அழிவைத் தரும் அழகிரி ஏவுகணை.....

அக்னி -5ஏவுகணையின் பாயும் திறனைப்பற்றி செய்திகள் ஒருபக்கம் வர திமுக வில் அழகிரி ஏவி விடும் கணைகள்தான் அதிகம்.
ஸ்டாலின் இளைஞர் அணியை பலப்படுத்த மாவட்டம் தோறும் பயணப்பட்டு வரும் போது அதில் மதுரை,சேலம் மட்டுமே விதண்டாத்தனம் செய்துள்ளது.சேலம் அறிவாலய அதட்டலில் ஒடுங்கி நடித்தாலும்.மதுரை வீம்புகாட்டி வருகிறது.
தான் சார்ந்த கட்சிகூட இல்லை.தங்கள் குடும்பக் கட்சியையே அழித்து ஒழித்துவிடுவதில் அவ்வளவு தீவிரம்-கோபம் அழகிரிக்கு ஏன் வந்தது'
சுரன்
ஜெயலலிதாவின் திமுகவை ஒழிக்கும் ஆசையை 
அழகிரியே நிறைவேற்றி விடுவார் போல் தெரிகிறது.
அரசியலில் இப்போதுதான் நுழைந்த அழகிரிக்கு இப்படிப்பட்ட பொறுப்பை கொடுத்ததுதான் கருணாநிதியின் பிள்ளைப்பாசம் செய்த குற்றம்.
அண்ணன் -தம்பியின் தலைமை நாற்காலி சண்டைதான் இது.ஆனாலும் பல ஆண்டுகளாக மிசா,மற்றும் அடக்குமுறைகளை தாண்டி உயிர் வாழும் திமுகவை கோமா வுக்கு அழகிரி கொண்டு சென்று விடுவார் என்றே தெரிகிறது.
இளைஞர் அணி தேர்வு மேலிட முடிவு படி நடக்கிறது.இதில் மதுரை காரர்கள் கலந்து கொள்ளக்கூடாது என்பது கட்சியை வளர்க்க வேண்டும்,செயல்படும் கழகமாக்க வேண்டும் என்று உண்மையில் திமுக மீது பற்றுள்ள எவரும் சொல்ல மாட்டார்கள்.
கட்சி மேலிடம் கூறுவதை மதிக்கக்கூடாது என்று ஒரு தலைவராக்கப்பட்டவரே அதுவும்குடும்பத்தில் உள்ளவரே சொல்வது மிக மோசமானது.
கட்சி மேலிடம் விளக்கம் கேட்பதை மதிக்க வேண்டாம் என்று சொல்வது ஒரு கட்சியின் மண்டல பொறுப்பாளரே சொல்வது அசிங்கம்.
இதனால் மற்ற கட்சியினர் வேடிக்கை பார்ப்பது மட்டுமின்றி பொது மக்கள் மனதிலும் திமுக வை பற்றிய மதிப்பில் குறைவுதான் உண்டாகும்.
இது ஒரு சாதாரண நிகழ்வு.
இளைஞர் அணியை தேர்வு செய்து விட்டு போய் விடப்போகிறார்.ஸ்டாலின்.அதன் பின் மதுரையில் உட்கார்ந்து கொண்டு அழகிரியின் கோட்டையில் ஓட்டை போடும் அரசியலா செய்யப்போகிறார்.
தன் கட்டுப்பாட்டில்தான் மதுரை உள்ளது.தென்மண்டலம் உள்ளது.தான் அசைக்க முடியா சக்தி என்று அழகிரி நினைத்தால் சாதார ண ஸ்டாலின் வருகைக்கு இப்படி பயப்பட வேண்டாமே?
சுரன்


இப்போது அழகிரியின் கட்டுப்பாட்டில் திமுக மதுரை,தென் மண்டலம் இருப்பதாக எண்ணலாம்.ஆனால் அவரின் கட்டுப்பாட்டில் செல்வாக்கில் இங்கு ஒன்றும் நடக்கவில்லை.
சென்ற சட்டமன்றத்தில் அனைத்து தொகுதிகளையும் கோட்டை விட்டுவிட்டார்.
அதன் பின்னரான உள்ளாட்சி தேர்தலிலும் அதே கோட்டைவிடல்தான்.மதுரை மாநகராட்சியில் கழுவி விடப்பட்டது திமுக.அது மட்டுமல்ல.தனது மக்களவை உறுப்பினர் அலுவலகத்தை கூட தக்க வைக்க முடியவில்லை.
எதிர் கட்சியினரின் அதிமுக வின் சதி என்றாலும் ஸ்டாலின் தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை போராடி மீட்டுள்ளாரே.அதை கூட செய்யும் அளவுக்கு செல்வாக்கு இல்லை அல்லவா?
வெறும்முரட்டடி அரசியல்தான்.அழகிரிக்கு.அதில் அரசியல் அறிவுடன் செய்யும் திறன் கிடையாது.
இருந்திருந்தால் சொந்த கட்சியையே கலகலக்க வைத்து உடைக்க நினைப்பாரா?
சுரன்


தென்மண்டலப்பொறுப்பாளர் பதவியை மதிக்க வேண்டும் என்கிறார்.அவர் முதலில்கட்சி கட்டளையை மதிக்க வேண்டாமா?கட்சியின் பொருளாளர் ,முன்னாள் துணை முதல்வரை இவரே மதிக்கவில்லை என்றால்?
அவராவது உடன்பிறந்த தம்பி என்றிருக்கலாம்.தனது தொண்டரடி பொடிகளையும் மதிக்காதீர்கள் என்பது எந்தவகையிலும் சரியானதாகவே இராது.
தென் மண்டலத்தில் இவர் கட்சி வளர்க்கும் லட்சணம் பார்த்திடலாமே.
அதைத்தான் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் காப்பு தொகை பறிபோனதை வைத்து எடை போடலாமே?திமுக பல தோல்விகளை சந்தித்துள்ளது.ஆனால் இவரின் வியூகத்தில்.பொறுப்பில்தான் தேர்தலில் காப்புத்தொகையை கூட இழந்துள்ளது.சென்ற முறை எடுத்த வாக்குகளைக்கூட காப்பாற்ற இயலாத அளவு இவரின் தென்மண்டல கட்சி நிர்வாகம் உள்ளது.
சுரன்


இப்போது அறிவாலயம் அழகிரியின் அடாவடிக்கு பயப்படாமல்.கட்சிக்கட்டுப்பாட்டை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.அவ்வாறு இல்லை என்றால் வீரவாண்டி ஆறுமுகம் போன்றவர்கள் இதையே காரணமாக்கி பழைய வேலைகளை ஸ்டாலின்,மற்றும் மேலிடத்தை மதிக்காமல் அதிகாரம் செலுத்துவார்கள்.திமுக அவ்வளவுதான்.குடும்ப நிலையை பற்றி யோசித்து கருணாநிதி இதில் நடவடிக்கையை குழப்பமாக்கிக்கொண்டால்.மேன்மேலும் அழகிரியின் அடாவடியில் கட்சி காணாமல் போய்விடும்.
அழகிரியை விட கட்சியைபொறுத்தவரை ஸ்டாலின் தான் முந்தியவர்.
மிசாவில் உயிருக்கு ஆபத்தை எதிர்கொண்டவர்.
அரசியலில் இளைஞர் அணிமுதல் படிப்படியாக பொறுப்புகளை ஏற்றவர்.
அது மட்டுமின்றி மக்கள் மத்தியில் நல்ல பெயரையும் சம்பாதித்திருப்பவ்ர்.
திடீர் அரசியலில் வந்து அடாவடி அடிரடிஅரசியல் செய்து மத்திய அமைச்சராகியவர் அழகிரி.அமைச்சர் பொறுப்பிலும் நல்ல பெயரை எடுக்காதவர்,
சுரன்
மக்கள் மனதிலும் தன்னைபற்றி ஒரு அச்ச உணர்வு அரசியல்வாதியாகவே பதிவு செய்து கொண்டவர்.
அவர் இப்போது எடுக்கும் சகோதர சண்டை அரசியல் ஏவுகணை திமுக வை அழிப்பதில் ஜெயல்லிதாவை விட அதிக செயல்திறன் கொண்டது.
இப்போது கருணாநிதி அழகிரிக்கு அடங்கி விட்டால்.இனிவரும் காலங்களும் அடங்கிப்போவகவும் அது கடைசியில் திமுகவை அடக்கம் செய்ய வைப்பதாகவுமே ஆக்கிவிடும்.அவ்ளோதான்.
__________________________________________________


அக்னி-5 உண்மையான பாயும் திறன் என்ன?
==============================================================
அக்னி- 5 ஏவுகணையின் உண்மையான பாயும் திறனை இந்தியா மறைத்து விட்டதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. சீன ராணுவ அறிவியல் பிரிவு ஆராய்ச்சியாளரான வென்லாங் 'அக்னி 5 ஏவுகணையின் பாய்ந்து சென்று தாக்கும் திறன் உண்மையில் 5000 கிலோ மீட்டர் அல்ல, 8000 கிலோ மீட்டர் வரை பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டது' என்று கூறியுள்ளார்.
சுரன்
மற்ற நாடுகளிடையே பீதி உருவாகுவதை தவிர்க்கவே இந்தியா இந்த உண்மையை அக்னி-5 ன் உண்மையான திறனை குறைத்து கூறிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

கண்டம் தாண்டி 5 ஆயிரம் கிலோ மீட்டர் வரை தூரம் பாய்ந்து எதிரி இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட அக்னி 5 அணு ஏவுகணை, ஒடிசாவில் சோதிக்கப்பட்டு வெற்றியடைந்தது.
இது போன்ற ஏவுகணையை தயாரிக்கும் திறன் படைத்த அமெரிக்கா ரஷ்யா,சீனா,பிரிட்டன் போன்ற4 நாடுகளின் பட்டியலில் அடுத்ததாகஇந்தியாவும் சேர்ந்துள்ளது .
________________________________________________________________________
மம்தா பானர்ஜி ஆட்சியின் லட்சணம் பற்றி பலருக்கும் அதிருப்தி இருந்தாலும் வங்கத்தில் மார்க்சிஸ்ட் மீண்டும் ஆட்சியமைத்துவிடக்கூடாது என்பதில் மட்டும் ஒட்டு மொத்த ஆசி உள்ளது.இக்கட்டுரையும் அதைத்தான் சொல்லுகிறது.
நன்றி:சன்டே இந்தியன்


நல்ல மாற்றத்துக்கான ஆட்சியா?
சுரன்



பேராசிரியர். சுனந்தா சன்யால்
மம்தா பானர்ஜியின் ஆட்சி பற்றி தீர்ப்புச் சொல்லும் நேரம் இது அல்ல என்று பரவலாகவே கருத்து உள்ளது. ஆனால் இந்தப் போக்கு எந்தத் தருணமும் மாறுவதற்கான சூழல் நெருங்கிவருகிறது. முந்தைய அரசு 34 ஆண்டுகள் ஆட்சி நடத்தியது. ஜோதிபாசு இடது முன்னணியின் முதலமைச்சராக வர நேர்ந்தது. ஆனால் புத்ததேவ் பட்டாசார்ஜியோ சிபிஐ-எம்மின் முதலமைச்சராக வந்தார். மம்தா பானர்ஜி மாநிலத்தில் உள்ள எல்லா மக்களுக்குமான முதலமைச்சராக இருக்கவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். அவரும் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது ஜனநாயகமே தேவை; பாரபட்சம் அல்ல என்றார். அத்துடன் நல்லது நடக்க மாற்றம் தேவையே தவிர, பழிவாங்கலுக்காக அல்ல என்றும் கோஷமிட்டார்.
ஆனால் அவர் அதை நிரூபித்தாரா? தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள பருய்பூருக்கு அருகே உள்ள பெட்பெரியாவில் சிபிஐ-எம் ஒருங்கிணைப்பாளராக இருந்த அக்லேஷ் மிஸ்ரா என்பவர், தனது கட்சித் தொண்டர்கள் சிலர் நில வர்த்தகத்திலும் விபச்சாரத் தொழிலுக்கு பெண்களைக் கடத்துவதிலும் ஈடுபட்டிருப்பதாக கட்சித் தலைமையிடம் புகார் கூறினார். ஆனால் கட்சி அதைக் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் ஒரு நாள் பட்டப்பகலில் அவர் கொலை செய்யப்பட்டார். சிபிஐ-எம் அரசு அந்தக் கொலைமீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அகிலேசைப் போல சிபிஐ-எம்மில் அதே இடத்திலிருந்து சேர்ந்த மருத்துவர் அமல் சமத்தரோ அதிகம் கட்சிப் பணிகளில் ஈடுபடவில்லை. அவர் தனது மருத்துவப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். ஆனால் திரிணாமூல் காங்கிரசில் புதிதாக சிபிஐ-எம்மிலிருந்து வந்து இணைந்த புதிய தொண்டர்களால் கொல்லப்பட்டார். அவரது மனைவி பானு, கொலைகாரர்களின் இருப்பிடம் குறித்து தகவல் சொல்லியும், அவர்கள் தேநீர் குடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததாகச் சொல்லியும், காவல்துறையினர் கொலையாளிகளை தலைமறைவாக இருக்கிறார்கள் என்று கூறி, பிடிக்காமல் விட்டுவிட்டது. அதனால் காவல்துறை மற்றும் அதிகார வர்க்கத்தினரின் நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இதுவரை ஏற்படவில்லை.
கொல்கத்தா காவல்துறையின் உளவுத்துறைக்குத் தலைமை வகித்த ஐபிஎஸ் அதிகாரி தமயந்தி சென், மிகவும் அந்தஸ்தற்ற பொறுப்பாக மதிக்கப்படும் காவல்துறை பயிற்சித் துறைக்கு மாற்றப்பட்டார். பார்க் ஸ்ட்ரீட் கற்பழிப்பு வழக்கை அவர் வெற்றிகரமாக முடித்திருந்த நிலையில், அவருக்கு கௌரவமான நியமனம் ஏன் வழங்கப்படவில்லை? பெண் ஒருவர் நிர்வகிக்கும் மேற்கு வங்கத்தில் ஏன் இந்த நிலைமை?
நந்திகிராம் இயக்கம் தொடங்கியபோது புத்ததேவ் பட்டாச்சார்ஜி, தனது தொண்டர் படையினரிடம் சொந்த குடிமக்களை ஊதித்தள்ள உத்தரவிட்டார். புத்ததேவ்  போன்றில்லாமல் மம்தா பானர்ஜி மனிதாபிமானத்துடனும் நேசத்துடனும் நடந்துகொள்வார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவரும் அதைத்தான் வாக்களித்தார்.
எப்படியிருப்பினும் சிங்கூர் மற்றும் நந்திகிராமின் மக்கள் தங்களை மம்தாவிடம் ஒப்படைத்தனர். அந்த மக்கள்தான் அவரது கனவை நனவாக்கியவர்கள். ஆனால் நடைமுறை என்னவாக இருக்கிறது? நந்திகிராமில் பாலியல் பலாத்காரத் தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு மாறிய பிறகும் நீதி கிடைக்குமா என்பது நிச்சயமில்லாமலேயே தான் உள்ளது. கல்வித் திட்டத்திலிருந்து அரசியல் களையப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார். வாக்குறுதியைக் காப்பாற்ற தற்போது என்ன செய்துவருகிறார்?
திரிணாமூல் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் சிலரின்மீது போடப்பட்ட பொய் வழக்குகள் வாபஸ் ஆகியுள்ளது நல்ல விஷயம்தான். ஆனால் அதுவே சட்டத்தின் ஆட்சி நடப்பதற்கான சாட்சியம் கிடையாது. ராய்கஞ்ச் பல்கலைக்கழகக் கல்லூரியில் மாணவர்கள் சங்கத் தேர்தல் நடந்தபோது ஆசிரியர் திலிப் டே சர்க்கார், திரிணாமூல் தொண்டர்களால் துன்புறுத்தப்பட்டுள்ளார். பிறகு அவர் பதவியை விட்டு ராஜினாமா செய்துள்ளார். மாஜ்டியா சுதிர் ரஞ்சன் லாஹிரி கல்லூரியின் எஸ்எப்ஐ தொண்டர்களும் இதேபோன்ற ஒரு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் ராய்கஞ்ச் மாணவர்கள் மீது  பிணையில்  வெளியே வரக்கூடிய வகையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
எஸ்எப்ஐ மாணவர்கள்மீது பிணையில் வரமுடியாத வழக்கைப் பதிவுசெய்துள்ளனர். இதனால் மாஜ்டியா கல்லூரியில் எஸ்எப்ஐ அமைப்பு எளிதாக வெற்றிபெற்று விட்டது. இடது முன்னணியின் வீழ்ச்சி பள்ளி நிர்வாகத் தேர்தலில்தான் தொடங்கியது. அதனால் சிபிஐ-எம் ஐ மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டுவந்து விடக்கூடாது என்பதில் திரிணாமூல் கவனத்துடன் இருக்கவேண்டும். அப்படி நடந்தால் அது நம்பிக்கை மோசடி.
_____________________________________________________________________________________________
சுரன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?