சோதனை மேல் சோதனை;;;;;;;;;;;

-
பாகிஸ்தானில்உள்ள பத்திரிக்கைகளை அச்சிட செய்தி தாள் உருளைகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்து கொள்ள பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மற்ற நாடுகளை விட இந்தியாவில்செய்தி தாள் அச்சிடும் காகிதத்தின் விலை குறைவாக இருப்பதன் காரணமாக இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குஇறக்குமதியாகிறது,
 “தி டான்” “ஜங்க் குரூப்” போன்ற செய்திநிறுவனங்களுக்கு காகிதங்கள் அதிக தேவைஇதையடுத்து தற்போது 10 டன் அளவிற்கு இறக்குமதி செய்து கொள்ள பாகிஸ்தான் அரசு அந்நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவிலிருந்து 137 பொருட்கள் மட்டுமே இறக்குமதி, ஏற்றுமதிக்கு பாகிஸ்தான் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்‌கது.அதில் மின்சாரமும் ஒன்று.
செய்தி அச்சிட இந்தியாவில் இருந்து தாளை இறக்குமதி செய்யும் பாகிஸ்தான்
இந்தியாவுக்கு அனுப்ப இந்திய ரூபாய்களை கள்ளத்தனமாக அச்ச்சிட தாள்களை இங்கிலாந்தில் இருந்து [இந்தியா வாங்கும் அதே நிறுவனத்தில்]வாங்குகிறது.
                                 = = =
கனடாவில் எட்மன்ட்டன் நகரில் நடந்த மாபெரும் இசை நிகழ்ச்சியின் இறுதியில் 27 இளைஞ-இளைஞ்சிகளை மயக்கத்தில் இருப்பதாக 
சுரன்


மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அவர்கள் இசையில் மயங்கிக் கிடக்கவில்லை.இசை விழா பெயரை சொல்லி போதை மருந்தை உட் கொண்டதால்தான் இந்த மயக்கம்.
                              = = =
மதுரை கள்ளழகரை எதிர்பார்த்திருக்கும் போது மதுரை ஆதினத்துக்கு எதிர்பாரா விருந்த்னர்களாக வருமான வரித்துறையினர் வந்து சென்றுள்ளனர்.நித்தியானந்தா மதுரை ஆதினத்திக்கு புதிய நியமனத்தில் பல கோடிகள் கை மாறியதாக தகவல்கள் பரபரப்பானதால் மட்டும் வந்ததாக தெரியவில்லை.
சுரன்


ஆதினம் புதிய நியமனத்தில் அரசு தலையிட முடியாது என்பது சரியல்ல.
பல கோடிகளை சொத்துக்களாக க் கொண்ட மதுரை ஆதினத்தில் முறைகேடுகள் இந்து அறநிலையத்துறைக்கு குற்ற சாட்டாக வந்தால் அரசு தலயிட சட்டத்தில் இடம் உள்ளதாக அரசு வழக்குரைஞர் மதுரை உயர் நீதிமன்ற அமர்வு கிளையில் தெரிவித்துள்ளார்.
நித்தி நியமனத்தில்தான் கோடிகள் கைமாறியுள்ளதே.அதுவும் போதாதென்று அருணகிரியாரை நித்தமும் ஆனந்தத்தில் வைக்க நித்தியானந்தா போதை ஊசி செலுத்தி வைத்திருப்பதாக சிலர் கூறியுள்ளனர்.
மதுரை ஆதினத்தில் காணாமல் போன வைஷ்ணவிக்கு சில தகவல்கள் தெரியும் ஆனால் அவர் காணாமல் போய் விட்டதாகக் கூறுகின்றனர்.அவர் காணாமல் போனாரா?
காணாமலாக்கப் பட்டாரா? என்பது சந்தேகத்தை தந்துள்ளதாம். 
ஆக கள்ளழகர் வருகையை விட மதுரை ஆதினம் சுவாரசியமாகிவிட்டது.
                                    = = =

ஜப்பான் நாட்டில் ஹொக்கொய்டோ பகுதியில் அமைந்துள்ள டோமாரி அணுமின் நிலையத்தில் இயங்கிகொண்டிருந்த மூன்றாவது அணு உலை பழுதுபார்க்கும் பணிக்காக இப்போது மூடப்பட்டுள்ளது.
இப்போது ஜப்பான் அணு உலை ஒன்றுமே மின் உற்பத்தி செய்யவில்லை.மற்ற முறையிலான மின்சாரம்தான்.கடந்த 40 ஆண்டுகளில் இப்போதுதான் அணு மின்சாரமின்றி ஜப்பான் இயங்குகின்றது.
கடந்த ஆண்டுவரை, ஜப்பான் அதன் மின்சக்தி தேவையில் 30 வீதத்தை அணுமின் மூலமே பெற்றுவந்தது.
ஃபுக்குஷிமா அழிவைத் தொடர்ந்து, ஜப்பான் அதன் அணு உலைகளை பழுது பார்க்கும் தேவைக்காக படிப்படியாக மூடிவந்தது.ஜப்பானின் இந்த நடவடிக்கையை வரவேற்கும் முகமாக தலைநகர் டோக்யோவில்  நூற்றுக்கணக்கானவர்கள்,ஊர்வலம் ஒன்றை நடத்தினார்கள்.
சுரன்

மூடப்பட்டுள்ள அணுமின் நிலையங்களை மீள ஆரம்பிக்க வேண்டுமானால் அந்தந்த உள்ளூராட்சி நிர்வாகங்களின் அணுமதி பெறவேண்டும் என்கிற நிலை ஜப்பானில் உண்டு.
இதுவரை எந்த உள்ளுராட்சி நிர்வாகமும் அணு உலையை திறக்கஅனுமதி வழங்கவில்லை.
மேற்கு ஜப்பானிலுள்ள ஓஹி அணுமின் நிலையத்திலுள்ள இரண்டு உலைகள் பாதுகாப்பானவை என்றும், நாட்டில் நிலவும் மின்சாரப் பற்றாக்குறைப் பிரச்சனையைத் தீர்க்க அவற்றை மீள ஆரம்பிக்க வேண்டும் என்று அரசு கூறுகிறது.ஆனால் உள்ளூராட்சி நிர்வாக அதிகாரிகள் இன்னும் அதற்கான அனுமதியைதரவில்லையாம்.
ஜப்பான் பெரும் மின்சாரப் பற்றாக்குறை பிரச்சனையால் திண்டாட வேண்டிய நிலை ஏற்படும் என்று அரசு எச்சரித்துவருகிறது.ஆனாலும், மக்கள் விருப்பத்துக்கு எதிராக ஜப்பான்அரசு அணு உலைகளை திறக்கவும் தயாராக இல்லை.என்றும் தெரிகிறது.
                 = = =
புதிய மின்னணு சிப் கொண்ட கடவு சீட்டு[பாஸ்போர்ட்] சீனாவில் அறிமுகமாகி யுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சகம் எலக்ட்ரானிக் சிப்ட் கொண்ட இந்த கடவு சீட்டு பார்ப்பதற்கு, சாதாரணமான பழைய கடவு சீட்டுபோல் தான் இருக்கும்.
ஆனால் இந்த எலக்ட்ரானிக் சிப்செட் ஒருவருடைய பெயர், முகவரி, பிறந்த தேதி, வருடம், கைரேகைகள் ஆகிய அனைத்தையும் விலாவாரியாகக்கொண்டிருக்கும். இது மட்டும் இல்லாமல் இந்த எலக்ட்ரானிக் சிப் கடவு சீட்டில் லேசர் சைன் போன்று இன்னும் பல தொழில் நுட்ப வசதிகள் உள்ளது.
சுரன்

இந்த எலக்ட்ரானிக் சிப் கடவுசீட்டை உருவாக்க மூன்று ஆண்டுகள் கடுமையாக முயற்சித்துதயாரித்துள்ளதாக சீனாவின் பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இந்த மின்னணு சிப் கடவு சீட்டு மே 15-ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.தகவல் தொழில் நுட்ப உலகில் சீனா உலக அளவில் முன்னணியில் உள்ளது.,
__________________________________________________________________________________
உலகப் பார்வை:                                                                                     -சைமன் ரிஸ்டால்.
_________________
சூடான் எரிகிறது.
உலகம் கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கிறது. வடக்குதெற்கு எல்லையோரமாக பரவிக்கொண்டிருக்கும் மோதல்கள் முற்றுமுழுதான போர் மூளப்போகிறது என்பதை முன்னுணர்த்திக்கொண்டிருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை புதிய தடைகள் குறித்து தெளிவற்ற முறையில் பேசிக்கொண்டிருக்கிறது.
புதிய சுதந்திர தென்சூடானை "ஒரு எதிரி' என்று கார்ட்டூமின் பாராளுமன்றம் வர்ணித்திருக்கிறது. எண்ணெய்க் கிணறுகள் எரிகின்றன. பொதுமக்கள் மீது குண்டு வீச்சுகள் நடத்தப்படுகின்றன. பாரிய மனிதாபிமான நெருக்கடி தோன்றிக்கொண்டிருக்கிறது. ஆபிரிக்க ஒன்றியத்தின் பரிதாபத்திற்குரிய மத்தியஸ்தர் தபோ எம்பெகி தன்னால் பெரிதாக எதையும் செய்வதற்கில்லை என்று கூறுகிறார். தற்போதைய உலக நிலைவரங்களில் சூடான் நெருக்கடியின் பாரதூரத் தன்மையை எவரும் பெரிதாக நோக்குவதாக இல்லை. இது பெரிய அநியாயம். 
சுரன்

22 வருட கால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்து 2005 சமாதான உடன்படிக்கை செய்துகொள்ளப்படுவதை உத்தரவாதப்படுத்திய அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் நாடுகள்  அந்தநேரத்தில் மேற்கொண்ட பெருமளவு முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது தற்போது அந்த நாடுகள் சூடானின் இன்றைய நிலைவரம் தொடர்பில் கவனஞ்செலுத்தாமல் இருப்பது விசித்திரமானதாகும்.
கடந்த வருடம் தென் சூடான் பிரிந்துபோவதற்கு நேரடியாக வழிவகுத்த அந்த உடன்படிக்கை பெரும் ஆரவாரத்துடன் பாராட்டப்பட்டது. ஆனால் எண்ணெய் வளத்தைப் பகிர்ந்துகொள்வது எல்லை வரையறுப்பது போன்ற முக்கியமான பிரச்சினைகள் தொடர்பில் உடன்படிக்கையில் காணப்படக்கூடியதாக இருந்த குறைபாடுகளே தற்போதைய துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைக்கு வழிவகுத்திருக்கின்றன. சமாதானத்தில் தொடர்ந்தும் பற்றுறுதி கொண்டிருப்பதாக இரு நாடுகளுமே கூறுகின்றன. இன்னொரு போரை இந்த இரு நாடுகளினாலுமே தாங்கிக்கொள்ள முடியாது. ஆனால், எம்பெகியின் வார்த்தைகள் "அவர்கள் போரில் தாக்கத்திற்குள் அகப்பட்டிருக்கிறார்கள்'. 
தென் கோர்டோஃபான் மாநிலத்தில் எண்ணெய் உற்பத்தி செய்யும் ஹெக்லிக் பிராந்தியத்தை கடந்த வாரம் தென்சூடான் படைகள் ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து பெரும் மோதல்கள் மூளப்போகின்றன என்று தெரிவிக்கப்படும் எச்சரிக்கைகளுக்கும் அச்சமூட்டல்களுக்கும் குறைவில்லை.  மோதல்களை உடனடியாக நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கேட்டிருக்கிறார். இருதரப்பினரையும் ஒன்றாகக் கொண்டு வருவதற்கு எகிப்து மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை. இந்த மாதம் தென்சூடான் ஜனாதிபதி சல்வா கிர்ருக்கு பெய்ஜிங்கில் வரவேற்பளிக்கவிருக்கும் சீனா இடைநிறுத்தப்பட்ட எண்ணெய் உற்பத்தியை மீள ஆரம்பிக்க வைப்பதற்கு நாட்டம் கொண்டிருக்கிறது. வெளிப்பகட்டிற்கு நல்ல பிள்ளையாக தன்னைக் காட்டிக் கொள்கின்ற அதேவேளை, தென் சூடான் அரசாங்கத்திற்கு இஸ்ரேல்ஆதரவளிப்பதாக சந்தேகத்துடன் நோக்கும் ஈரானும் அமைதி காக்குமாறு இரு தரப்பினரையும் கேட்டிருக்கிறது.
சுரன்

ஆனால், சூடான் ஜனாதிபதி ஒமர் அல்பஷீரைப் போன்றே தென்சூடான் ஜனாதிபதி கிர்ரும் விடாப்பிடியாக இருந்து வருகிறார். பல தசாப்தகாலமாக இருதரப்பினருக்கும் இடையே நிலவிய பரஸ்பர அவநம்பிக்கை, மோதல்களின் விளைவான கொடூர உணர்வுகள் அமைதியைப் பேணுவது குறித்த அண்மைய சூளுரைகளை பயனற்றவையாக்கிக் கொண்டிருக்கின்றன. தனக்கு இடையறாது தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டிருப்பதால் என்னால் நித்திரை கொள்ள முடியவில்லையென்று கிர் கடந்த வாரம் வீம்புத்தனமாகக் கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது. "ஐ.நா. செயலாளர் நாயகம் தொடக்கம் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வரை என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட வண்ணம் இருக்கிறார்கள். ஹெக்லிக்கிலிருந்து உடனடியாக வாபஸ் பெறுமாறு உங்களுக்கு நான் உத்தரவிடுகிறேன் என்று பான் கீ மூன் எனக்குக் கூறினார். ஆனால், நானோ உங்களது கட்டளையின் கீழ் நான் இல்லை என்று அவருக்குக் கூறிவிட்டேன்' என்று கிர் கூறினார்.
சூடானில் எண்ணெய் வளத்தில் அரைவாசியை உற்பத்தி செய்யும் ஹெக்லிக் பிராந்தியத்தை விட்டு தென் பகுதிப் படைகள் வெளியேறிய பின்னர் மாத்திரமே தன்னால் மீண்டும் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கக்கூடியதாக இருக்குமென்று ஜனாதிபதி பஷீர் எகிப்திய வெளியுறவு அமைச்சருக்குக் கூறியிருக்கிறார். சூடானின் பாதுகாப்பு சுயாதிபத்தியம் மற்றும் உறுதிப்பாட்டை உத்தரவாதப்படுத்தக்கூடிய எந்தவொரு வழிமுறையிலும் ஹெக்லிக் ஆக்கிரமிப்புக்கு பதிலளிப்பதற்கான உரிமை தங்களுக்கு இருப்பதாக பஷீர் கூறியிருக்கிறார் என்று சூடானின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனம் அறிவித்தது. அவரின் அந்தக் கருத்து பெரியதொரு எதிர்த்தாக்குதலுக்கு சூடான் தயாராவதைத் தெளிவாக வெளிக்காட்டுகிறது. பஷீருக்கு மேற்குலகின் அனுதாபம் இல்லாவிட்டாலும் கூட அவர்களின் புரிந்துணர்வு ஒரு சொற்பமேனும் இருக்கிறது.
ஏனைய எல்லை தகராறுகளில் என்னதான் சரி பிழைகள் இருந்தாலும் ஹெக்லிக் பிராந்தியத்தை ஆக்கிரமித்து தென் சூடானின் செயல் நியாயப்படுத்த முடியாதது மாத்திரமல்ல, சர்வதேச சட்டங்களின் கீழ் சட்டவிரோதமானதுமாகும் என்ற அபிப்பிராயத்தையே ஆபிரிக்க ஒன்றியம், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஐ.நா.  மற்றும் ரஷ்யா ஆகிய சகல தரப்பும் கொண்டிருக்கின்றன என்று சூடான் விசன் செய்திச் சேவைக்கு அந்நாட்டு இராஜதந்திரி  காலிட் அல்முபாரக் கூறியிருக்கிறார்.  "சர்வதேச நடுவர் தீர்ப்பின் மூலமாக சூடானிய பிராந்தியமொன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பகுதி மீதான இந்தத் தாக்குதல் இந்த நாடுகள் சகலதுமே கண்டனம் செய்கின்றன. 2005 சமாதான உடன்படிக்கையை முழுஅளவில் நடைமுறைப்படுத்தும் முகமாக கையெழுத்திட்டு உத்தரவாதம் தந்த நாடுகளின் ஆத்திரத்தை இது எங்களுக்கு நினைவுபடுத்துகிறது. ஆனால், இப்பொழுது அந்த உத்தரவாதத்தைத் தந்த நாடுகள் எங்கே போய்விட்டன?' என்று முபாரக் எழுதியிருக்கிறார் .

மெதுமெதுவான ஆரம்ப பிரதிபலிப்புகளுக்குப் பிறகு, கார்ட்டூமில் சீற்றம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. கிர் மேற்கொண்ட முட்டாள் தனமான நடவடிக்கையின் மூலமாக தோன்றிய சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதில் பஷீருக்கு நெருக்கமான ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் அக்கறையாக இருக்கிறார்கள். இவர்கள் பஷீர் தன்னைத்தானே தவறான இடத்தில் மாட்டுப்பட வைத்துவிட்டதாக நம்புகிறார்கள். சூடான் இரண்டாகப் பிளவுபடுவதையும் எண்ணெய் வளத்தில் தங்கியிருந்த பொருளாதாரம் கவலைக்குரிய வகையில் தரங்குறைக்கப்பட்டுவிட்டதையும் கண்ணுற்ற கடந்த வருடத்தின் நிகழ்வுகளினால் ஏற்பட்ட அவமதிப்புக்கு பழிவாங்வதற்கான ஒரு வாய்ப்பாக தற்போதைய நெருக்கடியை அவர்கள் நோக்குகிறார்கள்.
அத்துடன், பஷீரின் பலவீனமான தலைமைத்துவக்கு ஆதரவைத் திரட்டுவதற்கான வாய்ப்பையும் இந்த நெருக்கடி தோற்றுவித்திருக்கிறது. தெற்கின் "ஆக்கிரமிப்பை' முறியடிப்பதற்கு நாடுபூராகவும் மக்களை அணிதிரட்டுமாறு இந்த வாரம் சூடான் உப ஜனாதிபதி அலி ஒஸ்மான் முஹமட் தாஹா அழைப்பு விடுத்திருந்தார். சாதிக் அல்மஹ்தியின் இஸ்லாமியவாத  உம்மா கட்சியும் பஷீருக்கான ஒருமைப்பாட்டை வெளிக்காட்டியிருக்கிறது.
ஹெக்லிக்கில் தென் சூடானின் படைகள் மீது நேரடியான தாக்குதல் என்பதாக மட்டுப்படுத்தப்படாமல் அதற்கப்பாலும் கார்ட்டூமின் பதிலடி விரிவடையக் கூடும். ஹெக்லிக்கில் இருந்து மேற்கே 100 மைல்களுக்குகப்பால் தென் டார்ஃபரில் கடந்த புதன்கிழமை மோதல்கள் இடம்பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. இந்த டார்ஃபர் பிராந்தியத்தில் இனக் குழுமங்களுக்கிடையிலான வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஐக்கிய நாடுகள் சபை கடந்த பத்து வருடங்களை செலவிட்டிருந்தது. சர்ச்சைக்குரிய அபேயி பிராந்தியம் மீதான தனது கட்டுப்பாட்டை பலப்படுத்துவதற்கான நகர்வுகளிலும் பஷீர் ஈடுபடக்கூடும். இந்த அபேயி பிராந்தியத்தின் கைமாற்றத்தையே ஹெக்லிக் மீதான தனது படையெடுப்புடன் தென்சூடான் ஜனாதிபதி கிர் தொடர்புபடுத்துகிறார். அபேயியில் வடக்கு திரட்டல் படைகள் புதிதாகக் குவிக்கப்படுவதாக இவ்வாரம் ஐக்கியநாடுகள் சபை அச்சம் தெரிவித்திருந்தது.
சுரன்

தென் கோர்டோபானுக்கும் பாஃர் எல்காசாலுக்கும் இடையேயான எல்லையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் 22 படை வீரர்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் சூடானின் ஆதரவுடன் தென் கோர்டோபானிலும் மேற்கே புளூ நைல் மாநிலத்திலும் இடம்பெறுகின்ற ஆயுதக் கிளர்ச்சிகள், நீதி மற்றும் சமத்துவ இயக்கத்தின் டார்பர் கிளர்ச்சியாளர்களுக்கும் வடக்கிலுள்ள எஸ்.பி.எல்.எம். இயக்கத்திற்கும் இடையேயான புதிய கூட்டு ஆகியவை எல்லாம் சேர்ந்து வடக்கிற்கும் தெற்கும் இடையேயான முழு எல்லையை தீப்பற்றி எரியக்கூடிய அபாய நிலை தோன்றிக்கொண்டிருக்கிறது. எந்த நேரத்திலும் முழு அளவிலான போர் வெடித்துவிடுமோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது.
இறுதியாக நடந்த சூடான் போரில் 20 இலட்சம் பேர் மாண்டதாகக் கணிப்பிடப்பட்டிருக்கிறது. இன்னொரு போர் மூள அனுமதிக்கப்படுமேயானால் அதனால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகள் பாரதூரமானவையாக இருக்கும். சிரியாவில் தற்பொழுது இடம்பெற்றுக்கொண்டிருக்கம் உயிரிழப்புகள் இதனுடன் ஒப்பிடும் போது அற்பமாகத் தெரியக்கூடும். இந்த  அபாயகரமான நிலையைத் தடுக்க சர்வதேச சமூகம் விழித்தெழாத பட்சத்தில் இரு சூடான்களுமே அருகருகாக அமைதியாக வாழ முடியுமென்ற கனவை இன்னொரு சந்ததியும் இழந்துவிடக்கூடும்.
நன்றி: தி கார்டியன்
_____________________________________________________________________________________________சுரன்



Related Posts Plugin for WordPress, Blogger...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?