தண்ணீரும்


தனியாரும்

தில்லியில் குடிநீர் வழங்கும் பணியைத் தனியார்வசம் ஒப்படைப்பது அவசியமாகிவிட்டது என்று தில்லி முதல்வர் ஷீலா தீட்சிமுடிவெடுத்துள்ளார்.

தில்லிக்கு இடைவிடாமல் குடிநீர் விநியோகம் செய்வது அவசியம். அதை உறுதி செய்யவேண்டுமானால், குடிநீர் வழங்கல் முறையைத் தனியாரிடம் அளிப்பதுதான்.
தில்லியில் மின்சார விநியோகத்தைத் தனியாரிடம் ஒப்படைத்துள்ளோம். அதைப் போல் குடிநீர் வழங்கலையும் தனியாரிடம் ஒப்படைக்கலாம்.
குடிநீர் வழங்கலைத் தனியார் மூலம் செயல்படுத்தும் பணி படிப்படியாக மேற்கொள்ளப்படும்.
 சில பகுதிகளில் இது சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்படும். பின்னர், முழுமையாகச் செயல்படுத்தப்படும்.
இரு ஆண்டுகளுக்கு முன் குடிநீர்க் கட்டண வசூல் முறையில் சில சீர்திருத்தங்களை அரசு கொண்டுவந்தது.

 அதற்காக, மீட்டர்கள் பொருத்தப்பட்டன. இந்த மீட்டர்களை வடிமைப்பது உள்ளிட்ட தொழில்நுட்பத்துக்கு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் துணை புரிந்துள்ளன.
தில்லிக்கு நாளொன்றுக்கு 110 கோடி கேலன் தண்ணீர் வழங்கப்பட வேண்டும். ஆனால், தில்லி ஜல போர்டு நீரைச் சுத்திகரித்து, 80 கோடி கேலன் மட்டுமே வழங்கி வருகிறது. அவ்வாறு வழங்கப்படும் 80 கோடி கேலனிலும் 40 சதவீதம் வீணாகிறது என்று வருந்தியுள்ளார் முதல்வர் ஷீலா தீட்சித்.
இடைவிடாமல் தனியார்கள் தண்ணீரைத்தரும் வாய்ப்புல்ளபோது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசால் முடியாதா?
தண்ணீர்,மின் சாரம் அனைத்தையும் தனியாரிடம் விட்டு விட்டால் இந்த மங்குணி அமைச்சர்களுக்கு என்ன வேலை அங்கு.வரும் கமிசன் பணத்தை பங்கு வைப்பதுமட்டும்தானா?
மக்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தரத்தானே அரசு.
அதற்குத்தானே கோடிகளை செலவிட்டு இந்த மக்கள் நல் விரோதிகளை தேர்ந்தெடுத்துள்ளோம்.
இவர்கள் நாற்காலிகளி உடகார்ந்து அனைத்து மக்கள் நல சேவைகளையும் தனியாரிடம் பணம் பெற்றுக்கொண்டு ஒதுங்கிக்கொண்டால் இவர்கள் எதற்கு.அமைச்சர் ,முதல்வர் பதவிகளையும் ஏலத்தில் விட்டு தனியார்களிடம் கொடுத்து விடலாமே.
இந்த மக்கள் விரோதிகளை ஏன் வாக்களித்து தேர்ந்தெடுக்க வரிசையில் நிரக வேண்டும்?
தனியாரிடம் கொடுத்தால் தண்ணீர் தடையின்றி வழங்க இயலும் என்று ஒரு மாநில முதல்வர் கூற வெட்கப்பட வேண்டாமா?

அதை விட இவர்களுக்கு அங்கு என்ன வேலை கோழி முட்டைக்கு ---புடுங்கவா ஆட்சியில் இருக்கிறார்கள்.

____________________________________________________________________________
ஏன் இந்த கொலை வெறி..?
பாகிஸ்தானில் மத நிந்தனை செய்தார் என்று காவல் நிலையத்தில்  வைக்கப்பட்டிருந்த ஒருவரை, மத அடிப்படைவாதிகள் கூட்டம் ஒன்று வெளியே இழுத்துச்சென்று உயிருடன் எரித்து கொலை செய்துள்ளது.
சுரன்
குரான் ஒன்றைஅவர்  எரித்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு.
காவல் நிலைய விசாரணையில் அந்த மனிதர் மனநிலை சரியில்லாதவர் என்று தெரிய வந்துள்ளது.அப்போது திடீரெனஅவரை பிடித்துச் சென்ற சிலர் அவர் மீது தீயை வைத்து கொளுத்தியுள்ளனர். அவர் அலறியதை நூற்றுக்கணக்கான மக்கள் வேடிக்கைப் பார்த்ததாக நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் இதுவரை யாரையும் காவல்துரையினர் கைது செய்ய முயற்சிக்கவில்லை.
மனநிலை சரியில்லாதவன் மனம் மாற அல்லாவிடம் வேண்டுவதை விடுத்து இந்த கொலை வெறி ஏன்?
________________________________________________________________________________
?


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?