பழைய மோசடி -புதிய பதிவு

இந்த பெட்ரோல் விலைஉயர்வு பற்றிஒவ்வொரு முறை விலை உயர்வின் போதும் மத்திய அரசும் எண்ணை நிறுவனங்களும் மக்களை ஏமாற்றியே பொதுவாக தவிர்த்திருக்கக்கூடியது தான்.என்று பல குறிப்புகளுடன் பதிவுகளை வெளியிட்டு வருகிறோம்.
அதன் வரிசையில் இதுவும் ஒன்றுதான்.பழைய மோசடி-ஆனால் புதிய பதிவு.
பெட்ரோல் விலை உயர்வுக்கு இரண்டு காரணங்களை இந்திய அரசு கூறுகிறது. 
சுரன்
(1) இந்திய அரசின் பெட்ரோலிய நிறுவனங்கள் தொடர் இழப்பைச் சந்திக்கின்றன. குறிப்பாக கடந்த 2012 மார்ச்சு 31 கணக்கின்படி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.6.28 இழப்பை இந்நிறுவனங்கள் சுமக்கின்றன. 
(2) அமெரிக்க நாணயமான டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு பெருமளவு சரிந்துவிட்டதால் இறக்குமதியாகும் கச்சா எண்ணெய் விலை ரூபாய் மதிப்பில் உயர்ந்துவிட்டது.
 
முதலாவதாக எண்ணெய் நிறுவனங்கள் இழப்பில் இயங்குகின்றன என்பது அப்பட்டமானப் பொய் ஆகும். மக்களை ஏமாற்றும்மோசடியான கணக்கீட்டுமுறையினால் அரசின் எண்ணெய் நிறுவனங்கள் இழப்பில் இயங்குவதாக பொய்க்கணக்கு காட்டப்படுகிறது. இதனை இந்திய அரசு நியமித்த நரசிம்மம் குழுவும், நாடாளுமன்ற நிலைக்குழுவும் தெளிவாக அறிவித்துள்ளது.

 
இந்தியாவிற்குள் உற்பத்தியாகும் கச்சா எண்ணை உள்பட அனைத்துமே வெளி நாட்டிலிருந்து இறக்குமதியாவதாகக் கணக்கில் ஏமாற்றுகணக்கு காட்டப்படுகின்றது. அமெரிக்க டாலர் மதிப்பில் அனைத்து எண்ணெயும் இறக்குமதியானதாக கற்பனையாகக் காட்டப் படுகிறது. அதற்கு கப்பலில் கொண்டுவந்ததற்கான கட்டணம், கடல் வழியில் கப்பலில் கொண்டு வரும்போது கசிந்த கழிவு. பிறகு ஏற்றுவதற்கும் இறக்கு வதற்குமான செலவு கணக்குஎன்று கூட்டிச்சேர்த்துதான் கச்சா எண்ணெயின் அடிப்படை விலை தீர்மானிக்கப்படுகிறது. 
இந்த கணக்கீட்டின் வழியிலேயே கூட எண்ணெய் நிறுவனங்களுக்கு கொள்ளை இலாபம் கிடைக்கிறது. ஆனால் இந்த இலாபத்தை மறைத்து நட்டம் ஏற்படுவதாக பொய்யாகக் கணக்குக் காட்டப்படுகிறது. அரசு அமைத்த ஆய்வுக் குழுக்களே இதை பகிரங்கமாக எடுத்துக்கூறிவிட்டன.
சுரன்

உண்மையில் ஆண்டுதோறும் இந்நிறுவனங்கள் அரசுக்கு கோடிகோடியாய் இலாப ஈவுத் தொகையை வழங்கிவருகின்றன.அதை தங்கள் வரவு-செலவு அறிக்கையில் விளம்பரப்படுத்தவும் செய்கின்றன.
 
கற்பனையான இறக்குமதியையும் அடிப்படையாகக் கொண்டு கச்சா எண்ணெயின் விலை தீர்மானிக்கப்படும்போது, அதில் ஏற்படும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி என்ற காரணியும் மக்களை ஏமாற்றஅரசின்மற்றொரு ஏமாற்று வேலைதான். 
மேற்கண்டவாறு எண்ணெயின் அடிப்படை விலையைத் தீர்மானிப்பதில் மோசடியான கணக்குமுறை ஒருபுறம் செயல்படுகிறதென்றால் மறுபுறம் பெட்ரோல் டீசல் மீதான அரசின் வரிவிதிப்புதான் விலையேற்றத்திற்கு முக்கியக் காரணம்.
சுரன்

பெட்ரோல்விலை இப்போதைய உயர்வுக்குப் பிறகு லிட்டருக்கு ரூ.77.53 -ல்  ரூ.45.75 பெட்ரோல்மீது இந்திய, தமிழக அரசுகள் விதிக்கும் வரித் தொகை யாகும்.பெட்ரோல் மீது இந்திய அரசு விதிக்கும் சுங்க வரி, உற்பத்திவரி, மேல்வரி, கல்விவரி ஆகியவை மொத்தம் 32 விழுக்காடு மாநில அரசின் விற்பனை வரி 27 விழுக்காடுஆகும்.
 
பெட்ரோல்விலை உயர்வு என்பது ஒருவகையில் இந்திய அரசுக்கு கூடுதல் வருவாய்க் கிடைக்க வழி ஏற்படுத்திக்கொடுக்கிறது. கடந்த நிதியாண்டில் பெட்ரோலியப் பொருட்கள் மீது இந்திய அரசுக்கு கிடைத்த வரி வருவாய் மட்டும் 1 இலட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயாகும். 
இந்த வரிகளை அரசுகள் பாதியாக்கினாலே பெட்ரோல் விலை உயர்வை தவிர்க்கமுடியும்.மக்களை தவிக்கவும்விட வேண்டாம்.
சுரன்
 
தமிழ்நாட்டில் காவிரிப்படுகையில் அமைந்துள்ள நரிமணம், அடியக்கமங்கலம், புவனகிரி, கோயில்களப்பால் ஆகிய இடங்களில் மொத்தம் 28 எண்ணெய், எரிவாயு கிணறுகள் இருக்கின்றன. இவற்றிலிருந்து ஆண்டுதோறும் 40 ஆயிரம் கிலோலிட்டர் பெட்ரோலும், 1.20 இலட்சம் கிலோலிட்டர் டீசலும் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் பெட்ரோல் நுகர்வு ஆண்டுக்கு 1.20 இலட்சம் கிலோ லிட்டர் ஆகும் டீசல் நுகர்வு ஆண்டுக்கு 3.60 இலட்சம் கிலோ லிட்டர் ஆகும்.
சுரன்

உலகசந்தையில்கச்சா எண்ணை உயர்வு என்று நம் இந்தியாவில் உற்பத்தியாகும் கச்சா எண்ணையையும் வெளியே வாங்கியதாகமக்களை ஏமாற்றும் அரசு பெட்ரோல் விலையைகுறைக்க முடிந்தும் செய்யாததன் காரணம் .பகாசுரதனியார்பெட்ரோலிய நிறுவனங்கள் கொள்ளையடிப்பதை பாதுகாக்கத்தான்.அம்பானி ,அனில் அகர்வால் உட்படபகாசுர தனியார் நிறுவனங்கள் லாபத்தில் குறைவு வந்திடக்கூடாது என்பதால்தான் மக்கள் நலன் போனாலும் கூட பரவாயில்லை என்ற கணக்கில் மன்மோகன் -சோனியா அரசு செயல்படுகிறது.
சுரன்


இதனால் விலைவாசி உயர்வு,பணவீக்கம் ,பணமதிப்பு குறைவு போன்ற கேடுகள் வந்தால் கூட பரவாயில்லை மக்களுக்கு விரோதமாகவே முடிவுகள் எடுக்கும் செயல்படும் சோனியா அரசை அந்த மக்கள்தான் கவனிக்க வேண்டும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?