எண்ணை முழுக்கு


என்ன. இத்தனை நாளாகி விட்டது இன்னமும் பெட்ரொல்-டீசல் விலையை உயர்த்தாமல் இருக்கிறார்கள் என்று நேற்றுதான் கனவு கண்டேன்.அன்றே"சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போதும், டீசல், சிலிண்டர், மண்ணெண்ணெய் விலைகளை கடந்த ஓராண்டாக உயர்த்தவில்லை என்றும், இவற்றின் விலைகளை “மாற்றி அமைக்க” வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக"நமது இந்திய விலைவாசி உயர்வு அமைச்சர்[பிரதமர் என்று கூட சொல்லலாம்]மன்மோகன்சிங் கூறியுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் நடந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய விழாவில் கலந்து கொண்டு இவ்வாறு மன்மோகன் சிங் பேசியுள்ளார்.
சுரன்

மேலும்அவர் மக்கள் மீதுள்ள பாசத்தில் “மக்கள் பாதிக்கப்படாத அளவில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சிலிண்டர் ஆகியவற்றின் விலைகளை உயர்த்த வேண்டிய அவசியம் உள்ளது. இவற்றின் விலையை மத்திய அரசு நீண்ட நாட்களாக உயர்த்தாமல் இருப்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். இப்படி விலை உயர்த்தப்படாததால், பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏகப்பட்ட நஷ்டம் ஏற்படும். அது பின்னர் அரசின் தலையில் விழும். இந்தியாவின் இறக்குமதிகளில் 80 சதவீதம் கச்சா எண்ணெய் இறக்குமதிதான். எனவே விலை உயர்த்தப்படாமல் இருந்தால், அது நாட்டின் இறக்குமதி திறனை வெகுவாகப் பாதிக்கும்” என்றுள்ளார்.
இதன் மூலம் பெட்ரோல் விலை நிர்ணய உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடமே விட்டுவிட்டதைப் போல, டீசல் உள்ளிட்ட பிற எரிபொருள் விலை நிர்ணயத்தையும் விட்டுவிடப் போவதைமன்மோகன் மறைமுக மாகசொல்லி விட்டார்.
சுரன்

மக்களை பாதிக்காத வகையில் எப்படி விலையை கூட்டப்போகிறார் என்பதை அந்த பொருளாதார மேதைதான் விளக்கவேண்டும்.இவற்றை பொது மக்கள் வாங்காமல் இருந்தால் மட்டுமே இதன் விலை உயர்வு மக்களை பாதிக்காமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது.
இப்போது சமையல் எரிவாயு உருளை 70 நாட்களில் வருவதை 140 நாட்களுக்குத்தான் என்றால் கொஞ்சமாக பாதிக்கும்.
இந்தியாவில் இருக்கு கிருஷ்ணா-கோதாவரி எண்ணை,இயற்கை எரிவாயு படுகைகளை அடிமாடு விலைக்கு அம்பானிக்கு கொடுத்து விட்டு யானை விலைக்கு அதையே அவர்களிடம் இருந்து திருப்பி வாங்கும் பொருளாதார மேதன்மை மூலம் விலையை குறைக்கவும் வழி கண்டு பிடிக்க முடியாமலா போகும்.
சுரன்

ஈரானில் இருந்து எரிவாயுவை குழாய் மூலம் குறைந்த விலைக்கு கொண்டு வருவதையும் அமெரிக்காவின் எதிர்ப்பால் நிறுத்தி வைத்திருப்பதை மிக உயரிய ராஜதந்திரமாகக் கொண்டாடலாம்.
நல்ல வேளை அமெரிக்கா சொன்னதை கேட்டு ஈரானிடமிருந்து குறைந்த விலையில் பெட்ரோலையும் வாங்காமல் இருந்திருந்தால் இந்தியாவில் தண்ணீரில் ஓடும் வாகனங்களைத்தான் பயன் படுத்த வேண்டியிருக்கும்.
ஆனால் அதற்கும் கூட மான்டேக்சிங் அலுவாலியா தேசீய தண்ணீர் கொள்ளை மன்னிக்கவும் கொள்கை என்று ஒன்றை கொண்டு வந்து இந்திய நீராதாரங்களை எல்லாம் தனியார்,அந்நியர்கள் கையில் ஒப்படைத்து ஆப்பு வைக்க முயற்சிக்கிறாரே?
இனி ===கழுவ கூட பணமும்.சேவை வரியும் கட்டவேண்டும் என்ற இனிய நிலை இந்தியாவில் வந்துவிடும். .

ராம்தேவ் சாமியாரும,பால்தாக்கரேயும் சச்சின் மாநிலங்களவை உறுப்பினரானதற்கு வாழ்த்துக்களுடன்ன்காங்கிரசில் சேர்ந்து விடக்கூடாது என கவலையௌம் தெரிவித்திருக்கிறார்கள்.அவர் காங்கிரசில் சேர்வதால் என்ன நடந்து விடப்போகிறது.அடுத்த உலக மட்டைப்பந்து போட்டியில் கோப்பையை இந்தியா வெல்லமுடியாமல் போய்விடுமா என்ன.?
அல்லது அவரால் வாக்குகள் முழுக்க காங்கிரசுக்கு விழுந்துவிட போகிறதா.அல்லது பணவீக்கம் இன்னும் கூடி வெடிக்கப்போகிறதா/
பத்தோடு பதினொன்று எம்பிக்கள் காங்கிரசுக்கு அவ்ளோதான்.
சுரன்

மதுரை ஆதீனமாக அண்ணன் நித்தியானந்தாவை அருணகிரி நாதர் நியமித்ததற்கு இந்து மக்கள் கட்சியினர் கடுமையாக எதிர்த்து நித்தி-ரஞ்சிதா ரசிகர் மன்றத்தினருடன்[நித்தியானந்தா சீடர்கள்] வாக்குவாதத்தில் ஈடுபட
காவல்துறையினர் வந்து சமராசி செய்து வைத்திருக்கிறார்கள்.
போலீசாருக்கு இதுவும் ஒரு வேலையாக போய் விட்டதே.ஏற்கனவே திமுக காரர்களை பிடித்து கைது செய்து விட்டு பிறகு காரணம் தேடும் பணியை தலைமேல் வைத்துக்கொண்டு பணிச்சுமையில் தள்ளாடுகிறார்கள்.இது வேறா.
பழைய மதுரை ஆதினம் அருணகிரியார் சரியான குசும்பு பிடித்த ஆள்தான்.
ஒரே ஒரு லட்சம் லஞ்சம் அதுவும் கொடுப்பது போல் போட்டோ எடுத்துக்கொண்ட லஞ்சத்திற்கு பங்காரு லட்சுமணனுக்கு ஒருலட்சமும்-4 ஆண்டுகள் தண்டனையும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
சுரன்
அப்படியானால் லட்சம் கோடி என்று 2ஜி அலையில் மிதந்தவர்களுக்கு எத்தனை ஆண்டுகள் கிடைக்கும்.கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள்.என் கால்குலேட்டர் பழுது.
பங்காருவும் தனக்கு வயதாகிவிட்டது,இரண்டு முறை இதய அறுவை செய்யப்பட்டுள்ளது.என்று வாதிட்டுள்ளார்.அவரின் பாஜக ஆட்சியில் இல்லாததால் அவரின் சமதானங்கள் தள்ளிவிடப்பட்டுவிட்டன.
கடைசியாக 'தான் இதற்கு முன் இது போன்ற லஞ்சங்கள் வாங்கியதில்லை"
என்றும் கூறியிருக்கிறார்.அதிலாவது நீதிபதி மனங்கசிந்திருக்கலாம்.
முதல் தடவை என்பதால்தான் இப்படி எசகுபிசகாக மாட்டிவிட்டார்.
யாராவது காங்கிரசுக்காரரிடம் ஆலோசனை கேட்டிருக்கலாம்.
பங்கு போய்விடும் என்ற பயமாக இருந்திருக்கலாம்.

சுரன்


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?