கோட்டை விட்டார் - செங்கோட்டையன்


தமிழ் நாடு வருவாய்த்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டிருக்கிறார்.அவருக்கு பதிலாக பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் என்.டி.வெங்கடாசலம் புதிய வருவாய்த்துறை அமைச்சராக நியமிக்கப்படுகிறார்.அத்துடன் கட்சிதலைமைக்கழக செயலாளர் பொறுப்பிலிருந்தும் செங்கோட்டையன் விலக்கப்பட்டிருக்கிறார்.
சுரன்
இதுக்கு மேலே எப்படிங்க குபனிவது

ஆரம்பம் காலம்  முதல் ஜெயலலிதாவின் முரட்டுப்பக்தனாக அதிமுக உறுப்பினராக இருந்துவரும் செங்கோட்டையன், முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர் என நம்பப்பட்டவர்.ஜெயலலிதாவின் சுற்றுப் பயணத்தை முடிவுசெய்பவர் என்றெல்லாம் கூறுவார்கள்.அவர் இப்போது கட்சியை விட்டே விலக்கப் பட்டது போல் ஆகியதற்கு காரணம் என்னவென்றே தெரியவில்லை.


கடந்த ஆண்டு மே மாதத்தில் மீண்டும் ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்ற பின்னர், அமைச்சரவையில் செங்கோட்டையனுக்கு மூன்றாவது இடம் எனக் கூறப்பட்டாலும் அவருக்கு அதிக முக்கியத்துவம் இல்லாத துறைகளாகவே ஒதுக்கப்பட்டன,


சென்ற ஜனவரியில்தான் அவர் வருவாய்த்துறை அமைச்சரானார்.
அவர் ஏன் இப்போது அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார் , கட்சிப் பொறுப்பையும் ஏன் ஜெயலலிதா பிடிங்கினார்  என்பதற்கான விளக்கங்கள் எதுவும் அதிமுக தரப்பில்வெளியிடப்படவில்லை.நல்லாத்தானே காலில் விழுந்தார்.?
சுரன்

ஜெயலலிதா ஆட்சியமைத்த இந்த ஒன்றரை ஆண்டுகளில் பதினொரு அமைச்சர்கள் இதுவரையில் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள், அவர்களில்  என்.ஆர்.சிவபதி மட்டும் எப்படியோ மீண்டும் அமைச்சராகிவிட்டார்.
முதல்வரையும் சேர்த்து தற்போது அமைச்சரவையில்  33 பேர் அமைச்சர்களாக இருக்கிறார்கள்.
_________________________________________________________________________________

70 -களின் நாயகன் ராஜேஷ் கன்னா

1960களின் மத்தியில் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கியவர் ராஜேஷ் கன்னா, 
1970களில் இந்தி திரையுலகின் மிகப் பிரபலமான நடிகரானார்.இந்தி திரைப்படங்களில் உச்ச நட்சத்திரமாக பிரபலமாகியிருந்தார்.அவரது இடத்தைத்தான் ஷோலே க்குப்பின் அமிதாப் பச்சன் பிடித்தார்.
சுரன்
ராஜேஷ் கன்னா -70 களில்

160க்கும் மேற்பட்ட படங்களில் ராஜேஷ் கன்னா  நடித்துள்ளார்.
காதல் பாத்திரங்களில் நடித்து பிரபலமான அவர் நடித்து 1969ல் வெளிவந்த " ஆராதனா" திரைப்படம் இந்தியா முழுக்க மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
ராஜேஷ் கன்னா 1992ல் புது தில்லி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றார்.
தற்போது ராஜேஷ் கன்னாவிற்கு  69வயதாகிறது.

சமீபகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த ராஜேஷ் கன்னா இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் மும்பை மருத்துவமனை சேர்ந்து சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பியிருந்தார்.
சுருக்கமான விபரங்கள்:
ராஜேஷ் கன்னாவின் சொந்த பெயர் ஜடின் கன்னா.
 பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் 1942 டிசம்பர் மாதம் 29ம் தேதி செல்வ வளம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர். 
இவரது மனைவி பாபி படம் புகழ் இந்தி நடிகை டிம்பிள் கபாடியா. இவரை 1973ம் வருடத்தில் ராஜேஷ் கன்னா திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ட்விங்கிள் கன்னா, ரிங்கி கன்னா என இரு மகள்கள். இவர்களிருவரும் பாலிவுட்டில் நடிகையராக வலம் வந்தனர். 
ராஜேஷ் கன்னா முதலில் 1966ல் ஆக்ரி காட் என்ற படத்தில் நடித்தார். ஆனால் அது வெளிவரவில்லை. பின்னர் நடித்த சில படங்களும் சரியாக ஓடவில்லை. ஆனால், அவர் நடித்த ஆராதனா என்ற படம் அவருக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தையும் புகழையும் பெற்றுத் தந்தது.
 1970களில் மிகப் பெரும் புகழ்பெற்ற நடிகராக வலம் வரத் துவங்கினார். 1970ல் ஆனந்த் படம் வெளியானது. அமர் ப்ரேம் 1971லும், 1973ல் டாக், நமக் ஹராம், 1974ல் ப்ரேம் நகர், ஆப் கி கஸம் ஆகிய படங்கள் வெளிவந்தன. பாலிவுட் கனவுக் கன்னிகளாகத் திகழ்ந்த மும்தாஜ், ஷர்மிலா டாகுர் ஆகியோருடன் இவர் நடித்த படங்கள் சக்கை போடு போட்டன.
சுரன்
ராஜேஷ் கன்னா -இப்போது

இத்தகைய ஹிட் படங்களுடன் பின்னாளில் அவர் குடும்ப நாடகங்களை மையமாகக் கொண்ட திரைப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அனுரோத், மெஹபூபா, கர்ம், அமர் தீபா, பால்கோ கி சாவோன் மேன், தோடி ஸீ பீவாஃபாய், சௌதான், அவதார், அம்ரித், கர் கா சிராக், அகர் தும் ந ஹோதே மற்றும் பல படங்கள் இவ்வாறு கதையம்சம் கொண்ட படங்களாக அமைந்தன.
 இவை எல்லாம் 1976 முதல் 1991 வரை வெளியாயின. சில படங்களில் குணசித்திர மற்றும் நட்பு முறையிலான சிறு சிறு வேடங்களில் நடித்தார். தரம் அவுர் கனூன், தரம் காந்தா, ராஜ்பூத், குத்ரத் மற்றும் டிஸ்கோ டான்ஸர் உள்ளிட்ட படங்கள் அவ்வாறு அமைந்தன. ரெட் ரோஸ் என்ற படத்தில் அவர் நெகட்டிவ் பாத்திரத்திலும் நடித்துள்ளார். 
ராஜேஷ் கன்னா காங்கிரஸ் கட்சியின் சார்பில் 1991-1996ல் நாடாளுமன்ற உறுப்பினராக புது தில்லி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 
அந்தக் காலத்தில் அவர் நடிப்பில் கவனம் செலுத்தவில்லை. 
அதன் பிறகு, 1999ல் ஆ அப் லௌட் சலே என்ற படத்தில் நடித்தார். அதன் பின் 2002ல் க்யா தில் நே கஹா மற்றும் 2007ல் ஒரு படத்திலும் நடித்தார்.
சில தொலைக்காட்சி தொடர்கள், நிகழ்ச்சிகளிலும் ஒப்பந்தமாகி நடித்துக் கொடுத்திருக்கிறார். 
சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதினை ஆறு முறை பெற்றிருக்கிறார். அதுதவிர 11 முறை பிலிம்பேர் விருதுக்கு இவர் பெயர் பரிந்துரைக்கபட்டுள்ளது. பெங்கால் ஃபில்ம் ஜர்னலிஸ்ட் அசோஷியேஷன் விருதுகள், உள்பட இந்தியாவின் பல்வேறு திரையுலக விருதுகளையும் பெற்றவர் இவர்.


சுரன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?