பன்றி காய்ச்சல்,,,,,,



 காய்ச்சல், தலைவலி இருந்தால் வழக்கமாக பாராசிட்டாமல் மாத்திரை ஒன்றை சாப்பிட்டு படுத்துவிடுவார்கள்.ஆனால் இப்போது அப்படி அதில் குணமாகாமல் காய்ச்சல் இருந்துகொண்டே இருந்தால் கண்டிப்பாக டாக்டரை பார்க்க வேண்டும்.காரணம் பன்றிக்காய்ச்சல்.
டாக்டர் உங்களுக்கு பன்றி காய்ச்சலாக இருக்குமோ என்றுசந்தேகப்பட்டால் அது பன்றிகளுக்குத்தானே வரும் என்று கடிக்காமல் உடனே சளி மாதிரி எடுத்து ஆர்.டி.-பிசிஆர் என்ற பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் பன்றிக் காய்ச்சல் நோய் உள்ளதா இல்லையா என்பதை அறிந்து அதற்கேற்ப மருந்துகள் உட் கொள்ள முடியும்.
பன்றி காய்ச்சல் முற்றிய நிலை உயிரை இழக்கும் படி செய்து விடும்.எனவே சளியை ஆய்வு செய்வது முக்கியம்.


கிண்டியில் உள்ள கிங் நிறுவனம் மற்றும் சென்னை, மதுரை, கோவை, சேலம், நெல்லை மருத்துக் கல்லூரி மருத்துவமனைகள், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்த பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது. இதுதவிர தமிழ்நாடு முழுவதும் 12 தனியார் ஆய்வுக் கூடங்களில் இந்த பரிசோதனையை செய்ய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதில் சென்னையில் மட்டும் 7 ஆய்வுக்கூடங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
தனியார் ஆய்வுக்கூடங்களில் பரிசோதனை செய்ய பணம் இல்லாதவர்கள் அரசு பொது மருத்துவமனைகளில் இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம். அரசு அங்கீகாரம் அளிக்காத தனியார் ஆய்வுக் கூடங்களுக்கு பொதுமக்கள் சென்று பரிசோதனை செய்யக் கூடாது.என்று அரசு தெரிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஆய்வுக்கூடங்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தாலலென்ன செய்ய இயலுமதி கொடுத்து உடனே சிகிச்சை பெற் வேண்டும்.அதிகக் கட்டணம் பெறும் தனியார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார துறை அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்ஆனால் என்றைக்கு தனியாருக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுவரை 29 பேர்கள் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
சென்னை,கோவை,திருச்சி,திருப்பூர் போன்ற இடங்களில் பரவலாக இக்காய்ச்சல் காணப்படுகிறது.

இதில் திருப்பூரில் கந்தசாமி இறந்து விட்டார்.
ஆனால் இப்போதைய பன்றிகாய்ச்சல் சக்தி குறைந்தது ரொம்ப பயப்படு வேண்டாம் என அமைச்சர் விஜய் ஆறுதலாக கூறுகிறார்.அதை நம்பி சளியை -காய்ச்சலை மெத்தனமாக கருதி விடாதீர்கள்.அது மனித உயிரை பலி கொள்ளும் அளவு சக்தியோடுதான் உள்ளது என்பது கந்தசாமி மரணம் எடுத்துக்காட்டுகிறது.
இதுவரை இந்நோய்க்காக55 ஆயிரம் தடுப்பூசி மருந்துகளை மத்திய சுகாதார த்துறை தமிழ் நாடுக்கு வழங்கியுள்ளது இன்னும் லட்சக்கணக்கில் கேட்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்ற மூன்று ஆண்டுகளில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் .
ஆண்டு - பாதிக்கப்பட்டவர்கள் - இறந்தவர்கள்
 2009                                  3,407                       10                                         
 2010                                  1,405                      24
 2011                                    34                          4
2012 (ஏப்ரல் 6 வரை)       29                           1

நோய் வராமல் தடுப்பது எப்படி?
  • தும்மல், இருமல் வரும்போது மூக்கு மற்றும் வாயை துணிகளால் மூடும் சுகாதார பழக்கவழக்கங்களை பொதுமக்கள் கடைப்பிடிக்க
  • வேண்டும்.
  • அடிக்கடி கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும்.
  • திக்கப்பட்ட நபர்களை நோயின் தாக்கம் குறையும் வரை மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க வேண்டும். இதனால், மற்றவர்களுக்கு இந்நோய் பரவுவது தடுக்கப்படும்,
  • நீரழிவு நோயாளிகள்,வயதானவர்கள்,சிறு குழந்தைகளை இந்நோய்கிருமி[H1N1]எளிதாக தாக்கிவிடும் அவர்கள் டாமி புளு மருந்துகளை உட்கொள்வது நல்லது.
  • _____________________________________________________________________________________________________


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?