன்மேலும் அவர் பரிசுகள் பெற வேண்டும் என்று வழக்கமான வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


_______________________________________________________________________________
ஒருகைதியின் டைரி முக நூல்
_____________________



மத்திய பிரதேசத்தில், சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதி பேஸ்புக் வலைதளத்தில் இணைந்து, அதன் வாயிலாக, தகவல்களை பரிமாறிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 
இதுபற்றி விசாரணை நடந்துவருகிறடது.
மத்திய பிரதேசம், குவாலியரைச் சேர்ந்தவர் துர்கேஷ் பதோரியா,33. மனைவியை கொலை செய்த வழக்கில், இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளாக, குவாலியர் மத்திய சிறையில் இருக்கிறார்.
இந்நிலையில், பேஸ்புக் வலைதளத்தில் இவர் இணைந்துள்ளதாகவும், அதன் வாயிலாக, தகவல்களை பரிமாறிக் கொண்டு, புதிய நண்பர்களை பெற்றுள்ளதாகவும், தகவல் வெளியானது.

கடந்த 7ம் தேதி, பேஸ்புக் மூலமாக, தகவல்களை பரிமாறிக் கொண்டதாகவும், புகார் எழுந்தது. இதுகுறித்து, சிறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.அதில், துர்கேஷ், பேஸ்புக் வலைதளத்தில் இணைந்து, முறையாக தகவல்களை பரிமாறிக் கொண்டதற்கான தடயங்கள் இருந்தன. சிறையில் இருக்கும் ஒருவருக்கு, கம்ப்யூட்டர் வசதி எப்படி கிடைத்தது, சிறையில் இருக்கும்போது, பேஸ்புக் மூலமாக, அவர் தகவல்களை பரிமாறிக் கொண்டது எப்படி என்பது, சிறை அதிகாரிகளுக்கு பெரும் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பேஸ்புக்கில், இவரைப் பற்றிய விவரங்களும் இடம் பெற்றுள்ளன. அதில், தன்னை ஐ.ஐ.டி., முன்னாள் மாணவர் என்று குறிப்பிட்டுள்ளார்.பரோலில் செல்ல அனுமதிஇதுகுறித்து, சிறை அதிகாரிகள் கூறுகையில், "பேஸ்புக்கில், கடந்த 2010ல் இவர், தன் தளத்தை உருவாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த நேரத்தில், அவர் சிறையில் இருந்தார். இது எப்படி சாத்தியமானது எனத் தெரியவில்லை. ஆயுள் தண்டனை விதிக்கப்படும் கைதிகள், சிறையில் இரண்டு ஆண்டுகள் நன்றாக நடந்து கொண்டால், அவர்களை பரோலில் அனுமதிப்பது வழக்கம்.
இதுபோல், பரோலில் சென்ற காலத்தில், கம்ப்யூட்டர் பயன்படுத்தினாரா என்பது குறித்து, விசாரணைநடந்து வருகிறது இருந்தாலும் அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர். அதிகாரிகள் பயன்பாட்டுக்காக, சிறையில் உள்ள கம்ப்யூட்டர்களை இயக்குவதற்கு, ஊழியர்கள் பற்றாக்குறை நிலவிய நேரத்தில், சிறை அதிகாரிகள், துர்கேஷ் பதோரியாவின் உதவியை நாடியிருக்கலாம் என்றும், அதை, அவர் தனக்கு சாதமாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு வருத்தம்
________________

உழைக்கும் மக்களின் பிரச்சினைகளுக்கு வாழ் நாள் எல்லாம் குரல் கொடுத்து ,அவர்களின் நல்வாழ்வுக்கு உழைத்த தோழர் "வரதராஜன்" மரணமான செய்தி மிக வருத்ததை தந்தது.ஒரு
ஒரு லட்சியவாதியின் மரணம் மிகக் கொடுமையானது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?