அதிமுக தொலை காட்சி வாரியம்

சுரன்
தமிழ்நாடு அரசு கேபிள் பற்றி பல முறை எழுதியாயிற்று.ஆனால் நாளாக நாளாக அரசுக்கும் .மக்களுக்கும் அரசு கேபிள் டிவி ஒரு இழப்பாகவே உள்ளது.அரசு கூறிய 70 ரூபாய் கட்டணம் எங்கும் வாங்கப்பட வில்லை.100 வாங்குகின்றனர்.
அதிலும் இப்போது மின்தடை ஜெனரேட்டர் செலவு என 120,150 கேட்டு கட்டௌப்படுத்துகிறார்கள்.இதை அரசு நியமித்துள்ள வட்டாட்சியர் ,மாவட்ட ஆட்சியரிடம் கொண்டு போனால் அடுத்த நாள் ஒரு அறிக்கையுடன் தங்கள் கடமையை முடித்துக்கொள்கின்றனர்.
"டிவி' வாரியத்திற்கு என, புதிதாக கட்டுப்பாட்டு அறை அமைத்தல், தொழில்நுட்பக் கருவிகள் வாங்குதல், புதிய தொழில்நுட்ப பணியாளர்களை நியமித்தல் ஆகியவற்றில் வாரியம் அக்கறை காட்டாததால், கேபிள் வாரியத்தின் செயல்பாடு முடங்கியுள்ளது. இதனால், கேபிள் தொழிலில் மீண்டும் தனியார் ஆதிக்கம், அதிக கட்டண வசூல் தலைதூக்கியுள்ளன. 
ஆனால் இந்தமுறை அதிமுக கட்சியினர் இந்த கேபிள் கொள்ளையின் ப்ன்னணியில் உள்ளனர்.
சுரன்

இதனாலே அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.
இதில் மகா கேவலம் இதை கண்காணிக்க அரசு நியமித்துள்ள வட்டாட்சியர்கள் இந்தஅரசு கேபிள் கட்டுப்பாட்டு அறையையே பார்த்ததில்லையாம்.அவர்களை அதிமுக வினர் உள்ளே அனுமதிப்பதில்லையாம்.
பொது மக்கள் கூறும் குற்ற சாட்டுகள்,அனுமதியின்றி அதிமுக.வினர் நடத்தும் உள்ளூர் சானல்,அனுமதி பெற்ற உள்ளூர் சானல்களை ஒளிபரப்ப அனுமதிக்காதது பற்றி அந்த வட்டாட்சியர்கள் கேட்டால் அதிமுகவினரால் மிரட்டப்படுகின்றனர்.
இதனால் அரசு கேபிள் வட்டாட்சியர் பணியே வேண்டாம் என்று பணியேற்காமல் பல மாவட்டங்களில் நிலை உள்ளது.
இவர்கள் துணிந்து துண்டித்த அனுமதியற்ற உள்ளூர் தொலைகாட்சிகள் இரு நாட்களில் மீண்டும் பிரகாசமாக ஒளிபர்ப்பஆகிறது.
சுரன்
இதனால், அரசு கேபிள் என்பது, அதிமுக கட்சியின் வருமானஅமைப்பாகவே நடந்து வருகிறது. 
 
சில கட்டணச் சேனல்களை மட்டும் அரசு கேபிள் மூலம் ஒளிபரப்ப ஒப்பந்தமாகி உள்ளது. சன் குழுமத்துடன்ஒப்பந்தம் ஆகவில்லை.ஆனால் சன்,கே டிவி சேனல்களை,டி.டி.எச்., மூலமாக பெற்று, அரசு கேபிளில் நுழைத்து ஒளிபரப்பு செய்து வருகின்றனர். சன் நிர்வாகமும் தொலைக்காட்சி தளத்தில் தனது பிடியை இறுக்குவதற்காக இதைகண்டு கொள்ளாதது போல் இருந்து வருகிறது. 
\அதிமுக கட்சியினரின்அதிகாரப் போட்டியில் துவங்கிய பிரச்னைகள், முதலில், நிர்வாக இயக்குனர் மாற்றத்திற்கு காரணமாக இருந்தது. இந்த மாற்றத்திற்கு பிறகும், அரசு கேபிளை எவ்வாறு நடத்த வேண்டும் என்ற திட்டமோ, வரையறையோ, தேவைகள் குறித்த ஆலோசனையோ இல்லாமல், படிப்படியாக முடங்கும் நிலைக்கு வாரியம் தள்ளப்பட்டு விட்டது.
அரசு கேபிளுக்கென நெல்லை, வேலூர், தஞ்சாவூர், கோவை ஆகிய இடங்களில், "கன்ட்ரோல் ரூம்' அமைக்கப்பட்டது. அதன் பின், அ.தி.மு.க., ஆட்சி அமைந்த பிறகு, அரசு கேபிளுக்கென தனியாக எந்த மாவட்டத்திலும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப, "கன்ட்ரோல் ரூம்' அமைக்கப்படவில்லை.
சுரன்

அந்தந்த மாவட்டங்களில் ஏற்கனவே நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்த எம்.எஸ்.ஓ.,க்களின் கட்டுப்பாட்டு அறையையே, அரசு கேபிள் நிர்வாகம் எடுத்துக் கொண்டது. இதற்கென ஒப்பந்தம் போடப்பட்டாலும், அவர்களுக்கு நிரந்தர கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. மாறாக, உள்ளூர் தொலைக்காட்சிகளுக்கு அனுமதி தரும்போது, இலவசமாக ஒரு சேனலை ஒளிபரப்ப அனுமதி தருவதாக வாய்மொழி உறுதி வழங்கப்பட்டது. இதை நம்பிய எம்.எஸ்.ஓ.,க்கள், அரசு கேபிளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை அவர்களுக்கு அப்படி ஏதும் கிடைக்கவில்லை .

ஆரம்ப கட்டத்தில், வேறு வழியில்லாமல் இத்தகைய உள்ளூர் எம்.எஸ்.ஓ.,க்களை பயன்படுத்திய அரசு கேபிள் நிர்வாகம், அதன் பின், தங்களுக்கான கட்டமைப்பு வசதிகளை எந்த மாவட்டத்திலும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.
முன்பு, முக்கிய நகரங்களில் உள்ள ஓட்டல்கள், அடுக்கு மாடி குடியிருப்புகளில் கேபிள் ஒளிபரப்புக்கு என, மொத்தமாக ஒரு கட்டணம் வசூலிக்கப் பட்டு வந்தது. இந்த கட்டண வசூல் தற்போதும் அரசு கேபிளுக்கு வராமல்,கட்சியினருக்கே செல்கிறது.தனது கட்சியினர் என்பதால் அதிமுக அரசும் கண்டு கொள்ளவில்லை.
சுரன்

இப்போதும் பழைய கட்டணத்தையே கொடுத்துதான் மக்கள் பார்க்க வேண்டியுள்ளது.ஆனால் பழைய தெளிவானதரம் இல்லாத ஒளிபரப்பு மக்களை அதிருப்தியில் வைத்துள்ளது.
டாஸ்மாக்கை கையில் எடுத்து அதில் அரசுக்கு வருமானத்தை ஏற்படுத்திய ஜெயா அரசுக்கு இந்த கேபிள் தொலைக்காட்சி நிர்வாகத்தை மட்டும் சரி செய்ய இயலாமலா போகும்.முடிந்தாலும் தனது கட்சிக்காரர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கமும்-சன்கட்டுப்பாட்டில் இருந்து தொலைக்காட்சி துறையைஜெயா நிர்வாகக் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்ற உள்நோக்கம்தான் மக்கள் இப்படிஅதிகப்பணம் கொடுத்து தரமற்ற ஒளிபரப்பில் விருப்பமற்ற தொலை காட்சிகளைக்கண்டுஅவதிப்பட வைத்துள்ளது'
_________________________________________________________________________________
சுரன்


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?