சில கோரிக்கைகள்''''''''''''''''''''''''''''''''''''''''


திமுக வினர் மீது மட்டும் குறி வைத்து 2006-2011 வரையிலான நில அபகரிப்பு வழக்குகளை காவல்துறை போடுவதாக கருணாநிதி வருந்தியள்ளார்.அவர் வருத்தம் நியாயமானதுதான்.அது என்ன 2006-2011 அதற்கு முன்னரும் -பின்னரும் தமிழ் நாட்டில் நில அபகரிப்பு நடந்ததில்லையா?நமது அம்மா மீதே சிறுதாவூர்,கொடை நாடு ,சிப்காட் நிலம் என்று கொட்டிக்கிடக்குதே.
சுரன்

திமுக வினர் நில அபகரிப்பு மட்டுமே சட்ட விரோதம் என்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரலாமே.அதற்கான பெரும்பாண்மை அதிமுகவிடம் இருக்கிறதே.
அல்லது மம்தா கம்யூனிஸ்டுகளை திருமணம் செய்யக்கூடாது என்று தீர்மானித்து அறிவித்தது போல் திமுகவினரிடம் யாரும் நிலம் விறக கூடாது .அப்படி விற்றால் அது நில அபகரிப்பாகத்தான் கருதப்படும் என்று அம்மாவும் அறிவித்து விடலாமே.
அதன் பின் இப்படி கருணாநிதி வருந்தவேண்டிய சூழல் இராதே.
#
மதுரை, வில்லாபுரம் வீட்டு வசதி வாரியம் அருகேஅரசு வழங்கிய இலவச  அரிசி,குப்பையில் குவியாலாகக் கொட்டப்பட்டுள்ளது.நியாயவிலை அரிசியை வாங்காதவருக்கு இலவச அல்லது விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி கிடைக்காது என தெரிவித்ததால், சிலர் அரிசியை வாங்கிபட்டை தீட்டி கர்நாடக பொன்னி என பெயரிட்டுவிற்கும் கும்பலிடம்தரும் விலைக்கு விற்று விடுகின்றனர்.பள,பளப்பு ஏற்றைய அரிசி கிலோக்கு 34 ரூபாய் வரை விற்கப்படுகிறது. 
சுரன்


இந்த கடத்தல் கும்பல் பதுக்கி வைக்கும் அரிசி மூட்டைகள், சிலசமயம் கெட்டு விடுகிறது.அப்போதுஅந்த அரிசியை, குப்பையில் கொட்டி விடுகின்றனர்.அது போல் கொட்டப்பட்ட, 100 கிலோ ரேஷன் அரிசி குப்பையில் குவிந்து கிடந்தது. அரிசியில்பூஞ்சான் காணப்பட்டது. 
வருமானம் போதாத நிலையில் வாழ்பவர்கள் கூட இப்போது நியாய விலைக்கடை அரிசியை உண்பது கிடையாது.அந்த நிலையில் இலவசமாக அரிசி கொடுத்து வருவது அரிசி கடத்தல்காரர்களுக்குத்தான் உபயோகப்படுகிறது.தூத்துக்குடி பகுதியில் சில கிடங்குகளில் இலவச அரிசி பதுக்கி வைக்கப்பட்டு மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு மலிவு விலை பொன்னி அரிசி என்ற பெயரில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அனைத்தும் அரசுக்கு தெரிகிறது.ஆனால் நடவடிக்கை மட்டும் தான் கிடையாது.
இலவசங்களால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை.கடத்தல் காரர்களுக்கும்,அரசியல் வாதிகள் வாக்கு வாங்கவும் தான் பயன் படுகிறது.
நம் மக்களும் காங்கிரசு ஆட்சிக்காலத்தில் கூடையுடன் தனியார் ரேசன் கடையில் காத்துக்கிடந்து கல் நிறைந்த குண்டு அரிசியை வாங்கியதையும்,1972 இல் தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாற்றமடிக்கும் அரிசியை சமைத்து உண்டதையும் மறந்து விட்டார்கள்.
@

இப்போது இந்திய அரசியலில் உள்ள ஒரே தலைப்பெழுத்து குடியரசுத்தலைவர் தேர்தல்தான்.அப்துல் கலாமில் இருந்து அன்னக் காவடி பெயர்வரை அவரவர் வசதிக்கேற்ப பெயர்களை முன் மொழிந்து முடிந்தவரை குழப்பி வருகின்றனர்.
சுரன்

இதற்காக கருணாநிதியையும்,ஜெயலலிதாவையும்,மம்தாவையும் காங்கிரசு,பாஜக கட்சியினர் கட்டுச்சோறு கட்டி வந்து பார்த்து பேசிவிட்டு சென்றுள்ளனர்.மக்களவை உறுப்பினர் அதிகம் இல்லை என்றாலும் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் ஜெயலலிதா முக்கியமான இடத்தைப் பெறுகிறார்.
அதுவல்ல இப்போது .குடியரசுத்தலைவர் தேர்தல் பற்றி ஒடீசா முதல்வர் நவீன் பட்நாயக்குடன் நமது முதல்வர் பேசும் போது குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சொல்லும் வேட்பாளரக்கு தான் ஆதரவை தருவதாகவும்,ஆனால் காங்கிரசு,பாஜக இரண்டுக்குமே வரும் தேர்தலில் தனிப் பெறும்பான்மை கிடைக்காத நிலைதான் தற்போது உள்ளது.அப்படியானால் பிரதமர் வேட்பாளருக்கு தனது பெயரைத்தான் முன்னெடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா நவீனிடம் ஒப்பந்தம் பேசியதாக தெரிகிறது.நவீனும் தலையை ஆட்டி விட்டு சென்றுள்ளார்.
எப்படியோ அடுத்த பிரதமர் தமிழராக இல்லாவிட்டாலும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவராக இருப்பார் என்று நம்புவோமாக.
________________________________________________________________

நம்ம ஊரு போல ரேசன் கடை வரிசை.கால்வலியை தனிக்கும் சிறுமிகள
இது இஸ்லாமாபாத் [பாகிஸ்தான்]
சுரன்
நேபாளம் -காத்மான்டில் ஆக்கிரமிப்பு வீட்டை அதிகாரிகள் இடித்து தள்ளியதால் சாலையில் தவிக்கும் சிறுவன்.
சுரன்
மே-5 இல் நிலவு பூமிஅருகே வந்த போது ஜோர்டானில் எடுக்கப்பட்ட படம்.

சுரன்
எகிப்து போராட்டம் போது கெய்ரோவில் பீரங்கிகளுக்கிடையே பயணம்.
சுரன்


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?