இன்று

ஏப்ரல் -22
___________
பூமி தினம்


உலக சுற்றுச்சூழல் பிரச்சினைகள்தொடர்பான பொது விழிப்புணர்வு அதிகரிக்க ஒரு நிகழ்வாக உலகம் முழுக்க, கொண்டாடப்படுகின்றதுஅமெரிக்காவில்தான்முதல் முறையாக. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மாணவர்கள் உட்பட மில்லியன் கணக்கில் மக்கள் கலந்து கொண்ட, பேரணிகள் நடை பெற்றது.
சுரன்
முதல் புவி நாள்[1977 ]ஊர்வலம்.வாஷிங்டன்
புவி நாள் என்பதுஅமெரிக்க செனட்டர் கய்லார்ட் நெல்சன்என்பவர் முயற்சியில் உருவானது.விஸ்கான்சின், அடிப்படையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும்சுற்று சூழல் விழிப்புணர்வை அதிகரிக்க செய்வதுதான் அதன்நோக்கம் .அரசுகள்சுற்று சூழல் தொடர்பான செயல்களைகட்டாயமாக, செயல்படுத்தவேபுவி நாள் உண்டானது.அது முதல் உண்மையிலேயே அமெரிக்காவில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது, 
1970 ஆண்டு ஜூலை மாதம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை தேசிய மாசு சட்டத்தை கட்டுப்படுத்தும் மற்றும் செயல்படுத்த சிறப்பு உத்தரவை அமெரிக்க அரசுவெளியிட்டது.
சுரன்

ஏப்ரல் 22, 1990 புவி நாளின் 20 வது ஆண்டு நிறைவு, 141 நாடுகளில்கிட்டத்தட்ட 200 மில்லியன் மக்களால் கொண்டாடப்பட்டது.அதில் இந்தியாவும் உண்டு.
புவி நாள் உலகஅளவில் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது.

கீழே வரும் படம் முதல் புவி நாள் கொண்டாட்டம் நடந்தபின் கூட்டம் கலைந்தபின்னர் சேர்ந்த குப்பைகளை அகற்றுவதுதான்.சுற்று சூழலை காப்பாற்ற போராடி புவி நாளைக்கொண்டாடியவர்களே இப்படி குப்பையாக்கியுள்ளார்களே.
சுரன்

புவியை காக்க போராடுவதாக சொல்பவர்களே இப்படி பொறுப்பற்று இருக்கிறார்களே என்று புவி நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட ஓவியர்பப்லோ சாலமோன் வருத்தத்துடன் இப்படத்தை எடுத்துள்ளார்.
பின்னால் தெரிவது வாஷிங்டன் நினைவு சின்னம்.
_______________________________________________________________________
சுரன்
1500 ஆண்டுகள் பழமையான 3000 புத்தர் சிலைகள் சீனா வில்1949இல் கண்டு பிடிக்கப்பட்டன.இது அகழ்வின்போது எடுக்கப்பட்ட படம்.
சுரன்


சுரன்

சுரன்

சுரன்

________________________________________________________________________
இன்று [ஏப்-22]வரலாற்றை மாற்றிய மாமனிதன் லெனின் பிறந்த நாள்
_________________________________________________________
லெனின் இறக்கவில்லை நம்முடன் வாழ்கிறார்.
அந்த 1924-ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள், உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் கண்ணீர் சிந்திய நாள். அவர்கள் அனைவரின் கவனமும் சோவியத் ரசியாவை நோக்கி இருந்தது. சோவியத் ரசியா அன்றைய தினம் மயான அமைதியில் கழிந்தது. ஒவ்வொரு வீடும் இழவு வீடு போல காட்சியளித்தது. பெரியவர்களும், குழந்தைகளும் அழுது தீர்த்தனர். பெண்கள் ஒப்பாரி வைத்தனர். ஆண்கள் கனத்த இதயத்துடன் ஏக்கப் பெருமூச்சு விட்டனர். கடுமையான குளிர் வாட்டியது. வீதிகள் பனிப் பாளங்களால் மூடப்பட்டிருந்தன.
சுரன்

சரியாக மாலை 4.00 மணி வானொலியில் ஒரு அறிவிப்பு வந்தது. “எழுந்து நில்லுங்கள் தோழர்களே! தோழர் லெனின் அடக்கம் செய்யப்படுகிறார்.” சோவியத் ரசிய மக்கள் அனைவரும் எழுந்து நின்றனர். அமெரிக்க ஐரோப்பிய தொழிலாளர்கள் எழுந்து நின்றனர். ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் தொழிலாளர்கள் எழுந்து நின்றனர். ஐந்து நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
உலக மக்களால் நேசிக்கப்பட்ட மாபெரும் தலைவர் லெனினுடைய சவ அடக்கம் இப்படித்தான் நடைபெற்றது. உலகமே எழுந்து நின்று அவருக்கு இறுதி விடைகொடுத்து அனுப்பியது. லெனினுக்கு முன்னரும் சரி, அவருக்குப் பின்னரும் சரி, எந்தத் தலைவருக்கும் இந்த மரியாதை கிடைக்கவில்லை. எந்த நாட்டுத் தலைவராக இருந்தாலும் அவருடைய மரணம் அந்த நாட்டு மக்களை மட்டுமே பாதிக்கும். ஆனால் லெனினுடைய மரணம் உலகையே குலுக்கியது. சோவியத் ரசியாவின் தலைவருக்காக உலகமே ஏன் அழ வேண்டும்? அப்படி என்ன செய்துவிட்டார் அவர்?
எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் அங்கே பணக்காரர்கள் இருப்பார்கள். அதுபோலவே ஏழைகளும் இருப்பார்கள். ஒருவன் பணக்காரன் என்றால், 100 பேர் ஏழைகள். இந்த ஏழைகளின் உழைப்பைச் சுரண்டி பணக்காரர்கள் கொள்ளை லாபம் சம்பாதிப்பார்கள். உழைக்கும் மக்கள் மேலும் மேலும் வறுமையில் வாடிக்கிடப்பார்கள். ரசியாவிலும் ஒரு காலத்தில் மக்கள் அப்படித்தான் துன்பத்தில் உழன்றனர்.
சுரன்
இந்த அநியாயத்தை ஒழித்துக் கட்டியவர்தான் லெனின். அவருடைய தலைமையில் 1917-ஆம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி நடைபெற்ற புரட்சியினால் தொழிலாளர்கள், விவசாயிகள் ஆட்சி மலர்ந்தது. உலகில் முதன்முறையாக தொழிலாளர்கள் ஆட்சியில் அமர்ந்தனர். அந்த தொழிலாளர்களின் ஆட்சிதான் உலகில் எங்குமே நடக்காத சாதனைகளை நிகழ்த்தியது. மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமைக்கு முடிவு கட்டப்பட்டது. தேசத்தின் வளங்களை ஒரு சிலர் மட்டும் அனுபவிப்பது முடிவுக்கு வந்தது. அவை அனைவருக்கும் பொதுவாக்கப்பட்டது. வயது வந்த அனைவருக்கும் திறமைக் கேற்ற வேலையும், வேலைக்கேற்ப ஊதியமும் வழங்கப்பட்டது. அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்கப்பட்டது. சமத்துவச் சமூகம் படைக்கப்பட்டது.
இவை அனைத்தும் லெனினுடைய தலைமையில் நடந்தது. இதன் மூலம் தன்னுடைய நாட்டில் வறுமையை ஒழித்துக் கட்டினார். மற்ற நாடுகளிலுள்ள உழைக்கும் மக்களின் கவனம் சோவியத் ரசியாவை நோக்கித் திரும்பியது. லெனினுடைய வழியைப் பின்பற்றினால் மட்டுமே தங்களின் வறுமை ஒழியும் என்று அவர்கள் நம்பினர். தங்களின் நல்வாழ்விற்காக போராடத் தயாராக இருந்த உலகத் தொழிலாளர்களுக்கு லெனின் சரியான வழி காட்டினார். ஆனால் ரசிய மக்களுக்குக் கிடைத்த வெற்றி உலகத்திலுள்ள அனைவருக்கும் கிடைப்பதற்கு முன்னரே அவர் மரணமடைந்து விட்டார்.
இதனால்தான் அவருடைய மரணத்துக்கு உலகமே அழுதது. உலகின் ஆறில் ஒரு பகுதி நிலப்பரப்பில் வறுமையை ஒழித்தவர் என்ற நன்றியும், மீதி நிலப்பரப்பில் அதை நிறைவேற்றும் முன்னரே இறந்து விட்டாரே என்ற துக்கமும்தான் உலகத் தொழிலாளர்களை கண்ணீர் சிந்த வைத்தது.
நன்றி : புமஇமு வெளியீடான "இவர்தான் லெனின்"  வெளியீட்டில் இருந்து மறு பதிவு





___________________________________________________________________
இது நம்ம கேரளாவில் உள்ள இடம்தான்.

சுரன்


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?