காணாமல் போகும் கோவணக்காரர்கள்......,

நமது அரசியல் நட்புகளையும்,சில நேரங்களில் உடன் பிறந்தோரையும் கூட எதிரியாக்கி விடுகின்றன.
முக்கால்வாசி நாற்காலியை குறி வைத்துதான் இந்த மோதல்கள் நகர்கின்றன.

அப்படி இருக்கையில் சொந்த கட்சியை கூட ஒரு வழி பண்ணுவதற்கு தயங்காத கொள்கை பிடிப்புடையவர்களை என்ன சொல்வது.

அப்படி பட்ட கொள்ல் கை வீரர்தான் கர்நாடகா பாஜக எடியூரப்பா.இப்போது கர்நாடக பாஜக ஆட்சிக்கு இவர்தான் இடையூறப்பாவாக இருக்கிறார்.
அவ்வப்போது தனது ஆதரவாளர்களை அழைத்து கூட்டம் போட்டு பாஜக வின் வயிற்றில் புளியை கரைப்பது அவரின் சமீபகால பொழுது போக்காகும்.
சதான்ந்தா முதல்வராயிருப்பது அவரை சதா தொல்லைப்படுத்திக்கொண்டேயிருக்கிறது.அத்வானி பேசாமல் கர்நாடக அரசை கலைத்து விட்டு மறு தேர்தல் நடத்தலாமே என்று கூறியுள்ளார்.
லஞ்ச-முறைகேடு குற்ற சாட்டில் பதவி விலகிய எடியூரப்பா.அதைப் பற்றி கொஞ்சமும் அலட்டிக்கொள்வதாகவே தெரிய வில்லை.
எதுவும் நடக்காதது போல்.நீதிமன்ற விசாரணையிலும்.லஞ்ச குற்றங்கள் நிருபணமான பின்னும் அவர் நாற்காலிகாக போராடுவதையும்-அவருக்கு ஆதரவாக அமைச்சர்கள் உட்பட மக்கள் பிரதிநிதிகள் அணிவகுப்பதையும் பார்க்கையில் அரசியலில் நேர்மை-நாணயம்-பொது நலம் போன்றவைகளுக்
கு கொஞ்சமும் இடமில்லை என்றே தெரிகிறது.
சுரன்

சொத்து குவிப்பும்,நில மோசடியும் மற்ற முறைகேடுகளும் அரசியலில் ஒரு அங்கமாகவே ஆகி வருகிறது.
தமிழகத்தில்தான் கொஞ்சம் இலை மறைவு -காய் மறைவாக இருக்கிறது போல் தெரிகிறது.
ஆனால் ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தனது தந்தை பதவியில் இருக்கும் போது நில மோசடி-அதிகாரத்தை பயன் படுத்தி கொஞ்ச நாளிலேயே பல கோடிகள் குவித்து ஆதாரபூர்வமாக மாட்டிக்கொண்டு சிறைக்கு சென்ற பின்னரும் அவருக்கு 18இல் 15 ச.ம.தொகுதிகளில் வெற்றியை தந்த மக்கள் நிலையை என்னவென்று சொல்லுவது?
அதிகாரத்தை வைத்து பணம் குவிப்பதை மக்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.என்பதா? அல்லது இருக்கிற அரசியல் கொள்ளைக்காரர்களில் இவன் பரவாயில்லை என்ற எண்ணம் மக்கள் மனதில் ஊறி விட்டதா?
சுரன்

எது எப்படியோ மக்கள் இப்போது அரசியல் வாதிகளின் லஞ்ச-அதிகார முறைகேடுகளை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்ற உண்மைதான் தற்போதைய அரசியல் நடப்பில் இருந்து தெரிகிறது.ஆனால் இது நாட்டின் நலனுக்கும்,மக்களின் எதிர் கால வாழ்க்கைக்கும் எதிரானது.நல்லதல்ல.
அரசியல்வாதிகளும்-அதிகாரிகளில் சிலரும் இன்னமும் நாம் மட்டும் நேர்மையாக மக்கள் நலனுக்கு பாடுபட வேண்டுமா?என்ற எண்ணத்தை இப்போக்கு கொண்டு வந்து விடும்.அது சரியான எண்ணமாக ஆகிவிடும் வாய்ப்பும் உள்ளது.அவர்களும் தங்கள் கோவணங்களை இழந்து விடும் அபாயம் உள்ளது.

நிர்வாண நாட்டில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்தானே.?
________________________________________________________________________________

பாலம் செய்யும் கோலம்,
__________________________

"ராமர் பாலம் என்று சொல்லப்படுகின்ற இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் மன்னாருக்கும் இடையில் காணப்படும் மணற் திட்டுக்கள் வழியாக இல்லாமல் மாற்றுப் பாதையில் கடலை ஆழப்படுத்தி சேதுக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்துவது பொருளாதார ரீதியில் மட்டுமின்றி சுற்றுச் சூழல் பாதுகாப்பு ரீதியிலும் பலன் தராதுமாற்றுப் பாதையில் சேதுக் கால்வாய் அமைக்கப்படும்போது கப்பல் ஒன்றிலிருந்து எண்ணெய்க் கசிவு ஏற்படும் பட்சத்தில் அப்பிராந்தியத்தின் இயற்கைச் சூழல் பாதிக்கப்படும் என இந்திய அரசு நியமித்த உயர்மட்ட நிபுணர் குழு முடிவு தெரிவித்துள்ளதாக இந்திய அரசு இந்திய உச்சநீதிமன்றத்திடம் தெரிவித்தது.
சுரன்
மணற்திட்டா? ராமரின்பாலமா?

ஆர்.கே.பச்சோரி தலைமையிலான நிபுணர் குழு தந்துள்ள அறிக்கையின் மீது இன்னமும் மத்திய அரசு முடிவு எடுக்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் அரசு தரப்பு தலைமை வழக்குரைஞர் தெரிவித்தார்.
வேகமாக ஆரம்பமான சேது கால்வாய் திட்டத்தை சில இந்து அமைப்புகளும்,சுப்பிரமணியன் சுவாமியும் வழக்கு தொடர்ந்ததன் மூலம்
நிறுத்தி வைத்துள்ளனர்.
கப்பல் போக்குவரத்துக்காக கடலை ஆழப்படுத்தும் சேது சமுத்திரத் திட்டம் இந்துக்களால் ராமர் கட்டிய பாலம் என நம்பப்படும் இடத்தை சேதப்படுத்திவிடும் என்று முறையிட்டு தொடுக்கப்பட்ட வழக்குகளை இந்திய உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.
அந்த ராமர் பாலத்தின் மூலம் இப்போது என்ன போக்குவரத்து நடக்கிறது என்று தெரியவில்லை.
"ராமாயாணம் என்ற புராணம் குறிப்பிடும் இடம்,இலங்கை போன்றவை இப்போதுள்ள இடங்களே அல்ல.அப்படி ராமர் வாழ்ந்திருந்தாலும் அதில் வரும் இடங்கள் உ.பி மாநிலத்தில்தான் இருக்க வாய்ப்பிருக்கிறது" என்று ஆய்வாளர்கள் கூறிய பின்னரும் கடலில் உள்ள மணல் திட்டுக்களை ராமர் பாலம் என்று கூறி ஒரு நல்ல திட்டத்தை,இந்தியாவின் பொருளாதார வளத்தை தரும் பாதுகாப்பைத்தரும் திட்டத்தையே முடக்கி வைத்துள்ளது ஒரு கும்பல்.
கட்டியவர்கள்?

இந்த சேது சமுத்திரத்திட்டத்தால் பாதிக்கப் போவது இலங்கை மட்டுமே.அதனை சுற்றி இந்தியா வரும் கப்பல்களை நேரடியாக தூத்துக்குடி போன்ற துறைமுகங்களுக்கு வரவைக்க சேது கால்வாய் அவசியம்.இதனால் பயண நேரம் ,எரிபொருள் சேமிப்பு தடுக்கப்படுவதுடன் பண சேமிப்பும் கிடைக்கும்.ஏற்றுமதி பெருகும்.
சரி .யாருக்கும் பயன் படாத அந்த மணற்திட்டு ராமர் பாலமாக வே இருந்தாலும்.இப்போது அதனால் யாருக்கு என்ன பயன்,அதை மக்கள் தினசரி வழி பட்டுக்கொண்டா இருக்கிறார்கள்?
அந்த மணற்திட்டால் பயனடைவது இலங்கை மட்டுமே.
தற்போது மணற் திட்டுகளாக அமைந்துள்ள இந்த இடத்தை பாதுகாக்கப்பட வேண்டிய பாரம்பரியச் சின்னமாக இந்திய அரசு கருதுகிறதா என்ற கேள்வியை நீதிமன்றம் கேட்டதற்கு இந்திய அரசு இன்னமும் ஒரு பதிலையும் சொல்லாமல் இருக்கிறது.
இதுவரை ஒருவருமே கண்டு கொள்ளாமல் இருந்த கடலடி மணற்திட்டுக்கு சேது சமுத்திர திட்டம் மூலம் ஒரு வாழ்வு கிடைத்திருக்கிறது.மூட நம்பிக்கைகளை புறந்தள்ளி சேது கால்வாயை செயற்படுத்துவதே இந்திய நலனுக்கு நல்லது.
_________________________________________________________________________________


அசாம்- "வெள்ளக்காடு"


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?