பாதுகாப்புக்கு பாதுகாப்பில்லையா?


"அநாமதேயங்கள்"[அனானிமஸ்] என்கிற பெயரில் இணையகருத்துச் சுதந்திரத்திற்காக பாடுபடுவதாகக் கூறுன் ஒரு குழுமம், தமிழக அரசின் காவல்துறை இணையதளத்திற்குள் புகுந்து காவல்துறை தகவல்களைக் கைப்பற்றி அவற்றை இணையத்தில் வெளியிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த தாக்குதல் நடவடிக்கை குறித்து தமிழக காவல்துறையின் சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்தவித மறுப்போ அல்லது விளக்கமோ வெளியிடப்படவில்லை. 
சுரன்
ஆனால் இப்படியான தாக்குதலை தாங்கள் நடத்தியதாக அனானிமஸ் அமைப்பின் சார்பில் உறுதிசெய்யப்பட்டதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
லக அளவில் செயற்படும், நிலையான முகமும் முகவரியுமற்ற அனானிமஸ் அமைப்பு, சமீபகாலமாக இந்தியாவிலும் தனது பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்திய நடுவணரசு தற்போது முன்னெடுத்துவரும் இணையதள செயற்பாடுகளுக்கான புதிய கட்டுப்பாடுகளை தொடர்ந்து எதிர்த்துவரும் அனானிமஸ் அமைப்பின் உறுப்பினர்கள், இந்திய பெருநகரங்களில் சில  வாரங்களுக்கு முன்னர் போராட்டங்கள் நடத்தினர்.
அதன் பின்னர் தற்போது, தமிழக காவல்துறையின் இணையதளத்தை இந்த அமைப்பின் உறுப்பினர்கள் கைப்பற்றி , காவல்துறையின் ரகசியங்களை  இணையத்தில் வெளியிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது, 
காகிதமில்லாத மின்னணு அரசு[இ கவர்னன்ஸ்] என்று தனது அரசுநடவடிக்கைகளை கணினி மயமாக்கி வரும் தமிழக அரசின் இணையதள பாதுகாப்பு கட்டமைப்பின் பாதுகாப்பு இப்போது பல கேள்விகளை இப்போது எழுப்புவதாக தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறுகிறார்கள்.இது போன்ற இணைய-கணினி ஊடுருவல்கள் நமது அரசின் செயல்பாடுகளையே ஆட்டம்காண செய்து விடும்,
ஆனால் இது பற்றி நம் தமிழக அரசு இதுவரை வாயே திறக்க வில்லை.
8
மிழக காவல்துறைதான் தனது ரகசியங்களை அநாமதேயங்களிடம் பறி கொடுத்து விட்டு முழிக்கிறதென்றால் இந்திய ராணுவ அதிகாரிகள் நம் எதிரி நாடுகளின் வலையில் தாங்களாகவே முகநூல் மூலம் முகத்தில் அசடு வடிய பெண் வழிசலில் போய் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள்.
சுரன்


பேஸ்புக் மூலம் வலைவீசிய பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐயின் பெண் உளவாளியிடம் சிக்கியுள்ளார் இந்திய ராணுவத்தின் லெப்டினட் கர்னல் ஒருவர்.
ராஜஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்ட இந்திய ராணுவத்தின் கவசப் படைப் பிரிவின் லெப்டினட் கர்னலான இவர் அந்தப் பெண்ணுடன் பேஸ்புக்கில் தொடர்பு கொண்டு வழிந்து கொண்டிருப்பதை மத்திய உளவுப் பிரிவான இன்டலிஜென்ஸ் பீரோ கண்டுபிடித்து பாதுகாப்பு அமைச்சகத்திற்கு எச்சரிக்கை அனுப்பியுள்ளது.
இப்போதுது அந்த லெப்டினட் கர்னல் ராணுவ விசாரணையில் இருக்கிறார்.
பேஸ்புக்கில் அந்த பாக்கிஸ்தான் உளவு பெண்ணிடம் வழிந்ததில் ஏதாவது ராணுவ ரகசியங்களை-இந்திய பாதுகாப்பு தொடர்பானசெய்திகளை கூறியுள்ளாரா என்று விசாரிக்கிறார்கள்.
சுரன்

இதே போன்று சென்ற ஆண்டு வங்கதேசத் தலைநகர் டாக்காவில் பயிற்சிக்காக சென்ற இன்னொரு இந்திய ராணுவத்தின் லெப்டினட் கர்னலை ஒரு பெண் வளைத்து பிடித்து நெருங்கியதை ரா உளவுப் பிரிவு கண்டுபிடித்து. அந்த கர்னல் எச்சரித்து விடப்பட்டார்.
இப்போது இவர் பேஸ்புக் மூலம் தானாகவே வழிய போய் அல்லது வழிந்து போய் ஐஎஸ்ஐ பெண் உளவாளியிடம் சிக்கியுள்ளார்.
இந்திய ராணுவத்தினர் மேலிட அனுமதியில்லாமல் எந்த  வெளிநாட்டினருடனும் தொடர்பு வைக்கக் கூடாது என்பது விதி.அதுமட்டுமல்ல சமூக வலைத்தளங்களில் ராணுவ அதிகாரிகள்தங்கள் சொந்த பெயரில் நடமாடக்கூடாது. புனைப் பெயரில் தான் இடம் பெறலாம் . தங்களது வேலை , பதவி குறித்தோ, இருக்கும் இடம் குறித்தோ சமூக வலைத்தளங்களில் உண்மையான தகவல்களை பரிமாறவும் தடை உள்ளது.மாற்று பெயர்,பதவி,வேலை முகவரியைத்தான் உபயோகிக்க வேண்டும்.
சுரன்

ஆனால் இவை எல்லாவற்றையும் மீறி அந்த லெப்டினட் கர்னல் நடந்துள்ளார்.இதையும் மீறி தன்னைப் பற்றிய முழு விவரங்களையு,உண்மைகளையும் சொல்லி அந்தப் பெண்ணின் வலையில் வீழ்ந்துள்ளார் இந்த லெப்டினட் கர்னலானஅவர்என்னென்ன தகவலைகளை பகிர்ந்து கொண்டார் என்பது குறித்து ராணுவ உளவுப் பிரிவு அவரது பேஸ்புக் கணக்கில் நுழைந்து துருவி வருகிறது.
பெண்ணென்றால் பேய் மட்டுமா வாய் பிளக்கும்,எங்கள் ராணுவ அதிகாரிகளும்தான்.
இவர்களைப்போன்று தேசபக்தி உள்ளவர்களால்தான் மும்பை வாயில் ,தாஜ்மஹால் ஓட்டல்களில் குண்டு வைக்க முடிகிறது.
ஏற்கனவே குண்டு இல்லாத பீரங்கிகளையும்,வெடிமருந்தில்லாத துப்பாக்கிகளையும் வைத்திருப்பதாக ராணுவ தளபதி கூறி வயிற்றில் கந்தகத்தை வைத்து விட்டு ஓய்வு பெற்றுள்ளார்.
இப்போது பேஸ்புக் வழிசல் வேறா?
சுரன்




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?