புதிய கோட்டை

என்னதான் நாம் தமிழக இடைத்தேர்தல்களை பற்றி உட்கார்ந்த இடத்தில் இருந்தே பல செய்திகளையும் படித்து மக்கள் மனதை பற்றி அலசி அறிந்து கொண்டது போல் எழுதினாலும் ஒட்டு மொத்தமாக நம் முகத்தில் தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் கரியை பூசி விடுகிறார்கள்.அதற்காக நாம் சும்மா இருந்து விட முடிகிறதா?
மீண்டும் இடைத்தேர்தல்கள் வந்து நம் ஆய்வு மனப்பான்மையை தட்டி எழுப்பிவிடுகிறதே?
சங்கரன் கோவிலில் விலைவாசி உயர்வு,பேருந்து கட்டண -பால் விலைஉயர்வு
இவை எல்லாவற்றையும் விட கண்ணைக்கட்டி இருட்டில் விட்ட மின்வெட்டு இவைகளை மக்கள் சகிக்காமல் வாக்குகள் ஆளுங்கட்சியை விட்டுமாறி விழும் 
என்று பக்கம்,பக்கமாக எழுதினால் மக்கள் கண்ணை மின் வெட்டு மறைக்காமல் இலவச மிக்சி,கிரைண்டரும்-வீட்டில் கவரில் வைக்கப்பட்டு விழுந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் மறைத்து விட்டது.விளைவு முகத்தில் கரி.

புதுக்கோட்டையாவது புதிய முடிவைத்தருமா?
இடைத்தேர்தல்கள் என்றாலே திண்டுக்கல் தேர்தலுக்குப்பின் ஆளுங்கட்சி தான் வெல்லும் என்ற எழுதப்படா விதி உள்ளதே.
தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே தனது விதிகளை வைத்துக் கொள்கிறது.[திமுக வுக்கு மட்டும் விதி விலக்கு .நரேஷ் குப்தாவுக்கும்,பிரவீண்குமாருக்கும் திமுக வாடை ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்று குடும்ப மருத்துவர் கூறியுள்ளாராம்]
ச.ம.தேர்தலில் திமுகவை ஓட ,ஓட விரட்டியதில் அதிமுக ஜெயலலிதாவை விட ஆணைய பிரவீண்குமாருக்குத்தான் அதிக பங்கு.
இதுவரை இல்லாதபடி அதிமுக ஆட்சியேற்பு விழாவில் முன் வரிசையில் உட்கார்ந்து ரசித்த பெருமையும் பிரவீண்குமாருக்குத்தான் உண்டு.
சேஷன்,ஓசா,குப்தா என்று யாருமே ஆட்சி ஏற்பு விழாவில் இதுவரை கலந்து கொண்டதாக தெரியவில்லை.
சுரன்

ஜெயாயூனிஸ்ட் மன்னிக்கவும் தா.பாண்டியனின் கம்யூனிஸ்ட் கட்சி வென்ற புதுக்கோட்டையை கூட்டணி தர்மம் என்று ஏமாளித்தனமாக மீண்டும் தா.பா,கட்சிக்கே கொடுக்காமல் தன்கட்சிக்காரரையே போட்டியிட வைத்து விட்டது அதிமுக.இது நிச்சயம் என்று எதிர்பார்த்ததுதான்.
ஆனால் தன் கட்சிக்கேதருவார் என்று கடைசிவரை காத்திருந்ததாக தா.பா.சொல்வது அவர் இன்னும் தமிழக அரசி[யலை]யை புரிந்து கொள்ளவில்லை என்றுதான் தெரிகிறது.
அதில் அவருக்கு நட்டமும் இல்லை.அவரின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிமுக வின் கிளை அமைப்பாக மாறி நாளாகிவிட்டதே.திமுக கூட்டணியில் இருக்கையிலேயே அம்மா ஆதரவாகத்தானே தாபா கட்சி இருந்தது.
நடிகர் விஜய் காந்தை பொறுத்தவரை சங்கரன்கோவில் முடிவுக்குப்பின் நாக்கை மடித்து சூளுரைப்பதை விட்டு விட்டார் என்றே தெரிகிறது.
புதுக்கோட்டையில் தாபா கட்சி போட்டியிட்டால் ஆதரவை தார்மீகமாக தெரிவித்து விட்டு கோடை சுற்றுலா போய் விடலாம் என்றிருந்தவருக்கு தாபா தன் கட்சி அம்மாவை எதிர்த்து போட்டியிடாது என்பதால் கொஞ்சம் தர்மசங்கடம்.
விரைவில் யாராவது மாட்டியவரை காப்புத்தொகை திரும்பாவிட்டால் கவலை அடையாதவராகப் பார்த்து அறிவிப்பார்.
திமுக வுக்கும் தாபா கட்சி போட்டியிட்டால் அவர்கள் வென்ற தொகுதி என்பதால் தாங்கள் போட்டியிடவில்லை என்று கொஞ்சம் ஓய்ந்திருக்க வாய்ப்பாக இருந்திருக்கும் .அதர்கு வழியில்லை என்பதால் போட்டியிடுவதை
தவிர வேறு வழியில்லை.
சுரன்

ஆனால் சென்ற தேர்தலில் பெரியண்ணன் மரணித்த முத்துக்குமாரை விட வெறும் மூவாயிரம் வாக்குகள் மட்டுமே குறைவாகப்பெற்றிருந்தார் என்பதால் அவரையே மீண்டும் கொம்பு சீவி விட்டு மோத வைக்கலாம்.
மின் தடை,2ஜி,ஈழம் அலையிலேயே குறைந்த வாக்கு வித்தியாசம்தான்.இப்போது அதைவிட அதிக மின் தடை ,விலைவாசி உயர்வுகள் திமுக வுக்கு சாதகமாகலாம்.
அதிமுக வேட்பாளர் பழைய மன்னர் குடும்பத்துக்காரர் என்ற மக்கள்ஆதரவு
ஆணைய ஆதரவு,பண-படை பல ஆதரவு என்று இறங்குகிறார்.
ஏற்கனவே பல இடைதேர்தல்கள் நமக்கு தந்த ஆளுங்கடசி வெற்றி என்ற செய்தி இவைகளை வைத்து நான் சொல்லப்போவது உங்களுக்கே புரிந்திருக்கும்.
ஆனாலும் மக்கள் உண்மையிலேயே பணத்துக்கு அடிமையாகாமல் நடைமுறை வாழ்வை கணக்கிட்டால் முடிவுகள் மாறிவிடும்.
ஆயிரம் ரூபாயை வாங்கிக்கொண்டு அது நம்மிடம் கொள்ளையடித்தப்பணம்தானே என்று சிந்தித்து வாக்குகளை விற்காமல் இருந்தால் நிலை வேறுதான்.
சுரன்


ஆளுங்கட்சி தொகுதியை பளபளப்பாக ஆக்கிவைத்திருப்பதும்.அமைச்சர்கள் வாசலில் வந்து குறை கேட்பதும் வாக்குப்பதிவு நாள்வரைதான் என்ற உண்மையை அவர்கள் உணர்ந்தாலே போதும்.
எதற்கும் சங்கரன்கோவில் நிலையை தேர்தலுக்கு.முன் .தேர்தலுக்கு,பின் என பார்த்தாலே போதுமானது.
அது சரி உங்கள் தொகுதிக்கு எப்போது இடைத்தேர்தல் என்று யோசிக்கிறீர்களா?
இடைத்தேர்தல் வர ச.ம.உறுப்பினர் பதவி விலகினாலே போதும்.
_________________________________________________________________________________
சுரன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?