பூங்காற்று திரும்புமா,,?


இந்திய காஷ்மீரிலிருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் தீவிரவாத பயிற்சிக்காக சென்ற நூற்றுக்கணக்கான காஷ்மீர் இளைஞர்கள் மீண்டும் இந்தியா திரும்ப வேண்டும் என்று ஆசைபடுகின்றனர்.
இந்திய ஆட்சிக்கு எதிராக போராடுவதற்கான பயிற்சியைப் பெறுவதற்காக பாகிஸ்தான் நிர்வாகத்துக்குள் சென்றிருந்த இவர்கள் இப்போது ஆயுதப் போராட்டத்தை வெறுப்பதாகவும் இந்தியாவுடன் இருக்கவே விரும்புவதாகவும் கூறியுள்ளனர்.
சுரன்

இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில், ஏற்கனவே சுமார் 500 பேர் வரையான முன்னாள் போராளிகள் தாய் நாட்டுக்குத் திரும்பியுள்ளார்கள்.
பாகிஸ்தானிடமிருந்து தமக்கு ஒத்துழைப்புக் குறைந்துள்ளதாகவும் அதனால் இந்தியா அறிவித்திருந்த பொது மன்னிப்பை ஏற்று நாடு திரும்புவதாகவும் முன்னாள் தீவிர வாதபயிற்சி பெற்றவர்கள் கூறியுள்ளனர்.
இந்திய ஆட்சியை எதிர்த்து சண்டையிடும் நோக்கில் இந்திய ஆளுகைக்குட்பட்ட காஷ்மீரத்திலிருந்து எல்லை கடந்து பாகிஸ்தான் கட்டுப்பாட்டுப் காஷ்மீருக்குள் சென்றிருந்தவர்கள் நூற்றுக்கணக்கானோர், தாங்கள் ஆயுதக் கிளர்ச்சியை கைவிட்டு இந்தியா திரும்ப விரும்புவதாகத் தெரிவித்துள்ளதன் காரணம் என்ன?
காஷ்மீரப் பள்ளத்தாக்கு இந்திய ஆளுகையின் கீழ் இருப்பதை எதிர்த்து பல ஆண்டுகளுக்கு முன்னர்பாகிஸ்தான் ஆசை வார்த்தைகளால் ஆயுதம் ஏந்தச் சென்ற கிளர்ச்சிக்காரர்களில் பலர் "காஷ்மீர் ஜிஹாத்" என்று தாங்கள் கூறும் இந்த இயக்கம் இலக்கை நோக்கிப் பயணிப்பதாகத் தெரியவில்லை,மேலும் மதத்தை மட்டுமே வைத்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கிறது.உண்மையில் காஷ்மீர் மக்களுக்கு நன்மை செய்வதில் பாகிஸ்தானுக்கு விருப்பமில்லை" என்று கூறுகின்றனர்.
சுரன்

மேலும்தங்களுடைய செயற்பாடுகளுக்கும்,குடுமபங்களுக்கும் பொருள்  உதவி வழங்குவதை பாகிஸ்தான் அரசு படிப்படியாக நிறுத்திக்கொண்டு வருகிறது என இவர்கள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக பாகிஸ்தான் பக்கத்தில் இருந்துவரும் காஷ்மீரி ஆயுதக் கிளர்ச்சிக்காரர்கள் மூவாயிரம் நான்காயிரம் பேர் தமது எதிர்காலம் குறித்து கவலையடைந்துள்ளனர்.
முகம்மது அஹ்ஸான் முன்னாள் கிளர்ச்சிக்காரர் ஒருவர், தற்போது அவர் முஸாஃபராபாத்திலிருந்து கிளம்பி இந்திய ஆளுகைக்குட்பட்ட காஷ்மீரில் ஸ்ரீநகர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள தன் சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறார்.
சுரன்
தனக்கும் தனது மனைவிக்கும் இரண்டு பிள்ளைகளுக்கும் நேபாளத் தலைநகர் காத்மாண்டுவுக்கான விமான டிக்கெட் வாங்கும் அளவுக்கு தான் பணம் சேர்த்துவிட்டதாக அவர் தெரிவித்தார். காத்மாண்டு போனால் அங்கிருந்து எல்லை கடந்து இந்தியாவுக்குள் நுழைந்து ஸ்ரீநகர் சென்றுவிட இவர் திட்டம் வைத்துள்ளார்.
ஆனால் இவரைப் போல நேபாளம் வழியாக இந்தியா செல்லும் அளவுக்கு வசதியோ வழிவகைகளோ தமக்கு இல்லை என இங்கு வேறுபல முன்னாள் கிளர்ச்சிக்காரர்கள் கூறுகின்றனர்.
காஷ்மீரத்தை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பிரிக்கும் கட்டுப்பாட்டு எல்லை வழியாக ஸ்ரீநகர் திரும்புவதையே இவர்களில் பெரும்பாலானோர் விரும்புகின்றனர் ஏனென்றால் அதுவே விரைவான வழியாகவும் பயணச் செலவு குறைவான வழியாகவும் இருக்கும்.
ஆனால் இந்தக் கட்டுப்பாட்டு எல்லை வழியாக முறைப்படி பயணிப்பதற்கு நிறைய கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இரண்டு பக்கத்திலும் இராணுவம் குவிக்கப்பட்டு அதிகம் கண்காணிக்கப்படும் ஒரு இடம் என்பதால் சட்டவிரோதமாக எல்லையை ஊடுருவது என்பதற்கும் சாத்தியமில்லாமல் இருக்கிறது.
கடந்த சில மாதங்களில் இங்கிருந்து கிளம்பி இந்தியக் காஷ்மீருக்குள் சென்று சேர்ந்தவர்கள், இந்திய அதிகாரிகள் வழங்கிய பொதுமன்னிப்பால் பலனடைந்திருக்கிறார்கள் என இங்கிருக்கின்ற முன்னாள் கிளர்ச்சிக்காரர்கள் கூறுகின்றனர்.கடந்த ஜனவரியில் இருந்து பார்க்கையில் சுமார் ஐநூறு போராளிகள் இவ்விதமாக இந்தியா திரும்பியுள்ளனர்.
ஆனால் ஏற்கனவே இந்தியப் பக்கத்துக்கு திரும்பியவர்களில் சிலர், சொந்த மண்ணிலும் தமக்கு போதிய வசதிகள் இல்லாதது கண்டு கவலையடைந்திதிருப்பதாகக் கூறப்படுகிறது. பிழைப்பு நடத்தவும் மறுவாழ்வு பெறவும் இந்திய அரசு உதவ வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
_______________________________________________________________________________

சூரியனை கடக்கும் வெள்ளி கிரகம்.

சூரியனை வெள்ளிக்கிரகம் கடக்கும் வரலாற்று நிகழ்வு வரும் 5-ம் தேதி  மத்திய அமெரிக்காலும்,6-ம் தேதி ஐரோப்பிய ,ஆஸ்திரேலிய கண்டங்களில் உள்ள சில நாடுகளிலும் தெரியும்.
சுரன்

இக்கடக்கும்நிகழ்ச்சி ஆறு மணி நாற்பது நிமிடங்கள் நம்மால் காணமுடியும். அதற்கான தொலை நோக்கி மூலம் பார்த்தால் சூரியனின் கடைசிப்பகுதியில் சின்ன கருப்பு போட்டு நகர்ந்து ப்பொவது போல் இருக்கும்.
அமெரிக்காவில் வரும் செவ்வாய் கிழமை பிற்பகல் 6.04 மணியளவில் நகர்வது தெரிய ஆரம்பிக்கும்.
முன்பு 2004 -இல் இந்நகர்வின் போது எடுத்தப்படம் அருகில் உள்ளது.
வரும் 5,6 தேதிகளுக்குப்பின் இனி 2117 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10,11 தேதிகளில்தான் பார்க்க இயலும்.
____________________________________________________________________________

இணையத்தில் போலி மருந்துகள்.

மருந்துகளுக்கு உலக அளவில் நிலவும் தட்டுப்பாடு, வெளி நாடுகளிலிருந்து குறைந்த விலையில் கிடைக்கும் மருந்துகள் ஆகியவற்றின் காரணமாக மருந்தக நிறுவனங்களின் ஆன்லைன் வர்த்தகம் அதிகரித்திருக்கிறது. அதே நேரத்தில் இதில் போலி மருந்துகளின் விற்பனையும் அதிகரித்திருக்கிறது.  ஆன்லைனில் சட்டத்திற்குப் புறம்பான வகையில் மருந்து விற்பனை செய்த சிமான் ஹிக்மேன் என்பவர் போலி மருந்துகளை விற்றதன் மூலம் 15 மில்லியன் டாலர் லாபம் ஈட்டியுள்ளார். குறி விரைப்பில் உள்ள குறைபாட்டை நீக்குவதற்கான மற்றும் உடல் எடை குறைப்பதற்கான மருந்துகளை உரிமம் இல்லாமலேயே இவர் விற்றுவந்துள்ளார். சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட ரத்தத்தின் அடர்த்தியைக் குறைக்கும் ஹெராபின் என்ற மருந்தின் போலியின் காரணமாக 149 பேர் இறந்துபோயினர்.
சுரன்


இதில் அதிகம் பாதிக்கப்படுபவை முன்னேறிய நாடுகளே. சுமார் 3.6 கோடி அமெரிக்கர்கள் பல்வேறு வலைதளங்கள் மூலம் போலி மருந்துகளை வாங்கியுள்ளனர். நேஷனல் அசோசியேஷன் ஆஃப் போர்ட்ஸ் ஆஃப் பார்மஸி அளித்துள்ள சமீபத்திய அறிக்கையின்படி,  9500  ஆன்லைன் பார்மஸி கம்பெனிகளில் மூன்று சதவிகிதம் மட்டுமே மருந்து நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தரத்தில் இருக்கின்றன. சந்தையிலிருக்கும் போலி மருந்துகளில் 80 சதவிகிதம் இணையத்தின் மூலமே விற்பனையாவதாக  ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான ஜோர்கோ சாட்சிமார்க்காசிஸ் கூறுகிறார். ஆன்லைன் மூலம் வாங்கப்படும் மருந்துகளில் பாதி போலி என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 25 மில்லியன் பவுண்ட் மதிப்புடைய போலி மருந்துகள் ஐரோப்பிய நாடுகளில் கைப்பற்றப்பட்டதாக த மெடிசன்ஸ் அண்ட் ஹெல்த்கேர் புராடக்ட்ஸ் ரெகுலேட்டர் ஏஜென்சி கூறுகிறது.
போலி மருந்துகளை விற்கும் வலைதளங்கள் தங்களை கனடா அல்லது இங்கிலாந்து நாட்டு நிறுவனம் என்று கூறிக்கொள்கின்றன. இந்த நாடுகளிலிருந்து வரும் மருந்துகள் சிறந்தவையாக இருக்கும் என்று அமெரிக்கர்கள் கருதுவதே இதற்குக் காரணம். அமெரிக்காவில் மருந்துகளின் விலைகள் அதிகமாக இருப்பதால் அங்குள்ள மக்கள் விலை குறைவாக கிடைக்கும் வலைதளங்களில் மருந்துகளை வாங்குகிறார்கள். ஆனால் அவர்களுக்குக் கிடைப்பதோ போலி மருந்துகளாக இருக்கின்றன. இந்தப் போலி மருந்து விற்பனையை அங்குள்ள கட்டுப்பாட்டு அமைப்புகளால் தடுக்க முடியவில்லை.
 
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகமானது சில நடைமுறைகளை உருவாக்கியுள்ளது. மேலும் பார்மஸிசெக்கர் டாட் காம் என்ற அமைப்பும் போலி மருந்து விற்பனைகளைத் தடுக்க உருவாக்கப் பட்டுள்ளது. போலி மருந்துகளைப் பற்றிய விழிப்புணர்ச்சியை மக்களிடையே உருவாக்குவதற்கான அமைப்பு  முன்னேறிய நாடுகளிடமே இல்லை என்பதால் இவற்றை ஒழிக்கமுடியவில்லை.

சுரன்

நானே சந்திரன் ,,,,,,,,,,, நானே இந்திரன்.போடு தன்னானே...!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?