புகை நமக்கு பகை.


இன்று புகையிலை எதிர்பு நாள்,

புகைக்கப் புகைக்க சுகமாக இருந்து, புற்று நோய்க்குக் கூட்டிச் செல்வது தான் புகைப்பழக்கம். இந்தியாவில் புகை யிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதி கரித்துக் கொண்டே போகிறது. புகைப்பிடிப் பவர்கள் தங்களுடைய உடல் நலத்தையும் கெடுத்துக் கொள்வதோடு, அருகில் உள்ள வர்களின் உடல்நலத்தையும் சேர்த்துக் கெடுக் கின்றனர்; சுற்றுச்சூழலையும் சீரழிக்கின்றனர்.“அபாயகரமான பொருள்” என்று எச்ச ரிக்கை வாசகத்தோடு சிகரெட், பாக்கு உள் ளிட்ட போதைப் பொருட்களை உற்பத்தி செய்ய அனுமதிக்கிறது மத்திய அரசு.
சுரன்

கடைகளில் “அபாயகரமான போதைப் பொருள்” என்ற எச்சரிக்கை அட்டையை வைத்துவிட்டுத் தயக்கமின்றி விற்பனை நடைபெறுகிறது. புகையிலைப் பழக்கத்தின் பிடியில் சிக்கிய வர்கள் அந்த எச்சரிக்கையைப் பொருட்படுத் தாமல் சிகரட், பீடி, ஹான்ஸ், மாவா, பான் பராக் என வாங்கி பயன்படுத்துகின்றனர்.இந்தியாவில் ஆண்டுதோறும் இறந்து போகிறவர்களில் 9 லட்சம் பேர் புகையிலை அடிமைகளானவர்கள். அதாவது நாள்தோ றும் 2,500 பேர்!
வறுமை, பஞ்சம் பட்டினியிலும், கலவரங்களிலும், இயற்கைச் சீற்றத்திலும் கூட இவ்வளவு பேர் மடிவதில்லை.இந்திய அரசுக்கு புகையிலை வர்த்தகத் தால் ஆண்டுக்கு 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. அதே நேரத் தில், புகையிலைப் பொருட்களை பயன்படுது வதால் ஏற்படும் நோய்களுக்கு பொதுமக்கள் 37 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவிடு கின்றனர் என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக் கிறது. தனிமனிதரின் பொருளாதாரம் திட்ட மிட்டே சீரழிக்கப்படுவதோடு, மனித வளம் வீணடிக்கப்படுகிறது.
சுரன்

ஒரு புறம் காடுவளர்ப்பு, வனப்பாதுகாப்பு என்று பேசிக் கொண்டி ருக்க, 2 லட்சம் ஹெக்டேர் காடுகளும், அதனை சார்ந்த நிலங்களும், புகையிலை பயிரிடுவதற்காக என அழிக்கப்பட்டுள்ளன.புகையிலையை மூன்று வகைகளாக பிரிக்கலாம். புகைக்கும் புகையிலை (பீடி, சிகரெட், சுருட்டு, ஹூக்கா), மெல்லும் புகை யிலை (வெற்றிலையுடன் புகையிலை, ஹான்ஸ், சைனிகைனி, பான்பராக், மாவா, மாணிக் சந்த் உள்ளிட்ட குட்கா வகைகள்), நுகரும் வகை (மூக்குப்பொடி).மெல்லும் வகை புகையிலை பொருட் களில் 3,000 வகையான நச்சுப் பொருட்கள் உள்ளன. புகைக்கும் வகையிலான புகை யிலை பொருட்களில் 4 ஆயிரம் வகையான நச்சுப் பொருட்கள் இருக்கின்றன.இவற்றுள் ஹெக்சாமின் (தீப்பெட்டியில் உள்ள உரசும் பகுதி), நெட்ரோ பென்சீன் (பெட்ரோலில் உள்ள நச்சுப் பொருள்), அம் மோனியாக (தரை, கழிவறையை சுத்தப்படுத் தும் திரவம்), பினாயில் (பூச்சிக்கொல்லி), காட்மியர் (கார் பேட்டரியில் பயன்படுத்தப் படும் திரவம்), மீத்தேன் (பெட்ரோலியம் வாயு), எத்தனால் (ஆல்கஹால்), அசெட்டோன் (நகப்பூச்சு சுத்தப்படுத்தும் திரவம்), நாப்தலின் (ரசகற்பூரம்), ஸ்டீரிக் அமிலம் (மெழுகு தயா ரிக்க பயன்படும் அமிலம்), ஹைட்ரசன் சையனடு (விஷம்), கார்பன் மோனாக்சைடு (வாகனங் களில் இருந்து வரும்புகை) உள்ளிட்ட 200 வகையான நச்சுப் பொருட்கள் மிக ஆபத்தா னவை.
சுரன்

ஏனெனில் அவை புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டவை.
இந்த புகையிலை பொருட்களை பயன் படுத்துவதால் வாய், தலைமுடி, உடைகள், கைகளில் துர்நாற்றம் வீசுகிறது. பல் மற்றும் கைகளில் கரைபடிகிறது. கண்களை சுற்றி சுருக்கங்கள் உருவாகி மனிதனின் அழகுத் தோற்றத்தைச் சீர்குலைக்கின்றது. நுரையீரல் கோளாறும், மூச்சுத்திணறலும் ஏற்படுகிறது. வாய், குரல்வளை, நுரையீரல், மூச்சுக்குழாய், உணவுக்குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீரகம், கணையம், கர்ப்பப்பை வாய் ஆகிய அங்கங் களில் புற்றுநோய்கள் உருவாகிறது. வாய், குரல்வளை, நுரையீரல் பகுதிகளில் வரும் புற்றுநோய்க்கு 90 விழுக்காடு புகையிலைப் பழக்கமே காரணமாக உள்ளது.புகையிலை பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தும் போது இதயம், ரத்தக்குழாய் தொடர்பான நோய்களை தீவிரமாகிறது. புகையிலை பயன்படுத்துவோரில் பெரும்பாலா னோர் மாரடைப்பால் மரணமடைகின்றனர். புகையிலை தொடர்ந்து பயன்படுத்தும் போது ஆண்மை குறைவு, சக்தி இழப்பு ஏற்பட்டு இனப்பெருக்க கோளாறுகள் உருவாகின்றன.புகை பிடிப்பவர்களுக்குப் பக்கத்தில் இருப்பவர்களுக்கு நுரையீரல், மூக்கில் நீர்கோர்த்துக் கொள்வது, புற்றுநோய், மார டைப்பு, கண், மூக்கு, தொண்டையில் எரிச்சல் ஆகிய பாதிப்புகள் உண்டாகின்றன.
சுரன்


குழந்தை களுக்கு மூச்சுத் திணறல், காய்ச்சல், ஆஸ் துமா, வளர்ச்சி குறைவு, அறிவு வளர்ச்சி குறைவு, மூளைவளர்ச்சி குறைவு, எடை குறை வாக பிறத்தல் போன்றவை ஏற்படுகின்றன. நிக்கோடின் என்ற, மூளையை அடிமைப் படுத்தும் பொருள் புகையிலையில் உள்ளது. இது கஞ்சாவை விட பல மடங்கு அடிமைப் படுத்தும் சக்தி வாய்ந்தது. 60 மில்லி கிராம் நிகோடினை ஒரே நேரத்தில் உட்கொண்டால் ஆரோக்கியமான மனிதன் சட்டென்று இறந்து விடும் அபாயம் இருக்கிறது. சராசரி மனிதர் களோடு ஒப்பிடும்போது புகைப்பழக்கம் உள்ளவர்களின் ஆயுட்காலம் 26 ஆண்டு கள் வரை குறைகிறது. ஒவ்வொரு சிகரெட்டி னாலும் புகை பிடிப்போருக்கு வாழ்நாளில் 14 நிமிடங்கள் குறைகிறது... பாதிப்புகளின் பட்டியல் ஊர்வலமாய் நீள்கிறது.மத்திய பிரதேசம், கேரளம் ஆகிய இரு மாநிலங்களிலும் மெல்லும் வகை புகையி லைப் பொருட்களுக்கு அந்த மாநில அரசு கள் தடை விதித்துள்ளன. அதேபோன்ற தடையை தமிழகத்திலும் கொண்டு வர வேண் டும் என புகையிலை விழிப்புணர்வுப் பிரச் சாரத்தில் ஈடுபடுவோர் கோருகின்றனர். புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட் களைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் சட்டங்கள் என்னவோ இருக்கத்தான் செய்கின்றன. அந்தச் சட்டங்களை மாநில அரசு கறாராக செயல்படுத்த வேண்டும்.
சுரன்


மக்களின் ஆரோக் கியத்தோடும், சமுதாயத்தின் வளத்தோடும் சம்பந்தப்பட்ட இந்தப் பிரச்சனையில் மத்திய மாநில அரசுகள் முழு அக்கறை செலுத்தி மக் களிடைய தீவிரமான விழிப்புணர்வுப் பிரச் சாரத்தை எடுத்துச் செல்ல வேண்டும். புகை யிலை போதையின் பிடியில் மாட்டிக்கொண் டவர்கள் அதிலிருந்து விடுபடும் சுய போராட் டத்தை தங்கள் மனதிலேயே நடத்தி போதை பழக்கத்தில் இருந்து மீள முன்வர வேண்டும்.
முன்பு திரைப்படங்களில் மது,அருந்துவது புகைப்பது வில்லன்களை சித்தரிப்பதற்காகவும்.கதாநாயகன் கெட்ட பழக்கங்கள் அறவே இல்லாதவனாகவும் காட்டப்பட்டனர்.
இப்போதைய படங்களில் புகைப்பது மட்டுமல்ல,மது அருந்துவதும் தவறில்லை என்பது போல் கதாநாயகனே நடிப்பது மிக தவறான செயலாகும்.அதை தடை செய்வது புதிதாக இளையோர் இப்பழக்கங்களுக்கு அடிமையாவதை தவிர்க்கும்.

-செ.கவாஸ்கர்,
________________________________________________________________________


புதிய தளபதி



ராணுவ தளபதியாக இருந்த வி.கே. சிங் இன்று ஒய்வு பெற்றார். அவர் ராணுவ மரியாதையுடன் வழியனுப்பி வைக்கப் பட்டார்.
சுரன்1972-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிக்ரம் சிங் லைட் இன்ஃபாண்ட்ரி ரெஜிமெண்டில் சேர்ந்தார். 40 ஆண்டுகால ராணுவ வாழ்க்கையில் பல இடங்களில் தனது சேவையை ஆற்றியுள்ளார் பிக்ரம்சிங். அவருக்கு மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர்.
தொடர்ந்து இந்திய ராணுவத்தின் 25வது தலைமை ராணுவ தளபதியாக பிக்ரம் சிங் இன்று பதவியேற்றுள்ளார். 59 வயதாகும் பிக்ரம் சிங் அடுத்த 2 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்களுக்கு தலைமை ராணுவ தளபதியாக பதவி வகிப்பார் என்பது கூறப்படுகிறது. 
இந்த பதவிக்கு முன் பிக்ரம் சிங் கொல்கத்தாவில் உள்ள கிழக்கு ராணுவ படையின் தலைவராக இருந்தார்.ராணுவப் பயிற்சிப்பள்ளியில் இருந்த காலத்திலேயே சிறந்த யுக்திக்கான பதக்கம் பெற்றுள்ளார். தந்திரம் மற்றும் தலைமைப்பண்புகளுக்காக இவருக்கு தங்க பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. 
மேலும் கார்கில் போரின் போது இராணுவ செயலக இயக்குநரகத்தின் பொறுப்பில் இருந்த அவர், ஊடகங்களுக்கு போரில் எடுக்கப்படும் யுக்திகள் மற்றும் இது தொடர்பான செய்திகளை விரிவாக கொடுத்திருக்கிறார். இவர் கர்நாடகாவில் உள்ள பெல்காம் ராணுவ பயிற்சி பள்ளியின் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இவராவது பீரங்கிகளுக்கு குண்டு குறைவில்லாமல் பார்த்துக்கொள்வாரா/
____________________________________________________________________________________________

சுரன்

தீக்கதிர் கருத்துப்படம்.
___________________________________________________________________________________________
சுரன்


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?