சில கவலைகள்

முதல்வர் ஜெயலலிதா நில மோசடி திமுக வினரை உள்ளேயும்-குண்டர் சட்டத்திலும் தள்ளிக்கொண்டிருக்கிறார்.
இப்போது அதே நில மோசடி நம் ஆளுநர் மீதும் வந்துள்ளதே.
முன்னாள் ஆந்திர முதல்வராக நமது ஆளுநர் ரோசையா இருந்த போது தனக்கு வேண்டியவர்களுக்கு[?] 200 கோடி ரூபாய மதிப்புள்ள அரசு நிலத்தை முறைகேடாக ஒதுக்கியுள்ளார்.
சுரன்

அதற்கு இப்போது நீதிமன்றம் வரை வந்து போகக் கூறி அறிவிப்பு வந்துள்ளது.
இப்போ என்ன செய்யப்போகிறார் ஜெயலலிதா.திமுக வினரை போல் உள்ளே தள்ள முடியாது.
"நில மோசடி" எனக்கு அகராதியிலேயே பிடிக்காத வார்த்தை.எனவே ஆளுநரை மாத்துங்க என்பாரா?அல்லது சிப்காட்,கொட நாடு,சிறுதாவூரில் நாம செய்யாததா என்று கண்டு கொள்ளாமல் இருந்து விடுவாரா?

இவ்வளவு நாள் தன்னை குடியரசுத்தலைவர் வேட்பாளராக மம்தா சொல்லி காங்கிரசுடன் போட்டியிட்ட போது வாளாவிருந்த கலாம் இப்போது தான் போட்டியிட போவதில்லை.ஒரு முறை அனுபவித்ததே போதும் என்று கூறிவிட்டார்.
இளங்கோவன் கூறியது போல் அவருக்கு இனியும் சாரட் வண்டியில் போக ஆசை இல்லையாம்.
சுரன்
இருவரில் யார் பொருத்தம்

ஆனால் மம்தா பானர்ஜியின் காங்கிரசுக்கு தொந்தரவு தர வேண்டும் என்ற ஆசை சீக்கிரமாக முடிந்து விட்டது.முக நூலில் ஆதரவு திரட்டியவர் முகத்தில் கலாம் கரியை பூசி விட்டார்.நிச்சயமாக நாம் தோற்போம் என்பதை அறிந்துதான் கலாம் ஒதுங்கி விட்டார்.மம்தா தன்னை ஒரு பகடைக்காயாக மட்டுமே பயன் படுத்துகிறார்.தன் மீது அவருக்கு அப்படி ஒன்றும் மரியாதை கிடையாது.சொல்லப்போனால் தான் கொம்பு சீவி விடப்படும் பலியாடுதான் என்பதை ஒரு முன்னாள் விஞ்ஞானி அறிய முடியாதவராக இருப்பாரா?
ஆனால் மம்தா கலாம் போட்டியிடாவிட்டாலும் அவர்தான் "மக்களின் ஜனாதிபதி"மற்றபடி தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் எல்லாம் சும்மா ஜனாதிபதி என்று கலாம் ஆதரவுக்கான முக நூலை மூடிவிட்டார்.
ஜெயலலிதா-நவீனால் அறிமுகப்படுத்தப்பட்ட சங்மாவுக்கு போடியில் ஆள் இல்லாததால் பாஜக இப்போது அவருக்கு ஆதரவு கரம்[கை -காங்கிரசு சின்னம்]கொடுக்க எண்ணலாம்.
சுரன்
ஒருகவலை தீர்ந்தது

அவர்களுக்கு யாருக்கு நாம் ஆதரவு கொடுத்தால் என்ன? தோற்பதற்கு ஒருவர் வேண்டும் அவ்வளவுதானே?
முன்பு கலாமுக்கு ஆதரவு என்றால் ஜெ-நவீன் நமது கூட்டணிக்கு வரமாட்டார்கள்,சங்மாவுக்கு ஆதரவு என்றால் மம்தா வர மாட்டார் என்ற கவலை இருந்து ஆதரவை கொடுக்க குழம்பிக்கொண்டிருந்தார்கள்.
ஆனால் இப்போது மிஞ்சி யிருப்பது சங்மா தான்.பாஜக வின் ஒரு மகா கவலை கலாம் அறிவிப்பால் தீர்ந்தது.
இதே போல் பிரதர் வேட்பாளர் கவலையும் தீர வேண்டும் என்று அத்வானி வேண்டிக்க்ண்டிருக்கிறார்.அதற்கு மோடிக்கு அந்த ஆர்.எஸ்.எஸ்.தான் நல்ல புத்தியை கொடுக்க வேண்டும்.ஒதுக்கி விட வேண்டும்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?