"முதல்வன்" - உண்மையாக்கிய மம்தா.


மேற்குவங்கத்தில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து மம்தாவின் ஓராண்டு நிறைவு சாதனையை முன்னிட்டு மாநிலம் முழுவதையும்நீல வண்ணத்தில் மாற்ற மம்தா விரும்புகிறாராம் இதற்கான தடல்புடல் ஏற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளது.மாயாவதி சாலை முழுக்க யானை சிலைகளை அமைத்து மக்கள் பணத்தி காலி செய்தது போல் மரம்,செடி,அரசு கட்டிடங்கள் அனைத்தையும் நீலமாக மாற்ற பணம் ஒதுகப்பட்டுள்ளது.
டாடா தொழில் நிறுவனம் நடத்துவதற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீட்டு விவசாயிகளிடம் ஒப்படைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தார்.ஆனால் இதுவரை இழப்பீடு வாங்க மறுத்து போராடிய வர்களுக்கு கூட நிலத்தை திரும்ப அரசு கொடுக்கவில்லை.
சுரன்

ஆங்கில பத்திரிகை தடை, டி,வி., செய்தி சேனல்களை பார்க்க வேண்டாம், பொழுதுபோக்கு சேனல்களை பார்க்க வேண்டும் என அதிரடி சட்டங்களை போட்டார். 
மார்க்சிஸ்ட் கட்சியினர் வீடுகளில் பெண் எடுக்கவோ,கொடுக்கவோ கூடாது,அவர்களை தேநீர் கடைகளில் பார்த்தால் கூட முகத்தை திருப்பிக்கொள்ள் வேண்டும்.என்று கட்சித்தொண்டர்களுக்கு ஆணையிட்டுள்ளார்.
மம்தாவை கேலிச்சித்திரமாக வரைந்த பேராசிரியர் ஒருவர் தாக்கப்பட்டதுடன் சிறையிலும் அடைக்கப்பட்டார்.கலாட்டா செய்த
கட்சிக்காரர் கைதுஆனதும் சிறைக்கு மம்தாவே நேரில் சென்று காவலர்களை திட்டி விட்டு கைதியை வெளியே கூட்டிவந்து பரபரப்பாக்கினார்.
இதற்கிடையில் மாநிலம் முழுவதும் நீலவண்ணமாக்கிட உத்தரவிட்டுள்ளார். முதல் கட்டமாக கோல்கட்டா முழுவதும் நீலமாகிறது. படிப்படியாக இந்த பணிகள் மாநி,லம் முழுவதும் தொடரும் . மரங்கள்,[இலைகள் பச்சையாக அல்லவா இருக்கும்] சாலையோர தடுப்புச்சுவர் , பூங்காக்கள், அரசு வாகனங்கள் என அனைத்தும் நீல வண்ணமாகி விட்டது. 

அதை விட ஒரு விடயம் கொல்கட்டாவில் நடந்துள்ளது.படிக்கும் போது "முதல்வன்" பட ரகுவரன் நினைவுதான் வந்தது.உங்களுக்கும் வரலாம்.
சுரன்
தனியார் ஆங்கில "டிவி' சேனல் ஒன்றில், மம்தா -மாணவர்கள்விவாத நிகழ்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேற்கு வங்க முதல்வராக மம்தா பொறுப்பேற்று, ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது குறித்து, இந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது, தொகுப்பாளரும், மாணவர்களும் கேட்ட கேள்விகளுக்கு, துவக்கத்தில் பொறுமையாகவும், பதில் அளித்து வந்த மம்தா. சிறிது நேரத்துக்கு பின், மம்தா குறித்து கார்ட்டூன் வரைந்த ஜாதவ்பூர் பல்கலை பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ரா கைது செய்யப்பட்டது குறித்தும், மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்தும், மாணவர்கள் சரமாரியாக கேள்வி கேட்டதால், கடும் கோபம் கொண்டார்.

"கார்ட்டூனை வெறுப்பவள் அல்ல நான். அதை அதிகமாக விரும்புவேன். ஆனால், பேராசிரியர் அம்பிகேஷ் வரைந்தது கார்ட்டூன் அல்ல. அவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். என்னைப் பற்றி கிண்டலாக கார்ட்டூன் வரைந்து, அவற்றை, 60 பேருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார். என்னிடம்இதற்கு ஒப்புதல் பெறவில்லை. இவரை கைது செய்தது எப்படி தவறாகும்' என எதிர்கேள்வி கேட்டார். கார்ட்டூன் விவகாரத்தை பற்றி, இன்னொருமாணவியும் கேள்வி கேட்க மம்தாவேகமாக, மேடையில் இருந்து எழுந்து, அந்த மாணவியை நோக்கி,
"நீயும் மாவோயிஸ்ட் அல்லது மார்க்சிஸ்ட் தான். ஜாதவ்பூர் பல்கலையை சேர்ந்த மாணவர்களை மட்டும், இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தது ஏன்? வேறு மாணவர்களை ஏன் அழைக்கவில்லை?' என,தொலைக்காட்சி அமைப்பாளரைப் பார்த்துகோபத்துடன் பேசினார்.
நிகழ்ச்சியில்தொடர்ந்து, மேற்கு வங்கத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறதஏன்று, மாணவர் ஒருவர் கேட்ட கேள்வியால்,முகம் சிவக்க கோபத்தின் உச்சிக்கே சென்ற மம்தா. "பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரித்து விட்டதாக, பொய் பிரசாரம் செய்கின்றனர். மாவோயிஸ்டுகளுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் தொடர்பு உள்ளது. அவர்கள் தான், இந்த பிரசாரத்தை மேற்கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவரும், மாவோயிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் தான். அதனால் தான், இப்படிப்பட்டகேள்விகளையே கேட்கின்றனர்' என, குற்றம் சாட்டிவிட்டுடிருக்கையில் இருந்து எழுந்து"டிவி' நிகழ்ச்சிஒளிப்பதிவில் இருந்து, பாதியிலேயே வெளியேறிவிட்டார்.போகும் போதும் நிகழ்ச்சியாளர்களையும் ,மாணவர்களையும் திட்டிக்கொண்டே சென்றார் மம்தா. 
ரகுவரன்-அர்ஜுன் தொலைக்காட்சி பேட்டி "முதல்வன்"பட சம்பவம் உண்மையாகிவிட்டது.
சுரன்
விலைவாசி உயர்வை பார்த்துக்கொண்டு நான் சும்மா இல்லை.என்றார் பிரணாப்.உண்மைதான்.பார்த்தால் தெரிகிறது.
_____________________________________________________________________________
சுரன்


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?